Blog Archive

Sunday, September 20, 2020

Vazhai poo Usili | வாழைப்பூ உசிலி | Banana flower

வல்லிசிம்ஹன்

2 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஆகா.. வாழைப்பூ உசிலி அருமையாக இருக்கிறது.பெரிது பெரிதான வாழைப்பூக்கள் கண்களை கவர்கின்றன. செய்முறை நன்றாக உள்ளது. இந்த மாதிரி தமிழ்நாட்டில் (சென்னை. மதுரை) இருக்கும் போது கிடைத்திருக்கின்றன. இங்கு சின்ன வாழைப்பூக்கள் அதுவும் துவர்ப்போடு சிறிது கசப்பும் சேர்ந்திருக்கிறது. இங்கு இப்போதுதான் இரண்டு வாழைப்பூவை வடை, அடை, பிட்லை என மூன்று விதத்தில் மூன்று நாட்களாக சமைத்தேன். கடைசியில் பதிவில் அந்த பூ மடலில் வைத்து சாப்பிடும் போது, அதன் மணம் இங்கு வரை வீசுகிறது. அம்மா வீட்டிலிருக்கும் போது அந்த மடலில் அன்று சமைத்த ஏதாவது காய்கறியை வைத்துக் கொண்டு. பாட்டி வத்தக்குழம்பு இல்லை, சாம்பார் சாதம் பிசைந்து போட மணத்தோடு கையில் வாங்கி சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா.
சகோதரி என்றால் இதுதான்.
எங்கள் வீட்டிலும் வாழைப்பூ ''போட்'' உண்டு.
அதில் குழம்பு சாதம், மோர்க்கூழ் எல்லாமே
வெகு ருசியாக இருக்கும்.
வாழைப்பூ பருப்புசிலி நாம் செய்வதுதான். இவர் சொல்லும் முறை அழகாக
இருக்கிறது .அதனால் பதிவிட்டேன்.
நீங்கள் ரசிக்கும் அழகே தனி.
மிக நன்றி மா.நீங்கள் இருக்கும் ஊரில்
சின்னதாகக் கிடைக்கிறதா.:(
சென்னையிலிருந்து வரும் யாரிடமாவது வாங்கி வரச் சொல்லுங்கள்.