65 வருடங்களுக்கு முன்பு வந்த படங்கள் ,சமூக சீர்திருத்தம்,
பொதுவுடமை தத்துவங்களை முன்னிறுத்தி
விவசாயிகளின் ஏற்றம், அவர்களுக்கு வரும் துன்பம்
அதைப் போக்க முயற்சிக்கும் கதை
என்று வளமாக நிலைமையைச் சித்தரித்தன.
SSR,MGR, SIVAJI GANESAN,GEMINI
தமிழிலும் ,மற்ற மொழிப்படங்களில் நாகேஸ்வரராவ், கல்யாண்குமார்
அனைவரும்
உணர்ந்து நடித்தனர்.
அடிக்கடி படங்கள் திரைக்கு வராத நிலையில் எல்லாப்
படங்களுமே பேசப்பட்டன. பார்க்கப் பட்டன.
ரசிக்கப் பட்டன.
சற்றே நீளமான படங்கள் தான்.:)
சேர்ந்து நடித்த நடிகைகளும் நல்லபடியாகத் திறமையாக
நடித்தது போலத்தான் விமரிசனங்கள் வந்தன.
மொத்தத்தில்.....கதை, சில மோதல்கள், சில காதல்கள்
நல்ல இசை கொடுக்க கே வி. மஹாதேவன், மெல்லிசை மன்னர்கள்,
என்று ஜனரஞ்சகமான இசைப் பதிவுகளை
வழங்கிய லாவகத்தை மெச்சும்படி வழங்கினார்கள்.
அந்த வரிசையில் பொருளும்,ரசனையும்,இசையும் மிக மிக ரசிக்க வைக்கும்.
நன்றி.
4 comments:
ஆகா...! அனைத்தும் சிறப்பான பாடல்கள் அம்மா...
முதல் பாடல் கேட்டது இல்லை இப்போதுதான் கேட்டேன்.
மற்ற பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.
அன்பு தனபாலன்,
நேரம் கிடைத்து நீங்கள் இங்கு வந்து கேட்பதே எனக்கு மகிழ்ச்சி.
மிக நன்றி மா.
அன்பு கோமதிமா,
நாம் ரசிக்கும் பாடல்களை மட்டுமே இங்கே பதிகிறேன்.
நீங்களும் வந்து கேட்பதே மகிழ்வு.
Post a Comment