Blog Archive

Tuesday, December 29, 2020

மன அலைகள்.


வல்லிசிம்ஹன்

முழு நிலவுக்கும் மனத்திற்கும் ஈர்ப்பு அதிகம். 

பதினோராம் நாள் உபவாசம் இருந்தால் 
இந்தப் பௌர்ணமி அலைகள்
நம்மைப் பாதிக்காது என்கிறார்கள்.

அனுபவித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
நான் உபவாசம் இருந்த நாட்கள் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு
முன்.:)

இப்போ கஞ்சி வரதப்பா.....எப்போ அப்பா கதைதான்.
எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் 
கொள்ளலாம்:)

எங்கள் இருவருக்கும்  மிகப் பிடித்த பாடல்.
அதுவும் சிங்கம் தரம்ஜி என்று அழைக்கப் பட்ட காலம்:)
😍😍

 திரிவேணி சங்கமம்.

12 comments:

நெல்லைத்தமிழன் said...

பதினோராம் நாள் உபவாசம், பௌர்ணமி அலைகள் - கேள்விப்பட்டதில்லை.

மிஷினுக்கு மாதம் இருமுறை விடுமுறை கொடுப்பது நல்லதுதான்.

ஆனா பாருங்க... உபவாசம் இருக்கலாம் என ஆரம்பிக்கும்போதுதான் அதிகமாகப் பசிக்குது.

ஸ்ரீராம். said...

உபவாசம் இருந்ததே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  எப்போதாவது இருந்திருக்கிறேன்.  ரெகுலராக இல்லை!

பாடல்கள் அனைத்தும் மிக அருமையான பாடல்கள்.  எனக்கும் பிடித்த பாடல்கள்.

துரை செல்வராஜூ said...

இனிய பாடல்களுடன் இன்றைய பதிவு.. அருமை..

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா. இந்த ஊருக்கு வந்துதான் இதெல்லாம் கேள்விப்படுகிறேன்.

பௌர்ணமி, அமாவாசை போது கடல்அலைகள் , சந்திரன் இவைகளின் ஆக்ரமிப்பு புவியின்
மீது அதிகரிப்பதால் நம் உடலில இருக்கும் நீர்ச்சத்தும் இழுக்கப் படுவதால் நம் மன அழுத்தம் மாறுபடுமாம்.
ஏகாதசி அன்று உபவாசம் இருந்து அந்த ஈர்ப்பு சம்பபடுத்தலாமாம்.

நமக்கெல்லாம் அவ்வளவு சினம் எல்லாம் வராது. பசி வந்தால் தான் வம்பு:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு ஶ்ரீராம் .
எனக்குத் தெரிந்த கடவுள்கள் எல்லாம் , வீட்டுப் பெரியவர்கள் உள்பட விரதம் இருக்க சொன்னது
இல்லை. இருந்த வருடங்களிலும். மாறுதல் அனுபவித்தது இல்லை. வயிற்றுக்கும் வாய்ககும்

ஓய்வு கொடுப்பது நல்லதுதான்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
மிக நன்றி மா. நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். குளிர் அதிகமாகி இருக்கும்.
எனக்கும் வெளியே போக முடியாத நிலையில் இது போலப்
பாடல்களும் காலை மார்கழி வழிபாடும் தான் முடிகிறது.

Geetha Sambasivam said...

ஒரு காலத்தில் செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி என விரதம் இருந்திருக்கேன். இப்போல்லாம் 3 வேளை சாப்பிடும் விரதம். வைகுண்ட ஏகாதசி அன்றும் கந்த சஷ்டிக்கும் நான் மட்டும் விரதம் இருந்தேன். அவரால் முடியலை! :(

Geetha Sambasivam said...

நம்ம ஜோசியத்திலும் சந்திரன் தான் மனோகாரகன் என்பார்கள். ஆகவே மன நிலைகளுக்கும் சந்திரனின் பிரயாணங்களுக்கும் சம்பந்தம் இருக்கத் தான் செய்கிறது.
பாடல்கள் அனைத்தும் அருமையானவை. நினைவூட்டியதுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

// முழு நிலவுக்கும் மனத்திற்கும் ஈர்ப்பு அதிகம்... //

உண்மை...

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு கீதாமா.
எனக்கு அமாவாசை அன்று மனம் கிலேசப்படும்.
அதுவும் நம்மை விட்டுச் சென்றவர்கள் நினைவு வருத்தும்.
மகள் சொன்ன பிறகு நிறைய கவசங்கள், மன நிம்மதிக்காகப்
பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன்.
பெரியவர்கள் சொன்னதில் எல்லாம்
உண்மை தானே இருக்கும்.

சர்க்கரை நோய்க்கும் உபவாசத்துக்கும் ஒத்துக் கொள்ளாமல்
இருக்கிறது. 16 வருடங்கள் ஆகிறது.

நினைத்தாலும் விரதம் முடிவதில்லை.
வைஷ்ணோ தேவி விரதம் மேற் கொண்டு
நிறுத்த வேண்டி வந்தது.
இனி வரும் புத்தாண்டு எல்லோருக்கும்
நன்மை அளிக்கட்டும்.
மாமா, மகள், மகன் குடும்பம் எல்லோரும் பத்திரமாக
இருக்க பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

பாடல்களே என் வாழ்க்கையாகி விட்டது கீதாமா.
வெளியே செல்ல முடியவில்லை.
ஒருவருக்கும் நின்று பேச நாழியில்லை:)
இசை வழி நம் வழியாகிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு தனபாலன்.
மனம் அலைபாயத்தான் செய்கிறது.

பத்திரமாக ,நலமுடன் இருங்கள்.

வரும் புத்தாண்டு உங்களுக்கும் குடும்பத்துக்கும் நல்ல எதிர்காலத்தைக்
கொண்டு வரட்டும்.