Blog Archive

Wednesday, September 02, 2020

ஒருமையுடன் உனது திருவடி நினைக்க




வல்லிசிம்ஹன்

16 comments:

துரை செல்வராஜூ said...

தேனினும் இனிய பாடல்கள்..
எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தது -
மனம் கனிந்தருள் வேல் முருகா!...

வீரபாண்டிய கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகங்கள் திருச்செந்தூர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளன..

இன்றும் தரிசிக்கலாம்...

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
இனிய காலை வணக்கம். என்றும் வளமுடன் வாழ ஆசிகள்.

எனக்கும் மிகப் பிடித்த பாடல் இது.
அதுவும் இந்தப் பாடலில்
யார்தான் உருகமாட்டார்கள்.
வரலக்ஷ்மி அம்மா குரல் இனிமை சொல்லி முடியாது. உணர்ந்து
பாடி இருப்பார்கள்.

நீங்கள் வீர பாண்டியக் கட்டபொம்மன் பற்றிய செய்தி மனதுக்கு மிக
நெகிழ்வைத் தருகிறது.
எத்தனை உத்தமர்கள் நம் நாட்டில்.
நன்றி மா. முருகன் அருள் எல்லோரையும்
காக்க வேண்டும்.



Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனதிற்கு நிறைவு தரும் பாடல்கள்.

KILLERGEE Devakottai said...

பாடல்கள் மூன்றும் முத்துக்கள்.

Geetha Sambasivam said...

திருச்செந்தூரில் வீரபாண்டியன் வழிபட்டவற்றையும் சங்கரன் கோயிலில் பூலித்தேவன் மறைந்த சுரங்கப்பாதையையும் இப்போதும் பார்க்கலாம் வல்லி. பிடித்த பாடல். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமை. சாவித்திரி சந்தனம் அரைத்துக் கொண்டே பாடுவார். இதைப் பார்த்த என் தாத்தா, "பெண்கள் சந்தனமே அரைக்கக் கூடாதே! இது என்ன கூத்து!" என்றார் அந்தக் காலத்தில். இப்போது பெண்கள் செய்வதை எல்லாம் பார்த்தால் என்ன சொல்லுவாரோ? :)))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி முனைவர் ஐயா.

இசை ஒன்று தான் இப்போதைய சூழ்னிலைக்கு
ஏற்ற மருந்து.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தேவகோட்டை ஜி.
பழம் பாடல்கள் ,அதுவும் கடவுள்
வழிபாட்டுப் பாடல்கள்
ரசிக்க வேண்டியவை.அமைதி தருபவை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இத்தனை விவரங்கள் இருக்கு!!
எனக்கு ஒன்றுமே தெரியாது.
பூலித்தேவன் ஏதோ கதையில் படித்த நினைவு.

சரித்திரம் தான் எத்தனை செய்திகளை
நமக்குப் பாடமாக்குகிறது.
அதை அறியாமல் என்னை மாதிரியும்
சிலர் இருக்கிறார்கள்.
இனியாவது படிக்க வேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
சிங்காரவேலனே தேவா பாட்டின் போது
சாவித்திரி சந்தனம் அரைப்பார்.
என் மாமியாரும் உங்கள் தாத்தா சொன்ன மாதிரி சொல்வார்.
எங்கள் வீட்டில் பூஜை மணி கூட
பெண்கள் அடிக்கக் கூடாது.!!!!!!!

Geetha Sambasivam said...

ஆமாம், பெரியப்பா வீட்டிலும் தாத்தா வீட்டிலும் இதைக்கடுமையாகக் கடைப்பிடிப்பார்கள். :)))) இப்போல்லாம் வாயையே திறக்க முடியாது!

Bhanumathy V said...

அனைத்துமே இனிமையான பாடல்கள். வீ.பா.க.பொ. படத்தின் இந்தப் பாடலை வெளி விருப்பமாக கேட்க நினைத்திருந்தேன். நன்றி.

Bhanumathy Venkateswaran said...

வீ.பா.கே.பொ.படத்தில் வரலட்சுமி பாடும் 'சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லலே,தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி..''பாடலும் மிகவும் பிடிக்கும். 

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா.
எத்தனை ரசனை உங்களுக்கு.!!!
இந்தச் செடி ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ் வகை
அந்துரியம் செடியின் மலர். நிறம் மாறி
வெள்ளையாகும்.
உங்கள் மனதில் இறைவன் நினைவே வருவதால்
ஆரத்தி என்று தோன்றி இருக்கிறது.
நன்றி தங்கச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அவர்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கத்தானே செய்யும். அதனால் நான் வீட்டுக்குப் போனால் மணியைத் தேய்த்து வைப்பது மட்டும் செய்வேன்.
மகன் பக்கத்தில் இருந்தால் மணி அடிக்கச் சொல்வேன்.
நீங்கள் சொல்வது உண்மையே. இப்போது இருப்பவர்களிடம்
சொல்ல முடியாது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,

வரலட்சுமியின் குரல் மிகத் திருத்தமாக
ஒலிக்கும். பார்க்கவும், கேட்கவும் மிக அருமை.
சிங்காரக் கண்ணே'' மிக உருக்கமான பாடல்.

அந்தக் குழந்தை தான் எத்தனை அழகாக ''அப்பா, பெரியப்பான்னு' கூப்பிடும்.
மிக நல்ல படம்.
உங்கள் விருப்பம் இந்தப் பதிவில் வந்ததில்
மிக மகிழ்ச்சி. நமக்கே எல்லாம் இப்போது
இறைவன் மேல் இன்னும் நம்பிக்கை
அதிகமாவதில் நம் உள்ளங்கள் இணைகின்றன.

அனைவரும் நலமாக இருக்கட்டும். நன்றி மா.