மார்கழியின் 8 ஆம் நாள்.
மேய்வான் பறந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப்போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடி ப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாற்றிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்///
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
8 comments:
அருமை. போகிண்றரை என்பது போகின்றாரை என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
இயற்கையைப் பதிவு செய்தவள் கோதை நாச்சியார்...
ஆண்டாள் திருவடிகளே சரணம்...
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. திருப்பாவை பாடல்கள் இனிது. எந்நாளும் செவி குளிர வைப்பவை. ஆழ்ந்த கருத்துடன் கூடிய பாடல்களை பகிர்வதற்கு மிக்க நன்றி. கோதை நாச்சியார் அருளை என்றும் போற்றி பெறுவோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு முனைவர் ஐயா வணக்கம்.
சுட்டியதற்கு நன்றி. மாற்றி விட்டேன்.
நல்ல நாட்கள் தொடரட்டும்.
இனிய புத்தாண்டுக்கான வாழ்த்துக்கள்.
அன்பு துரை,
நலமாப்பா. உங்கள் பதிவுகளை இன்னும் படிக்கவில்லை.
நாட்கள் வேகமாக நகர்கின்றன.
அன்னை கோதை சொல்லியே
வான் சரித்திரங்களை அறிய முடிகிறது.
தமிழ் போற்றி வாழ்வோம். நன்றி மா. என்றும் வாழ்க வளமுடன்.
அன்பு ஸ்ரீராம்,
மார்கழி மட்டும் இல்லாது எல்லா நாட்களும் அவளைத் தொழுவோம்.
நன்றி மா.
அன்பு கமலா,
நன்றியும் வணக்கமும்.
மார்கஹி மாதம் நம்மைச் சீரமைக்கவே வருகிறது. நீங்கள் வந்து படித்து என்னைக் கௌரவிக்கிறீர்கள்.
மிக மிக நன்றி அம்மா. என்றும் வாழ்க வளமுடன்.
Post a Comment