Blog Archive

Thursday, December 24, 2020

எண்ணெய்க் கத்திரிக்காய் எங்கள் ப்ளாகுக்காக

வல்லிசிம்ஹன்
விட்டாச்சு லீவு என்று பாடாத குறையாக எல்லோரும், இரவு விழித்துப் பகலில் தூங்கிக்


கொண்டிருக்கும் காலம்.

காரசார சமையல் பாட்டியின் பொறுப்பாயிற்று.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சமையல் பொறுப்பு எடுத்துக் கொண்டேன்.
என் தோழி ,இதை வெகு ருசியாகச் செய்வாள்.அவளுடன் கூட இருந்து கற்றுக் கொண்டது அனேகம். இதெல்லாம் 30 வருடங்கள் முன்பு.
எங்கள் சிங்கத்துக்கு இந்த மாதிரி மசாலா சமையலில் விருப்பம் அதிகம்.
அங்கே கற்றுக் கொண்டதில் இந்த கத்திரிக்காய் க்ரேவி குழம்பும் ஒன்று.

இன்று செய்யும்போது இரண்டு மூன்று படங்கள் எடுக்க நினைவு வந்தது.
மற்றவர்கள் போலக் கோர்வையாக எடுக்கவில்லை.
மன்னிக்கணும்.

இன்று எடுத்துக் கொண்ட  மசாலா பொருட்களில்
வெள்ளை எள்ளும் , வேர்க்கடலையும் முக்கியம்.
இணையத்திலும் சந்தேக நிவர்த்தி செய்து கொண்டேன்.

IMG_20201223_132611742.jpgஎண்ணெய்க் கத்திரிக்காய் குழம்புக்குத் தேவையான பொருட்கள்.
16 சின்னக் கத்திரிக்காய்.
அதற்குத் தேவை
2 மேஜைக் கரண்டி வெள்ளை எள்ளும்
2 மேஜைக்கரண்டி  வறுத்த வேர்க்கடலையும்.
இவற்றை முதலில் பொடித்துக் கொள்ள வேண்டும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
எலுமிச்சை அளவு புளியை கோது போக, கெட்டியாகக்
கரைத்து  வைத்துக் கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------
அரைக்க வேண்டிய பச்சை மசாலா.
ஒரு பெரிய வெங்காயம்,
நான்கு  பெரிய பூண்டு
6 கார பச்சை மிளகாய்,
இரண்டு இன்ச் இஞ்சி,
கூடவே இரண்டு டீஸ்பூன் தனியா பொடி,
ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி,
இரண்டு ஸ்பூன் கஷ்மீரி மிளகாய்ப் பொடி.
இவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளணும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய்
விட்டு அதில்  கொஞ்சம் மிளகு, ப்ரிஞ்சி இலை,
இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டு கிராம்பு போட்டு வறுத்துக் கொண்டு
தனியே வைத்துக் கொண்டு,
இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வகிர்ந்து வைத்திருக்கும்  கத்திரிக்காய்களை அப்படியே முழுதாகப் போட்டு கொஞ்சம் உப்பும் சேர்த்து
நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கின காயோடு, தாளித்துவைத்திருக்கும் மிளகு,மற்றவைகளைச் சேர்த்து அடுப்புச் சூட்டில் மூடி வைக்கணும்.
அரைத்து வைத்த வெங்காயம் ,இஞ்சி பூண்டு,ப.மிளகாய்க் கரைசலை இத்துடன் சேர்த்துக் கொதிக்க வைக்க
வேண்டும்.

இப்போது அரை உப்பு சேர்க்கலாம்.
அடுத்த வேலை புளிக்கரைசலை விடுவது
இதற்குள் கத்திரிக்காய் பாதி வெந்திருக்கும்,
புளிவாசனை போனதும், பொடித்து வைத்திருக்கும்
வேர்க்கடலைப் பொடி,
வெள்ளை எள்ளுப் பொடியப் போட வேண்டியதுதான்.
அடிக்கடி கிளறினால் கத்திரிக்காய் இரண்டு
ஆக சந்தர்ப்பம் உண்டு. அதனால் எச்சரிக்கையுடன் இருக்கணும்.
மீண்டும் மூடிவைத்துவிட்டுப் பார்த்தால்
எண்ணெய் பிரிந்து பார்க்கவே அழகாக இருந்தது.
அடுப்பை அணைத்து விட்டு கருப்பிலை
இரண்டு ஆர்க் போடலாம். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.

புரிகிற மாதிரி எழுதி இருக்கிறேனோ தெரியவில்லை.
தோழி என்னைப் பார்த்தால் சந்தோஷப் படுவாள்.
நன்றி ராஜகுமாரி டேவிட்,.
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.





No comments: