Blog Archive

Monday, September 14, 2020

கதவின் பின்....1

வல்லிசிம்ஹன்
இது எங்கள் வீட்டுக் கதவு டிசைன். 
அமைத்தவர் சிங்கம்.

வாழ்க்கையில் புறக்கதவுகளும்
அகக் கதவுகளும் எப்போதும் ஆக்கிரமிக்கின்றன
மனதை.

எப்பொழுதுமே திறந்திருக்கும் எங்கள் வீட்டுக்கதவு 
40 வருடங்களுக்கு முன்னால்.
வருபவர்களும் இருப்பவர்களும் செல்பவர்களும்
அதிகம். சுமார் இரவு 8 மணிக்கு கதவு சார்த்தப் படும். ஏனெனில் அதுவே
பாட்டி படுக்கப் போகும் நேரம்.

அவருக்கு எங்கள் எச்சரிக்கை உணர்வின் மேல் அத்தனை நம்பிக்கை
கிடையாது.
தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தால்
பின் வாசல் கதவை மூடியே ஆக வேண்டும்.
தான் உறங்கச் செல்லும் போது
வாயில் கேட் பூட்டப் படவேண்டும்.
உள் கதவு தாழ்ப்பாள் போடப் படவேண்டும்.
அப்போதோ ஏசி வசதி எல்லாம் கிடையாது.

ஒரே புழுக்கம் ஆரம்பிக்கும்.எங்கள் வீட்டின் மின் விசிறிகள் பழங்காலத்தவை.
அவற்றைப் போன்ற விசாலமான
காற்றை வீசி வழங்கக் கூடிய விசிறிகளை இப்போது காண முடியாது.
பெரியவர்களின் மனம் போல
அவையும் பெரிதாக இருந்தன.

அதை இயக்கிவிட்டால் கூடம் எங்கும்
காற்று சலசலக்கும்.
அந்த இரவு நேரத்தில் குழந்தைகள் படிப்பை 
முடித்துவிட்டு சாப்பிட வருவார்கள்.

அனைவரும் அமர்ந்து ஒரு ரசம், ஒரு பொரியல் 
என்று சாப்பிட்டு எழுந்திருப்போம்.
தோசை மாவு இருக்கும் நாட்கள் கொண்டாட்டம் தான்.
மகள் கை கொடுப்பாள்.
மகன் கூட  முயற்சிப்பான்.

கதவுக்குத் திரும்புவோம். அப்போது இந்த நாட்கள் போல
திருட்டு பயம் அவ்வளவு இல்லை.
நிம்மதியாக உறங்கினோம்.
பாட்டி மறைந்து ,மாமியாரும் மறைந்த பிறகு
நான் தனியாக இருக்க வேண்டி வந்தது.
வெளியே சென்றவர்கள் திரும்பும் வரை
கதவுகள் சார்த்தியே  இருக்கும்.கடைக்கோ, பிறந்த வீட்டுக்கோ சென்றால்
கதவுகளைப் பூட்ட அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள
 வேண்டி இருந்தது.

20 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கதவைப் பற்றிய மலரும் நினைவுகள் அருமை. தங்கள் கணவர் தேர்ந்தெடுத்த டிசைன் நன்றாக உள்ளது. வீட்டுப் பெரியவர்களுக்கு வீட்டிலுள்ளவர்கள் தரும் மரியாதையை, அவர்களின் பொறுப்புணர்ச்சியைப் பற்றி நன்றாக விளக்கி கூறியுள்ளீர்கள். மனதிற்கு இதமாக இருக்கிறது. இப்போது அந்த மாதிரி பெரியவர்களுக்கு யார் மதிப்பு தருகிறார்கள்?

/வாழ்க்கையில் புறக்கதவுகளும்
அகக் கதவுகளும் எப்போதும் ஆக்கிரமிக்கின்றன
மனதை./

நான் மிகவும் ரசித்த வரிகள். எத்தனை கதவுகள் ஆக்கரமித்தாலும் வேண்டிய காற்று கிடைக்காமல் மனதிற்கு அவ்வப்போது அவதியாகத்தான் உள்ளது.

தங்கள் பதிவை படிக்கையில் "கதவு" கதை நினைவுக்கு வருகிறது.( ரா.கி.ரா எழுதியதா?) அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா, மிகமிக நன்றி.

பெரியவர்களிடம் மரியாதை நம்மில ஏற்றிய தந்தை தாயைத்தான் சொல்ல வேண்டும். அவர்கள் தங்கள் பெற்றோரிடம் காட்டிய மரியாதையைப் பார்த்து தானே நாம் வளர்ந்தோம். இப்போதும் நமக்கு அடுத்த தலைமுறை நன்றாக இருக்கிறது. அதற்கு அப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

கதவு” தொடர்கதை திருமதி கமலா சடகோபன் எழுதியது. கலைமகளில் வந்து பரிசும் பெற்றது. அவருடைய மகன் பெரிய எழுத்தாளர். அவர் கணவன் சித்ராலயா கோபு.

பல விஷயங்களை வெளியே சொல்லாமல் பூட்டி வைக்கும் வழக்கம் நமக்கு உண்டே.
அவை நம்முடன் போக வேண்டியது தான்:(

இல்லறத்துக் கதவுகள் இனிமை, மற்றும் அல்லாதவைக்கு சாட்சி. பின்பக்கம் முன்பக்கம் திறந்து வைத்து காற்றை அனுபவித்த. வருடங்கள் சில. அதுபோல மனதுக்கு இதம் அளிக்கும் தென்றலாக நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். வேறென்ன வேண்டும் அம்மா.

Geetha Sambasivam said...

கதவு பற்றிய நினைவுகள் அருமை. நாங்கல்லாம் சின்ன வயசில் பெரிய வீட்டில் ஒரு போர்ஷனில் குடித்தனம் இருந்ததால் யார் முன்பக்கம் இருப்பார்களோ அவங்க தான் கதவைப் பூட்டுவார்கள். வெறும் கம்பிக்கதவுகள் தான். அதைப் பூட்டிவிட்டு உள்ளே நான்கு குடித்தனங்கள் இருந்திருக்கோம். பயமெல்லாம் இருந்ததில்லை. அதன் பின்னர் தான் கல்யாணம் ஆகித் தனிக்குடித்தனம் வந்தப்போத் தனிக் கதவுகள். இரவில் பூட்டிப்போம், பகலில் நான் தனியாக இருந்தால் உள்ளே பூட்டிப்பேன். வேலைக்குப் போனதும் 2,3 சாவிகள் தயாரித்து ஆளுக்கு ஒன்றாக வைச்சுப்போம்.தனி வீடு என்பதே கல்யாணம் ஆகி வந்தப்புறமாத் தான்!

Geetha Sambasivam said...

கதவுகளையோ ஜன்னல் கதவுகளையோ மூடினால் எனக்கும் பிடிக்காது. காற்று வராது, மூச்சு முட்டும் என்பேன். இப்போது கதவுகளைத் திறந்து வைத்தால் நம்ம முன்னோர்கள் வந்து விடுகின்றனர். ஆகவே மூடியே வைச்சிருக்க வேண்டி இருக்கு.

Geetha Sambasivam said...

நாச்சியார் கோயில் வழியாகத் தானே எங்க பூர்விக ஊருக்குப் போகணும். நாச்சியார் கோயில் பெருமாளையும் கல்கருடனையும் பார்த்திருக்கேன். ஒரு வைகுண்ட ஏகாதசி அன்று எங்களால் போக முடியலை. பிள்ளையும், மருமகளும் போனார்கள். நாங்க வண்டியிலேயே உட்கார்ந்திருந்தோம். பெருமாள் அர்ச்சா ரூபத்தில் உற்சவராக எங்களைத் தேடி வந்து தரிசனம் கொடுத்துட்டுப் போயிட்டார்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்...

ஏகாந்தன் ! said...

வீட்டைப்பற்றி, கதவைப்பற்றி, வீட்டு மனிதர்களைப்பற்றிய நினைவுகள் அருமை.

வர்ணனையோ பழங்கால வீடுபற்றியது. படத்திலிருக்கும் கதவோ நவீன ஐரோப்பிய வீடுகளின் கதவுபோல் கொஞ்சம் மரமும், நிரம்ப கண்ணாடி மயமாக இருக்கிறது. படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லையோ?

நம் நாட்டில் வீட்டு வாசலுக்கு கண்ணாடிக் கதவை வைத்தால் என்ன ஆகும்?

நெல்லைத் தமிழன் said...

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் அவர் நினைவில் அமிழ வைக்கிறது அல்லவா?

கதவு..அபீஸ் கதவு மாதிரி இருக்கு.

நெல்லைத் தமிழன் said...

நாச்சியார் கோவில் கல்கருடன் என்றதும், கல்கருட சேவை, சென்ற வருட இறுதியில் சுவாதி(?) நட்சத்திரம் அன்று அங்கு நடந்த விழாவில் கலந்துகொண்டது (அதிலும் கல்கருடன் முன்பு சாமவேதம் சில வரிகள் சொன்னது) நினைவுக்கு வந்துவிட்டது. நள்ளிரவு கல்கருட சேவியின்போது தாயாரின் பல்லக்கை அரை நிமிடங்கள் சுமக்கும் பாக்கியம் கிடைத்தது. அதுவே என் தோளின் வலிமை குன்றியிருப்பதைக் காண்பித்தது. கல்கருடனை ஏளப்பண்ண முயற்சிக்கவில்லை. அந்தக் கோவில் அர்ச்சகர், பக்தர்கள் எல்லோரும் பங்குபெறணும் (எல்லோரும் பாகுபாடில்லாமல்) என்று கவனம் எடுத்துக்கொண்டது எனக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது.

கோமதி அரசு said...

நினைவுகளை சொன்ன அருமையான பதிவு.மனகதவில் இருக்கும் நினைவுகள் ஏராளம் . இன்பமும், துன்பமும் கலந்த கலவை.

பெரியவர்கள் இருக்கும் வரை வீடுகளுக்கு வந்து செல்பவர்கள் அதிகமாக இருக்கும்.

கலகருடன் தரிசனம் செய்தேன். மாயவரத்தில் இருக்கும் போது நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மதுரையில் கோடை தவிர மற்ற மாதங்கள்
காற்றுக்குக் குறைவில்லை என்றே நினைவு.

பெரிய வீட்டில் வாயில் கதவை அடைப்பது பெரிய வேலை தான். ஆனால் நிறைய நபர்கள் இருக்கும் இடத்தில் பயம் ஏது.?
எனக்கு காற்று மிக அவசியம். அதனாலயே வெளியே செல்ல முயற்சிப்பேன்.
இங்கே தான் இத்தனை
தடைகள் வந்துவிட்டதேமா.

ஆமாம் நாங்களும் ஆளுக்கொரு சாவி வைத்துக் கொண்டோம்
பின்னாட்களில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஆமாம் இங்கு வலைக்கதவைப் போட்டுக் கொள்ள
முடிகிறது. இல்லாவிட்டால் பூச்சிகள் படை எடுப்பு.


முன்னோர்கள் வந்தால் தொல்லை தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
கல்கருடன் கலிகால உண்மை.
மனமே பூரிக்கிறது நினைக்கையில்.
2012 கடைசியாக அவரைத் தரிசனம் செய்தது. அதுவும் நீங்கள் வைகுண்ட ஏகாதசியின் போது
கண்டீர்களா.!!!!!!!!! மஹா தரிசனம்.
வாழி பெரிய திருவடி. நன்றி மா கீதா,

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

;000000)))))).
அன்பு ஏகாந்தன் சார். ஆமாம் slightly misleading.
இந்தக் கதவு 2008 இல் வீட்டில் இன்னோரு அறை
சேர்த்துக் கட்டியபோது
வைத்தோம்.படம் கூகிள் உபயம்.

கூடம் என்று சொன்னேன் இல்லியா.அதற்கு மூன்று வழி.
கூடம்
ஏர்கண்டிஷன் செய்ய வேண்டி வந்ததால் மூன்று புரத்திலும்
கண்ணாடிக் கதவு அண்ட் ஸ்லைடிங்க் டோர் வைத்தார் என் கணவர்.
அதற்குப் பிறகு வாசல் கதவு. பழைய கதவையே
வைத்தோம். வைத்தார்.

நினைவுகள் 54 வருடங்களுக்கானவை.
எதையும் மறக்க முடியாது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு முரளிமா.
2019இல் நவம்பரில் அவர் வருடாந்திர கிரியைகளை
முடித்துக் கிளம்பும்போது அவர் படமும்
அந்தக் கதவும் இன்னும் எத்தனை நாள்
பூட்டி வைக்கப் போகிறாய் என்று கேட்பது போல்
இருந்தது.
மீண்டும் போய் உள்ளே ,திவானில் படுத்துக்
கொண்டுவிட்டேன்.
பசங்க ரெண்டு பேரும் அனுமாரைப் பார்க்கப்
போனார்கள். உதவிக்கு இருந்த ராணி மட்டும் அம்மா
கலங்க வேண்டாம். ஐயா இங்கேதான் இருக்கிறார்
என்றாள்.
அவர்கள் தான் வீட்டில் தங்குகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. தாயாரை ஏளச் செய்தீர்களா. என்ன பாக்கியம்.

கொடுத்து வைத்தவர்.
ஆமாம் மார்கழியிலும் சித்திரையிலும் கல்கருடன்
வீதி உலா வருவார்.
மஹா பிரசித்தி ஆயிற்றே.
நீங்கள் அங்கே சென்றதே பூர்வ ஜன்ம பாக்கியம்.
உண்மைதான் தோள் வலிமை வேண்டும்.
ஸ்ரீபாத தாங்கிகள் தான் உண்மையில்
புண்ணியம் செய்தவர்கள்.
கருடன் தான் என்ன ஆகிருதி!!!
மிக மிக நன்றி மா. மீண்டும் பெருமாளை நினைக்க வைத்தீர்கள்.

அந்தக் கோவில் அர்ச்சகர், பக்தர்கள் எல்லோரும் பங்குபெறணும் (எல்லோரும் பாகுபாடில்லாமல்) என்று கவனம் எடுத்துக்கொண்டது எனக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது.////////////// This is true Vaishnavam.!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
மாயவரம் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எத்தனை கோயில்களைத் தரிசித்திருப்பீர்களோ.
மிக்க பாக்கியம் செய்தவர்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

கதவுகள் பற்றிய நினைவுகள் நன்று....

தொடர்கிறேன் மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட் . படித்து ரசித்ததற்கு நன்றி.