Blog Archive

Friday, September 04, 2020

venkatesh bhat makes keerai vadai | tasty snacks | keerai vadai recipe i...

வல்லிசிம்ஹன்
விருப்பம். குடும்பத்தில் அனைவரும் ரசித்து ருசிப்பது.

9 comments:

Geetha Sambasivam said...

மெது பக்கோடாவும் பார்த்தேன், அதான் ஆரம்பம் போல. அவர் அப்பாவுக்கு இன்னமும் காமிராக் கூச்சம் இருக்கு. வெங்கடேஷ் பட் நன்றாகப் பேசுகிறார். கீரை வடை நானும் இப்படித்தான் பண்ணுவேன். ஆனால் கடலைப்பருப்புக்குப் பதிலாத் துவரம்பருப்புப் போட்டு. ஜீரகம் சேர்ப்பதில்லை. :)

நெல்லைத் தமிழன் said...

பார்க்கணும்னு நினைத்துக்கொண்டிருந்தேன்.

அவங்க அப்பா ரொம்பவே நல்ல டைப்பாக இருக்கிறார். வெங்கடேஷ் பட்டும் ரொம்ப தன்மையா பேசறார். அவங்க கான்வர்சேஷனே ரொம்ப நல்லா இருக்கு.

Geetha Sambasivam said...

இதை விட அம்மாவும் நானும், ராகேஷ் ரகுநாதன், ரமா ரகுநாதன் கேட்டுப் பாருங்க. இல்லைனா புளியோகர ட்ராவல்ஸ்னு தேடிப் பாருங்க, அம்மா, பிள்ளை அந்நியோன்னியம் ஆச்சரியப் பட வைக்கும்.

Geetha Sambasivam said...

இப்போ ஒரு கருத்துக் கொடுத்தேன். அது வந்ததோ? அம்மாவும் நானும் பற்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
தி.நகர் போகும்போது இவர்கள் துர்கா பவன் தாண்டிதான் போக வேண்டும்.
சிம்மு தன் வேலை முடிந்து வரும்போது தினம்
பத்து வடை வாங்கி வருவார்.
முறுமுறு வென்று அவ்வளவு நன்றாக இருக்கும்.
அப்பா மிக மிக மென்மை.
அதிர்ந்து பேசியே பார்த்தது கிடையாது,.
மகன் நிறைய இது போலப் பேசி பழகி விட்டார்:)
அப்பாவை வைத்து இன்னும் நிறைய
பதிவுகள் போட்டால்
அருமையாக இருக்கும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முரளிமா.
எப்பவும் தந்தைகிட்ட இந்த மரியாதை இருக்கணும்.
தொழில் உத்தியாக இல்லாமல் நிஜ பக்தியாகச் செய்ய வேண்டும். நான் பார்த்த வரை அப்படித்தான் தோன்றுகிறது.

நல்ல அப்பாக்கள் வளர்த்த செல்வங்கள்
நல்ல படியாவே இருக்க வேண்டும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, நான் அங்கே ரெகுலர் விசிட்டர். ஆமாம் சுட்டுக்காதேன்னு சொல்கிற ரமா அம்மாவை மிகப் பிடிக்கம்!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... சுவையான கீரைவடை. பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது! :) இங்கே அரைக்கீரை கிடைக்காது. பாலக் தான்! முடிந்தால் செய்து பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , பாலக் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள்.
நன்றாக வரட்டும்.