இன்று வாசல் முழுவதும் பனிப் பொழிவு.
இங்கே பனியைக் களைந்தெடுக்க வெளியில் போகலாம் என்றால்
கடுங்காற்று.
உடலைத் துளைக்கும் ஊசிபோன்ற ஐஸ் மழை.
இந்த நிலையில் காலையில் ஒரு குரல். வெளியே இருக்கும் ஸ்னோவை அகற்ற
வேண்டுமா என்றதும்
கொஞ்சம் தயக்கம். வழக்கமாக ஆஜராகும் Saul வரவில்லை.
வந்திருப்பவரோ முதியவர். அவரால் முடியுமோ என்ற பரிதாபம்.
அவரோ நம் தயக்கத்தைப் பார்த்து 5 ரூபாய் குறைத்துக்
கொடுங்கள் என்றார்.எனக்கு
மனமே தாங்கவில்லை. ஐயோ பாவம் என்றிருந்தது.
அவருக்கு உண்டான பணத்தை பையில் போட்டு
கதவில் மாட்டி வைத்து
காஃபி வேண்டுமா என்றால் மறுத்துவிட்டார்.
இங்கேயும் இப்படிப்பட்ட பரிதாபங்கள்
நடப்பது எனக்கு முதலில் வருத்தமாக
இருந்தது.ஏழ்மை இல்லாத ஊர் என்று நினைத்தேனே.
இங்கேயும் இந்த வைரஸ் இத்தனை பேருக்கு
வேலை இல்லாமல் வருத்தப் படுகிறார்கள்.
எத்தனையோ நபர்களுக்கு இலவச உணவு
தர எத்தனையோ குடும்பங்கள்
உதவுகின்றன.
இருந்தும் போதவில்லை.
இனியாவது இந்தத் துயரங்கள் தீர்ந்து
அனைவரும் நலம் பெற வேண்டும்.
புது வருடம் அனைவருக்கும் நன்மை
அளிக்க வேண்டும்.
மனம் நிறையப் பிரார்த்தனைகளோடு
நம் நட்புகள், மற்றும் உலகம் பிரச்சினை தீர்ந்து
வளம் தர இறைவன் அருள வேண்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோருக்கும்
2021 ஆம் ஆண்டு வருக. நலம் தருக.ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
9 comments:
வணக்கம் சகோதரி
பாடல்கள் அருமை. முதல் பாடல் எப்போதோ கேட்டுள்ளேன். மீண்டும் கேட்க வைத்ததற்கு நன்றி. பனி அகற்றும் நிலை... அதற்கு வந்த அந்த ஆளின் வயது.. மனதிற்கு கஷ்டமாக இருந்தது. ஏழைகள், வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமென்ற முதியோர்கள் எங்கும் இருக்கிறார்கள். என்ன செய்வது? ஆண்டவன் கட்டளை. வரும் புத்தாண்டு மகிழ்ச்சியை தக்க வைக்க வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதல் மூன்று வரிகள், எனக்கு கஷ்டமாகத் தெரியவில்லை. சுவர்க்கமாகத் தெரிந்தது. ஆனால் அந்த காலநிலையில் இருந்து பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரியும்.
ஏழ்மை இல்லாத ஊரேது...
அனைவரும் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று நல்வாழ்வு வாழப் பிரார்த்திப்போம்.
நல்லதே நடக்கட்டும்...
அன்பு சகோதரி கமலா,
அனைத்து நலங்களும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவன்
அளிப்பான்.
நம் ஊரில் கிராமத்திலிருந்து வந்து பிழைப்பார்களே
அது போல இவர்கள் .அண்டை நாட்டிலிருந்து வந்தவர்கள்.
இந்த ஊர்ச் சிறுவர்களும் வருவார்கள். தங்க்கான பணத்தைச் சம்பாதிக்கும்
நோக்கத்துடன்.
நம்மால் இயலாத நிலையில் அவர்களுக்கு
வேலை கொடுப்போம்.
ஆமாம் முதியோர் கஷ்டம் இல்லாத ஊர் எது.
அண்மைக்காலங்களில் அதிகமாகி இருக்கிறது.
இறைவன் காக்கட்டும்.
அன்பு முரளிமா,
நீங்கள் சொல்வது புரிகிறது.
பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பனியில்
சிறுவர்கள் விளையாடலாம். அதன் மேல்
ஐஸ் படிந்து விட்டால் ,வழுக்கிவிட்டு மண்டையைப்
பதம் பார்க்கும்.
நடுவயதுக்கு மாப்பிள்ளை, மகள்.
பெரிய மகன் எல்லொரும். பனி அள்ளிப் போடுவார்கள்.
அவர்கள் எழுந்திருக்கு முன்பே இவர் வந்து விட்டார்.
எல்லோரும் நலமாக இருக்கட்டும்.
அன்பு கீதாமா, அதுதான் வேண்டும். நாம் யாருக்கும் பொல்லாப்பு நினைக்கவில்லை.
நமக்கும் இறைவன் நல்லதே செய்வான்.
நலமுடன் இருப்போம் மா.
அன்பு தனபாலன்,
வாழ்க வளனுடன். பாடல்களைக் கேட்கும்போது
உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.
வந்து கருத்து சொன்னதற்கு மிக மிக நன்றி மா.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வல்லிம்மா.
Post a Comment