எங்கள் அப்பாவுக்கு இசை மிகப் பிடிக்கும். அம்மாவுக்கும் அவருக்கும் நல்ல
குரல்.
ஆனால் பாட மாட்டார்கள்.
என் சிறுவயதில் அப்பா பாடிக் கேட்டது
என் ''ஜீவப்ரியே ஷ்யாமளா.''
இத்தனை நாட்கள் தேடி இன்றுதான் கிடைத்தது.
அதற்குப் பிறகு அப்பா பாடி நான் கேட்டது காரைக்குடியில்
இருந்த போது.
அப்போது அழகப்பா கல்லூரி ஹாஸ்டல் எங்கள் க்வார்ட்டர்ஸுக்கு எதிர் திசையில் இருந்தது.
அங்கே மதிய வேளைகளில்
திரைப்பாடல்கள் ஒலிக்கும்.
பேரன் பேத்தியோடு அப்பா அப்போது கற்றுக் கொண்ட
பாட்டு மஹராஜா ஒரு மஹராணி பாடல்:)
சில வருடங்களில் கல்பாக்கம் ஊருக்கு
மாற்றலாகி வந்தார்கள். வேலைத் தொந்தரவு கொஞ்சம் அதிகரித்தாலும்
அப்பாவும் அம்மாவும் மிக ரசித்த காலம் அது.
சென்னையிலிருந்து குழந்தைகள்
தாத்தா பாட்டியோடு இருகப் போய் விடுவார்கள்.
வீட்டிற்கு எதிர்த்தாற்போல்
கடற்கரை.
அங்கே திறந்த வெளி அரங்கத்தில்
பார்த்து கேட்ட படம் அன்னக் கிளி.1976.
ஏதோ உற்சாகமாகச் சொல்ல வந்தவரைக் குழந்தைகள்
சூழ்ந்து கொண்டதும்,
இந்த டான்ஸ் உங்களுக்குத் தெரியுமா என்று
''மச்சானப் பாத்தீங்களா'' என்று நடன அசைவு கொடுத்தாரெ
பார்க்கணும்!!!
நான் ,அம்மா,குழந்தைகள் அசந்து போய்விட்டோம்.
55 வயதுக்கு நல்ல உடல் கட்டுக்கோப்பாகத் தான் வைத்திருந்தார்.
அல்சர் வந்து குணமான நேரம்.
மருமகள்கள் எல்லாம் வந்த பிறகு அவ்வளவாக
இல்லை. வீட்டுப் பெரியவராகிவிட்டார்:)
Kalpakkam beach |
Appa 1968. |
16 comments:
அப்பாவின் நினைவுகள் அருமை. எம் கே டி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலும் ரொம்பவே பிடிக்கும்.
அருமையான நினைவலைகள். பேரன், பேத்திகளுக்கு எதிரே தாத்தா, பாட்டிகளும் குழந்தைகள் தான்.
இந்தப் பாடலை மட்டும் (சியாமளா) கேட்டதே இல்லை. மிகச் சமீபத்தில்தான் ஒரு தளத்தில் பார்த்துக் கேட்டேன். என் கலெக்ஷனிலும் இது இல்லை.
பெரியவர்களின் நினைவுகள் நம் மனதில் அப்படியே தங்கிவிடுகின்றன. புகைப்படங்களைப் பார்க்கும்போது மீண்டு எழுகின்றன
இனிய நினைவுகள்...
அருமையான பாடல்...
அருமையான பாடல்
வணக்கம் சகோதரி
உங்கள் அப்பாவின் நினைவலைகள் அருமை சகோதரி. இப்படி அவர்களை நினைக்கும் போது அவர்கள் நம்முடன் இருப்பது போன்ற மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை. உங்கள் தந்தை தன் பேரக் குழந்தைகளுடன் விளையாடியதை பார்த்து அந்நேரம் உங்களுக்கும் மகிழ்வாக இருந்திருக்கும். நீங்கள் உங்கள் அப்பாவின் ஜாடையை கொண்டுள்ளீர்கள். அவருக்குப் பிடித்த பாடல்கள் பகிர்வும் படங்களும் அருமை. ரசித்து எழுதியுள்ளீர்கள். எங்களுடன் பகிர்ந்து கொண்ட பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நினைவுகள் தொடரட்டும்....
எம்கேடி பாடல்கள் நிறைய கேட்டு இருக்கிறேன் ஆனால் இப்பாடல் கேட்டதில்லை.
அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
திடீரென்று பெற்றோர் நினைவுகள்
வந்து கொண்டே இருந்தன.
நல்லவற்றைப் பதிய வேண்டும் என்று
எழுதினேன் மா. சந்தோஷமாக இருக்கத் தெரிந்த தம்பதிகள்.
நல்ல பிரார்த்தனைகளோடு நினைக்க வேண்டும்.
நன்றி மா.
அன்பு கீதாமா,
உண்மைதான். நம் நினைவுகளை இளமைக் காலத்துக்குக் கொண்டு போகும்
வல்லமை பேரக்குழந்தைகளுக்கு
உண்டு. என் பெற்றோர் எங்கள் குழந்தைகளை வெகுவாக அனுபவித்து ரசித்தார்கள்.
அன்பு முரளிமா,
இனிய காலை வணக்கம் மா.
இந்தப் பாடலின் வரிகள் தெரியாமல், ஸ்யாமளா என்று தேடிக் கொண்டிருந்தேன்.
இன்னார் பாடி இருக்கிறார் என்று கூடத் தெரியாது.
அவ்வளவு பழைய பாடல்.
ஆனால் என்றும் இளமை,இனிமை மாறாத குரல்.
நீங்களும் கேட்டீர்களா. ஸ்ரீராமுக்கும் தெரியும்
என்று சொன்னார்.
நல்ல ராகம். நல்ல உணர்ச்சி ததும்பப்
பாடி இருக்கிறார்.ஸ்ரீ.பாகவதர்.
ஆமாம். படங்களில் அவர்களும் வாழ்ந்து நம் நினைவிலும்
வாழ்கிறார்கள்.
அன்பு தனபாலன்,
நலமாப்பா.
எப்பொழுதும் நலமாக இருங்கள்.
மிக நன்றி மா.
அன்பு ஜெயக்குமார். இந்த நாள் நிறை நல்ல நாளாகட்டும்.
நன்றி மா.
அன்பு கமலாமா.
இனிய காலை வணக்கம் அம்மா.
ஏதோ ஒரு வடிவில் அவர்கள் நம்மைத் தொடர்கிறார்கள்.
அவ்வப் பொழுது அவர்களை நினைத்து மனதால்
போற்றும்போது நன்றியுடன் வாழ்த்துகிறேன்.
நம்மைப் பொக்கிஷமாகப் பார்த்தவர்கள்.
நான் அப்பாவைப் போல இருக்கிறேன் என்று நீங்கள் சொல்வது
மனதுக்கு நிறைவு தருகிறது.
மிக மிக நேர்மையான பெற்றொர் நம் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறார்கள்.
அதனால் தான் உங்களைப் போல நட்புகள் மூலம் அந்த அன்பு தொடர்கிறது.
நம் மக்களுக்கும் அந்த நன்மை தொடரணும்.
நன்றி மா.
அன்பு தேவகோட்டைஜி,
இனிய காலை வணக்கம்.
இந்தப் பதிவு எழுதும்போது ,அந்த சாலைகள்,
தேவகோட்டை செல்லும் பஸ்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.
52 வருடங்களுக்கு முந்திய நினைவுகள்.
மிக மிக நன்றி மா.
இனிமையான நினைவுகள்.
Post a Comment