வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
இன்று இங்கு செவ்வாய்க் கிழமை.
இந்தமாதம் இந்தக் கிழமை Giving Tuesday என்று அழைக்கிறார்கள்.
வருடம் முழுவதும் கொடுக்காமல் இருக்கிறார்களா என்றெல்லாம்
யோசிக்க வேண்டாம்.
உலகம் முழுவதும் கொடை வள்ளல்கள்
இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதுவும் இந்தத் தொற்று காலங்களில்
வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் சிரமப்படும்
கோடிக்கான மக்கள்.
எனக்கு ஆச்சரியம் எல்லாம் உலகத்திலேயே
காணும் இடம் எல்லாம் உணவு கொட்டிக் கிடக்கும் நாட்கள்.
வண்டிகள் நிறுத்த இடம் இல்லாமல்
வரிசையில் நின்று தேவையான பொருட்களை
வாங்கிச் செல்வார்கள்.
அதுவும் விழாக்காலங்கள் என்றால்
80% ஸேல் எல்லாம் பிரசித்தம்.
இப்போது நடக்கும் விஷயங்கள் வேதனைதான்.
பல குடும்ப உறுப்பினர்களைப் பறி கொடுத்து
நஷ்டப்பட்ட லக்ஷக்கணக்கான மக்கள்.
நிற பேதம் பார்க்காமல் பாதிக்கப் படுகிறார்கள்.
முக்கால் வாசி மத்திய தர மக்கள்.
நம் ஊருக்கும் இங்கே பார்ப்பதற்கும் ஒரே ஒரு
வித்தியாசம்.
இவர்கள் வரிசையாகக் காரில் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.
இலவச உணவுக் கூடங்கள் நிரம்பி வழியும் படி
உணவுகளைக் குவிப்பதில் எல்லோரும் ஆர்வம்
காட்டுகிறார்கள்.
இன்னும் இன்னும் என்று வாங்கிக் கொள்பவர்கள்
வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
நன்றி சொல்லும் நாள்'' வந்து சென்றது.
அன்று பிரத்தியேக உணவு கொடுத்தவர்களும்
ஆயிரக்கணக்கு.
இருந்தும் போதாக் குறை வருகிறது என்று சொல்கிறார்கள்.
குழந்தைகள் ஒன்று சேர்ந்து குக்கீஸ், கேக் என்று செய்து
வீட்டு வாசலைல் வினியோகிக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் அம்மாக்கள்
பலவகைப் பழவகைகள் ,ரொட்டி, Applepie செய்து
செய்து விற்று வரும் பணத்தை சால்வேஷன் ஆர்மிக்குக்
கொடுக்கிறார்கள்.
அதுவும் இந்தக் குளிர் நாட்களில் , மேலுடுப்பு இல்லாமல்
அவதிப் படுபவர்களுக்கு,
படுக்கைகள், போர்வைகள், தலைக் குல்லாக்கள்,
ஸ்வெட்டர், பழைய ஜாக்கெட் என்று
குமித்து விடுகிறார்கள்.
முன்பு எல்லாம் இங்கே எல்லோரும் பழைய துணிகளை
ஒரு தொட்டியில் போடும்போது
நம் ஊர்க்குழந்தைகளுக்கு உபயோகப் படுமே
என்று வருத்தப் படுவேன்.
இப்போது எல்லாமே மாறிவிட்டது.
இறைவன் கால நிலையை மாற்றி எல்லோரையும்
உணர வைத்துக் கொண்டிருக்கிறான்.
12 comments:
இந்தக் கொரோனா வந்து உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறதே. என்ன செய்வது?
இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். வித்தியாசமாக உள்ளது.
மிக மிக் அருமையான விஷயம் அம்மா. உலகம் முழுக்க ஏதேனும் ஒரு விதத்தில் நல்லதும் நம்மைச் சுற்றி நடக்கத்தான் செய்கிறது.
கீதா
கொடுக்கும் செவ்வாய் - நல்ல விஷயம்.
கொடுப்பதற்கும் மனது வேண்டுமே! அறியாத தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
கொடுப்பவர் மனமும் பெறுபவர் வயிறு நிறையும். இந்த நாள் தொடங்கி இனி எல்லா நாட்களும் அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்!
கொடுக்கும் செவ்வாய்
படிப்பதற்கே மகிழ்வாக இருக்கிறது
அன்பு கீதாமா,
இந்தத் தொற்று கொண்டு வந்த நன்மைகளில் இந்தக் கொடையும் ஒன்று.
இந்த ஊரை விட்டுப் போவேனா என்று
அடம் பிடிக்கிறதே.:(
அன்பு முனைவர் ஐயா வணக்கம்.
நல்ல விஷயங்களைப் பகிர்வதில் மகிழ்ச்சியே.
ஆமாம் கீதாமா.
நன்மைகளைப் பாராட்டி உயர்த்தினால்
அல்லாதவை அகலுமோ என்ற ஆசைதான்.
அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம் மா.
செவ்வாய் முழுவதும் கொடுப்பதைப் பற்றித்தான் பேச்சே.
நல்ல பல நிறுவனங்களும்
இருப்பவர்களும் சேர்ந்து நன்மை செய்கிறார்கள்.
வணக்கம் வானம்பாடி.
நன்மைகளைப் பகிர்வதில் நலம் பெருகும் என்றே நம்புகிறேன். மிக
நன்றிமா.
வணக்கம் அன்பு ஜெயக்குமார். நலமாப்பா.
நன்மை சிறக்கப் பிரார்த்தனைகள்.
Post a Comment