Blog Archive

Friday, September 04, 2020

வில்லன் முதல் நகைச்சுவை வரை T S Balaiah பயணம் | #Balaiah | #TSBalaiah | ...

வல்லிசிம்ஹன்
 நம் பாலையா.என்றும் வாழ்க அவர் நாமம்.தூக்குத் தூக்கி ஸேட் துக்காராம் விட்டுப் போச்சே.

8 comments:

துரை செல்வராஜூ said...

நல்ல நடிகர்...
காதலிக்க நேரமில்லை - விஸ்வநாதன்!...
எவராலும் ஆகாத குனச்சித்திர நடிப்பு...

ஹேமநாத பாகவதர் - முத்திரை..
தவில் சக்கரவர்த்தி முத்துராக்கு அண்ணன்..

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர்... மிகவும் பிடிக்கும்...

வல்லிசிம்ஹன் said...

சரியாகச் சொன்னீர்கள்.அன்பு துரை.
கொடுத்த பாத்திரங்களுக்குக் கௌரவம் குறையாமல்
நல்ல நடிப்பை வழங்கியவர்.

"இது வேண்டாம்னு சொன்னா இளவரசி கேக்குறானில்லே"
தூக்குத்தூக்கியில் அவர் பேசும்போது
அவரைக் கண்டால் பாவமாக இருக்கும்.
அப்படி நம்மை அவர் நடிப்புடன் ஒன்றச் செய்வார்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு தனபாலன்.
மிக மிக ரசிக்க வைக்கும் நடிப்பு.
பாமா விஜயம் மாமனார், ஊட்டி வரை உறவு
அப்பா எல்லோருமே பிடித்த பாத்திரங்கள்.

நன்றி மா.

கோமதி அரசு said...

T S Balaiah அவர்களின் கலை பயணம் காணொளி மிக அருமை.
எந்த ஒரு பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடித்து தூள் கிளப்புவார்.
பிடித்த நடிகர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா உங்களுக்கும் சாருக்கும் உயர்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள் மா.

திரு பாலையா அவர்களின் நடிப்பு இன்னும் பரணமித்திருக்கும் நமக்கு தான் கொடுத்து வைக்க வில்லை.

வெங்கட் நாகராஜ் said...

காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், பாமா விஜயம் என அவர் நடித்த பல படங்கள் ஒவ்வொன்றும் அவரது நடிப்பிற்காகவே பார்த்ததுண்டு.

நல்லதொரு நடிகர். இங்கே அவர் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், உண்மைதான். எப்பொழுதும் பாலையாவின் நடிப்பு சிறப்புதான்.