Saturday, May 19, 2012

சுற்றம் சூழும் கோடை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எப்பொழுதும் சொல்வதுதான்.
இந்த வருடம்  வெய்யில்    கொஞ்சம் கூடுதல் என்னும்   எண்ணமும் அலுப்பும்.
வயதும் கூடும் நேரம்.சகிப்புத் தன்மை  குறையும் நேரம்.

சென்னையில்  இந்த வருடம் மதிய நேரம்
மனிதர்கள்   நடமாட்டம்     குறைந்து தான் இருக்கிறது.
பஸ்கள் கூடக்  குறைவாகவே   போகின்றன.
தினம் தினம் வருகிறேன் வருகிறேன் என்று உறுமும் மேகங்கள் கூடக் கலைந்து போகின்றன.எப்பொழுதும் போலக் கூடுவாஞ்சேரி  வரை வந்துவிட்டு த் தெற்கே   திரும்பி விடுகின்றன.

ஒரு பத்துவருடங்கள் முன் கூட வெய்யிலின் தாக்கம் 3  மணி வாக்கில்
குறைந்துவிடும்.கடற்காற்று மென்மையாக வந்துவிடும்.

இப்பொழுதோ மாலை ஆறு மணிக்குக் கூட வெய்யிலின்  சூடு தணிய மாட்டேன் என்கிறது. வீட்டுச் சுவர்கள் கூடச்  சுடுகிறதோ என்று தோன்றுகிறது.
எங்களுக்காவது பரவாயில்லை  காலை எட்டு மணி யிலிருந்து பத்து மணி வரைதான்   மின்வெட்டு. நடுநடுவிலும்    சொல்லாட மின்வெட்டும் வந்துவிடுகிறது. சுற்றிக் கட்டப்படும்  வீடுகளுக்கு  எப்படித்தான்

தொடர்ந்து     மின்சாரம் கிடைக்கிறதோ.
  இடைவிடாத  சத்தம்.இந்த வெய்யிலில் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
அவர்களின் உற்சாகத்துக்கும் குறைவில்லை.
கைபேசியில்  இன்னா மச்சான் '  விசாரிப்பும்.
ட்ரான்ஸிச்டரில்  'என் ஃப்ரண்டைப் போல யாரு  மச்சான்' 
பாட்டும்,அவர்களுக்காகவே ,சாமர்த்தியமாகக் கடை போட்டுவிட்ட டீக்கடைக் காரரும், இளநீர் விற்கும்   அம்மாவும் 
வெய்யிலை லட்சியம் செய்யவில்லை.!

இதோ வாராந்திர சந்தையாக டி ஷர்ட்,அரை நிஜார்கள் என்று ஒருவர் கடை பரத்திவிட்டார். இனி ஒன்பது மணிவரை  கலகலப்புக்குக் குறைவிருக்காது.
 ஒருவேளை இவர்கள் பிழைக்கட்டும் என்றுதான் வருணபகவான்  தள்ளி நிற்கிறாரோ:)
  ஓடிப் போய்விடுகிறது.

11 comments:

நிரஞ்சனா said...

ஒவ்வொரு கோடையிலயும் இந்த வருஷம் மாதிரி வெயில் பார்த்ததில்ல ன்னுதானே நாமல்லாம் சொல்றோம். ஆனா ஈவ்னிங்ல கூட வெயில் வறுத்தெடுக்கறதென்னமோ நிஜம்தான். கட்டட வேலை செய்றவங்களுக்காக இரக்கப்படற உங்கள் ஈர மனசுக்கு ஒரு சல்யூட்மா!

நிரஞ்சனா said...

இன்னிக்கு எனக்கு இன்னொரு விருது தந்திருக்காங்க. வந்து பாருங்களேன். ஹேப்பியா இருக்கேன்மா. I Need Your Blessings!

Geetha Sambasivam said...

கட்டிட வேலை செய்பவர்கள் பாவம் தான். ஆனால் அவர்களுக்கு மின்சாரம் ஜெனரேட்டர் மூலம் வருகிறது. இம்மாதிரியான வேலைகளுக்கு அரசு கொடுக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் தடை விதித்துள்ளார்கள். ஆகவே மின்சாரம் இருந்தால் கூட வீடு இடிக்க, துளை போட, என அவர்கள் ஜெனரேட்டர் மின்சாரத்தைத் தான் பயன்படுத்த வேண்டும்.

Geetha Sambasivam said...

சென்ற வருஷம் எங்க வீட்டருகேயும், எதிரேயும் வீடு கட்டும்போது தொழிலாளப் பெண்கள் எல்லாரும் நிழலுக்கு எங்க வேப்பமரத்தடிக்குத் தான் வருவாங்க. இப்போ வேப்பமரத்தின் கிளையையே உடைத்து விட்டார்கள். :(((( தெருவுக்கே நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. :(((( என் கையையே உடைச்சாப்போல் இருந்தது எனக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நிரூ, விருது கிடைத்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இரக்கப்படத்தான் முடிகிறது நிரூ. முக்கால்வாசி திண்டிவனம்,ஆந்திரா என்று இங்கிருந்து வந்தவர்கள்.வெய்யிலைத் தாங்கும் பக்குவமும் இருக்கிறது.கீதா சொல்வதுபோல மரமும் நம் வீட்டில் இல்லை.அவர்களே ஒரு குடிசை அமைத்துக் கொண்டு ஓய்வெடுக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா ஜெனரேட்டரை மறந்து விட்டேன். அதுபோடற சத்தத்தை
மறக்க முடியாது.

இவர்கள் அடிக்கடி மின்கம்பத்திலிருந்து கரண்ட் இழுக்கும்போதுதான் எங்கள் பவரும் கட்டாகிறதுசிறி சிறு விஷயங்களுக்குத்தான் அதைச் செய்கிறார்கள்.
பொறுத்துத்தான் ஆகவேண்டும்.

ராமலக்ஷ்மி said...

/ ஆறு மணிக்குக் கூட வெய்யிலின் சூடு தணிய மாட்டேன் என்கிறது. /

இங்கேயும் அப்படிதான் உள்ளது. சிரமமாக நமக்குத் தோன்றுபவை ஒரு சாராருக்கு வாழ்வின் வசந்த காலமாக வருமானத்துக்கான நேரமாக அமைவதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

சரியாகச் சொன்னீர்கள் ராமலக்ஷ்மி. தங்கள் மழைக்காலத்துக்காக வசந்த காலத்தைப் பலியிடுகிறார்கள்.
இரவில் அவர்களது பேச்சையும் களிப்பையும் கேட்கவேண்டுமே:)நன்றிமா.

மாதேவி said...

வெய்யிலில் வேலைசெய்யும் மக்களைப் பார்க்கப் பரிதாபம்தான்.

நாங்கள் வீட்டின் உள்ளிருந்து அழுகின்றோம்.

ஆந்திராவில் 122 டிகிரி ஆம். எப்படித்தான் தாங்குகிறார்களோ.

சாந்தி மாரியப்பன் said...

விடியும்போதே தகிக்கிறது இங்கே.. அடுக்களையில் இன்னும் அதிகமாக அனல் தெரியுது. பேசாம அடுக்களைக்கு லீவு விட்டுட்டா என்னன்னு தோணுது :-))

கோமதி அரசு said...

கோவையில் இருந்த போது கோவைதானா என நினைக்க வைத்து விட்டது வெயில். மழை இல்லாமல், மக்கள் அவதி படுகிறார்கள், தண்ணீர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை வருகிறது.

ஏரி குளம் எல்லாம் நிரம்பி மக்கள் துன்பங்கள் தீர பிராத்திக்க வேண்டும்.