Blog Archive

Tuesday, September 22, 2020

வெற்றிக்கு வழி.

வல்லிசிம்ஹன்

நன்றி தினமணி.காம். வெற்றி கொண்ட மோகனா - நேரடி சாட்சியம்

By பேரா. சோ. மோகனா  |   Published on : 22nd September 2020 02:33 PM  |     |  

Roseday special story: Cancer survivor Mohana Somasundaram

பேரா. சோ. மோகனா

இந்த அழகான உலகைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள்தான் நாம், ஒருநாள் அனைவரும் திரும்பி செல்லத்தான் போகிறோம், 

ஆனால், தேதி மட்டும் ரகசியம்!

இன்று 22.09.2020 உலக ரோஸ் நாள்.

 'அஸ்கின் ட்யூமர்' (Askin's Tumour) என்ற அரிதான இரத்த புற்றுநோயால் உயிர்ப்பலியான, கனடா நாட்டின் 12 வயதுப்  பெண் குழந்தை மெலிண்டா ரோஸ் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் மறைந்த செப்டம்பர் 22 ஆம் நாள், புற்றுநோயுடன் போராடும் மனித உயிர்களுக்கு, 

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையும், மகிழ்வும் 

அளிக்கக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தை இன்னும் இரு வாரமே உயிர் பிழைப்பார் 

என்ற போதும் அவர் தைரியத்தைக் கைவிடாமல், 

இறுதிவரை போராடினார். அவருக்கு நோய் இருந்து 

மருத்துவமனைக்கு சென்றபோதும், அவரைச்

 சுற்றியுள்ள மற்ற புற்றுநோயாளிகளுக்குக் 

கவிதைகளையும், கடிதங்களையும் அனுப்பினார். 

மிக மிக ஆச்சரியப்படும் வகையில் அவர்களின் 

உந்துசக்தியாக இருந்தார். அவரின் நினைவாகவே உலக ரோஸ் நாள்.

மேலும், ரோஜா மலர் என்பது, அன்பு, கருத்தாக்கம் 

மற்றும் மென்மை என்பதன் குறியீடாக உள்ளது.

 புற்றுநோயாளிகளுக்கு மெலிண்டாவின் கடிதம் மற்றும்

 கட்டுரைகள் வாழ்வதற்கான அதீதமான நம்பிக்கையையும்,

 உறுதியையும் தந்தன. எனவே, புற்றுநோயுடன் 

 போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த நாள் மகிழ்வைத் தரட்டும் என்பதற்காக உலக ரோஸ் தினம், மெலிண்டா ரோஸுக்காக அனுசரிக்கப்படுகிறது.

மோகனாவாகிய நானும் ஒரு புற்றுநோயாளிதான்.

 நான் புற்றுநோயிலிருந்து மீண்டவள். 

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2010, ஆகஸ்ட் 25 ஆம் நாள்

 மார்பகப் புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன்.

 அதன்பின்னர் கீமோதெரபி எனப்படும் வேதிசிகிச்சை 6 மாதங்களுக்குத்

 தரப்பட்டது. கீமோதெரபியால் மறதி  ஏற்படும். உடலிலிருந்து 

கால்சியம் கரைந்து போகும். அதன் பின்னரும்கூட 

இன்று என் உடல் இரும்புபோல உறுதியாகப் புற்றுநோய்க்கு முன்னர்

 இருந்தததைவிட பல மடங்கு பலத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் 

இருக்கிறது என்றால் யாரும் நம்பமாட்டீர்கள்.

நான் 2 கி.மீ. ஜாக்கிங் செய்கிறேன். தினமும் நடக்கிறேன்.

 'தாய்ச்சி' என்ற சீனத் தற்காப்புக் கலையை செய்கிறேன். 

நல்ல நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்வாக இருக்கிறேன்.

 மேலும், இதுவரை 11 புற்றுநோயாளிகளைச் சரியான 

நேரத்தில் சரியான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று,

 தகவல் தந்து அங்கு பணிபுரியும் என் மாணவர்கள் 

மற்றும் நண்பர்கள் மூலம் காப்பாற்றியும் இருக்கிறேன். 

புற்றுநோய் நண்பர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் உதவியும்

 செய்கிறேன். 

இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? 

என் மன உறுதியும், தொடர்ந்த உடற்பயிற்சியும், எடுத்துக்கொள்ளும் மற்றும் எடுத்துக்கொண்ட மருந்துகளும்தான். உலகிலேயே மோசமான நோய் ஒன்று உண்டென்றால் அதுதான் புற்றுநோய். புற்றுநோய் தொற்று நோயல்ல.

புற்றுநோய் என்றால் என்ன? யாருக்காவது அது வந்த அனுபவம் இருக்கிறதா? அதைப் பற்றித் தெரியுமா? என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டால், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று எல்லோரும் ஓடிவிடுவீர்கள். அவ்வளவு பயம் புற்றுநோய் பற்றி எண்ணக்கூட.

ஒரு சின்ன கேள்வி? புற்றுநோய் உங்களிடத்தில் வருவது என்று அது முடிவு செய்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அது என்ன உங்களைக் கேட்டுக் கொண்டா உங்களிடம் குடியிருக்க, அனுமதி பெற்ற பின்னர்தான் வர வேண்டுமா? அப்படி ஏதும் சட்டதிட்டம் உண்டா? அப்படி எல்லாம் இல்லை அதது இயல்பாய் நடக்கும்.  இந்த உடம்பில், புற்றுநோய் ஒரு நோய் என்றால் அது வராமல் இருக்க, அதற்கான வைரஸ்/பாக்டீரியா  அண்டாமல் இருக்க ஏற்பாடு செய்யலாம். தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால்...

ஆனால், புற்றுநோய் வராதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். நம் வீட்டைச் சுற்றி ஒரு பெரியகோட்டை தடுப்புச் சுவர் எழுப்பி விடலாமா? புற்றுநோய் நம்மைத் தாக்காமல் இருக்க? அது உள்ளே நுழையாமல் இருக்க, ஒரு பெரிய அகழி தோண்டலாமா? எதனைக் கொண்டும் புற்று நோயைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். அது சரி, கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் மக்களாவது, புற்றுநோய்த் தாக்கத்திலிருந்து தப்பிக்கிறார்களா? மீட்கப் படுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

நீ சாமி கும்பிட்டாலும் சரி, கும்பிடாட்டியும் சரி, நீ பணக்காரனாக இருந்தாலும் சரி, ஓட்டாண்டியா இருந்தாலும் சரி, நீ படிச்சவனா இருந்தாலும் சரி, படிக்காட்டியும் சரி, எனக்கு எதுவுமே கவலை இல்லப்பா, நான் பாட்டுக்கு எனக்குப் புடிச்சா வருவேன், முடிஞ்சா நீ என்ன விரட்டிப் பாரு என்று நம்மிடம் சவால் விடுகிறது புற்றுநோய்.

சவாலைச் சந்திப்போமா, முழுத் துணிவுடன், தைரியத்துடன், பின் மருத்துவர் மற்றும் மருந்துகளின் உதவியுடன், அப்புறம்தான், அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, சுற்றத்தினர் வருகிறார்கள் துணைக்கு/காப்பாற்ற.. என்றும் உங்களின் எந்த நோயாக இருந்தாலும் முதல் மருந்து/சிகிச்சை என்பது அவரவரின் துணிவுதான்; நெஞ்சுரம்தான்; தன்னம்பிக்கைதான்.. அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். இதனை முதலில் நன்கு தெரிந்துகொள்ளுங்கள். 

புற்றுநோய் வந்துவிட்டால் என்ற எண்ணம்கூட நினைக்கவே பயமாக இருக்கிறது. வாய் அதை உச்சரிக்கக்கூட அஞ்சுகிறது. இதுதான் நிதர்சனம். எந்த நோய் வந்தாலும் மனிதர்கள் சொல்வார்கள். சர்க்கரை / நீரிழிவு வியாதி, இதய நோய் வந்தால் பெருமையாகக்கூட  மக்கள் சொல்வார்கள். ஆனால், புற்றுநோய் வந்தால் அதை யாரிடமும் சொல்லவே மாட்டார்கள். கூடியவரை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அதனை வெளியே சொல்வதை அவமானமாகவே எண்ணுகின்றனர். அதுமட்டுமல்ல புற்றுநோய்  வருவது என்பது முன்வினைப் பயன். கடவுளின் சாபம் என்றெல்லாம் எண்ணுகிறார்கள். அப்படி ஏதும் இல்லை. இதுவும் ஒரு வகை நோய்தான். ஆனால், இந்நோய் மரபணுவையும்  சிதைத்துவிடுகிறது. புற்றுநோய் என்பது பல நோய்களின் கூட்டு என்றுகூட சொல்லலாம். 

புற்றுநோய்.. ஒரு நோயே அல்ல.. வளர்ச்சி நிலை!

புற்றுநோய் என்பது ஒரு நோயே அல்ல. அது செல்களின் அதீத வளர்ச்சி. பொதுவாக அனைத்து உயிரிகளின் உடலும், பல ஆயிரக்கணக்கான செல்களால் ஆனவை. நம் உடலில் சுமாராக 10 டிரில்லியன் செல்கள் உள்ளன.  ஒன்றின் பின்னால் 12 சுழியன்கள்/பூஜ்யங்கள் போட்டால் அது ஒரு டிரில்லியன். ஆச்சரியம்தான். அது போகட்டும். உடலில் எத்தனை வகை செல்கள் உள்ளன,  நமது உடம்பில் சுமார் 200 வகை செல்கள் உள்ளன.

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

கோமதி அரசு said...

//உங்களின் எந்த நோயாக இருந்தாலும் முதல் மருந்து/சிகிச்சை என்பது அவரவரின் துணிவுதான்; நெஞ்சுரம்தான்; தன்னம்பிக்கைதான்.. அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். இதனை முதலில் நன்கு தெரிந்துகொள்ளுங்கள். //

மோகனா அவர்கள் சொல்வது உண்மை. துணிவு, தன்னம்பிக்கை இதுதான் முதலில் வேண்டும். என் அன்பான உடன்பிறந்த சகோதரி மார்பக புற்று நோயில்தான் இறந்தார். (25 வயது)

இந்த உலக ரோஸ் தினத்தில் புற்று நோயுடன் போராடிக் கொண்டு இருக்கும் மக்கள் எல்லோருக்கும் இந்த கட்டுரை நம்பிக்கை, மன உறுதியை தரும்.

பகிர்வுக்கு நன்றி அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

கட்டுரை சிறப்பு...

திண்டுக்கல் தனபாலன் said...

எழுத்துக்கள் பதிவை விட்டு வெளியே செல்கிறது அம்மா... கவனியுங்கள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்றி ராஜா. காபி பேஸ்ட் மட்டும் நான் செய்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
அக்காவுக்கு என் அஞ்சலி. அந்த இளவயதில் அது ஒரு கொடூரம் இல்லையாமா.
இந்தக் கட்டுரை படிக்கப் படிக்க
பிடித்தது. அதனால் தான் பகிர்ந்தேன்.
துணிவும் ,தன்னம்பிக்கையும் நம் சொத்தாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்.

நன்றி மா. எடிட் செய்யப் பார்க்கிறேன்.