Blog Archive

Saturday, September 26, 2020

இந்த நாளைய சங்கீத மேகம் பாலு சார் வாழ்க.

வல்லிசிம்ஹன்

.
ஆயிரம் நிலவே வா என்று பாடியபடியே பல லட்ச உள்ளங்களில்
இடம் பிடித்த இசைமன்னர்  எஸ்.பி பாலசுப்ரமணியம்.

இயற்கை அன்னையை அழைத்து நம்மைக் குதூகலிக்க வைத்தவர்.
இளைய நிலா பொழிவது போல மனங்களைக் கவர்ந்தவர்,
இப்படி ஒரு நொடியில் ஓடிவிட்டாரே.
அதுவும் யாரோ கொடுத்த ஒரு தொற்றினால்.
எல்லாப்
பாடகர்களின்  ஏதோ ஒரு சாயல்
அவர்களை விட ஒரு படி மேலாக
தனித்துவத்துடன் ஒலித்த போது மயங்கியதற்குக் காரணம்

அவரே அந்த கதானாயகனாக மாறியதுதான்.
படங்கள் வெற்றி பெற பாலு சார் பாடினால்
போதும் .

அவ்வளவு பாடல்களுக்கும் பின்னால்
அவருடைய மகத்தான அடக்கம், மனிதம்
எல்லாம் படித்த நினைவு.

இந்த ஊருக்கு அவர் பாட வந்த போது என்னால்
போக முடியவில்லை.
இனி அவரது இசை எங்கும் எப்போதும் 
ஒலித்தபடி இருக்கும். மனம் கேட்டபடி இருக்கும் அவர் மனைவிக்கும் மக்களுக்கும்
நம் அன்பு.

9 comments:

துரை செல்வராஜூ said...

இறை நிழலில் அமைதியடையட்டும்..
ஓம் சாந்தி..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என்றும் வாழ்வார் நம்முடன் தன் இனிய பாடல்கள் வழியாக.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

அவரின் பாடல் கேளாத நாள் இல்லை... பாடல்களில் என்றும் வாழ்வார்...

வெங்கட் நாகராஜ் said...

பாடும் நிலா பாலு...

அவரது ஆன்மா நற்கதியடைய எனது பிரார்த்தனைகளும்.

KILLERGEE Devakottai said...

மாமனிதரின் இழப்பு இசையுலகுக்கு...

கோமதி அரசு said...

அவர் பாடிய பாடல்களில் எப்போதும் வாழ்வார்.

வயதே தெரியாத இனிமையான குரல். எப்போது பாடி கொண்டே இருந்தார். தான் பாடும் பாடலை ரசித்து பாடியவர்.

அவர் மீண்டு வந்துவிடுவார் என்று நம்பிக்கை இருந்தது,ஆனால் கடவுளின் விருப்பம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது போலூம்!

Kamala Hariharan said...

ஆமாம் சகோதரி. எத்தனைப் பாடல்களை தமது இனிய குரலால் நமக்குத் தந்தவர். ஆயிரம் நிலவுகளை அழைத்து வந்த முதல் பாடல் தொட்டு, எத்தனை நிலவுகளால் நம் மனதை குளிர்வித்தவர். மனதே ஆறவில்லை.எப்படி நடந்ததென்று மனம் கேள்விகளால் கொத்திக் கொண்டேயுள்ளது. அவர் ஆன்மா இறைவனுடன் கலந்து இன்புற வேண்டும். அது ஒன்றே நாம் மனதாற பிரார்த்தனை செய்வது.. அவர் குடும்பத்தவர்கள், மற்றும் நாமும் அவர் பிரிவை தாங்கும் மனவலிமை பெற்று ஆறுதல் அடைய வேண்டிக் கொள்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்..

Geetha Sambasivam said...

நேரில் கேட்டதில்லை எனினும் தொலைக்காட்சிகளிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு பெற்றபோது பார்த்திருக்கேன். இனிமையான இளமையான குரல். ஓய்வெடுக்கச் சென்று விட்டார். அவர் பாடல்கள் மூலம் என்றென்றும் வாழ்வார்.