இன்று வாசல் முழுவதும் பனிப் பொழிவு.
இங்கே பனியைக் களைந்தெடுக்க வெளியில் போகலாம் என்றால்
கடுங்காற்று.
உடலைத் துளைக்கும் ஊசிபோன்ற ஐஸ் மழை.
இந்த நிலையில் காலையில் ஒரு குரல். வெளியே இருக்கும் ஸ்னோவை அகற்ற
வேண்டுமா என்றதும்
கொஞ்சம் தயக்கம். வழக்கமாக ஆஜராகும் Saul வரவில்லை.
வந்திருப்பவரோ முதியவர். அவரால் முடியுமோ என்ற பரிதாபம்.
அவரோ நம் தயக்கத்தைப் பார்த்து 5 ரூபாய் குறைத்துக்
கொடுங்கள் என்றார்.எனக்கு
மனமே தாங்கவில்லை. ஐயோ பாவம் என்றிருந்தது.
அவருக்கு உண்டான பணத்தை பையில் போட்டு
கதவில் மாட்டி வைத்து
காஃபி வேண்டுமா என்றால் மறுத்துவிட்டார்.
இங்கேயும் இப்படிப்பட்ட பரிதாபங்கள்
நடப்பது எனக்கு முதலில் வருத்தமாக
இருந்தது.ஏழ்மை இல்லாத ஊர் என்று நினைத்தேனே.
இங்கேயும் இந்த வைரஸ் இத்தனை பேருக்கு
வேலை இல்லாமல் வருத்தப் படுகிறார்கள்.
எத்தனையோ நபர்களுக்கு இலவச உணவு
தர எத்தனையோ குடும்பங்கள்
உதவுகின்றன.
இருந்தும் போதவில்லை.
இனியாவது இந்தத் துயரங்கள் தீர்ந்து
அனைவரும் நலம் பெற வேண்டும்.
புது வருடம் அனைவருக்கும் நன்மை
அளிக்க வேண்டும்.
மனம் நிறையப் பிரார்த்தனைகளோடு
நம் நட்புகள், மற்றும் உலகம் பிரச்சினை தீர்ந்து
வளம் தர இறைவன் அருள வேண்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோருக்கும்
2021 ஆம் ஆண்டு வருக. நலம் தருக.ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.