சில சிந்தனைகள்.
எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன.
எத்தனையோ உய்ர்கள் பிரிகின்றன.
நம் ஊரில் மட்டும். யாராவது பிரபலம்
இறைவனடி எய்திவிட்டால்
அவரைச் சும்மா விடமாட்டார்கள்,.
முன்பெல்லாம் இத்தனை ஆராய்ச்சிகள் கிடையாது. புரட்சித் தலைவர்
மறைந்த போதிலிருந்து
இது ஆரம்பித்தது.
ஏகப்பட்ட ஊடகங்கள் தர்க்கம் ,குதர்க்கம்
செய்தன.
இப்பொழுது இணையங்களும் சேர்ந்து கொண்டதில்
யாருடைய பொழுது வீணடிக்கப் படுகிறதோ
இல்லையோ மனங்கள் அலைக்கழிக்கப்
படுகின்றன,, என்பது சர்வ நிச்சயம்.
நாம் எங்கேயோ இருக்கிறொம் என்பது உண்மை.
வாட்ஸ் ஆப் என்று இருக்கிறது.
அது ஃபார்வர்ட் செய்ய என்றே பல வைத்தியர்கள்
இப்போது நம் எஸ்.பி பி சார் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
எத்தனையோ உள்ளங்களைக் குளிர வைத்தவர்.
அத்தனை இறைப் பாடல்கள் உருகி உருகிப்
பாடியவர்.
அவர் தொற்றில் இருந்து வெளிவராமல் மறைந்ததற்கு என்ன காரணம்
என்று துப்பறிகிறார் ஒருவர்.
இது காரணமோ அதுகாரணமோ
என்று அடுக்கடுக்காகக் கேள்விகள்.
அந்த பால் போன்ற இதயத்தை, மரியாதைக்குரியவரை
இப்படிப் பேச வேண்டுமா.:(
இன்னும் அவர் அடக்கம் செய்யப் பட்ட இடம் கூடக் காய்ந்திராது.
அவர் இருக்கும் போது ஏன் இத்தனை கேள்விகள் உங்கள்
மனதில் எழவில்லை?.
ஏன் பேசவில்லை?
இவர்களை எல்லாம் யாருமே தட்டிக் கேட்க மாட்டார்களா.
எஸ்பி.பி சாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
பொல்லா உலகிலிருந்து தப்பி விட்டார்.
6 comments:
போஸ்ட் மார்ட்டம் செய்வதில் நம்மவர்கள் தேர்ந்தவர்கள். இருக்கும்போதெல்லாம் கண்டுக்க மாட்டார்கள். பின்னர் வந்து ஆராய்ச்சி பண்ணி ஏகப்பட்ட தவறைக் கண்டு பிடிப்பார்கள். அவர் காலம் முடிந்து விட்டது. இறைவன் திரும்பக் கூப்பிட்டு விட்டான். போய்விட்டார்.
கேவலமான ஊடகங்கள் - கேவலமான மனிதர்கள். இப்படியான காணொளிகளை பார்க்காமல் இருப்பது மேல்! அவரது பாடல்களைக் கேட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம். அது தான் நமக்கு நல்லது!
அன்பு கீதாமா,
உண்மையான வார்த்தைகள்.
இவர் கூட, உறவினர்கள் வந்து நடந்து முடிந்த
காரியத்தை அலசினால்
ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.
நடந்து முடிந்தாச்சு.
கல்யாணம் முடிந்து கைகள் காயும் முன்னே
என்ன விவாதம் என்று அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுவார்.
இந்த வாட்ஸாப்பில் தொடர்ந்து வந்து மோதுகிறவர்களை
என்ன செய்யலாம். ஏதோ அவர் நினைவில் சில வார்த்தைகள்.
அதைப் புரிந்து கொள்ளலாம்.
அவரது பழக்க வழக்கங்களையே கேள்விக்குறிகளாக்கினால்
வேதனையாக இருக்கிறது. நன்றி மா.
அன்பு வெங்கட் ,உண்மைதான்.
நானும் பார்ப்பதில்லை. வாட்சப்பில் வந்து தொந்தரவு செய்வதைத்தான் தாங்கிக்
கொள்ள முடியவில்லை.
அந்த நேரத்தைப் பிரார்த்தனையில்
செலுத்தலாம்.
இறந்து போனவரின் குடும்பம் மனம்வருத்தம் அடையுமே என்று யாரும் வருத்த்ப்படுவது இல்லை. வாயில் வந்ததை பேசி கொண்டு இருக்கிறார்கள்.
இறைவன் விருப்பம் அவரை தன்னிடம் அழைத்துக் கொள்ள விரும்பி இருக்கிறார் அவ்வளவுதான்.
முடிந்தவரை, குடும்பத்தினர், மருத்துவர்கள், மக்கள் பிரார்த்தனை செய்து விட்டார்கள்.
இனி அவரின் பாடல்களில் அவர் உயிர் இருக்கும் அந்த பாடலை கேட்டு மகிழ்வோம்.
அன்பு கோமதி இனிய காலை வணக்கம் மா.
இனி யூ டியூபில் இந்த மாதிரிசெய்திகளைக் காணுவதில்லை.
அப்படிப் பார்ப்பது நம் பாடகருக்குச் செய்யும் அவமானம் என்று தீர்மானித்துவிட்டேன்.
அவரே இல்லை.
நமக்கு அவரது பாடல்கள் தானே முக்கியம்.
நீங்கள் சொல்வதே நிஜம். நன்றி மா.
Post a Comment