எக்ஸ்கர்ஷன்!! 1958?
திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு.
ஆளுக்கு இரண்டு ரூபாய் பெரிய டீச்சரிடம் கொடுத்துவிட்டு
ரயிலில் மதுரை போன நினைவு.
பாசஞ்சர் ரயில் மதுரை செல்ல ஒரு மணியோ
ஒன்றரை மணியோ.
இறங்கினதும் அம்மா கொடுத்த இட்லி
காலி செய்தாச்சு.
ரயில் நிலையத்தில் இருந்து நடந்தே நாயக்கர் மஹால்.
இரண்டிரண்டு பேராகத் தூண்களை அளந்த நினைவு.
பிறகு நடந்தே ஏதோ ஒரு மியூசியம் போன நினைவு.
மீண்டும் ரயிலேறி திருப்பரங்குன்றம் வந்தோம்.
மலையேறி முருகனைத் தரிசித்துவிட்டு
வரும்போது ஒலி பெருக்கியில் கேட்டது
புதையல் படப் பாடல்கள்.
கேட்டதும் மன ஓரத்தில்.
வம்டியில் ஏறியதும் திருமங்கலம் வரும் வரை பாடிய பாடல்களில் ஒன்று காவேரிதான் சிங்காரி.
ரயில் தாளத்திற்கு ஏற்ப கைகள் தட்டிப் பாடிய
பாடல்.நல்ல நினைவுகளுக்கு நன்றி.
8 comments:
பகிர்ந்த பாடல்கள் எல்லாம் பிடித்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
உங்கள் சிறு வயது சுற்றுலா நினைவுகள் அருமை.
அன்பு கோமதி மா,
பாலாஜி, எம்.என் ராஜம் இருவரின் நடிப்பு மிகப் பிடிக்கும். அதுபோல சீர்காழி கோவிந்த ராஜனின் கம்பீரக் குரலும்.
நீங்களும் வந்து ரசித்ததுதான் எனக்கு மகிழ்ச்சி.
நன்றி மா.
நினைவுகள் சங்கீதமே...
அனைத்துப் பாடல்களும் பிடித்தவையே! நல்ல நினைவலைகள்! ம்யூசியம் ஒருவேளை தல்லாகுளத்தில் காந்தி ம்யூசியம் போனீங்களோ? அப்போ இருந்ததோ? தெரியலை.
வணக்கம் சகோதரி
பழைய பாடல்கள் அத்தனையும் தேனாக இனித்தது. நானும் இப்போதும் பழைய பாடல்களைத்தான் விரும்பி கேட்பேன். அவ்வப்போது மனதோடு முணுமுணுப்பதும் அதையேதான். புதுப்பாடல்கள் மனதுடன் ஒன்றுவதில்லை.
உங்களின் பள்ளிப்பருவ நினைவலைகள் நன்றாக இருந்தது. பள்ளியில் அப்போதே சுற்றுலாவுக்கெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்களே.. உங்களுகெல்லாம் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு தேவகோட்டை ஜி மிக நன்றி.
ஆமாம். அதற்காகத் தான் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில் நான்
படித்த கஸ்தூரிபா காந்தி ஆதாரப் பள்ளியில் நூல் நூற்றுக் கொடுப்பது
தினம் உண்டு.
புத்தம்புதிதாகப் பார்த்த நினைவு மா. மிக நன்றி.
நல்ல நினைவு உங்களுக்கு.
அன்பு கமலாமா,
எனக்கும் இப்போது நினைத்தால் அதிசயமாக இருக்கிறது.
அனைவரும் 10,11 வயதுக் குழந்தைகள்.
ஐந்தாவது, நாலாம் வகுப்புப் படிப்பவர்கள். ஒரு 30
பசங்களாவது இருப்போம்.
கை கோர்த்து மதுரை வீதிகளில் நடந்த நினைவு.
அந்த இசையெல்லாம் மனதில் பதிய
பட்டுக் கோட்டையாரும், ஆத்ம நாதனும் தான் காரணம்.
நீங்களும் ரசித்ததே மகிழ்ச்சி. நன்றி மா.
Post a Comment