Blog Archive

Sunday, December 20, 2020

.தீபத்தை வைத்துக் கொண்டு.....


பாடல்களின் காட்சிகளை விட,
பாடல் வரிகள் மிகவும் பேசப்பட்ட காலம்.
இந்தப் பதிவைப் பார்க்க வருகிறவர்களும்
அதை உணர வேண்டும் என்று எண்ணம் வருகிறது.

6 comments:

ஸ்ரீராம். said...

ஆம். பாடல்களின் வரிகளை பார்த்துப்பார்த்து செதுக்கினார்கள்.  எம்ஜிஆர் பாடல்கள் எல்லாம் இன்னும் விசேஷம்!

Bhanumathy Venkateswaran said...

கோலம் வெகு அழகு! காணொளிகளை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பாடல்கள் வெகு அருமை. அடிமை பெண் பட பாடல்களை கேட்டுள்ளேன். படம் இன்னமும் பார்க்கவில்லை. இதில் கடவுளைக்கண்டேன் எனற படத்தின் பாடலும் இப்போதுதான் கேட்டு ரசித்தேன். படம் வந்ததே தெரியாது. சந்திரபாபு அவர்களின் பாடல் வரிகள் எப்போதுமே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். அவரே அவர் சம்பந்தபட்ட பாடல்களை எழுதி
பாடுவார் என கேள்வி பட்டுள்ளேன். நல்ல நடிகர்.நகைச்சுவை அவரிடம் இயல்பாக வரும். நடிகர் தங்கவேலுவும் அப்படித்தான். அலட்டிக் கொள்ளாமல் நடிப்பார். பழைய பாட்டுக்களை கேட்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம். அன்பு ஸ்ரீராம்.
என்னவோ பழைய பாடல்கள்தான் வெகுவாக
ஈர்க்கின்றன. நன்றி மா வந்து கேட்டதற்கு.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி பானு மா. கோலம் ,மகளின் தோழி போடுவது.
ஏதோ மார்கழி மாதத்துக்காக கோலம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
பாடல்களை ரசித்ததற்கு மிக நன்றி. கடவுளைக்
கண்டேன் 1963இல் வந்தது என்று நினைக்கிறேன்.

நானும் பார்த்ததில்லை. அடிமைப் பெண்ணும் பார்த்ததில்லை.
வானொலியில் கேட்டு ரசித்தவை இவை எல்லாம்.

இங்கு நடக்கும் அரசியல் நிகழ்வுகள் மனதை அசர வைக்கின்றன.
இசையில் மனத்தைப் புகுத்தி மாற்றிக் கொள்கிறேன்.
உங்களுக்கும் பிடித்தது நன்மையே.