Blog Archive

Friday, September 11, 2020

குழந்தைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாட வைப்பது சரியா? - Abdul Hammed.

வல்லிசிம்ஹன்

தமிழ் வாழ்க.

10 comments:

KILLERGEE Devakottai said...

அற்புதமான நிகழ்ச்சி ரசித்து கேட்டேன் அம்மா.

கோமதி அரசு said...

நல்லதொரு நேர் காணல்.
கேட்டேன், Abdul Hammed அவர்கள் சொல்வது போல் குழந்தைகளுக்கு நல்ல பாடலை பெற்றோர்களும் நிகழ்ச்சி தயாரிப்பவர்களும் தேர்ந்து எடுத்து பாடச்சொல்லலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னே தமிழ் உரை...!

Geetha Sambasivam said...

எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் நாம் சொல்வதை எல்லாம் யார் கேட்கப் போகின்றனர்? அவரவருக்கு அவரவர் புகழும் தொலைக்காட்சியில் முகம் தெரிவதும் தான் முக்கியம். எங்க உறவுகளிலேயே இப்படி எல்லாம் உண்டு. :(

துரை செல்வராஜூ said...

அந்தக் குழந்தைகள் விரும்பினவா?.. எல்லாவற்றுக்கும் புகழும் பணவரவுமே பிரதானம்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.,
நான் இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.

எதற்கு இப்படி பணத்துக்கு
அலைகிறார்கள்.
கேட்டால் குழந்தைகளை முன்னேற்றுகிறோம்
என்பார்கள்.கலிகாலம்.!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, உண்மைதான் மா.
நல்ல பாடல்கள் எத்தனையோ இருக்கின்றன.

மேடை ஏறுவதற்கு முன் யோசித்து செய்யவேண்டும்.
கல்வி என்பதையே மறந்து
இது போன்ற பாட்டுப் பாடியே
பிழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தது போல் இருக்கிறது.
சில குழந்தைகள் அற்புதமாகப்
பாடுகிறார்கள்.
நான் தான் பிற்போக்காகச் சிந்திக்கிறேன்
என்று தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
ஆமாம் இவ்வளவு அருமைத் தமிழ் உச்சரிப்பை கேட்டு வெகு நாட்கள் ஆகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்மா, கீதா.
ஏதோ வெறி வந்தது போல்
குழந்தைகளை விரட்டுவதும், அடுத்த நொடியில் கண்ணீர்
விடுவதும், மீண்டும் முயற்சிப்பதும்
நாலைந்து வருடங்கள் முன்னால் பார்த்த
போதே சங்கடமாக இருந்தது.
இப்போது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
முன்பு வெற்றி பெற்றவர்களெல்லாம்
முன்னுக்கு வந்து விட்டார்களா. என்று பார்த்தால் அதுவும் இல்லை.
ஆமாம் நாம் சொல்லி என்ன பயன்.
பெற்றோருக்குத் தெரிய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
அனதக் குழந்தைகளின் இனிய இளமைக்காலம்
வீணாகிறதே என்று அவர்களுக்குக் கவலை இல்லை.
நீங்கள் சொல்வது போல புகழும் ,ஏராளமான
பணமும் அவர்கள் கனவு,. குழந்தைகள் பலிகடா
ஆகிறார்கள்.