Blog Archive

Friday, December 04, 2020

Nageswara Rao Park in Rainsஎங்க ஊரு.

10 comments:

ஸ்ரீராம். said...

அலைபேசியில் எடுத்திருப்பார்களோ என்று பார்த்தால் துல்லியமாக எடுக்கப்பட்டிருக்கிறது.  மைலாப்பூருக்கென ஒரு டிவி சேனல் இருக்கிறதா? 'பார்க்'கை எப்போது சீர் செய்வார்களோ!


நேற்று சென்னையில் மழை படுத்தி விட்டது.  நிற்குமா என்று ஆகிவிட்டது. காலையில் மிக கனமாகத் தொடங்கிய மழை, பின்னர் ஒரே சீராக மெதுவாக பெய்துகொண்டே இருந்தது.  சாலைகளில் வெள்ளம்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பார்க், மழையில் வித்தியாசமாக இருந்தது.

கரந்தை ஜெயக்குமார் said...

அழகு

மனோ சாமிநாதன் said...

30 வருடங்களுக்கு முன் இந்த பார்க்கிற்கு சென்றுள்ளேன். அருகிலிருந்த ஆந்திர மகளிர் சபா விடுதியில் நானும் என் சினேகிதியும் தங்கியிருந்த போது சென்றிருந்தோம். இன்னும் அந்த விடுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பார்க் அப்படியே தானிருக்கிறது!!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி
நலமா?
நகேஸ்வரராவ் பார்க் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டது. லஸ்ஸில் இருக்கும் போது, குழந்தைகளுடன் விடுமுறை நாளான ஞாயறன்று எப்போதாவது அருகிலிருக்கும், இந்த பார்க், கபாலி கோவில், சாந்தோம், இல்லை மெரீனா கடற்கரை என சென்றவிடங்கள் நினைவுக்கு வருகிறது. அந்த மலரும் நினைவுகள் அலாதி. அதை மீண்டும் தங்கள் பதிவு நினைவூட்டியது.

இந்த வருடம் மழையில் பூங்கா ரொம்ப சேதமடைந்துள்ளதோ? அந்த ஜோடி காக்கைகளை பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது இங்கு (பெங்களூரில்) காக்கைகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. புறாக்களும், கழுகுகளுந்தான் அதிகம். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
ஆமாம் மைலாப்பூர் டைம்ஸ் வீடியோ அப்லோட் செய்வார்கள். ராண்டார் கை,
வின்செண்ட் டி சூசா எல்லாம் அங்கு பங்கெடுப்பார்கள்.
என்னுடைய பொழுது போக்குகளில் இதுவும் ஒன்று.

பிரபல கம்பெனி இந்தப் பார்க்கை பராமரிக்கிறது.
சுத்தம் செய்து விடுவார்கள்.
பாரம்பரியம் மிக்க இடம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
அந்த விடுதி இன்னும் இருக்கிறது. \
படிப்புகளும் தொடர்கிறது.
இந்த தொற்று காலத்தில் எப்படி என்று தெரியவில்லை.

30 வருடங்கள் முன் அங்கே இருந்தீர்களா. அட.
நான் கூட உங்களைப் பார்த்திருக்கலாம்.
அங்கேயே எதிர்த்தாற் போல் தான் வீடு.
தேவகி ஆஸ்பிட்டல் தாண்டி இரண்டு வீடு தள்ளி.

பழைய நினைவுகளுக்கு நன்றிமா.
பார்க்கில் இப்போது கச்சேரிகள் எல்லாம் நடக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா வணக்கம்.
நல்ல மழையாம் சின்ன செடிகள்
சேதம் அடைந்து , பெரிய மரங்களும்
விழுந்திருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் அனபு ஜெயக்குமார். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
தங்கள் பேத்தி பூரண குணம் அடைந்திருப்பாள்
என்று நம்புகிறேன்.

தாங்களும் மைலாப்பூர்வாசி என்று அறிவதில் மிக மகிழ்ச்சி.

நானும் எங்கள் குழந்தைகள் கோடை காலத்தில் நாடுவது
பார்க்கைத்தான். அது ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்.

சென்னையில் இப்போது கிளிகள்,குயில்கள் எல்லாமே பெருகி இருக்கின்றன.
காலை நேரம் நான் வெகுவாக அனுபவிப்பேன்.
நன்றி மா.