Blog Archive

Sunday, December 13, 2020

1966 நினைவுகளூம் பாடல்களும்

1966இல் திருமணம் முடித்துப் புதுக்கோட்டை வந்ததும்
பார்த்த படம் அன்பே வா.
அதன் பிறகு கீழ் வீட்டு ரேடியோ சிலோனில் கேட்டது 
''நீலவானம்'' படப் பாடல்கள்.

என்னை விட்டு விட்டு சிங்கம் தனது சினேகிதர் சுந்தரத்துடன் 
பார்த்த படங்கள்  மோட்டார் சுந்தரம் பிள்ளையும் ,மேஜர் சந்த்ரகாந்தும்:)

நான் மதுரையில் குழந்தை பெறுவதற்காகப் போன
போது அவருக்கும் பொழுது போக வேண்டுமே.

திரைப்படங்களைப் பார்த்துவிட்டுக் கதைகளைக் கடிதத்தில்
எழுதுவார்.:)
உன் வயதுதான் அந்தப் பெண்ணுக்கு
எப்படி நடனம் ஆடுகிறது பார்
என்று நையாண்டி வேறு செய்வார்.
இவரோ தமிழ்ப்  பத்திரிக்கைகள் படிக்க மாட்டார்.
எப்படித் தெரியும் இந்த விஷயம் எல்லாம்
என்று யோசனையுடன் அவரைப் 
பார்ப்பேன். சுந்தரம் சொன்னான் என்பார்.

சரிதான் அவரவருக்கு அந்த அந்த வழி.
நான் சந்தோஷமாகத் தான் இருக்கேன் என்பேன்.
பிறகு வெகு நாட்கள் கழித்து அந்தப் 
படத்தைப் பார்க்கும் போது உண்மையிலியே
அந்தப் பெண் அழகாக ஆடிப்பாடி ,அழுது எல்லாம்
செய்வதைப் பார்த்து மகிழ்ச்சியாகவே இருந்தது.

அவர்தான் பின் நாட்களில் நம் முதலமைச்சராக எங்கள் வீட்டு வழியே அடிக்கடி
சென்று வருவார்.


10 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கள் மலரும் நினைவுகள் அனைத்தும் அருமை. இந்த பாட்டுகளும் மிக அருமையான பாட்டுக்கள். பழைய பாட்க்கள் எப்போதுமே கேட்கத் திகட்டாதவை. கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...  என்று பாடியபடியே நினைவுகள் ஊர்வலம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
முதலில் என் நன்றி.

நீங்கள் வந்து பார்த்துப் புன்னூட்டம் இடுவதே பெரிய
செயல்.
இந்த நினைவுகளை நான் பதிவதற்கு முக்கிய காரணம்,
என் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்று
பரிசோதனை செய்யத்தான்.
இந்தப் பதிவும் பாடல்களும் உங்களுக்கும்
பிடித்திருப்பது என் பாக்யம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான இனிமையான பாடல்கள்...

Geetha Sambasivam said...

"வெண்ணிற ஆடை" படத்துக்காக அவர் நடித்தப்போவே கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு எங்க மேலாவணி மூலவீதியில் இருந்த சித்ராலயா அலுவலகம் வருவார். அப்போதே பார்க்க பிரமிப்பாக இருக்கும். அந்த அழகான வடிவான உடல் பின்னாட்களில் எப்படி ஆகிவிட்டது என்பதை நினைத்து வருத்தமாக இருக்கும்.

vaanampaadi said...

எனக்கு பிடித்த பாடல்.என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த பாடல். பழைய நினைவுகள் என்றும் இனிமையே!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அத்தனை திறமை, அழகு எல்லாம்
எப்படி எல்லாமோ வீணானது. என்ன செய்யலாம்.
விதிதான்.
நீங்கள் நேரிலேய பார்த்திருக்கிறீர்களா.!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
நீங்கள் வந்து ரசித்ததற்கு மிக மிக நன்றி மா.
இசை நாம் இருக்கும் வரை நம்முடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வானம்பாடி,

பாடல்கள் பெற்றோர் வழியாகத் தான் நம்மை வந்தடைகின்றன.
உங்களுக்கும் பிடித்ததில் மிக மிக மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அதே அதே. யாதோன் கி பாராத்.