Blog Archive

Tuesday, December 15, 2020

சேலத்தில் கேட்ட பாடல்கள்.1966,67,68,69 ஆம் வருடங்கள்.


நலம் நலம் அறிய ஆவல். சேலம்  வந்தவுடன் சிங்கத்தின் சித்தப்பா வீட்டில் தங்கிய நாட்கள் சிறப்பானவை.
பெரியவர்களுடன் இருக்கும் போது 
ஒரு பாதுகாப்பு கிடைக்கும் இல்லையா. அந்த வகையில்  என் சின்ன மாமனார் ஒரு அன்பான மனிதர். 6'4'' உயரத்தில் அவர்பேசுவது என் காதுக்கு வர சில நொடிகள் ஆகும்.:)
சமையல்  மாமியிடம் சொல்லி விடுவார். இந்தப் பெண் வாய் திறந்து ஒன்றும் கேட்காது. நீதான் பசி அறிந்து கொடுக்கணும் என்று.!!!
கண்ணம்மா மாமியும் தன்னால் முடிந்த அளவில் 
என்னிடம் உரையாடி, கடினமான  உழைப்புக்கு நடுவில் ஜாதி மல்லி தொடுத்து எனக்குத் தருவார். அந்த அன்பு மனம் இன்னும் மனதில். அப்போது வீட்டை ஓட்டினால் போல ஏரிக்கரை இருந்தது. இப்போது அங்கெல்லாம் வீடுகள் வந்துவிட்டன. மரவனேரி  என்ற இடம். வில்வாத்ரி பவன்  வீடும் அங்கே இருந்தது.  பாதாம் அல்வா  அந்த வீட்டிலிருந்து வரும்.
இதில் விசேஷம் என்ன என்றால்  அங்கே இருந்த ஒரு குழந்தை என் சம்பந்தி வீட்டு மாப்பிள்ளையாக வந்ததுதான் அதிசயம்.
சேலம்  , குழந்தைகள் காலம்.
ஒன்றன் பின் ஒன்றாக மூன்று  .... கொஞ்சம் கடினமான நேரம். ஆனால் சமாளிப்பது சிரமமாக இல்லை. சரஸ்வதி என்ற குட்டிப் பெண் துணை இருந்தது.
சினிமா சம்பந்தம் எல்லாம்  வானொலி வழியாகவும்,
பின்னாலே இருந்த  மைதானத்தில்  மூன்று நாட்கள் சைக்கிள் விடும்  அதிசய மனிதருக்காக ஒலி பரப்பப் பட்ட பாடல்களும்.😃😀😅😅

காலை நாலு மணிக்கு ''விவசாயிய்ய்ய்ய்ய்ய் '' என்று எம்ஜிஆர் குரல் கொடுத்தவுடன்,
மகள் ,மகன்  விழித்துக் கொண்டு விடுவாரகள்.:).
பிறகென்ன  ''பொழுது  புலர்ந்தது 
யாம் செய்த தவத்தால் '' என்று ஆரம்பிக்கும்.
அந்த நாட்களில் என்னைக் கவர்ந்த ,நினைவில் இருக்கும் பாடல்களைப் 
பகிர்கிறேன்.



5 comments:

ஸ்ரீராம். said...

சேலம் மாம்பழம் போலவே இனிக்கும் நினைவுகள்.  அப்போது அங்கு இருந்த வீட்டிலிருந்து ஒரு மாப்பிள்ளை சம்பந்தி வீட்டுக்கு என்பது இனிய ஆச்சர்யமாக இருந்திருக்கும்.  மூன்று நாட்கள் சைக்கிளிலிருந்து இறங்காமல்...   நானும் அதுபோல எங்கள் ஹவுசிங் யூனிட்டில் சிலமுறை பார்த்திருக்கிறேன்.  கோலாகலமாக இருக்கும்.

KILLERGEE Devakottai said...

தகவல்கள் சுவாரஸ்யம் அம்மா.

அருமையான பாடல்கள்.

மனோ சாமிநாதன் said...

நல்ல பாடல்களை தொகுத்துக்கொடுத்திருக்கிறீர்கள்!
இந்த 3 நாட்கள் சைக்கிள் பற்றி எழுதியிருந்ததைப்ப‌டித்த போது என் மனதும் பழைய நினைவுகளில் லயித்தது. அப்போதெல்லாம் 'நம் நாடு' படத்தில் வரும் ' நினைத்ததை முடிப்பவன் நான் நான்' பாட‌லும் 'சிவந்த மண்' படத்தில் வரும் ' ஒரு ராஜா ராணியிடம்' பாடலும் தான் இந்த சைக்கிள் ஓட்டுகையில் அடிக்கடி இடம் பெறும்!

Geetha Sambasivam said...

நல்ல பாடல்களுடன் கூடிய சுவாரசியமான தகவல்கள். இந்த மாதிரி விடாமல் சைகிள் விடுபவர்களை, அதிலேயே காஃபி, தேநீர் குடித்துக் கொண்டு, குளித்துக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு என்று பார்த்திருக்கேன். எனக்கு என்ன கவலைன்னா இயற்கை அழைப்புக்கு என்ன செய்வார்கள் என்பதே! :))))))) நல்ல நினைவலைகள். சேலத்துக் குழந்தை உங்க சம்பந்திக்கு மாப்பிள்ளை என்பது ஆச்சரியம் அல்ல. உலகம் குறுகல் என்பதைக் காட்டி உள்ளது. :))))

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து பாடல்களும் மிகவும் பிடித்தவை...