ஆளும் திமிரும் அடங்கிப் போகும்
அடிமைத்தனமும்.
இப்போது ஊடக வாயிலாக நாம் காணும் காட்சிகள்
மிகக் கவலைப் பட வைக்கின்றன.
முன்னை விடக் கல்வி அறிவு படைத்தவர்கள்
அதிகம். இருந்தும் நாட்டைப் பற்றி யோசிக்காமல்
தனிமனித வழிபடல்,துதி பாடல், அராஜகமாக
நடத்தல் இவை எல்லாம்
எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும்
என்று தெரியாமலேயே தங்கள் தங்கள்
வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள
விரும்பும் மக்களைப் பார்க்கிறேன்.
மேலோர் சொன்ன வாக்குகள் நமக்கு
எத்தனையோ இன்னும் நினைவில் இருக்கின்றன.
அட்டகாசம் செய்பவர்கள் அடங்கத்தான் போகிறார்கள்.
இறைவன் காக்கட்டும் உலகத்தை.
இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன் கதையும்
நமக்குத் தெரியும் .தானே கெடப் போவதையும்
பார்க்கத்தான் போகிறோம்.
4 comments:
சிலவற்றுக்கு முடிவு தாமதம் ஆகும்: ஆனால் சரியாக நடக்கும்...
அன்பு தனபாலன்,
நேற்று இந்த ஊரில் நடந்த நிகழ்வு மனத்தை மிக உறுத்தியது. ஆனால் அதற்குத் தீர்வு நேற்றே கிடைத்ததுதான் அதிசயம்.
நீங்கள் சொல்லும் உண்மை வரட்டும். நன்றி மா..
நல்லதே நடக்கட்டும். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம். இசை தான் நல்ல மருந்து.
அன்பு வெங்கட்,
நலமாப்பா. நன்மையை நினைப்போம், நல்லதே நடக்கட்டும்.
நன்றி மா.
Post a Comment