முதல் நல்ல செய்தி, எனக்கு மிகவும் மனதுக்கு நெருங்கிய
மூன்று நண்பர்கள் தீ நுண்மியின்
பிடியிலிருந்து விலகி இருக்கிறார்கள்.
ஒருவர் தந்தையை இழந்தாலும் தன் தம்பியையும் தன்னையும் காத்து
செயல் பட்டிருக்கிறார்.
இறைவன் அவர்களுக்கு என்றும் நன்மை செய்வான்.
2,, இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் காத்தரீன்
ஒரு ஆசிய குடும்பத்தலைவரின் உடல்
நலம் குன்றியபோது, செய்தி தெரிந்து தனது
சிறுனீரகத்தைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.
காத்தரீனும், சிறு நீரகம் வாங்கிக் கொண்டவரும் நலமாக இருக்கிறார்கள்.
3,,இணையம் வழியாகவே இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள
வழி தேடிக் கண்டு பிடித்தாள் மகள்.
அந்த KIT வந்ததும்.
அதிகாலை வேளையில் இரத்தம் எடுத்து
அவர்கள் கொடுத்திருந்த அட்டையில் துளி துளியாக
ஆறு இடங்களில்
பதிய வைத்து நன்றாகக் காய்ந்ததும்
அவர்கள் கொடுத்த சீல் வைத்த ப்ளாஸ்டிக்
pouch உள்ளே வைத்து, வாசல் தபால் பெட்டியில் வைத்துவிட்டோம்.
தபால்காரர்,
எங்கள் தபால்களைக் கொடுத்துவிட்டு,
வைத்த உறையை வண்டியிலிருந்து
கை நீட்டி எடுத்துக் கொண்டார்.
அவரும் கையுறை அணிந்திருந்ததால் இருவருக்கும் பாதுகாப்பு.
இதோ ரிசல்ட்டும் வந்து விட்டது. வருட சராசரியாக 8 ஆம் நம்பர் வந்திருக்கிறது.
கொலஸ்ற்றால் நார்மல்.
பிறகென்ன வேண்டும்?
வைத்தியர் நிறைய புத்திமதி சொல்வார்,
கேட்டுக் கொள்ளணும்.:)
4,,,,,,கூகிள் மீட் வழியாக ஒரு திருமணம், ஒரு நிச்சய தார்த்தம்
பங்கெடுத்துக் கொண்டோம்.
அவரவர் நல்ல உடை உடுத்திப் பங்கெடுத்துக் கொண்டது அருமையாக இருந்தது/
என்னுடையப் பதிவுப் பயணத்தில் என்னுடன் இணைந்து வந்த
அனைவருக்கும்,
பாட்டு பதிவு போட்டாலும் பாராட்டும் நல்ல மனங்களுக்கும்
அடியேனின் வந்தனங்கள்.
அனைவரும் வாழ்க வளமுடன்,
3,
11 comments:
வணக்கம் சகோதரி
தங்களது 2001ம் பதிவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். மேலும் மேலும் தாங்கள் பல்லாயிரம் பதிவுகள் தர வேண்டுமாய், இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
முதல் செய்தியும், இரண்டாவது செய்தியும் மகிழ்ச்சி தந்தது. மூன்றாவதில், தங்கள் உடல்நலம் நன்றாக இருப்பதாக கூறுவது அதை விட மகிழ்வை தருகிறது. நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை அந்த இறைவன் நம் அனைவருக்குமே தந்து நம் மன மகிழ்வை குன்றாது வைத்திருக்க வேண்டுமாய் தினமும் பிராத்தனைகள் செய்கிறேன்.
உங்கள் அழகான பதிவுகள் எங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. எங்கள் மனம் நிறைந்த நன்றிகளும் உங்களுக்கு என்றென்றும் உண்டு. அன்பான வாழ்த்துகளுடன் நன்றிகளும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல அருமையான பதிவுகளைத் தொடர்ந்து கொடுத்து வருகிறீர்கள். வாழ்த்துகள், பாராட்டுகள், மேன்மேலும் பல நல்ல பதிவுகளைத் தொடர்ந்து கொடுக்கவும் பிரார்த்தனைகள். சர்க்கரை அளவு 8 என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்கணும். நம்மவருக்கு 6.4. நல்லபடியாகக் குறைந்து வந்தால் சந்தோஷமே! உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும். முக்கியமாய்ப் பிறருக்குத் தொந்திரவு தராமல் இருந்தாலே போதுமானது! இல்லையா?
நல்ல செய்திகளுக்கு நன்றி. அனைவரின் உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்திப்போம்.
அன்பு கமலாமா,
தங்களின் ஆழ்ந்த தோழமைக்கு மிக நன்றி.
தங்களைப் போல இத்தனை கவிதையாக எழுத எனக்கு வருவதில்லை.
அதுவும் நம் கீதா, கோமதி எல்லோரும்
எழுத்து ,ஆராய்ச்சி, தமிழ்ப் பற்று எல்லாவகையிலும் ஜொலிப்பவர்கள்.
மனம் அலைபாயாமல் இருக்கத்தான் எழுதுகிறேன்.
அதை நீங்கள் அணுகும் முறையில் மனம் பூரிக்கிறது.
நன்றி மா. இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்பு கீதாமா,
நாமும் 15 வருடங்களாகப்
பழகிவிட்டோம்.
நீங்கள் எட்டிப் பிடிக்கும் சிகரங்கள் உன்னதமானவை.
உங்கள் எல்லோரின் எழுத்தைப் பார்த்தே நானும்
வியந்துகொண்டே பதிவிடுகிறேன்.
சர்க்கரை அளவு கொஞ்சம் அதிகம் தான்.
நடை குறைந்து விட்டது.
நீங்கள் சொன்னபடி இறைவன் எப்போதும் துணை இருக்க வேண்டும்.
இருப்பான்.
அன்பான வார்த்தைகள் மேலும் இதம் தருகின்றன. நன்றி மா.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.
நல்லதே நடக்கட்டும் அம்மா...
அருமையான பதிவு.
//மூன்று நண்பர்கள் தீ நுண்மியின்
பிடியிலிருந்து விலகி இருக்கிறார்கள்.//
மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திதான்.
//காத்தரீனும், சிறு நீரகம் வாங்கிக் கொண்டவரும் நலமாக இருக்கிறார்கள்.//
இறைவன் அருளால் நலமாக இருக்கட்டும்.
இணையம் வழியாக இரத்த பரிசோதனை நல்ல விஷயம்
உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன் அக்கா.
அன்பு தனபாலன் மிக நன்றி மா. நன்மை ஒன்றே நமக்கு வேண்டும்.
அன்பு கோமதி, மிக நன்றி மா.
நல்ல செய்திகளையும் பதிவில் சேர்க்கும் போது மனம் நிறைவடைகிறது. மறந்து போவதற்கு முன்
பதிந்து விடவேண்டும்.
காத்தரின் அடுத்த நாளே நடக்க ஆரம்பித்து விட்டார். நல்ல மனம் என்றும்
நலமுடன் இருக்க வேண்டும்.
வாழ்த்துகளுக்கு நன்றி மா. எல்லோரும் நலமுடன் இருப்போம்.
2001-ஆம் பதிவு! மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.
தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Post a Comment