Blog Archive

Thursday, December 31, 2020

உள்ள தெய்வம் ஒன்று.....


இன்று  வாசல் முழுவதும் பனிப் பொழிவு.
இங்கே பனியைக் களைந்தெடுக்க வெளியில் போகலாம் என்றால்
கடுங்காற்று.
உடலைத் துளைக்கும் ஊசிபோன்ற ஐஸ் மழை.

இந்த நிலையில் காலையில் ஒரு குரல். வெளியே இருக்கும் ஸ்னோவை அகற்ற
வேண்டுமா என்றதும் 
கொஞ்சம் தயக்கம். வழக்கமாக ஆஜராகும் Saul வரவில்லை.
வந்திருப்பவரோ முதியவர். அவரால் முடியுமோ என்ற பரிதாபம்.

அவரோ நம் தயக்கத்தைப் பார்த்து 5 ரூபாய் குறைத்துக் 
கொடுங்கள் என்றார்.எனக்கு
மனமே தாங்கவில்லை. ஐயோ பாவம் என்றிருந்தது.

அவருக்கு உண்டான பணத்தை பையில் போட்டு 
கதவில் மாட்டி வைத்து
காஃபி வேண்டுமா என்றால் மறுத்துவிட்டார்.
இங்கேயும் இப்படிப்பட்ட பரிதாபங்கள் 
நடப்பது எனக்கு முதலில் வருத்தமாக 
இருந்தது.ஏழ்மை இல்லாத ஊர் என்று நினைத்தேனே.

இங்கேயும் இந்த வைரஸ் இத்தனை பேருக்கு
வேலை இல்லாமல்  வருத்தப் படுகிறார்கள்.
எத்தனையோ நபர்களுக்கு  இலவச உணவு
தர எத்தனையோ குடும்பங்கள் 
உதவுகின்றன.
இருந்தும் போதவில்லை.
இனியாவது  இந்தத் துயரங்கள் தீர்ந்து
அனைவரும் நலம் பெற வேண்டும்.
புது வருடம் அனைவருக்கும் நன்மை 
அளிக்க வேண்டும்.
மனம் நிறையப் பிரார்த்தனைகளோடு
நம் நட்புகள், மற்றும் உலகம் பிரச்சினை தீர்ந்து
வளம் தர இறைவன் அருள வேண்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோருக்கும்
2021 ஆம் ஆண்டு வருக. நலம் தருக.
ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Tuesday, December 29, 2020

மன அலைகள்.


வல்லிசிம்ஹன்

முழு நிலவுக்கும் மனத்திற்கும் ஈர்ப்பு அதிகம். 

பதினோராம் நாள் உபவாசம் இருந்தால் 
இந்தப் பௌர்ணமி அலைகள்
நம்மைப் பாதிக்காது என்கிறார்கள்.

அனுபவித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
நான் உபவாசம் இருந்த நாட்கள் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு
முன்.:)

இப்போ கஞ்சி வரதப்பா.....எப்போ அப்பா கதைதான்.
எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் 
கொள்ளலாம்:)

எங்கள் இருவருக்கும்  மிகப் பிடித்த பாடல்.
அதுவும் சிங்கம் தரம்ஜி என்று அழைக்கப் பட்ட காலம்:)
😍😍

 திரிவேணி சங்கமம்.

Dr G Gnanasambandan l Humour Club International Triplicane Chapter l 35...

😃😃😃😃😃😃😃😃

Monday, December 28, 2020

வெள்ளி நிலாவினில் ஒரு வீணை


நிலா கீதங்கள் தொடர்கின்றன.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து

வல்லிசிம்ஹன
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே 


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!















Sunday, December 27, 2020

வெள்ளி நிலா முற்றம்

மிக மிக இனிமையான  பாடலும் நடிப்பும்.
பாடல்களுக்கான 
காட்சிகளும் இனிமை/ எதற்குமே பஞ்சமில்லை நம் நாட்டில்.
மனதில் உண்மை இருக்கும் வரை.

பாடல் என்றால் பாலு சார் இல்லாமலா.
என்றும் வீசும் நிலாத் தென்றல் எஸ் .பி. பி சார்.


Saturday, December 26, 2020

Orphaned Baby Elephant Grows Up With The Best Human Friends | Real Wild

😍😍😍😍😍😍அருமையான காணொளி. 
அன்பு என்பது எல்லா இடத்திலும் பொங்கிப் பரவும்.
யானைகளிடம் மேலோங்கியே இருக்கிறது.
எண்டாட்டா என்ற யானைக் குட்டி,
தன் இனத்துடன் சேர அதை வளர்த்தவர்கள்
மேற்கொள்ளும் முயற்சி அசர வைக்கிறது.

கென்யாவில் நடந்த இந்த நிகழ்வு 
மிருகத்தன்மை என்பது மனித்தன்மையை விட மேலோங்கி 
இருப்பதை உணர வைக்கிறது.

Thursday, December 24, 2020

வெளிவராத அனுபவங்கள் அதிசயங்கள் | ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில்

தென்றல் வந்து வீசாதோ

மன நெகிழ்வுக்கு சில பாடல்கள்.




Thiruvadhirai Kali | திருவாதிரை களி - Ammavum Naanum | Episode #52 | Rak...

எண்ணெய்க் கத்திரிக்காய் எங்கள் ப்ளாகுக்காக

வல்லிசிம்ஹன்
விட்டாச்சு லீவு என்று பாடாத குறையாக எல்லோரும், இரவு விழித்துப் பகலில் தூங்கிக்


கொண்டிருக்கும் காலம்.

காரசார சமையல் பாட்டியின் பொறுப்பாயிற்று.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சமையல் பொறுப்பு எடுத்துக் கொண்டேன்.
என் தோழி ,இதை வெகு ருசியாகச் செய்வாள்.அவளுடன் கூட இருந்து கற்றுக் கொண்டது அனேகம். இதெல்லாம் 30 வருடங்கள் முன்பு.
எங்கள் சிங்கத்துக்கு இந்த மாதிரி மசாலா சமையலில் விருப்பம் அதிகம்.
அங்கே கற்றுக் கொண்டதில் இந்த கத்திரிக்காய் க்ரேவி குழம்பும் ஒன்று.

இன்று செய்யும்போது இரண்டு மூன்று படங்கள் எடுக்க நினைவு வந்தது.
மற்றவர்கள் போலக் கோர்வையாக எடுக்கவில்லை.
மன்னிக்கணும்.

இன்று எடுத்துக் கொண்ட  மசாலா பொருட்களில்
வெள்ளை எள்ளும் , வேர்க்கடலையும் முக்கியம்.
இணையத்திலும் சந்தேக நிவர்த்தி செய்து கொண்டேன்.

IMG_20201223_132611742.jpgஎண்ணெய்க் கத்திரிக்காய் குழம்புக்குத் தேவையான பொருட்கள்.
16 சின்னக் கத்திரிக்காய்.
அதற்குத் தேவை
2 மேஜைக் கரண்டி வெள்ளை எள்ளும்
2 மேஜைக்கரண்டி  வறுத்த வேர்க்கடலையும்.
இவற்றை முதலில் பொடித்துக் கொள்ள வேண்டும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
எலுமிச்சை அளவு புளியை கோது போக, கெட்டியாகக்
கரைத்து  வைத்துக் கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------
அரைக்க வேண்டிய பச்சை மசாலா.
ஒரு பெரிய வெங்காயம்,
நான்கு  பெரிய பூண்டு
6 கார பச்சை மிளகாய்,
இரண்டு இன்ச் இஞ்சி,
கூடவே இரண்டு டீஸ்பூன் தனியா பொடி,
ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி,
இரண்டு ஸ்பூன் கஷ்மீரி மிளகாய்ப் பொடி.
இவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளணும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய்
விட்டு அதில்  கொஞ்சம் மிளகு, ப்ரிஞ்சி இலை,
இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டு கிராம்பு போட்டு வறுத்துக் கொண்டு
தனியே வைத்துக் கொண்டு,
இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வகிர்ந்து வைத்திருக்கும்  கத்திரிக்காய்களை அப்படியே முழுதாகப் போட்டு கொஞ்சம் உப்பும் சேர்த்து
நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கின காயோடு, தாளித்துவைத்திருக்கும் மிளகு,மற்றவைகளைச் சேர்த்து அடுப்புச் சூட்டில் மூடி வைக்கணும்.
அரைத்து வைத்த வெங்காயம் ,இஞ்சி பூண்டு,ப.மிளகாய்க் கரைசலை இத்துடன் சேர்த்துக் கொதிக்க வைக்க
வேண்டும்.

இப்போது அரை உப்பு சேர்க்கலாம்.
அடுத்த வேலை புளிக்கரைசலை விடுவது
இதற்குள் கத்திரிக்காய் பாதி வெந்திருக்கும்,
புளிவாசனை போனதும், பொடித்து வைத்திருக்கும்
வேர்க்கடலைப் பொடி,
வெள்ளை எள்ளுப் பொடியப் போட வேண்டியதுதான்.
அடிக்கடி கிளறினால் கத்திரிக்காய் இரண்டு
ஆக சந்தர்ப்பம் உண்டு. அதனால் எச்சரிக்கையுடன் இருக்கணும்.
மீண்டும் மூடிவைத்துவிட்டுப் பார்த்தால்
எண்ணெய் பிரிந்து பார்க்கவே அழகாக இருந்தது.
அடுப்பை அணைத்து விட்டு கருப்பிலை
இரண்டு ஆர்க் போடலாம். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.

புரிகிற மாதிரி எழுதி இருக்கிறேனோ தெரியவில்லை.
தோழி என்னைப் பார்த்தால் சந்தோஷப் படுவாள்.
நன்றி ராஜகுமாரி டேவிட்,.
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.





Wednesday, December 23, 2020

Sadya Special Olan || Kerala Sadya Olan || Ash Gourd Recipe in Tamil

கீழ்வானம் வெள்ளென்று.........

வல்லிசிம்ஹன்
மார்கழியின் 8 ஆம் நாள்.


கீழ்வானம் வெள்ளென்று  எருமை சிறுவீடு 
மேய்வான் பறந்தன காண்  மிக்குள்ள பிள்ளைகளும் 
போவான்  போகின்றாரைப்போகாமல் காத்துன்னைக் 
கூவுவான் வந்து  நின்றோம்  கோதுகலமுடைய 
பாவாய் எழுந்திராய் பாடி ப் பறை  கொண்டு 
மாவாய்ப் பிளந்தானை மல்லரை  மாற்றிய
 தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் 
ஆவாவென்று ஆராய்ந்து  அருளேலோர்  எம்பாவாய்///

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே  சரணம்.

Sunday, December 20, 2020

எண்ணெய்க் கத்திரிக்காய்

.தீபத்தை வைத்துக் கொண்டு.....


பாடல்களின் காட்சிகளை விட,
பாடல் வரிகள் மிகவும் பேசப்பட்ட காலம்.
இந்தப் பதிவைப் பார்க்க வருகிறவர்களும்
அதை உணர வேண்டும் என்று எண்ணம் வருகிறது.

Wednesday, December 16, 2020

Getting through 2020 | Ask How #WithMe

மார்கழித் திங்கள் முதல் நாள்.

வையம் வாழ கோதை பாடிய பாவைப் பாடல்களைப்
பாடி அரங்கன் திருவடிகளை ஆஸ்ரயிப்போம்.

Tuesday, December 15, 2020

சேலத்தில் கேட்ட பாடல்கள்.1966,67,68,69 ஆம் வருடங்கள்.


நலம் நலம் அறிய ஆவல். சேலம்  வந்தவுடன் சிங்கத்தின் சித்தப்பா வீட்டில் தங்கிய நாட்கள் சிறப்பானவை.
பெரியவர்களுடன் இருக்கும் போது 
ஒரு பாதுகாப்பு கிடைக்கும் இல்லையா. அந்த வகையில்  என் சின்ன மாமனார் ஒரு அன்பான மனிதர். 6'4'' உயரத்தில் அவர்பேசுவது என் காதுக்கு வர சில நொடிகள் ஆகும்.:)
சமையல்  மாமியிடம் சொல்லி விடுவார். இந்தப் பெண் வாய் திறந்து ஒன்றும் கேட்காது. நீதான் பசி அறிந்து கொடுக்கணும் என்று.!!!
கண்ணம்மா மாமியும் தன்னால் முடிந்த அளவில் 
என்னிடம் உரையாடி, கடினமான  உழைப்புக்கு நடுவில் ஜாதி மல்லி தொடுத்து எனக்குத் தருவார். அந்த அன்பு மனம் இன்னும் மனதில். அப்போது வீட்டை ஓட்டினால் போல ஏரிக்கரை இருந்தது. இப்போது அங்கெல்லாம் வீடுகள் வந்துவிட்டன. மரவனேரி  என்ற இடம். வில்வாத்ரி பவன்  வீடும் அங்கே இருந்தது.  பாதாம் அல்வா  அந்த வீட்டிலிருந்து வரும்.
இதில் விசேஷம் என்ன என்றால்  அங்கே இருந்த ஒரு குழந்தை என் சம்பந்தி வீட்டு மாப்பிள்ளையாக வந்ததுதான் அதிசயம்.
சேலம்  , குழந்தைகள் காலம்.
ஒன்றன் பின் ஒன்றாக மூன்று  .... கொஞ்சம் கடினமான நேரம். ஆனால் சமாளிப்பது சிரமமாக இல்லை. சரஸ்வதி என்ற குட்டிப் பெண் துணை இருந்தது.
சினிமா சம்பந்தம் எல்லாம்  வானொலி வழியாகவும்,
பின்னாலே இருந்த  மைதானத்தில்  மூன்று நாட்கள் சைக்கிள் விடும்  அதிசய மனிதருக்காக ஒலி பரப்பப் பட்ட பாடல்களும்.😃😀😅😅

காலை நாலு மணிக்கு ''விவசாயிய்ய்ய்ய்ய்ய் '' என்று எம்ஜிஆர் குரல் கொடுத்தவுடன்,
மகள் ,மகன்  விழித்துக் கொண்டு விடுவாரகள்.:).
பிறகென்ன  ''பொழுது  புலர்ந்தது 
யாம் செய்த தவத்தால் '' என்று ஆரம்பிக்கும்.
அந்த நாட்களில் என்னைக் கவர்ந்த ,நினைவில் இருக்கும் பாடல்களைப் 
பகிர்கிறேன்.



Sunday, December 13, 2020

Sutralam Suvaikalam - Traditional Recipes of Chettinad | Karaikudi Speci...

என்றும் வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.

1966 நினைவுகளூம் பாடல்களும்

1966இல் திருமணம் முடித்துப் புதுக்கோட்டை வந்ததும்
பார்த்த படம் அன்பே வா.
அதன் பிறகு கீழ் வீட்டு ரேடியோ சிலோனில் கேட்டது 
''நீலவானம்'' படப் பாடல்கள்.

என்னை விட்டு விட்டு சிங்கம் தனது சினேகிதர் சுந்தரத்துடன் 
பார்த்த படங்கள்  மோட்டார் சுந்தரம் பிள்ளையும் ,மேஜர் சந்த்ரகாந்தும்:)

நான் மதுரையில் குழந்தை பெறுவதற்காகப் போன
போது அவருக்கும் பொழுது போக வேண்டுமே.

திரைப்படங்களைப் பார்த்துவிட்டுக் கதைகளைக் கடிதத்தில்
எழுதுவார்.:)
உன் வயதுதான் அந்தப் பெண்ணுக்கு
எப்படி நடனம் ஆடுகிறது பார்
என்று நையாண்டி வேறு செய்வார்.
இவரோ தமிழ்ப்  பத்திரிக்கைகள் படிக்க மாட்டார்.
எப்படித் தெரியும் இந்த விஷயம் எல்லாம்
என்று யோசனையுடன் அவரைப் 
பார்ப்பேன். சுந்தரம் சொன்னான் என்பார்.

சரிதான் அவரவருக்கு அந்த அந்த வழி.
நான் சந்தோஷமாகத் தான் இருக்கேன் என்பேன்.
பிறகு வெகு நாட்கள் கழித்து அந்தப் 
படத்தைப் பார்க்கும் போது உண்மையிலியே
அந்தப் பெண் அழகாக ஆடிப்பாடி ,அழுது எல்லாம்
செய்வதைப் பார்த்து மகிழ்ச்சியாகவே இருந்தது.

அவர்தான் பின் நாட்களில் நம் முதலமைச்சராக எங்கள் வீட்டு வழியே அடிக்கடி
சென்று வருவார்.


Friday, December 11, 2020

மனக்குமுறலுக்கு இசைதான் மருந்து

எத்தனையோ காலமாக இருந்து வருவது
ஆளும்  திமிரும் அடங்கிப் போகும் 
அடிமைத்தனமும்.

இப்போது ஊடக வாயிலாக நாம் காணும் காட்சிகள்
மிகக் கவலைப் பட வைக்கின்றன.
முன்னை விடக் கல்வி அறிவு படைத்தவர்கள்
அதிகம். இருந்தும்  நாட்டைப் பற்றி யோசிக்காமல்
தனிமனித  வழிபடல்,துதி பாடல், அராஜகமாக
நடத்தல் இவை எல்லாம் 
எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும்
என்று தெரியாமலேயே தங்கள் தங்கள்
வாழ்க்கையை மேம்படுத்திக்  கொள்ள
விரும்பும் மக்களைப் பார்க்கிறேன்.

மேலோர் சொன்ன வாக்குகள் நமக்கு
எத்தனையோ இன்னும் நினைவில் இருக்கின்றன.
அட்டகாசம் செய்பவர்கள் அடங்கத்தான் போகிறார்கள்.

இறைவன் காக்கட்டும் உலகத்தை.
இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன் கதையும்
நமக்குத் தெரியும் .தானே கெடப் போவதையும்
பார்க்கத்தான் போகிறோம்.




Thursday, December 10, 2020

G.S.SIMHANJANA - ACHAM THAVIR ( AVOID FEAR) - A special Talk

இளம் வயதில்
தான் பேசுவதை உணர்ந்து , சீராகப் பேசுகிறார்.
அம்மாவின் வேகம் வர நாட்கள் பிடிக்கும். இன்னும் 
முன்னேற வாழ்த்துகள்.

சிங்கத்துக்குப் பிடித்த பாடல்கள்.


  என்றும் இனிமை.

Wednesday, December 09, 2020

Shyamala Jeevapriyeஅப்பாவுக்குப் பிடித்த பாடல்கள்

காரைக்குடி அழகப்பா நகர் தபால் நிலையம் 1968


எங்கள் அப்பாவுக்கு இசை மிகப் பிடிக்கும். அம்மாவுக்கும் அவருக்கும் நல்ல
குரல்.
ஆனால் பாட மாட்டார்கள்.
என் சிறுவயதில்  அப்பா பாடிக் கேட்டது
என் ''ஜீவப்ரியே ஷ்யாமளா.''
இத்தனை நாட்கள் தேடி இன்றுதான் கிடைத்தது.

அதற்குப் பிறகு அப்பா பாடி நான் கேட்டது காரைக்குடியில்
இருந்த போது.
அப்போது அழகப்பா கல்லூரி ஹாஸ்டல் எங்கள் க்வார்ட்டர்ஸுக்கு எதிர் திசையில் இருந்தது.
அங்கே மதிய வேளைகளில் 
திரைப்பாடல்கள்  ஒலிக்கும்.


பேரன் பேத்தியோடு அப்பா அப்போது கற்றுக் கொண்ட 
பாட்டு மஹராஜா ஒரு மஹராணி பாடல்:)
சில வருடங்களில் கல்பாக்கம்  ஊருக்கு
மாற்றலாகி வந்தார்கள். வேலைத் தொந்தரவு கொஞ்சம் அதிகரித்தாலும்
அப்பாவும் அம்மாவும் மிக ரசித்த காலம் அது.
சென்னையிலிருந்து குழந்தைகள்
தாத்தா பாட்டியோடு இருகப் போய் விடுவார்கள்.
வீட்டிற்கு எதிர்த்தாற்போல்
கடற்கரை. 
அங்கே திறந்த வெளி அரங்கத்தில் 
பார்த்து கேட்ட படம் அன்னக் கிளி.1976.

ஏதோ உற்சாகமாகச் சொல்ல வந்தவரைக் குழந்தைகள்
சூழ்ந்து கொண்டதும்,
இந்த டான்ஸ் உங்களுக்குத் தெரியுமா என்று 
''மச்சானப் பாத்தீங்களா'' என்று நடன அசைவு கொடுத்தாரெ
பார்க்கணும்!!!

நான் ,அம்மா,குழந்தைகள் அசந்து போய்விட்டோம்.
55 வயதுக்கு நல்ல உடல் கட்டுக்கோப்பாகத் தான் வைத்திருந்தார்.
அல்சர் வந்து குணமான நேரம்.

மருமகள்கள் எல்லாம் வந்த பிறகு அவ்வளவாக
இல்லை. வீட்டுப் பெரியவராகிவிட்டார்:)


Kalpakkam beach

Appa 1968.


Mr Rajamani and Kishore Kumar

வேறு எதையோ தேடப்போய் இந்தப் பாடகர் கிடைத்தார். யார் என்று தெரியாது. அருமையாகப் பாடி இருக்கிறார்.
அதுவும் மிகப் பிடித்த கிஷோர்குமார் பாடல்.கிஷோர் குமார் அவர்களின் குரல் சிறப்பை எட்ட முடியாது.
இருந்தாலும்  நல்ல முயற்சி. 
நன்றாகப் பாடத் தெரிந்த சிலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
முக்கியமாக எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்+ நம் கீதா ரங்கன்.

நல்ல ஞானம். 

இந்த யூடியூப்  வேலை செய்யவில்லையானால்
வீடியோ க்ளிக் செய்து நேராகக் கேட்கலாம்.

Monday, December 07, 2020

அன்றாட களிப்புகள் சில .........

கௌரி கல்யாண  வைபோகமே.

அன்புத் தோழியின்  பேத்தி திருமணம் 
பிரமாதமாக  நடந்தேறியது. சென்னையில் இப்போது வெகுவாக நோய்த் தொற்று குறைந்திருப்பதாகச் சொன்னார்கள்.++++++++++++++++++++++++++


வல்லிசிம்ஹன்
+++++++++++++++++++
கல்யாணப் பெண் ஆஸ்திரேலியாவில் படிப்பவள்.
மணமகனும் அங்கேயே கிடைத்ததால்   இணைய வழி நிச்சயம் செய்து 

இரு வார விடுமுறையில் வந்தவர்களுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைத்தாச்சு.

ஜெட் ஸ்பீட்  என்றால் இதுதான்.

பெரிய வீடு என்பதால்   , வீட்டுக் கூடத்தில் முக்கிய உறவினர்களை 
மட்டும் அழைத்து  எந்த முக்கிய   பத்ததிகளையும் 
விடாமல் ஒரு வேளை    பந்தி , நலங்கு  என்று  நிறைவேற்றினார்கள்.

மற்றவர்கள் இணையத்தில் கண்டு களி த் தார்கள்.
எல்லோருக்கும் விஸ்தாரமான ரிசப்ஷன் வருகிற வருடம்  தருவதாக உறுதி 
சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்க மணமக்கள் .

இந்தத் திரை அரங்கம் திண்டுக்கல்லில் நாங்கள் 
பல திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்த இடம்.
இப்போது இடிக்கப் போகிறார்களாம்.
பழைய செய்திதான். இந்தத் தொற்று பல ஆயிரக்கணக்கான  மக்களின் 

வாழ்வில் பல சோகங்களைக் கொண்டுவந்துவிட்டது.
அதில் ஒன்று சினிமா திரை அரங்குகள்.

வாழ்க்கையின்  ஒரு  பெரிய பங்கு  திரைப்படங்களுக்கு உண்டு,.
இப்போது எல்லாமே இணையத்தில் கிடைக்கும் காலம்.

நாங்கள் வளரும் காலத்தில்  குதிரை வண்டியில் ஏறி சினிமா பார்க்கப் 
போவதே ஒரு விழா,.
வெளியூர்ப்பயணங்கள்   ஒரு விழா.

எல்லாமே நிறைந்திருப்பது போல நாட்கள் நகரும்.
தோழிகளுடன்  பேசிக் கழித்த நாட்கள் 
இப்போது வாட்சப் வாசகர்களோடு   ஓடுகிறது.

நமக்கென்று  ஒரு வளையம். நட்பு, அன்பு எல்லாம் சேர்ந்து 
நம்மை நடத்துகிறது. 
இணையத்துக்கு என் நன்றிகள்.

எங்கள் வீட்டில் இருந்து கொண்டு


  காவல் செய்து ,செடிகளைக் கவனித்துக் கொண்டு வந்தவர் இரண்டு நாட்கள் முன் இறைவனடி சேர்ந்தார்.
அவர் அங்கே  ஐயப்பனார் போல இருந்ததால் நான் மிக நிம்மதியாக இருந்தேன்,.
அவரது பேரன் பேத்திகள் மாலை 
நேரத்தில் வந்து விளையாடும்.
வீடே    களிப்பில்  அமிழ்ந்து போல ஒரு தோற்றம் கொடுக்கும்.
இனி அவர் குடும்பத்தார் மீண்டு வரவேண்டும் 
என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் அன்பு அருணாச்சலத்துக்கு 
விடை கொடுக்கிறோம்.
அவரை மாதிரி நேர்மையான மனிதரைக் காண்பது மிக மிக அபூர்வம்.இன்று முதல் அவர் புதல்வர்கள் 
முறை போட்டு இருக்கப் போகிறார்கள்.கடவுளுக்கு 
நன்றி.

எல்லோரும் வாழ்க வளமுடன்.









Wednesday, December 02, 2020

இப்போது இங்கு........கொடுக்கும் செவ்வாய்.



வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
இன்று இங்கு செவ்வாய்க் கிழமை.
இந்தமாதம் இந்தக் கிழமை Giving Tuesday என்று அழைக்கிறார்கள்.

வருடம் முழுவதும் கொடுக்காமல் இருக்கிறார்களா என்றெல்லாம்
யோசிக்க வேண்டாம்.

உலகம் முழுவதும் கொடை வள்ளல்கள்
இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதுவும் இந்தத் தொற்று காலங்களில் 
வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் சிரமப்படும்

கோடிக்கான மக்கள். 
எனக்கு ஆச்சரியம் எல்லாம் உலகத்திலேயே
காணும் இடம் எல்லாம் உணவு கொட்டிக் கிடக்கும் நாட்கள்.

வண்டிகள் நிறுத்த இடம் இல்லாமல் 
வரிசையில் நின்று தேவையான பொருட்களை
வாங்கிச் செல்வார்கள். 
அதுவும் விழாக்காலங்கள் என்றால்
80% ஸேல் எல்லாம் பிரசித்தம்.

இப்போது நடக்கும் விஷயங்கள் வேதனைதான். 
பல குடும்ப உறுப்பினர்களைப் பறி கொடுத்து
நஷ்டப்பட்ட  லக்ஷக்கணக்கான மக்கள்.
நிற பேதம் பார்க்காமல் பாதிக்கப் படுகிறார்கள்.
முக்கால் வாசி மத்திய தர மக்கள்.

நம் ஊருக்கும் இங்கே பார்ப்பதற்கும் ஒரே ஒரு
வித்தியாசம்.
இவர்கள் வரிசையாகக் காரில் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.
இலவச உணவுக் கூடங்கள் நிரம்பி வழியும் படி
உணவுகளைக் குவிப்பதில் எல்லோரும் ஆர்வம்
காட்டுகிறார்கள்.

இன்னும் இன்னும் என்று வாங்கிக் கொள்பவர்கள்
வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
நன்றி சொல்லும் நாள்'' வந்து சென்றது.
அன்று பிரத்தியேக உணவு கொடுத்தவர்களும் 
ஆயிரக்கணக்கு.
இருந்தும் போதாக் குறை வருகிறது என்று சொல்கிறார்கள்.

குழந்தைகள் ஒன்று சேர்ந்து குக்கீஸ், கேக் என்று செய்து
வீட்டு வாசலைல் வினியோகிக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் அம்மாக்கள்

பலவகைப் பழவகைகள் ,ரொட்டி, Applepie செய்து 
செய்து விற்று வரும் பணத்தை சால்வேஷன் ஆர்மிக்குக்
கொடுக்கிறார்கள்.
அதுவும் இந்தக் குளிர் நாட்களில் , மேலுடுப்பு இல்லாமல்
அவதிப் படுபவர்களுக்கு,
படுக்கைகள், போர்வைகள், தலைக் குல்லாக்கள்,
ஸ்வெட்டர், பழைய ஜாக்கெட் என்று 
குமித்து விடுகிறார்கள்.
முன்பு எல்லாம் இங்கே எல்லோரும் பழைய துணிகளை
ஒரு தொட்டியில் போடும்போது
நம் ஊர்க்குழந்தைகளுக்கு உபயோகப் படுமே 
என்று வருத்தப் படுவேன்.
இப்போது எல்லாமே மாறிவிட்டது.
இறைவன் கால நிலையை மாற்றி  எல்லோரையும்
உணர வைத்துக் கொண்டிருக்கிறான்.