Saturday, October 31, 2026

அக்டோபர் 31 ,1965

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும்.











அக்டோபர் 31 2012.

வண்டி போகும் பாதை எல்லாம் புதிதாக இருந்தது.
சிங்கம் அப்பா மாமா எல்லோரும் அரசியல் பேசிய வண்ணம்
வந்தார்கள்.

அப்பாவிடம் ஏதாவது சொல்ல அவர் முன்சீட்டிலிருந்து திரும்பும்போதெல்லாம்    ஆராய்ச்சியாக என்னைப்
பார்ப்பது போலத் தோன்றும்.

மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்திருப்பரோ:))))

மயிலை லஸ் சர்ச் ரோடில்  திரும்பி  மரங்களுக்கு நடுவே இருந்த பெரிய பங்களாவின் முன் நின்றது.

இவர் சட்டென்று உள்ளெ போய்விட்டார்.
பாட்டியும் நாத்தனாரும் வந்து எங்களை அழைத்துக்
கொண்டு  போனார்கள்.

தயங்கிக் கொண்டே அந்த கடப்பாக் கல் பதித்த கூடத்துள் 
புகுந்தோம்.
அதற்கும் அடுத்த பெரிய ஊஞ்சல் கூடத்தில் ஆஜிப்பாட்டி தாத்தா
எல்லோரும் அமர்ந்து கொண்டார்கள்.

மாடியிலிருந்து அவர் கீழே இறங்கி வர சற்று நேரம் பிடித்தது:)
ஐயா ஸ்மோக் பண்ணப் போயிருக்கிறார்,

இறங்கும் வேளை அவர் என்னைத் தேடுவது தெரிந்தது.
 தூணுக்குப் பின்னால் மரியாதையாக நின்று கொண்டிருந்தேன்:)

தாத்தாவின் கணீர் குரல் இன்னும் இரண்டு நாளில்
தீர்மானிக்கலாம் என்றது.

அதான் எனக்குத் தெரியுமே என்று சொல்ல ஆசை:)

கமலம்மா கொடுத்த பாலைக் குடித்துவிட்டு
நாங்கள் விடை பெற்றோம்.
வண்டியில் ஏறும் வரை அந்த இரண்டு கண்களும் என்னைத் தொடர்வதை  உணர முடிந்தது.

அடுத்த நாள் விடிந்தது . 
நாங்கள் அன்று மதுரை  திரும்ப வேண்டும்.
திரு நெல்வேலி எக்ஸ்பிரஸ்ஸில் ராத்திரிக்கு ரிசர்வ் செய்திருந்தார்
அப்பா.
கமலம்மா போன் செய்து சிம்முவுக்குப் பிடித்திருக்கிறது. மற்றவை
கடிதத்தில் எழுதுகிறேன் என்று சொன்னார்.

ஐப்பசியிலேயே திருமணம் வைத்துக் கொள்ள முடியுமா.
கார்த்திகை ஆனாலும் பரவாயில்லை என்று சொன்னாராம்.

அப்பா தான் எல்லாவற்றையும்  தயார் செய்ய இரண்டு மாதங்கள் தேவைப்படும்    என்று சொல்லி விட்டார்.

அன்று இரவு எழும்பூரிலிருந்து கிளம்பும் வண்டியில் 
ஏறி அமர்ந்தோம்.  '' அட நம்ம வாசு வந்திருக்கானே'' என்றபடி 
அப்பா நின்றார். வாசு எனக்கு அண்ணா முறை.

அப்பாவின்  இன்னோரு ஒன்றுவிட்ட அண்ணாவின் மகன். 

சித்தப்பா நீங்களும் ராம் திருமணத்துக்கு வந்தீர்களோ
என்று கே ட்டார். 
ஓஹோ   தங்கச்சிக்குக் கல்யாணமா. என்று சிரித்தார்,.

ஆமாம்  அடுத்த வருஷம். உன் அம்மாவிடம் சொல்லு, நான் மதுரையில் வந்து பார்க்கிறேன் என்று அப்பா சொல்லி
விட்டு வண்டி ஏறினார்.

(பெண்பார்த்தல். சம்பந்திகள் பேச்சு எல்லாம் முடிந்தது. நிச்சயம் எல்லாம் செய்ய வேண்டாம். என் சொல்  தான்   நிச்சயம். என்று ஆஜிப்பாட்டி சொன்னதற்கு என் பாட்டி கவலைப் பட்டார். இன்னிக்கே வெற்றிலை பாக்காவது மாற்றிக் கொள்ளலாமே   என்று  சொன்னார். )பெற்றோருக்கு என் மாமியாரிடம் அளவு கடந்த பாசமும் மரியாதையும். கமலா  சொன்னால் சரிதான். நாங்கள் இன்றே  மதுரை திரும்புகிறோம்    என்று  சொல்லி விட்டார்கள். எனக்குச் சென்னையில் ஒரு சினிமா கூடப் பார்க்காமல் கிளம்புகிறோமே என்று வருத்தம்.   தை பிறந்ததும் திரும்பி வந்து புடவைகள் வாங்கலாம். மற்றதை மதுரையிலேயெ  முடித்துக் கொள்ளலாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.  நானோ என்  தனி உலகத்தில் இருந்தேன்.     திருமணமா எனக்கா. என்று ஆச்சரியம்.    மகா பதவிசாக எல்லோரையும்  வணங்கிவிட்டு வந்த டாக்ஸியில் ஏறி அமர்ந்து எழும்பூர் வந்தோம். 


வழக்கம்போல் ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டேன்.  அம்மா  வழக்கம்போல் ..எட்டிப் பார்க்காதே. கண்ணில புகை விழும்.  என்று சொல்லிய வண்ணம் தூங்க முயற்சி செய்தார். நான் செங்கல்பட்டு  ரயில் நிலையத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று முதல் நாள் பார்த்த உருவம்    என்னையே   பார்த்தவண்ணம்  என் ஜன்னலைக் கடப்பது போலத் தோன்றியது. குப்பென்ற  பட படப்பும்,கலவரமும் பற்றிக் கொண்டது. 

அம்மாவை எழுப்பி நான் பார்த்ததைச் சொன்னேன்.       சூச்சூ.கனவு காணாதே. அந்தப் பிள்ளை புதுக் கோட்டைக்கு வேறரயிலில் போயிருக்கும். நீ பேசாமல் தூங்கு. அசடு............}}என்றவண்ணம்     கண்ணை   மூடிக்கொண்டார்.   நானும் அதே பாதி கண்ணை மூடிக் கொண்டேன்.        ஐந்து நிமிடம் கழித்து அதே உருவம்    இன்னும் அருகாமையில் கடந்தது.  இந்தத் தடவை அப்பாவை எழுப்பினேன்.        அவர் மாதிரியே    என்று ஆரம்பித்ததும் அப்பா  முறைத்தார். இது பாரு சும்மா  தூங்கு. நேத்துதான் பார்த்திருக்கே  மனசில பதிந்து கூட இருக்காது.        கற்பனை      பண்ணாமல் சமத்தாத் தூங்கு     என்றவர் என்னைப் பார்த்துக் கொஞ்சம் மனம் தளர்ந்தார்.  சரி உன் திருப்திக்காகக் கீழே  இறங்கிப் பார்க்கிறேன் என்று       இறங்கினார். அப்பாவைத் தூங்கவிடாமல் இதென்ன பிடிவாதம்    என்று அம்மா       கடிந்ததைக் கூட நான் பொருட்படுத்தவில்லை.                    
அப்பா  அவரைப் பார்க்கிறாரா       என்றே கண்களை     ஜன்னலோரம் பதித்தவண்ணம்        பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று என்னவோ செங்கல்பட்டிலேயே         டேரா  போட்டு     விட்டது   திருநெல்வேலி எக்ஸ்ப்ரஸ்.     அப்பா        நாங்கள் இருக்கும்      கம்பார்ட்மேண்ட் அருகிலேயே  நிதானமாக  உலாவினார்.அட}     நீங்களா       என்று  குரல் கேட்டது.   எனக்கோ படபடப்பு அதிகரித்தது.    நீங்களும் இந்த வண்டியில் வருகிறீர்களா. உங்களுக்கு  ராமேஸ்வரம்     வண்டியில் போகவேண்டாமா  என்று அப்பா கேட்க      முன் கேட்ட அதே கம்பீரமான குரல்.           இல்லை      மாமா,(!!!!!!!!!!!) திருச்சி  வொர்க்ஷாப்பில் ஒரு வண்டி   நிற்கிறது. அதைப் புதுக் கோட்டை கொண்டு போகவேண்டும். அதனால்       இந்த வண்டியில் வந்தேன்.      உங்களைப் பார்த்ததில்  எனக்கும்     ஒரே ஆச்சரியம்.
எல்லோரும் மதுரை போகிறீர்களா(??????  பின்ன எங்கே போவோம்???) என்ற வண்ணம் 

பக்கத்தில் வந்தது அந்தக் குரல். அம்மா உடனே    புடவையை தோள் சுற்றிப் போர்த்துக் கொண்டு என்னை ஜன்னலோரத்திலிருந்து விலக்கி    நீ அப்புறம் பார்க்கலாம்.இப்போது நாங்கள் பார்த்துக் கொள்கிறொம் என்று         தள்ளி உட்கார வைத்தார். நான்       தான் சொன்னபேச்சைக் கேட்கும் நல்ல பெண்ணாச்சே. நான் தள்ளி உட்காரவும்,, ரயில் கூவவும் சரியாக இருந்தது. ''மாமா ஏறிக் கொள்ளுங்கள்.    பிறகு பார்க்கலாம்'' என்ற சொல் காதில் விழுந்ததது.        அவர் தன் கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்ளவேண்டுமே     என்று கவலை எனக்கு.

அப்பாவின் லேசான புன்னகை அம்மாவை நோக்கி
வந்தது. நான் அதைக் கவனிக்கவில்லை.
என் மனம் அடுத்தக் கம்பார்ட்மெண்டுக்குப் போய்விட்டது.

இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. முன்னே பின்னே பார்க்கவில்லை. ஒரே நாளில் இரண்டு மணி நேர இடைவெளியில் 
மனங்கள் எப்படி இணைந்தன. இடைவிடாமல் 
ஒருவரைப் பற்றியே நினைக்க முடியுமா.அதிசயம் தான்.

பின்னாட்களில் அவரும் என்னிடம் இதையே சொன்னார்.
 இருவருக்கும் பிடித்துவிட்டது. எதற்குப் பிரிந்திருக்க வேண்டும் 
என்று யோசித்தாராம்.

ஒவ்வொரு ஜன்க்‌ஷன் சந்திப்பிலும்  அவரைக் கண் தேடியது.
செங்கல்பட்டில் பார்த்துக் கொண்டோம்.
ஒன்றும் பேசவில்லை. 

இனி திருமணம் தான். நன்றி மீண்டும் வருக.

No comments:

அக்டோபர் 31 ,1965

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும். அக்டோபர் 31 2012. வண்டி போகும் பாதை எல்லாம் புதிதாக இருந்தது. சிங்கம் அப்பா மாமா எல்லோரும் ...