நல்ல நல்ல பழைய கால பாடல்களாக பதிந்திருக்கிறீர்கள். அத்தனையும் இனிமையாகத்தான் இருக்கும்.பழைய பாடல்கள் எனக்கும் மிக விருப்பம். நாளை நிதானமாக அனைத்தையும் கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. நன்றியுடன் கமலா ஹரிஹரன்.
அன்பு அதிரா, கோமதி அரசு உங்கள் பதிவைப் படித்து ஆறுதல் அடைந்ததாகச் சொன்னார். மிக நன்றி. ஆமாம் மா. இது போலப் பழைய பாட்டுகளை ரேடியோ சிலோனில் கேட்டே ரசிக்கக் கற்றேன். மிக மிக நன்றி மா. வரும் புது வருடம் அனைவருக்கும் நன்மை செய்யட்டும்.
அன்பு தனபாலன் மிக நன்றி மா. அப்போதைய பாடல்கள் எல்லாமே இனிமை தான்.
என்றும் நல்ல உள்ள நலம், உடல் நலத்தோடு வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும். நோய் என்பதே இல்லை என்ற நிலைக்கு நாம் வரவேண்டும். புத்தாண்டு வளம் கொடுக்கட்டும்.
அன்பு மனோ, பாடல்கள் உங்களுக்குப் பிடித்ததில் மிக மகிழ்ச்சிமா. ஆமாம் அந்தப் பாடலில் வாணிஸ்ரீ தான் நடிப்பு. படம் பார்த்ததில்லை. பாட்டு கேட்டதுண்டு. மிக நன்றி மா.
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.
Comments
நல்ல நல்ல பழைய கால பாடல்களாக பதிந்திருக்கிறீர்கள். அத்தனையும் இனிமையாகத்தான் இருக்கும்.பழைய
பாடல்கள் எனக்கும் மிக விருப்பம். நாளை நிதானமாக அனைத்தையும் கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாமதமாகப் பதில் சொல்கிறேன் மன்னிக்கவும்.
பதிவைப் பப்ளிஷ் செய்து விட்டு
உபன்யாசங்கள் கேட்கப் போய்விடுகிறேன்.
நீங்கள் மெதுவாகக் கேட்டு ரசியுங்கள்.
மிக மிக நன்றி மா. தொடங்கப் போகும் புது வருடத்திற்காகக் காத்திருப்போம்.
கோமதி அரசு
உங்கள் பதிவைப் படித்து ஆறுதல் அடைந்ததாகச் சொன்னார்.
மிக நன்றி.
ஆமாம் மா. இது போலப் பழைய பாட்டுகளை ரேடியோ சிலோனில் கேட்டே
ரசிக்கக் கற்றேன்.
மிக மிக நன்றி மா. வரும் புது வருடம் அனைவருக்கும் நன்மை செய்யட்டும்.
நீங்கள் சொல்லி இருக்கும் பாடலைத் தேடுகிறேன்.
ஜெயச் சந்திரன் என்றால் இனிமைதான்.
இனிய நாட்கள் தொடர இறை அருள் இருக்க வேண்டும்.
அப்போதைய பாடல்கள் எல்லாமே இனிமை தான்.
என்றும் நல்ல உள்ள நலம், உடல் நலத்தோடு
வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.
நோய் என்பதே இல்லை என்ற நிலைக்கு நாம்
வரவேண்டும்.
புத்தாண்டு வளம் கொடுக்கட்டும்.
எனக்கு இவற்றில் மிகவும் பிடித்தது ' துயிலாத பெண்' தான்! பாடலின் இனிமை மட்டுமல்லாமல் காட்சி அமைப்பும் மிக அழகு!
சுசீலா பாடிய [ படத்தில் வாணிஸ்ரீ என்று நினைக்கிறேன்] ' வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதம்மா! ' என்ற பாடல் மிகவும் இனிமையாக இருக்கும்!
பழைய பாடல்கள் மட்டுமே என்னை
ஈர்க்கின்றன.
என்னிடம் உள்ள குறையும் அதுவே:)
புது ஆண்டு நம் எல்லோரையும் காக்கட்டும்.
நன்றி மா.
பாடல்கள் உங்களுக்குப் பிடித்ததில்
மிக மகிழ்ச்சிமா.
ஆமாம் அந்தப் பாடலில் வாணிஸ்ரீ தான்
நடிப்பு. படம் பார்த்ததில்லை.
பாட்டு கேட்டதுண்டு. மிக நன்றி மா.