வல்லிசிம்ஹன்
நாடியை நாடி....4
சின்னக் காஞ்சீபுரம் என்றழைக்கப் படும்
இடம் .அருள்மிகு வரதராஜர் கோயில் மதிலை ஒட்டிச் சிறிது தூரம் சென்றால் வரும் பெரியார்
நகர் எனும் பலகை.
அதில் அகத்திய நாடியில் மூன்று வாரங்கள்
போய் வந்தாச்சு.
முன் ஜன்ம பலங்களை காசெட்டில் பதிவு செய்து கொடுத்துவிட்டார்கள்.
நோட்டுப் புத்தகத்திலும் இருக்கிறது.
எனக்கு மனம் சமாதானமாகவே இரண்டு நாட்களானது.
தூங்கப் போகும் போது கண்ணீர் வரும்.
இப்படி இருந்திருப்போமா என்ற சந்தேகம்.
மன சஞ்சலத்தை மூட்டைகட்ட நல்ல புத்தகங்களைப்
படிக்க ஆரம்பித்தேன்.
இவர் எப்போதும் போல கருமமே கண்ணாயினார்.
அடுத்த புதன் இரவு,
'' நாம் நாளைக்கு அங்கே போக வேண்டுமா.
மனசு சரியில்லை என்றால் விட்டுவிடு''
என்றார்.
இல்லை, ஆரம்பித்தாச்சு முடித்துவிடலாம்''
என்று சொல்லி விட்டேன்.
மீண்டும் பயணம்.
''தெளிவாக இரு. இது ஒரு வழிகாட்டல் மட்டுமே.
உன்னை நீயே ஜட்ஜ் செய்து, துன்பப் படுத்திக்
கொள்ளாதே என்று ஆதரவு சொன்னார்.
அப்படியே ஏற்றுக் கொண்டேன்.
இந்தத்தடவை கோவிலுக்குச் சென்று விட்டே அங்கே போனோம்.
இவருக்கான சுவடியில் திருவண்ணாமலை சென்று
அவர் வயதுக்கான எண்ணெய் தீபங்களை ஏற்ற
சொன்னார்கள். முதல் தடவையாக அண்ணாமலை ஈசரைத் தரிசித்தது
மிக்க மகிழ்ச்சி கொடுத்தது.
மனம் தெளிவானது.
எதிர்கால செய்திகள் என்று அவர்கள் குறித்தது எனக்கு வரக்கூடிய சில தொந்தரவுகளையும்
அவருக்கு ஏற்படக் கூடிய கபம் வழியான சங்கடங்களும் தான்.
எல்லாவற்றையும் வென்று விடுவீர்கள் என்றனர்.
நான் தான் சரியாகப் படிக்கவில்லையோ,
இல்லை ஈசன் கிருபை வேறாக இருந்ததோ.
குழந்தைகளைப் பொறுத்த வரை
மகள் திருமணம்
சொன்னது போல நடந்தது. முருக பெருமான் சன்னிதியில் பாலபிஷேகம்
சொல்லி இருந்தார்கள்.
1993இல் மதுரை சென்று திருப்பரங்குன்றத்திலும்,
பழமுதிர்ச்சோலையிலும் பாலபிஷேகம் செய்து வந்தோம்.
எல்லாம் அவன் அருள்.
பிள்ளைகளைப் பொறுத்தவரையில்
தாமதமாகும் என்றார்கள். அதற்குள் அவர்கள் வெளி தேசம் சென்றதால், தாமதமாகத்தான் செய்தது.
நடுவில் இராமேஸ்வரம் சென்று பித்ரு கடன்
செய்துவிட்டு வந்தோம். உடனே
இறைவன் அருளில் திருமணங்களும் கூடி வந்தன.
பிறகு நாடி பார்க்க அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.
நாடி பார்க்க எங்களுக்கு வழி காட்டிய நண்பருக்கும்
வாழ்வில் சில சோதனைகள்.
இன்னும் பார்த்துக் கொள்வதாகக் கேள்விப்
பட்டேன்.
இப்போது எப்படி எல்லாம் மாறி இருக்கிறதோ.
சென்னையிலேயே பல இடங்களில் பலகைகள்
பார்த்த நினைவு.
ஜோதிடம், நாடி, மாந்த்ரீகம் எல்லாம்
பலர் வாழ்க்கையில் சோதனை நாட்களில்
உள்ளே வருவதைப் பார்க்கிறேன்.
நாடியைப் பற்றி என் அனுபவத்தைச் சொன்னேன்.
எல்லோருக்கும் எப்படி என்று தெரியவில்லை.
சில அல்லாதவர்கள் கைகளில்
மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பணம் பறித்துப் பலவகையில் மோசம் செய்வதாகவும்
செய்தி.
நம் கடமைகளைப் பிழை இல்லாமல் செய்து,
மனதறிந்து யார்க்கும் துன்பம் இழைக்காமல், நற்சொற்கள் மட்டுமே
பேசி, தளர்வில்லாமல்
நற்பாதையில் செல்லும் குணம் இருந்தால் போதும்.
இறைவன் காப்பான்.
3 comments:
நானும் "என்ன + எப்படி + எவ்வாறு" என்று சென்று பார்த்திருக்கிறேன் அம்மா...
பிறகு "ஏன்" என்கிற கேள்வியே வாழ்விற்கு போதும் என்பதையும் உணர்ந்தேன்...
உண்மையே அன்பு தனபாலன்.
எத்தனையோ நபர்கள் நமக்கு அறிவுர சொல்லலாம்.
கோவில்களைப் பொறுத்தவரை நன்மை.
அதைவிட இந்த வழியில் செல்வது நேர்மை
என்ற ஆக்கமும், ஏன் இவ்வாறு நடக்கிறது என்ற ஆராய்ச்சியுமே
நமக்கு நன்மை மா. நன்றி.
உங்கள் அனுபவங்கள் அறிந்தேன்.
எங்கள் உறவினர்களிலும் சிலர் அங்கே சென்று, கேட்டு, நோட்டுப் புத்தகத்திலும், ஒலி நாடாவிலும் பதிவு செய்து வந்தார்கள். நான் இது வரை சென்றதில்லை.
Post a Comment