Blog Archive

Sunday, December 27, 2020

வெள்ளி நிலா முற்றம்

மிக மிக இனிமையான  பாடலும் நடிப்பும்.
பாடல்களுக்கான 
காட்சிகளும் இனிமை/ எதற்குமே பஞ்சமில்லை நம் நாட்டில்.
மனதில் உண்மை இருக்கும் வரை.

பாடல் என்றால் பாலு சார் இல்லாமலா.
என்றும் வீசும் நிலாத் தென்றல் எஸ் .பி. பி சார்.


12 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்ல நல்ல பழைய கால பாடல்களாக பதிந்திருக்கிறீர்கள். அத்தனையும் இனிமையாகத்தான் இருக்கும்.பழைய
பாடல்கள் எனக்கும் மிக விருப்பம். நாளை நிதானமாக அனைத்தையும் கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

பிலஹரி:) ) அதிரா said...

வெள்ளிநிலா.. மிக அழகிய பாட்டு.. அடிக்கடி ரேடியோவில் கேட்ட பாட்டு...

ஸ்ரீராம். said...

வெள்ளி நிலா என்றே தொடங்கும் இன்னொரு பாடல் சொல்லுங்கள்!  ஜெயச்சந்திரன் பாடியது!  எல்லாப் பாடல்களும் இனிமை.  

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் பிடித்த பாடல்கள்...

Geetha Sambasivam said...

அந்தக்காலப் பாடல்கள். கேட்க இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
தாமதமாகப் பதில் சொல்கிறேன் மன்னிக்கவும்.

பதிவைப் பப்ளிஷ் செய்து விட்டு
உபன்யாசங்கள் கேட்கப் போய்விடுகிறேன்.
நீங்கள் மெதுவாகக் கேட்டு ரசியுங்கள்.

மிக மிக நன்றி மா. தொடங்கப் போகும் புது வருடத்திற்காகக் காத்திருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
கோமதி அரசு
உங்கள் பதிவைப் படித்து ஆறுதல் அடைந்ததாகச் சொன்னார்.
மிக நன்றி.
ஆமாம் மா. இது போலப் பழைய பாட்டுகளை ரேடியோ சிலோனில் கேட்டே
ரசிக்கக் கற்றேன்.
மிக மிக நன்றி மா. வரும் புது வருடம் அனைவருக்கும் நன்மை செய்யட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், நன்றி மா.
நீங்கள் சொல்லி இருக்கும் பாடலைத் தேடுகிறேன்.
ஜெயச் சந்திரன் என்றால் இனிமைதான்.
இனிய நாட்கள் தொடர இறை அருள் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி மா.
அப்போதைய பாடல்கள் எல்லாமே இனிமை தான்.

என்றும் நல்ல உள்ள நலம், உடல் நலத்தோடு
வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.
நோய் என்பதே இல்லை என்ற நிலைக்கு நாம்
வரவேண்டும்.
புத்தாண்டு வளம் கொடுக்கட்டும்.

மனோ சாமிநாதன் said...

எல்லாமே அருமையான பாடல்கள் தான்!
எனக்கு இவற்றில் மிகவும் பிடித்தது ' துயிலாத பெண்' தான்! பாடலின் இனிமை மட்டுமல்லாமல் காட்சி அமைப்பும் மிக அழகு!

சுசீலா பாடிய [ படத்தில் வாணிஸ்ரீ என்று நினைக்கிறேன்] ' வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதம்மா! ' என்ற பாடல் மிகவும் இனிமையாக இருக்கும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

பழைய பாடல்கள் மட்டுமே என்னை
ஈர்க்கின்றன.
என்னிடம் உள்ள குறையும் அதுவே:)
புது ஆண்டு நம் எல்லோரையும் காக்கட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
பாடல்கள் உங்களுக்குப் பிடித்ததில்
மிக மகிழ்ச்சிமா.
ஆமாம் அந்தப் பாடலில் வாணிஸ்ரீ தான்
நடிப்பு. படம் பார்த்ததில்லை.
பாட்டு கேட்டதுண்டு. மிக நன்றி மா.