Blog Archive

Saturday, October 30, 2021

தீபாவளி லேகியம்!


வல்லிசிம்ஹன்

சும்மா தீபாவளி வாசனைக்காகப் பதிகிறேன். எல்லோரும் செய்யும் மருந்துதானே.:)

ஒரு கிலோ அளவுக்கு  ஒரு டப்பா நிறைய சுருள சுருள  லேகியம் செய்து கொண்டு  போனபோது,
சிங்கத்தின் பாட்டி கிண்ணத்தில் வைத்துக் கொண்டு ரசித்தார். இரண்டு  நாட்கள் கழித்து திருச்சிக்குத் திரும்பினோம். 

புது ஃபியட் காரின் அழகை ரசித்தவர்,

கையில் போனஸ் பணம்  ஏதாவது மீதி  இருக்கா என்று சிரித்துக் கொண்டே 
கேட்டார்.:)



வீடு நிறைய உறவினர் கூட்டாம். அவரவர் வீட்டில் 
தீபாவளி கொண்டாடி
பலகாரங்களையும் எடுத்துக் கொண்டு வருவார்கள்.

இளம் வயதில் திருமங்கலத்தில் 
புத்தாடையுடன்  எல்லோர் வீட்டுக்கும் பட்சணங்கள் எடுத்துப்
போன நினைவுகள் வரும்.
இந்த ஊரிலும்  இந்தத் தலைமுறையினர் 
எல்லாவற்றையும் கடை பிடிக்கின்றனர்.

அனைவரும் நலமுடன் மகிழ்ந்திருக்க வேண்டும்.

நகை சுவை நீதி








வல்லிசிம்ஹன்

வெள்ளிக்கிழமை பதிவாக எங்கள் ப்ளாகில் வந்த பாடல்

பழைய படங்களின் நினைவுகளையும் அதில் வரும் நேர்மையான
நகைச்சுவை காட்சிகளையும்

மனத்தில் கொண்டு வந்தது. 
அனேகமாக  எல்லோரும் பார்த்து ரசித்த
காட்சிகளாக இருக்கும்.
தங்கவேலு காமெடி காட்சிகள்
தப்பில்லாத சொற்களோடு சுவையாக
இருக்கும்.

இந்தப் படத்தில்  வரும் 'உன்னைத் தூக்கி வெய்யில்ல போட"
வரி அப்போது மிகப் பிரபலம்.
ரசிக்க சில காட்சிகள்

Thursday, October 28, 2021

நான் யார்....

வல்லிசிம்ஹன்

     மஹரிஷி ரமணர் கேட்ட கேள்வி அவரை மஹான் 
ஆக்கியது.
நம்மில்  பலர் இந்தக் கேள்வியில் சிக்கி 
ஏன், எதற்காக,எப்படி என்று இன்னும்  உழன்று கொண்டுதான் இருக்கிறோம்

சுலபத்தில் கிடைக்கக் கூடிய பதிலும் 
இல்லை.

ஏதோ ஒரு வினையின் பயனால் இங்கே வந்தோம்.
அது அது நடக்க வேண்டிய போது எதிர் கொள்கிறோம்.
சிரித்த்தாலும் நிலைப்பதில்லை.
அழுதாலும் ஓடுவதில்லை.
பெற்றெடுத்தவர்கள் கூடப் பிறந்தவர்கள்
மணம் புரிந்தவர் என்று அனைவரும் ஏதோ ஒரு இடத்தில்
எப்பொழுதும் நமக்கு நல்ல வழி காட்டுகிறார்கள்.
அவர்கள் வழியில் என் பின் வந்த தலைமுறையும்
என்னைவிடப் புரிந்து கொண்டே வாழ்கிறார்கள்.

நான் மட்டுமே குழம்பிக் கொண்டு  இருக்கிறேனோ?
எப்படி எல்லோரும் இவ்வளவு தெளிவாக
இருக்கிறார்கள்?
வாழ்வில் இது தான் வேண்டும் என்று
உரத்துடன் தானும் சென்று மற்றவர்களையும்
வழி நடத்துகிறார்கள்?

ஆற்றங்கரை, அரச மரம், அதனடியில் பிள்ளையார்
என்று சிலர் நிலைத்திருந்தால்
தாமிரபரணி அடித்துச் செல்லும் வெள்ளத்திலும்
இழுத்துச் செல்லப்படும் கட்டைகளும் பூக்களும்
பழங்களும் இலைகளும் உண்டு தானே.

அந்தக் கட்டைகள் கடல் புகுமுன் சில நேரம் கரையோரம்
காய்ந்து கிடைக்கலாம்.
என்றாவது ஒரு நாள் ஒரு பெரிய அலை அதை இழுத்துக் கொண்டு தான் போகப்
போகிறது.
இருக்கும் வரை மணத்துடன் இருக்கலாம்.

அக்டோபர் 31 1965 என்னை சாதாரண மகளிலிருந்து
உன்னத மனைவியாக மாற்ற சிங்கம் வந்தார்.
அன்று மாறிய என் வாழ்வு
56 வருடங்களாக அவர் பின்னே தொடர்கிறது.
8 வருடங்களுக்கு முன் அந்த சங்கிலி
விடுபட்டதோ என்று நினைத்தேன்.

இல்லை உன்னுடன் நான் எப்பொழுதும் உண்டு என்று பழைய பதிவுகளிலிருந்து
சிரிக்கிறார். நன்றி என் சிங்கமே.


Wednesday, October 27, 2021

அக்டோபர் 31 2008

கூகிளாரின் ஹேலோவீன்

கடையில் ஒரு தனித்தலை.
தீபாவளிக்குச் செய்த கோதுமை அல்வா. ஆயில்யனுக்குத் தனியே எடுத்து வச்சாச்சு.:)
செயிண்ட் லூயிஸ் ஆர்ச். ஆடுவது போலத் தோன்றியது.ஆடியதா இல்லை பிரமையா???
மிஸ்ஸீஸிப்பி நதியில் உலாப் போகக் காத்திருக்கும் ஓடங்கள்.
வீட்டு வாசலில் நிறம் மாறிய மரங்கள்.
பேரன் தயாரித்த ப்ராஜெக்ட். ஒரு புத்தகத்துக்கு விளம்பரம் எழுதினான். அதற்கான லே அவுட், மற்றும் அலங்காரங்கள்.
அவன் பெருமையில் நான் குளிர்காய்கிறேனோ!!!
Posted by Picasaசிங்கம் தயாரித்த ஆடும் குதிரை.
மீண்டும் பொட்டிகளைக் கட்டும் வேளை வந்தாகிவிட்டது. பத்து நாளில் அமீரகம் போய்ச் சேரணும்.
அலையும் காற்று. குளிரும்
ஆரம்பித்து விட்டது. காற்று சத்தம் இரவுத்தூக்கத்தைக் கெடுக்கிறது.
ஊருக்குப் போயேன் என்று சொல்கிறதோ:)
இன்று ஹாலோவீன் என்று சொல்லப்படும் கொண்டாட்டம். வீட்டுக்கு வீடு பேய்களின், கல்லறைகளின், வடிவங்கள். தொங்க விடப்பட்ட ஜாக் ஓ லாண்டர்ன். பரங்கிக்காயை அலங்கரித்து இந்த வீட்டு வாசலிலும் வைத்திருக்கிறது. நம்ம ஊர் பொங்கல் நாள் நினைவுக்கு வருகிறது.
இங்கே இந்தப் பழக்கம் வேண்டாத மூடநம்பிக்கைகளை விரட்டவும், அறுவடை முடிந்து வரும் போது நேடிவ் அமெரிக்கர்கள் வழிபறிகொள்ளை நடத்தாமல் இருக்க பந்தங்களைக் கொளுத்தி அவர்களை விரட்டியதாகவும் ஒரு கதை. ஊரைச் சுற்றி ஒரே கலகலப்பு.
ராஜகுமாரிகளும், க்ளியோபாட்ராக்களும், ஃப்ரான்கன்ஸ்டீன் களும், எலும்புக்கூடுகளும் வலம் வருகிறார்கள். நடு நடுவே சாத்தான்களும், டெவில்களும் உண்டு.
அம்மாக்களும் வேஷமிட்டு குழந்தைகளோடு வருவது புதிதாக இருக்கிறது. மணப்பெண் வேஷத்தில் ஒரு பெண்குழந்தை அதனுடைய அப்பாவோடு வந்தது. இந்திய அம்மாக்களுக்கும் குறைவில்லை. பாதுகாப்புக்காக என்று நினைக்கிறேன். அவர்களும் புதுமையாக வேடங்கள் தரித்து வந்தார்கள்:) இந்த வருடம் எப்போதுமில்லாமல் நல்ல வானிலை. அவ்வளவு குளிர் இல்லை. அதுவே இந்தக் குழந்தைகளுக்கு உற்சாகம். நாங்களும் பேரனுடைய பள்ளிக்கு அந்த ஊர்வலத்தைப் பார்க்க்ப் போயிருந்தோம். . நம்ம ஊர் நவராத்திரி சுண்டல், இங்க ட்ரிக் ஆர் ட்ரீட். ஸ்வீட்ஸ். கிட்டத்தட்ட ஐம்பது அறுபது குழந்தைகள் வந்து போயாச்சு. எல்லாவற்றுக்கும் கை நிறைய சாக்கலேட் கொடுத்தாகிவிட்டது. பக்கத்து வீட்டுக்கு மட்டும் ஒரு குழந்தையும் போக வில்லை. அங்கே ரெக்ஸ்(ஜெர்மன் ஷெப்பர்ட்) யாரையும் உள்ளே விடவில்லை. குரைத்து விரட்டி விட்டது. பாவம் பாட்டி. ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்துக் கொண்டிருந்தார். . போட்டோக்கள் அடுத்த பதிவில். தொடரும்:)

எழுத்தும் நாமும்.....





வல்லிசிம்ஹன்
 '' கண்ணிலே கண்டவற்றை
காதினால் கேட்டவற்றை
கற்பவர் கண்ணின் முன்னே
கொண்டு வந்து நிறுத்துகின்ற
கைதேர்ந்த எழுத்துச் சிற்பி.''
திரு தி.ஜானகிராமனுக்கு ஒரு பதிப்புரை.



ரங்க நதி ,
இந்திர சௌந்தரராஜனின் சற்றே பெரிய நாவலில்
என்னுரையாக அவர் சொல்வது.

;'' முன்னாள் ஆனந்த விகடன் ஆசிரியரும், எனது ஊனக் கண்களைத்
திறந்து விட்டவருமான திரு.பாலசுப்ரமணியம் எப்பொழுதும் ஒரு கருத்தைச் சொல்வார்.
எழுத்து என்பது நம்மை இழுத்துச் செல்ல வேண்டும். அதில் கருத்து இருந்தால் நாமும் அதனுடன் இழுத்துச் செல்லப்படுவோம். அதில்லாமல் இருந்தால்
நாம் எழுத்தை இழுக்கும்படி மாறி விடும்''.





இதைவிட எழுதாமல் இருப்பது மேல் என்றே
எனக்கும் தோன்றும். இது என் கருத்து. நான் இப்போது ஆரம்பித்திருக்கும் லிஸா மார்ட்டின்  கதை அப்படித்தான் என்னை 
இழுத்து செல்கிறது. இந்த வாரம் முடித்து விடலாம் 
என்று நினைக்கும் போதே 
சம்பவத்தை விளக்க வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. இது
யாரையும் திருப்திப் படுத்த செய்வது அல்ல. எனக்கே
இசைவாக இருந்தால் தான் அந்த எழுத்தைப் 
பதிய முடியும்.

அண்மையில் அறிய வந்தது  நான் மாற்றி இவர்கள் பெயர்களைச் சொன்னாலும்
லிஸா மார்ட்டின் என்ற பெயரில் நிஜமாகவே ஒருவர் இந்த மாகாணத்திலேயே இருக்கிறார்
என்று கூகிள் சொல்கிறது!!!! ஆச்சரியம் தான்:)))







Sunday, October 24, 2021

முன் கதை.லிஸா மார்ட்டின்.

வல்லிசிம்ஹன்

இதற்கு முன் படிக்காதவர்களுக்கு
லிஸா மார்ட்டின் கதையின் முன் சுருக்கம். 

ஒரே வருடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வளர்ந்து 
15 வயது முதல் காதலித்து

அதன் விளைவாக ஒரு குழந்தைக்கும் பெற்றோர் 
ஆனவர்கள்.
பிறந்த குழந்தைக்குத் தந்தையாக அறிமுகம்   ஆனது
க்ரிஸ்டோஃபர் எவரார்ட்.  
வடகரோலைனா ராலே பல்கலைக் கழகப் பேராசிரியர்.

மூன்று வயது முதல் மிச்சிகனில் வளரும் கேத்தி 
தந்தையை நோய்க்குப் பறி கொடுத்துத் தாயின் அரவணைப்பில் வளர்கிறாள்.

தாயின் வாழ்வில் திடீரென வந்து சேரும் மார்ட்டின் வில்லியம்ஸ்
அவளுக்கு முள்ளாகத் தெரிகிறான்.
தன் தாய்க்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு இன்னதென்று
தெரியாமல்  கொதித்துப் போகிறாள்.



தாத்தா ஹாரி ,பாட்டி லில்லி இருவரும் அவளுக்கு மிக ஆதரவு.
தாய் தன் தொழில் முறையில்,
துணிமணிகள் வாங்க பல நாடுகளுக்குப்
போய் வரும்போதெல்லாம் அவர்கள் கவனிப்பில் 
வளர்ந்தவளுக்கு, அதே போலக் கட்டுப்பாடான

நினைப்புகளே பழக்கம். தான் பெரிய செல்வந்தரின் சொத்துக்கு ஒரே'
வாரிசு என்ற அகந்தையையும் ,தாத்தா அவளுள்
விதைத்திருந்தார்.
இரண்டும் கெட்டான் வயதில், தாய் தனக்கு மட்டுமே
சொந்தம் என்ற உறுதியில், மார்ட்டின்
குறுக்கிடும்போது,
இனம் புரியாத வெறுப்பு அவளைத் திண்டாட வைக்கிறது.

தன்னுடைய ஆண் நண்பன் Nick என்ற நிக்கோலஸ் இடம்
நெருங்கி ஆறுதல் தேடுகிறது. 

லிஸா தன் தாய், தந்தை,மகள் இவர்களை எப்படி சமாளிக்கப்
போகிறாள் என்பதே இனி வரும் கதை.

Friday, October 22, 2021

வண்டலூர் மிருகப் பராமரிப்பு சாலை

வல்லிசிம்ஹன்


பணிபுரியும் தேவகி அம்மா.மிகப் பாந்தமாக எடுத்துச் சொல்கிறார்.

விவேகம் தெரிகிறது அவரது வார்த்தைகளில்.
கடவுள் அருளால் நலமாக இருக்க வேண்டும்.




Thursday, October 21, 2021

லிஸா மார்ட்டின் கதை.....5




வல்லிசிம்ஹன்

வீடு இருக்கும் அமைதியான சாலையில் தட் தட் என்று
கேட்கும்  வேக ஓசை, லிஸாவை  அதிர வைத்தது.
மிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளின் ஓசை அது.

Harley Davidson!!

அவள் வீட்டை நோக்கிதான் வருகிறது.
"என்ன நடக்கிறது. நான் டைம் மெஷினில் 

1977க்குப் போய் விட்டேனா..?"
வெகு நாட்களுக்குப் பிறகு உடலில் புது சிலிர்ப்பு
பரவுவதை உணர்ந்த லிஸா கலவரத்துடன் 
மகள் இருந்த அறைக் கதவை நோக்கினாள்.

'' மார்ட்டின் என்ன செய்கிறாய் நீ?"
என்ற முணுமுணுப்போடு வீட்டு முன்புற 
ஜன்னல் திரையை ஒதுக்கி வெளியே பார்த்தாள்.
அவனே தான்.

பதினெட்டு வருடங்களுக்கு முன் அவள்
இதயத்தைத் திணற வைத்த அதேபிம்பம் .
சற்றே
வயதான மார்ட்டின்!!

அதே கறுப்பு உடை, கைகளில் இரண்டு ஹெல்மெட்.
கண்ணை மறைத்த கறுப்புக் கண்ணாடி.

அதற்கு வெளியே தெரிந்த  செழுமையான சிவப்புமுகம்.

"ஏன்?  "
இதைக் கேட்கத்தான் அவன் வருகிறான்.
இந்தப் பத்து நாட்களில் அறிந்தோ அறியாமலோ அவள்
பார்வையில் அவன் பட்டுக் கொண்டே 
இருந்தான்.

இரண்டு நாட்கள் நியுயார்க் சென்று வந்தான்.
பெரிய மருந்துக் கடை நடத்துகிறானே.
அவன் சென்று  கவனிக்காமலயே     Pharmacy நடக்குமா?

கேத்தியின் பிறப்பிலிருந்து எல்லாவற்றையும் 
 
தான் ஏன் அவனிடம்  சொல்லாமல் இருந்தோம் 
எவரார்டைத் திருமணம் செய்யக் காரணம்.....இப்படி
எல்லா நடப்புகளைச் சொல்ல தன் வீடு ஏற்ற இடமாகத் தெரிய வில்லை
அவளுக்கு.

படபடக்கும் மனதை அடக்கியவாறு வாசல் கதவைத் திறந்து வெளியில் 
நிற்கும் தன் அருமை மார்ட்டினை கண்ணகலப்
பார்த்தாள்.

முதன்   முதலாக தன்னை வெளியே அழைத்துப் 
போக அவன் வந்ததும், அப்போது பெற்றோர் அவனை வரவேற்றதும்,
 ஜீன்ஸ் டி ஷர்ட் என்றில்லாமல்
ஃபார்மல் Gown அணிந்து இதே மோட்டார் சைக்கிளில்
கிளம்பிச் சென்றதும் 
அவள் நினைவில் அலையடிக்க,
அதன் பிரதி சிந்தனைகள் அவனிடமும் ஓடுவதை
உணர்ந்தாள்.

''உள்ளே வா மார்ட்டி' என்று அழைத்துச் சென்றாள்.
முதன் முறையாக அவள்( எவரார்ட்) வீட்டுக்குள்
வரும் உணர்வு அவனை அலைக் கழித்தது,.
கேத்தியைத் தேடியது  அவன் கண்கள்.


அவனை எச்சரிக்கையுடன் கண் காட்டிய லிஸா,
'படித்துக் கொண்டிருக்கிறாள்" என்று ஜாடையாகச் சொன்னாள்.

சிரிப்பு வந்தது மார்ட்டின் முகத்தில்.
''என் வீட்டு விருந்துக்கு உங்கள் இருவரையும்
அழைக்க வந்தேன்"  என்றான். 

எதையோ நினைத்துப் பயந்திருந்த லிஸா முகத்தில் கலவரம் குறைவதைப்

பார்த்தவனின் கண்களில் குறும்பு மின்னியது.
''நீ என்னவென்று நினைத்தாய்?"


கேத்தி






 ஹாலில் குரல்கள் கேட்டு வெளியே வந்த கேத்தி,
மார்ட்டின் நிற்பதைக் கண்டு தயங்கினாள்.

அவளை ஆதரவுடன் பார்த்தவன் Hi Cathy,
"I have come to invite you and your Mom for a house party"
என்றான்.
''எனக்கு  டெஸ்ட்ஸ் இருக்கு. வரமுடியாது.
ப்ளீஸ் மன்னியுங்கள்''என்று  அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

வாசலில் பூம் என்ற சத்தத்துடன் வண்டி வந்து நின்றது.
அதைத் தொடர்ந்து 
வாசல் கதவு திறக்க உரிமையுடன் நுழைந்தான்
ஒரு வசீகரமான இளைஞன்.

''கேத்தி. ரெடியா இருக்கியா. எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
வா' என்றான்.

கேத்தி முகத்தில் அத்தனை சந்தோஷத்தை மார்ட்டின் எதிர்பார்க்கவில்லை.

ஒரு துள்ளலுடன் உள்ளே சென்றவள் நிமிடத்தில்
புதிய உடையுடன் வெளியே வந்து ,
அவனுடன் கை கோர்த்துக் கொண்டு
"பை எவெரி ஒன்" என்றபடி வெளீயேறினாள்.

மார்ட்டின் முகத்தில் தெரிந்த திகைப்பைக்
கண்ட லிஸாவுக்கு சிரிப்பாக வந்தது.
"Wake up Martti. This is 1996"
என்றபடி அவனை உட்காரச் சொன்னாள்.


 தன் முன் கம்பீரமாக முறையாக உடை உடுத்திய
மிஸஸ் எவரார்டாக,,,,
Martin  

father Harry.
Lisa

ஒரு அம்மாவாக லிஸாவைப்
பார்க்கும் மார்ட்டின்
முதன் முறையாகப் பயந்தான்.

  "இது சுலபமாக நடக்கப் போவதில்லை ?
இல்லையா லிஸா?''
என்றான்.
  " எதைச் சொல்கிறாய்?"
நாம் மீண்டும் சந்திப்பது, பழைய வாழ்வைத் தொடர்வது."....
என்றவனை வேதனையுடன் பார்த்தாள்.
  "நாம்  அப்போதிருந்தவர்கள் இல்லையே மார்ட்டி!!
உருவத்தில் மட்டும் இல்லை.. அனுபவங்களிலும் மாறி இருக்கிறோம்:("

அவள் எதை சொல்கிறாள் என்பது புரிய,"ஒ! என் விவாகரத்துகளைச் 
சொல்கிறாயா ? " என்றவனின் முகம் மேலும் சிவந்தது.

"என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?. நீ இருக்கும் இடம் தெரியவில்லை!
பிறகு
கணவனுடன் சந்தோஷமாக இருக்கிறாய் என்று என்
பெற்றோர்கள் வழியாகத் தெரிய வந்தது. நான் மட்டும் அங்கேயே
நிலைத்து விடமுடியுமா?"
என்று சினத்துடன் கேட்பவனைப் பார்த்து லிஸாவின்
கண்கள் நிறைந்தன....
''மார்ட்டி!!  நாம் ஏற்கனவே வருடங்களை இழந்துவிட்டோம்.
இனி நமக்குள் விவாதம் வேண்டாம். இப்போது என் தந்தை
வரும் நேரம். நான் உனக்குத் தொலைபேசுகிறேன்."
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார்
லிஸாவின் தந்தை ஹாரி என்ற ஹாரிங்க்டன்.
 ........... 

சட்டென்று எழுந்து நின்றான் மார்ட்டின். பழைய நினைவுகள்
அலைமோத முகத்தில் உணர்ச்சி காட்டாமல்
 வலது கையை நீட்டியபடி  'ஹலோ ஹாரி "
என்றான். 'வில்லியம்ஸ்!'
என்று ஒருதலை அசைப்போடு மகளைப் 
பார்த்தார்.
கண்ணில் கேள்விக்குறி.
''வாசலில் மோட்டார் பைக்கைப் பார்த்து எனக்கு சந்தேகமாக
இருந்தது வந்தேன்"

 என்றார்,.
  ''சந்தேகம் என்ன அப்பா. மார்ட்டின் என் தோழன் தானே?''
கோபத்தில் சிவந்த முகத்தைத் தந்தையை நோக்கித் திருப்பினாள்.



 தொடரும்.










Monday, October 18, 2021

1960 .....70 கதாநாயகர்களும் அவர்கள் பாடல்களும்






வல்லிசிம்ஹன்


 வானொலியோடு இணைந்திருந்த காலங்கள் அவை.
பள்ளிக் கூடப் பாடங்கள் முடித்த கையோடோ,
அதற்கு முன்போ  ரேடியோ சிலோன்  ஆன் செய்துவிட்டுத்தான் மாலை 
டிஃபன் உள்ளே  போகும்.
தமிழ்ப்பாடல்கள் முடிந்ததும் 
AAY BOVAN  என்று தொடங்கும் சிங்களப்
பாடல்கள் ஒலிபரப்பு..

நடுவில் சென்னை பி  ஸ்டேஷனின் ஆங்கிலப்
பாப்புலர்  பாடல்கள், 
பிறகு மதிய வேளையில் இந்திப் பாடல்கள். சனி ஞாயிறுகளில்.



சென்னைக்கு வந்த போது வாழ்க்கையில்


இந்திப் பாடல்கள் அதிகம் இடம் பிடித்தன.
விவித் பாரதியின் தயவால் ,அந்த நாளைய 
முகேஷ், ரஃபி, கிஷோர் ,லதா எல்லோரும் வான் வழி இதயத்தை 
அடைந்தார்கள்.

ஸ்டார் அண்ட் ஸ்டைல், ஃபில்ம்ஃபேர் அட்டைப்
படத்தில்  ஷம்மி,ஷஷி கபூர், ராஜ் கபூர்,மனோஜ் குமார்
அவர்களோடு இணைந்து செல்லும் சாதனா, ஆஷா பரேக்,
இன்னும் லக்ஸ் விளம்பர மாடல்களின் 
பாடல்கள் நிஜம் என்று நம்பித் திரிந்த காலம்:)
ஆனால் பாடல்கள் மறக்க முடியாதவை.
அவற்றில் சில இங்கே.






சில பாடல்கள் எத்தனை முயன்றாலும்
சிக்கவில்லை.
யூடியூபில் பார்க்க முடியும். நன்றி.








Saturday, October 16, 2021

லிஸா மார்ட்டின் கதை 4

வல்லிசிம்ஹன்,

1978 

 ஒரு மறக்க முடியாத வருடம் ஆனது லிஸாவுக்கு. 

இனிதாகக் கழிந்த கோடை விடுமுறை 
இறுதியில் அவள் திடீரென உணர்ந்தது 

தான் தாயாகப் போவதை. :(

எப்படி மார்ட்டினிடம் சொல்வது. 
கல்லூரியில் சேர்க்கத் தயாராகிக் 
கொண்டிருக்கும் பெற்றோரிடம் எப்படி விவரிப்பது.....

அளவில்லாத கலவரத்துக்கு உள்ளானவள்
மார்ட்டின் வீட்டை அடைந்த போது 
அவன்  தன் தாயுடன்  "ஆன் ஆர்பருக்கு"ப் போயிருந்ததாகத் தெரிந்தது.
இரண்டு மூன்று நாட்களாக அவனைக்
காணாமல் தவித்துப் போனாள்.

ஆன் ஆர்பர் ஆஸ்பத்திரியில் மார்ட்டினின் 
அன்னைக்கு  மருத்துவ ஆலோசனை
கேட்கத் தான் போயிருக்கிறான்.

ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த மார்ட்டினின் தந்தை  Andrew 


லிஸாவின் கலக்கத்தை உணரவில்லை.

வீட்டிற்குத் திரும்பிய லிஸாவை,அவள் அம்மா
கேள்விக் குறியுடன் பார்த்த போது,
தன் நிலையைச் சொல்ல வேண்டிய கட்டாயம்
வருகிறது. தாய் அதைத் தந்தையுடன் 
பகிர்ந்து கொள்ள,
அவருக்கு முதலில் வந்தது அடக்க முடியாத
சினம். 
கைத்துப்பாக்கியுடன் சென்று அவர்கள் அனைவரையும்
அழிக்கும் அளவுக்குக் கோபம் கொண்ட 
அவரை சாந்தப்படுத்துவது லிஸாவின் அம்மாதான்.

அவளது சிந்தனைப்படி இரண்டு திட்டம் தான் இருந்தது.
''ஒன்று கருவை அழிப்பது.
முடியாத பட்சத்தில் லிஸா பெற்ற குழந்தையை
சுவீகாரம் கொடுப்பது.
லிஸாவுக்கு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்து மணமுடிப்பது''

லிஸாவுக்கு வட கரோலினா மானிலத்தில் 
ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார வகுப்பில் இடம் கிடைத்திருந்தது.

தந்தை தாயின் விருப்பத்துக்குக் கட்டுப் படுவது ஒன்றே 
அவளால் முடிந்தது. 17 வயதில் அவள் செய்ய முடிந்தது அதுதான்.

தன் வைத்தியசாலையைத் தற்காலிகமாக மூடிவிட்டு
குடும்பத்துடன் வட கரோலினாவின் ராலி பல்கலைக் கழக
வளாகத்துக்குக் குடி பெயர்ந்தார்.
North Carolina Raleigh   college.

லிஸாவும் பெற்றொரும் வடகரோலைனாவுக்குக் கிளம்பிச்
 சென்ற இரு நாட்களில் 
மார்ட்டின் தன் தாயுடன் அவள் நோய் பற்றிய கவலையுடன்
வந்தான். அடுத்த வீட்டுக் கதவு பூட்டி இருப்பது அவனை மேலும்

கவலை கொள்ள வைத்தாலும் தந்தையுடன் தாயின் 
உடல் நலத்தை மீட்பதில் கவனம் செலுத்தினான்.

பெயர் சொல்லாத நோய் குடும்பத்தை சீரழிக்க
அவனது கல்லூரிப்படிப்பு தாமதமாக ஆரம்பித்தது.
லிஸா குடும்பம் எங்கு சென்றார்கள், என்ன காரணம்
ஒன்றுமே அவனுக்குப் புரிபடவில்லை.தன் வீட்டு மாடி அறையிலிருந்து 
லிஸாவின் வீட்டு மாடி ஜன்னலைப்
பார்த்தவாறே படிப்பது  தான் அவனால் முடிந்தது.
என்றாவது வருவாள்.தன் வாழ்வு மீண்டும் வளம் பெறும்
என்று நினைத்தவனுக்கு மூன்று வருட காத்திருப்பு

சலிக்கவில்லை. மருந்துத் துறையில் ஆராய்ச்சி செய்ய நியூயார்க்
பலகலைக் கழகம் அவனுக்கு அனுமதி அளித்த
மாதம் லிஸாவும் பெற்றோர்களும்
லிஸாவின் குழந்தை,கணவனுடன் வந்தார்கள்.
இருவீட்டுக்கும் நடுவில் இருந்த வேலி அடைக்கப்
பட்டது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முன்னை விட அழகான லிஸா, குட்டி தேவதை
போல ஒரு குழந்தை, உயரமும் கம்பீரமுமாக
கணவன் எவரார்ட்,ஹார்வர்டில் படித்தவன்,
பெரிய ஆயத்த உடை கடைகளின் 
உரிமையாளர் 32 வயதான ஆண்மகனாக
அடுத்த வீட்டில் வந்ததும் மார்ட்டினின்
உலகம்  ,கற்பனை,ஆசை எல்லாம் உடைந்தது.
தன்னிடம் ஒரு கடிதம் கூட எழுத முடியாத
லிஸாவைக் காணக்கூட அவனுக்கு முடியவில்லை.


அவனுடைய பெற்றோருக்கு அவன் வருத்தம் புரிய
அவனை நியூயார்க்குக்கு அனுப்பி வைத்தார்கள்.
22 வயதில் நியூயார்க்குக்குக் கிளம்பியவன்

ஊர்ப்பக்கமே திரும்பவில்லை.பெற்றோரைத் தான் இருக்கும் 
பல்கலைக்கழகத்துக்கு  வரவழைத்துக் கொண்டான்.

மனம் போன போக்கில் சென்றவனுக்குப்
பெண்களிடம் மதிப்பும் இல்லை.
அவனைக் காதலித்த பல் பெண்களில்
இருவரைத் திருமணம் செய்து
அவர்களிடம் லிஸாவைத் தேடித் தோற்று
நிறைய ஜீவனாம்சம்  கொடுத்து விலகிக் கொண்டான்.


அவர்களிடம் ஈடுபாடு இல்லாமல் நடத்தின வாழ்க்கையின் 
பலனாக ஒரு குழந்தை கூட இல்லை.
தன்னைப் பார்த்து தனக்கே பிடிக்காமல் இருந்த
போது மேலும்  13  வருடங்கள் சென்றிருந்தன.

தந்தையின் உடல் நிலை அவனை டெட்ராய்ட்டுக்கு
வரவழைத்தது..............................தொடரும்.




விவசாயி அனுசூயா.......Dinamalar











 
 
 







தினமலரில் படித்த பிடித்த செய்தி.



மலைப்பகுதியாக இருந்தாலும் ஒரே பயிர் சாகுபடி செய்யாமல் பட்டர்பீன்ஸ், கொடி அவரை, சவ்சவ் என சுழற்சி முறையில் மாற்றி மாற்றி பயிர் சாகுபடி செய்கிறோம் என்கிறார் மதுரை தென்மலை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி அனுசுயா.

பந்தல் காய்கறிகள் குறித்து அவர் கூறியது: பட்டர்பீன்ஸ் 90 நாள் பயிர், கொடி அவரை, சவ்சவ் நான்காம் மாதத்திலிருந்து ஓராண்டு வரை பலன் தரும். ஒரு ஏக்கரை இரு பகுதியாக பிரித்து பட்டர்பீன்ஸ் சாகுபடி செய்துள்ளோம். பந்தல் ஒருமுறை முதலீடு செய்வது தான்.

கொடைக்கானல் மார்க்கெட்டிலிருந்து ஒன்றரை கிலோ ரூ.1500க்கு பீன்ஸ் விதைகள் வாங்குகிறோம். விதைப்பதற்கு முன்பாக மண்ணை கொத்தி கிளறி தண்ணீர் ஊற்றுவோம். மறுநாள் சிறு சிறு சதுரமாக வெட்டி அதில் பீன்ஸ் விதையை ஊன்றுவோம். 4வது நாள் தண்ணீர் விட்டால் 8 ம் நாள் முளைவிடும். நான்கு இலை பயிராக வந்தவுடன் களை எடுத்துவிட்டு யூரியா துாவி தண்ணீர் விடுவோம்.

15வது நாள் கொடி படர ஆரம்பிக்கும். துாரில் உள்ள இரண்டு இலையில் நுாலை கட்டி பந்தலில் சேர்த்து கட்டி விடுவோம். 30ம் நாளில் பிஞ்சுவிடும். 60 ம் நாளில் காய் காய்க்க ஆரம்பிக்கும். 60 - 90 வரை நாள் வரை அறுவடை செய்யலாம். தினமும் 150 கிலோ வரை கிடைக்கும். 10 கிலோ ரூ.1000க்கு விற்போம்.

90 நாளில் கொடி காய்ந்து விடும். அதை வேருடன் பிடுங்கி விட்டு ஒரு பகுதியில் சவ்சவ், ஒரு பகுதியில் அவரை சாகுபடி செய்வோம். சவ்சவ் 3ம் மாதத்தில் பந்தலில் படர்ந்து விடும். 4வது மாதம் ஓராண்டு வரை காய்க்கும். ஏக்கருக்கு குறைந்தது 3 டன் காய்கள் கிடைக்கும். மழை பெய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

அவரையும் விதை போட்ட 8 ம் நாள் முளைவிடும். 4வது மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு தினமும் 2 மூடை காய் கிடைக்கும். விலையைப் பொறுத்து ரூ.30 - 40 வரை கிலோவுக்கு கிடைக்கும்.

பந்தல் காய்கறியில் களை எடுப்பது மிகப்பெரிய கலை. பழுத்த இலைகளை அகற்றி கொண்டே இருக்க வேண்டும். சிறுமலை காய்கறி உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் நாங்கள் உறுப்பினர்களாக உள்ளோம்.அங்குள்ள பிக்கப் வேன் மூலம் காய்கறிகளை எடுத்துச் சென்று திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் விற்கிறோம். சில நேரங்களில் சவ்சவ் காய்க்கு விலை கிடைக்காமல் போகும். மற்ற நேரங்களில் பழுதில்லாமல் ஓரளவு லாபம் கிடைக்கிறது என்றார்.
- எம்.எம். ஜெயலெட்சுமி

Friday, October 15, 2021

துர்க்கா அன்னை.



காமதேனுவின் மகள் பட்டியால் பால் சொரிந்து வழிபடப்பட்டவர்.
அடுத்தது நம் தாயார் ஞானாம்பிகா.
இந்தப் பட்டீஸ்வரம் தான் பழையாறையாம்.
அர்ச்சகர் இந்தவரலாறுகளைச் சொன்னதும்   பொன்னியின்  செல்வன் பக்கங்களுக் குப் போன உணர்வு ஏற்பட்டது. சோழ மன்னர்கள் வழிபட்ட, தலைநகரமாக  இருந்த இடம்.

திருஞானசம்பந்தர்   வழிபட வருவதை அறிந்த இறைவனும் இறைவியும் வெய்யில் தெரியாமல் இருக்க அவருக்கு நிழலாக முத்துப் பந்தல் இட்ட இடம்.

சோழர்கள் போருக்குப் புறப்படுவதற்குன் வழிபட்ட ஸ்ரீதுர்காம்மா.
பட்டி விக்ரமாதித்யன் வந்து வழிபட்ட இடம்.
1600 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என்று விளக்கினார் குருக்கள்.

எனக்கு இந்த உலகில் ,இப்போதைய நேரத்தில் இருக்கும் எண்ணமே இல்லை. காலத்தத் தாண்டி வேறு எங்கே யோ இருக்கும் உணர்வுதான் மிஞ்சியது.

. அற்புதமான சூழல்.
எத்தனை சித்திரங்கள். எத்தனை சிற்பங்கள். பார்க்கத்தான் நேரம்  இல்லை. முடிந்தவரை நினைவுகளைத் தேக்கிக் கொண்டேன்.

அனைவரும் சென்று தரிசிக்க, உணர வேண்டிய தலம்.
இந்தப் புண்ணிய தரிசன த்துக்கு வழி வகுத்த இறைவனுக்கு நன்றி.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
at July 30, 2012 12 comments:   



ஸ்ரீபட்டீஸ்வரம் துர்க்கையம்மா
காலையில் எழுந்து அளவான   உணவை உள்ளே இறக்கிவிட்டு
உப்பிலி அப்பன் கோவிலை நோக்கிப் புறப்பட்டோம். எப்பொழுதும் திகட்டாத தரிசனம்.

தள்ளல் இடித்தல் இல்லை.
நிம்மதியாகப் பிரார்த்தனை செலுத்திவிட்டு  வெளியே வந்தால் ஆடியபடியே கஜராஜன் காட்சி அளிக்கிறார்.
அவருக்கு வேண்டும் அளவு சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் காசு கொடுத்தால் தான் தலையில் கைவைக்கிறார்!!எஜமான விசுவாசம் அப்படி.:)
ஆவர் ஆட்டத்தை ரசித்துவிட்டு மீண்டும் தங்கும் விடுதியை அடைந்து மதிய உணவை முடித்துக் கொண்டு 
பட்டீஸ்வரம் நோக்கிப் பயணம்.
இந்த அம்மாவைத் தேடி அலைந்த நாட்கள் முடிவுக்கு வந்தன.

பத்துவருடங்களுக்கு முன்னால்
காதிக்ராஃப்ட்  கடையில்   கண் முன் நின்றாள்.
கேட்டால் பட்டீஸ்வரம் அம்மா என்றார்கள். 
அழகி. சாந்தவதி..கம்பீரமானவள். எட்டுகைகள். அத்தனையிலும் ஆயுதங்கள். விஷ்ணுவின் சக்கிராயுதத்தையும் வைத்திருந்தாள்.

எல்லாவற்றிற்கு மேல் முகம் நிறைய முறுவல்.
இவளுக்கு எதற்கு ஆயுதம்.?
பார்த்தாலே பகைவர்கள் கால்களில் விழுந்துவிட மாட்டார்களா   தாயே!
உன்னைக் கண்டேன்.என்று மனம் நிறைய அவளைச் சேவித்துத் திரும்பினோம்.


2002 Golu.

கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்கை அம்மன் கோவிலின் சிறப்பு #Amman #Valipadu

எலியும் மின்சாரமும்.:)))))


வல்லிசிம்ஹன்






Monday, September 17, 2007
#இது மீள் பதிவு. ஸ்ரீராம் பார்வைக்கு:)
+++++++++++++++++++++++++++++++++++++

குட்டிப் பூனை, பெரிய எலி

 எங்க வீட்டில எலியார் மழை நாள் ஒன்றில் குடி வந்து இருக்கிறார்.
இது ஒரு மே மாத அக்னி நட்சத்திர மழைக்காலம் வருமே(?:))அப்போது...தான் இவர் உள்ள வந்து இருக்கிறார்.









அவர் வந்தது தெரிந்து அதுவரை வெளியில் மிடுக்கு நடைபோட்ட பூனையார்,



இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார்.மேலே .இருக்கிற படப்பூனை மாதிரி இல்லை. இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.


சரியான சம்பல் பூனை கூட:))



 வெளியூர் சென்று
வந்தது முதல் ஒவ்வொரு மின் சாதனத்தையும்
சரி செய்துவிட்டுத் தான் இயக்க வேண்டி இருக்கிறது.





எனக்கும் மின்சாரத்துக்கும் அத்தனை ஒத்துப் போகாது.

எல்லா வசதிகளும் கொடுக்கும் பஜாஜ்,விஜய்,இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்


ஆதிகாலத்திலிருந்தே வருவது வழக்கம்.அதைப்


பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:)) தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்.:))))



மேலே மொட்டை மாடியில் தேங்கின தண்ணீர் கசிந்து
கீழே உள்ள சாப்பாட்டு அறை விளக்கைச் சுற்றிச் சொட்ட ஆரம்பித்தது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இவ்வளவு

மோசமாக வீட்டை வைத்து இருக்கிறீர்களா என்று கேட்காதீர்கள் .:(


அது அப்படித்தான்.
இப்போ பூனை எலி சமாச்சாரத்துக்கு வரலாம்.
நாங்க வந்து இறங்கி அடுத்த நாள் மழை வந்தது.
நம்ம வனாந்திரம் போயி வருஷக்கணக்கு ஆச்சா.??
அதில வீட்டு விஷயங்கள் மறந்து போச்சு.

அதிலையும்இந்த மழை சுகமான மழை.சத்தமில்லாத அழகான மழை... அதனால் ரசிப்பதில் இருந்து விட்டேன்.

திடீரென்று பூனை சீறும் சத்தம், எலி சார் தாவி சாப்பாட்டு மேஜை மேல
இருந்த
அப்பள டப்பா உருண்டூ கீழே விழுந்து கடகட..

சாம்பனும் செல்லியும்(பூனை, எலி... பேரு) சண்டையில் சுற்றி வர,(அந்தத் தண்ணீரசொட்டி இருந்த இடத்தை மட்டும் விட்டு


விட்டார்கள்.)


இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில் கிறீச்னு சத்தம் போட்டு ஓடீ விட்டான்.


என்னடா இது திகில் சண்டையா இருக்கேனு, விளக்கை அணைக்க வந்த போது
 ஸ்விட்ச் போர்ட் கர்ர் என்று கர்ணகடூரமாக கத்தியது.


ஆளைவிடு!! இது ஏதோ மின் இணைப்பு வேலை. தப்பு கனெக்ஷன், ஷார்ட் சர்க்யூட் எல்லாம் புரிந்து,

வெளியில் ,மழையில் வழுக்காமல், போயி மெயின் போர்ட் (தடித்த) 
ஸ்விட்சை அணைத்தோம்.


பிறகு எப்போதும் செய்வது போல குழல்விளக்கைக் கழட்டி வைத்துவிட்டு,
ட்ரிப் ஸ்விட்ச் ஆன் செய்து,

எலெக்டீஷியனைக் கூப்பிட்டு சரி செய்தாச்சு.

அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்ப்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது மாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:)))

Thursday, October 14, 2021

துர்காஷ்டமி,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்


வல்லிசிம்ஹன்

👨‍👧‍👧👨‍👧‍👧









பட்டீஸ்வரம் துர்கா  அம்மா.


அன்னை துர்க்கா தேவி என் வாழ்வில் 
வந்து அமர்ந்தது ஒரு நவராத்திரி போதுதான். 


காதி க்ராமாத்யோக் பவன் கொலு காட்சிகள் அப்போது 
மிகப் பிரசித்தம். 2005 இல் அங்கு பொம்மைகள் வாங்கச் சென்றபோது 
இரண்டரை அடி  அழகுப் பாவையாக ஒரு வடிவம். தங்கத்தில் 

வண்ணம் பூசி எட்டு கரங்களுடன் காட்சி அளித்தாள்.

உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் 
என்ற பரபரப்புத் தோன்றி விட்டது.

அங்கு இருந்த விற்பனைப் பெண்ணிடம் ,இது எந்த
தேவி என்று கேட்டதும் 'பட்டீஸ்வரம் துர்க்கை. விஷ்ணு
துர்க்கை என்று பளிச்சென்று சொன்னாள்.
விலை அதிகம் இல்லை.

அப்படியே காகிதங்களில் பொதிந்து கொடுத்தார்கள்.
ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது
வீடே கலகலத்து ஆனந்தத்தில் மூழ்கியது 
போலத் தோன்றியது.இரண்டு வருடங்கள் 

பத்திரமாகப் பார்த்துக் கொண்டேன்.  இரண்டாவது 
பேரன் பிறக்கப் போகும் போது 
அந்தத்  தாயை பூஜை அறையில் வைத்து விட்டு
வந்ததுதான் சரியாகவில்லை.
பேப்பர் மாஷ் இல் செய்யப் பட்ட பொம்மை,
அந்த அறை சீலிங் கசிந்து 
அம்பாள் மேலே விழுந்திருந்தது.
அதற்குப் பிறகு  பட்டீஸ்வரம் போய் 
இன்னோரு துர்க்கா அம்மா வாங்கியாச்சு. இதோ கொலுவில் இருக்கிறாள்.
அவள் மனது வைத்தால்
எங்கும் வந்து நம்மைக் காப்பாள்.
அனைவரும் நல் நவராத்திரி கொண்டாடி மகிழ்வுடன் இருக்க வேண்டும்.


Wednesday, October 13, 2021

தடாகமடி....தாமரைஅல்லி, ஆம்பல்...











வல்லிசிம்ஹன்
நவராத்திரிக்கு நம்மால் தான் பாட முடியவில்லை.
கேட்ட நல்ல பாடல்களைப் பதியலாம் என்று 
இந்தப் பாடல்களையும்

மலர்களையும் பதிவு செய்தேன்.

Tuesday, October 12, 2021

லிஸா மார்ட்டின் கதை 3

வல்லிசிம்ஹன்,

   தானும் லிஸாவும் சேர்ந்து இசைத் தட்டுகளை ரசித்த காலங்கள்
நினைவில் வர  வைத்த பாடல் கார் ரேடியோவில் ஒலித்தபடி ஏரிக்கரையோரம்

மார்ட்டின் வண்டியை விரட்டினான். 
மனம் முழுவதும் நிறைய நினைவுகள் விரட்ட,
மனதில் நின்ற ஒரே வார்த்தை"  ஏன்?"






Yesterday once more.
எங்கே தவறு  நிகழ்ந்தது? ஏன் எனக்குத் தெரிவிக்கப் 
படவில்லை. யார் இதற்குக் காரணம்.

வண்டியைத் திருப்பி லிஸாவை நேருக்கு நேர் சென்று 
அவளைக் கேள்விகளால் உலுக்கி எடுத்துப்
பதிலை வாங்க வேண்டும் என்ற வேகம்
அவனுள் எழுந்தது.


எங்கள் இளமைக் காலத்தை அழித்தது யார். 
இப்போது என்னை விரோதி போலப் 
பார்க்கும் இந்தப் பெண்குழந்தைக்கு எப்படி என் சாயல் வந்தது.
லிஸா எப்படி அந்த    எவெரார்ட் ஐத்    திருமணம்
செய்தாள்? 

லிஸாவின் கணவனை நினைத்த போதே 
மார்ட்டினுக்குக் கசந்தது.

அவன் ஐந்து வருடத் திருமண வாழ்வில் மறைந்தது
இவனுக்கு இன்னும் கோபம் வந்தது!!

இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பின்னால் யார்?
மனதில் லிஸாவின் தந்தை உருவம் தான் தோன்றியது.


அப்போது நடந்த நிகழ்வுகள்,  பள்ளி இறுதி நாட்களில்
உறுதிப்பட்ட தங்கள் காதல்,

உள்ளங்கள் சேர்ந்ததால் உணர்வுகளும் கூடிய மாலை 
நேரங்களில் ஏரிக்கரையின் காற்று துணைவர 
தங்களின் எதிர்கால வீடு, குழந்தைகள் 
என்று திட்டம் போட்ட  காலம்.
அந்தக் கோடையின் முடிவில் லிஸாவின் குடும்பம்
காணாமல் போனது.  தான் எங்கு தேட வேண்டும் என்ற
ஒரு திட்டம் இல்லாமல் 
நாட்டின் ஒரு கோடிக்கும் மறு கோடிக்கும் அலைந்தது
என்று எல்லாவற்றையும் நினைக்கக் கண்கள் 
கலங்கின.

அவன் வீட்டுக்குள் திரும்பின வேளை மழை பெய்ய ஆரம்பித்தது.

அதுவரை காத்திருந்த வீட்டின் ஹௌஸ்கீப்பர்,
சமைத்து வைத்திருந்த பண்டங்களை
சாப்பிடும் மேஜை மேல் வைத்து விட்டு
விடை பெற்றாள்.

கையில் பானம் ஒன்றை ஏந்தியபடி பெரிய பெரிய  ஜன்னல் வழியே தெரிந்த 
ஏரியின் தண்ணீரை வெறித்தான்.
'Yesterday once more"  என்று முணுமுணுத்தபடி
அடுத்து வரும் நாட்களுக்கான  திட்டத்தை யோசிக்கும் போதே
தெளிவு வந்தது. என் லிஸாவையும் என் மகளையும் 
இந்தத் தடவை விட மாட்டேன்.

சமூகத்துக்குப் பயந்து ஓட மாட்டேன்.
எந்த ஏரி எங்களை இணைத்ததோ
அங்கேயே எங்கள் திருமணமும் நடக்கும் என்று
தீர்மானித்ததும் மனம் நிம்மதி பெற ,
சாப்பிட்டு விட்டு லிஸாவின் தொலைபேசி எண்ணைச் சுழற்றினான்.

தான் பெற்ற மகளின் சம்மதத்தைப் பெறுவது
ஒரு சவால் என்பதை அந்தத் தந்தையான காதலன்
உணர்ந்திருக்கவில்லை...............................தொடரும்.

Sunday, October 10, 2021

லிஸா ..மார்ட்டின் கதை. 2



வல்லிசிம்ஹன்

தந்தையின் மறைவுக்கு வந்திருந்த லிசாவையும்
அவள் மகளையும் பார்த்த மார்ட்டினுக்கு 
அதிர்ச்சியாகிறது.

அந்தப் பதினெட்டு   வயது பெண்ணின் தலை முடி,
கண்கள் எல்லாமே அவனுடைய தாயின் சாயலைக் கொண்டிருந்தன.

அலட்சியமாக வாயில் சூயிங்கம் மென்றபடி
நின்ற  அந்தப் பெண் Cathy alias Katherine
 வரவேண்டுமே என்ற அசுவாரஸ்யத்தோடு  ம், கோபத்துடனும் நின்ற அந்தப் பெண்ணின்

உயரம்,நிற்கும்  தோரணை எல்லாம் தன்னை
ஒத்திருப்பதைக் கண்டு அவன் மனம் 
பறந்தது.
'என்ன அதிசயம்' என்ன அதிசயம்' என்று 
அலட்டியது அவன் மனம்.  லிஸாவின் கண்களைப்
பார்த்தவன் , நொந்து ,வேதனைகளைக் கடந்து
வந்த கடந்த காலத்தை ஒரு நொடியில் அறிந்தான்.

மிகக் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டவன்
அவர்கள் வெளியில் வரும்போது
தாங்க் யூ என்று சொன்ன வார்த்தை
லிஸா காதில் விழ, ''மீண்டும் சந்திக்கலாம்''
என்று சொன்னபடி தன் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

தன்னிடம் இத்தனை நாட்களாகத் தங்கியிருந்த
பாரம் சட்டென்று இறங்கியது போல உணர்ந்தாள் லிஸா.

அருகில் வந்தமர்ந்த கேதரின், "முகம் எல்லாம் சிவந்திருக்கிறதே
மாம்? உன்னுடைய பழைய நண்பரா அவர்?"
என்று கேட்டதும், சட்டென்று தன் நிலைக்கு வந்த
லிஸா, ''நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள்.
இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார்"
என்று சுருக்கமாகச் சொல்லி வண்டியைத் திருப்பினாள்.

அந்த வயதுக்கே உய்ய குறுகுறுப்புடன் அம்மாவைப்
பார்த்த கேட்டி, என்னுடைய அப்பாவை  இவருக்குத் தெரியுமா?
என்று கேட்டதும், இல்லை என்று மட்டும் தலை அசைத்து,
'' உன் நண்பர் யாரையாவது சந்திக்க வேண்டுமா?
நான் கொண்டு போய் விடுகிறேன். எனக்கு  கடையில் 
பழைய ஸ்டாக் எல்லாம் கணக்கெடுக்க வேண்டும்"
என்றாள்.

எனக்கு எங்கேயும் போக வேண்டாம் .
உன்னுடன் வருகிறேன்" என்று சொன்ன மகளின் குரலில்
ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் லிஸா.

Martins  villa by Lakeside.
பெருமூச்சு விட்டபடி மகளை நோக்கி ,
உனக்கு என்ன சங்கடம் இப்போது?

அம்மாவுக்கு சினேகிதர்கள் இருக்கக் கூடாதா?''

இத்தனை நாட்கள் உனக்குத் தோழிகள் 
மட்டும் தானே தெரியும்.. இவர் திடீரென்று 
வந்திருக்கிறாரே என்று கேட்டேன்!!
'Aren't you too old to have boy friend?"

மிகவும் சிரமத்தோடு பொங்கி வந்த சினத்தை 
அடக்கிக் கொண்டாள் லிஸா.
   ''அவர் என் ஆப்த நண்பர்.    பாய் ஃப்ரண்ட் 
என்றெல்லாம் சொல்ல அவசியம் இல்லை. 
நீ உன் எல்லை தாண்டி என்னைக் கேள்வி கேட்கிறாய்"
என்றபடி

சட்டென்று காரை வளைத்துத் தன் பொடீக் முன் நிறுத்தினாள்.

'' லிஸன் கேத்தி,
உனக்கு இப்போ என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. என்னோடு 
நேராகப் பேசலாம்"

என்ற அம்மாவைப் பார்த்தவள் நிதானமாக
'' நீ பல தோழிகள் அவர்களின் கணவர்கள்
எல்லாருக்கும் விருந்து கொடுப்பதைப்
பார்த்திருக்கிறேன். இவர் வித்தியாசமாகத் தெரிகிறார்.
நீயும் அவரும் பேசக்கூட இல்லை.
இருந்தாலும்  எனக்கு சந்தேகமாக இருந்தது"
என்ற மகளின் தீர்க்கமான பார்வையை

சந்தித்த லிஸா, ''எனக்குக் களைப்பாக இருக்கிறது.
உன் ஆராய்ச்சியை இன்னோரு நாளைக்குத் 
தள்ளிப்போடு. உள்ளே வந்து புது உடைகளை
வகைப் படுத்த எனக்கு உதவி செய் "
என்றபடி  இறங்கினாள்.

இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் நிஜம்.இடம் உண்மை. பெயர்கள்,
உரையாடல்கள் கற்பனை. .......................................... மீண்டும் பார்க்கலாம்.





Saturday, October 09, 2021

காலம் செய்யும் மாயம்


வல்லிசிம்ஹன் நேற்று  வந்த வானவில். 

வெளியே சென்றபோது நடுவழியில் 
கருமேகங்கள் இடி மின்னலுடன் பாதையில் 
இறங்கின.
இதை எதிர்பார்க்காத மகள் 
'அம்மா, உன்னை வீட்டில விட்டு விடட்டுமா?' என்று கேட்டாள்.

வீட்டுக்குச் சென்றால் அவள் வேலை தடைபடும். நான் மௌனமாக
மறுத்து விட்டேன்.


அந்த சத்தத்தில் உடல் நடுக்க முன் சீட்டில் ஒடுங்கிக் 
கொண்டேன்.
மனதில் சாயி சரணம் சொல்ல ஆரம்பிததேன். கண்கள் 
காது மூடியபடி 
ஒரு கிழவி வருவதை எதிர் வண்டிக்காரர்கள்

ஒரு பார்வையோடு ஒதுக்கி விட்டார்கள்:)
10 நிமிட ஆரவாரத்துக்குப் பிறகு 
வீடு வந்து சேர்ந்தோம்.
''அம்மா நீ ரொம்ப அமைதியா இருந்தேம்மா"
என்று பாராட்டினாள்.

மாப்பிள்ளை, ஏம்மா மழை வருவது தெரியாமல்
வெளியே போய் விட்டீர்களா' என்று கேலி காட்டினார்!!

ஐய்யா ஸாமி உங்க ஊர் இப்படி செய்யும்னு தெரியாதே!!
வெய்யில் இருக்கக் கொண்டு தான்
வெளியில் போனேன். வெதர் ரிபோர்ட் 
பார்க்கவில்லை" என்று சொல்லி கராஜுக்குள் விரைந்தேன்.

தைரியம் கொடுத்த ஸாயிக்கு நன்றி சொல்லி கொலுவை ஆரம்பித்தேன்.
















 

இங்கேதான்.....................வானப்ரஸ்தம் 2011.

வல்லிசிம்ஹன்

பழைய நினைப்பு தான் பேராண்டி ..பதிவு 7

August  2011.
***********************************
இரண்டுவாரங்களுக்கும் முன்னால் நாங்கள் எங்கள் மகனோடு ஸ்விட்சர்லாண்டின் ஒரு அழகிய நகரமான
இன்டர்லாகன் எனும் இடத்திற்குப் பயணம் மேற்கொண்டோம்.

எங்களுக்குக் கிடைத்த நேரம்   ஏழு மணித்துகள் தான்.

பேத்தி பள்ளியில் இருந்து வருவதற்குள்
திரும்ப வேண்டும்.
-ரயிலில் ஏறியதும் இன்னொரு இந்திய தம்பதியினரின்   அறிமுகம் கிடைத்தது.
பேச்சு வாக்கில்  அவர்களுக்குக்   குழந்தைகள் இல்லை,இவர்கள் மட்டுமே குடும்பம்,
 என்றும் நல்லவசதி படைத்தவர்கள் என்பதும் புரிந்தது.
இருவரும் சென்னையில் ஒரு டூரிஸ்ட் கம்பெனியில்  பாக்கேஜ் டூர் எடுத்துக் கொண்டு
இருபது நாட்கள் ஐரோப்பியப் பயணமாக வந்திருக்கிறார்கள்.


 பெரியவருக்கு ௭ழுபது வயதிருக்கும் .  நல்ல திடகாத்திரமான  உடல். கம்பீரத்தைப் பார்த்தால் எதோ பெரிய அலுவலகத்தில் 
தலைமைப் பொறுப்பாளராக   இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
மனைவிக்கு அறுபத்தெட்டு வயது என்று சொன்னார்..


ஆளுக்கொரு ஜன்னலோரத்தை அவர்கள் பிடித்துக் கொண்டதால்
நாங்கள்  அடுத்த இருக்கைகளைத தேடி  அமர்ந்துகொண்டோம்.

பரஸ்பர அறிமுகத்தை அடுத்து நான் மௌனமாக
 இயற்கைக் காட்சிகளைப் பார்த்துகொண்டு ரசித்தவாறு
வந்தேன்.
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத பசுமை. அது.
அந்த அம்மாவோ வெறித்த
 நோக்கோடு எல்லோரையும் கவனித்துவந்தார்.
 கணவரோ.. (பெயர்    திரு  ரவிச்சந்திரன்.)

எங்கள் வீட்டுக்காரரிடமும் மகனிடமும் தான் தலைமை வகித்த 
  உலோகங்கள் சம்பந்தப்பட்ட  கம்பெனி யில் தன்
தனிமனித சாதனைகளை
 விஸ்தாரமாக எடுத்து  உரைத்துக் கொண்டு வந்தார்.

என் அருகே இருந்த   அம்மா

...வசந்தா ரவிச்சந்திரன்
கூடக் கூட  எதோ முனு முணுத்தவாறு வந்தார்.

எப்பப்   "பார்த்தாலும்" நான் நான்"  தான். மத்தவாளைப் பத்தியும் கேக்கணும்,

கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு வரக் கூடாதோ'

நான் ''அவர் எதோ சுவையாகத்தானே சொல்கிறார்."

இல்ல,
" நான் இந்தக் கதையை பத்துவருஷமாக் கேக்கறேன்.
விடவும் முடியலை. சேரவும் முடியலை "என்றவள்
 கண்ணில் தண்ணீர்.
சங்கடமாக இருந்தது.'நீங்களாவது தமிழ் பேசறவர்களாகக்   கிடைத்தீர்கள்.

இல்லாவிட்டால் நான் பேசவே முடியாது."

''எப்படி இந்த வயதிலும் உங்களுக்குக் கருத்து வித்தியாசம் இருக்கிறது. ?''

இது   நான்.
(என்னவோ சம்சாரக் கடலில் சாதித்துவிட்ட  தொனி வந்துவிட்டதோ?)


''எங்கள் திருமணம் நடந்து நாற்பத்தி ஐந்து  வருடங்கள் ஆகின்றன. முதலில் குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தைப் பகவான் கொடுத்தான்.

அது இல்லாமல் போயிற்று.
அதன் பிறகு என்ன  முயற்சி மேற்கொண்டும் ஒன்றும் பயனில்லாத நிலையில்

தம்பி மகனைத் தத்தெடுக்கலாம் என்று நான் சொல்ல, உங்கள் பிறந்தக

   மனிதர்கள்  இங்கு வந்து சாப்பிட்டு
அழிக்க வேண்டாம்"
சாப்பிட, நான் சம்பாதிக்க முடியாது. நாம் இருவர் போதும் ''என்று ஒரே உறுதியாக இருந்துவிட்டார்.

கொஞ்சக்காலம்
தனிமையில் வருத்தப் பட்டேன்.
பிறகு வேறு விஷயங்களிலும் ஆன்மீகத்திலும்
மனதைச் செலுத்தி விட்டேன்."

என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே நாங்கள் இறங்கும் இடம் வந்தது. அங்கிருந்து
படகுப் பயணமாகக் கடைசி நிலையத்தை
அடைவதாக ஏற்பாடு.

திருவாளர்களும் திருமதிகளுமாக  அந்த அழகான  படகில் ஏறி உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். .எங்க
மகன் அனைவருக்கும் காபி, கேக்  என்று வரவழைத்து உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்தினான்.

அவனையே கண்ணிமைக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தார்  வசந்தா.

அவரது கவனத்தைக் கலைக்கும் வண்ணமாக அவர்களது
 பயண விவரங்களைக் கேட்டேன்.

''ஆமாம்  அவர் விருப்பம் . இங்கெல்லாம் வரவேண்டும் என்று.

இங்கேயே  முடிந்தாலும் சரி"
 என்று 
அவர் சொன்னது ,எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"'உடனே  அவர் முகத்தில் சிரிப்பு. அப்படியெல்லாம் 
செய்யமாட்டேன். ஜஸ்ட்   ஒரு நினைப்பு." என்றார்.
படகின் ஓரத்தில்   நின்று அலைகளின் அழகைப் பார்த்தவாறு வந்தோம்.
காற்று அதிகமாகவே
இருந்ததால்.நான் உள்ளே செல்ல முற்பட்டேன்.
தடால் என்ற சத்தம்.
என்னவோ எதோ என்று மீண்டும் வெளியில் வந்தால் ,

 மாமி அங்கேதான் இருந்தார்.

மாமாவைக் காணோம்.

அதற்குள் படகின் அடித்தளத்தில்
 சலசலப்பு.
திரு. ரவிச்சந்திரன் அவர்கள் படிகளில் சறுக்கிக் 
,கழிப்பறைக்குச் செல்லும் இடத்தில் விழுந்திருந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
வசந்தா மாமியின் முகத்தில்   கலவரம் கூடிக்  கொண்டே சென்றது.

'பாவி மனுஷன். பக்கத்துக் கைப்பிடியப்
 பிடித்துக் கொண்டு இறங்கக் கூடாதோ." என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்.

அதற்குள் அந்தப் படகின்   முதலுதவி  டாக்டர் வந்து. மாமாவின்  உடல் நிலையைப் பரிசோதித்துக் காலில் சிறிய காயம் மட்டும் பட்டிருப்பதாகவும், மற்றபடி அவருக்குக்  கவலைப் படும்படியாக
அடி படவில்லை என்று
கைத்தாங்கலாக   அவரை

 மேலே அழைத்து வந்தனர்.
'ஏன்னா, என்றபடி அருகில் விரைந்த
வசந்தாவை அவர் பக்கத்தில் அணுக விடவில்லை.
ஐ ஆம் ஒகே.
நீ விழாமல்  toilet போய்   வா.,"
 என்றபடி எங்கள்

மகனின் உதவியோடு   இருக்கையில் அமர்ந்தார்.

நான் கீழே சென்ற வசந்தாவுடன்
 கொஞ்ச நேரம் இருந்து ஆறுதல் சொல்லிவிட்டு, மேலே வந்தோம்.

'"நாம் ஊருக்குத் திரும்பி விடலாமா. பாஷை தெரியாமல் அவஸ்தைப்

படவேண்டாமே!!!!" என்றவளை எரிப்பது போலப் பார்த்தார் அந்த மனிதர்.''

ஊரிலிருந்து கிளம்பும்போதே உன் அபசகுனப் பேச்சை ஆரம்பிச்சையே.

இப்ப எனக்கு ஏதாவது ஆகணும்னு காத்துக் கொண்டிருந்தியாக்கும்

என்று''படபடத்தார்.




மற்ற பயணிகள் வசந்தா வடித்த கண்ணீரைப் 
புரிந்து கொள்ளாவிட்டாலும் , அருகில் வந்து ஆறுதல் சொன்னார்கள்.
எனக்குத்தான் கவலை
 அதிகமானது.

அப்பொழுது வாயை மூடியவர்தான்  வசந்தா.. படகு விட்டு இறங்கி   சக்கிர
 வண்டியில் கணவரை ஏற்றிக் கொண்டு,  பக்கத்தில் இருக்கும
 அவசர வைத்திய உதவியை  நாடிச் சென்றனர்..

விடைபெறும்போது வசந்தாவின் கண்கள் என்னைப் பார்க்கவில்லை.

உலகத்தில் மனைவிகளாகப் படைக்கப் பட்ட எத்தனையோ
 மரக்கட்டைகளைப் போல நடந்து கொண்டிருந்தார்.

**************************************************************************
டிஸ்கி
எல்லா  மனைவியரும் எல்லாக் கணவர்களுக்கும் இது பொருந்தாது.நமக்குத் தெரியும் தானே.:)
 அனுபவம் பலவிதம்!!

















-






Thursday, October 07, 2021

இன்றும் வாழலாம்....இசையோடு..





நவராத்திரி நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்

Thank you dear Jayanthi Kannan.
எல்லோருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.


30 வகை சாரதா நவராத்திரி ஸ்பெஷல்  உணவுகள்..( நைவேத்தியங்கள் )

 சம்பா அவல் 

தேவையானவை: அவல் -  ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலை 5 நிமிடம் நீரில் ஊறவிடவும். வாணலியில் நெய் விட்டு, முந்திரிப் பருப்பை வறுக்கவும். அதே வாணலியில் நெய்யுடன் எண்ணெய் சிறிதளவு கலந்து கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... ஊற வைத்த அவல், பொடித்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால்... சம்பா அவல் ரெடி!
குறிப்பு: சம்பா அவல் அல்லது வெண் பொங்கலை நவராத்திரி முதல் நாள் நிவேதனமாக செய்யலாம்..

 ஆப்பிள்  பன்னீர் பாயசம் 

தேவையானவை: 
ஆப்பிள் - ஒன்று, காய்ச்சி ஆற வைத்த பால் - கால் லிட்டர், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பன்னீர் - சில துளிகள், முந்திரி, திராட்சை - தலா 5, நெய் - சிறிதளவு.

செய்முறை: நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஆப்பிளை தோல் சீவி துண்டுகள் செய்து, சிறிதளவு காய்ச்சிய பால் விட்டு நைஸாக அரைக்கவும். மீதமுள்ள பாலை மிதமான தீயில் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்து, கொதிவிட்டு இறக்கி. பன்னீர் துளிகள், முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும்.

 முக்கூட்டு வடை 

தேவையானவை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், மிளகு, சீரகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10, நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடிய விட்டு

... மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைக்கவும். இதனுடன் நெய் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

 தாளித்த தயிர் சாதம் 

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, காய்ச்சி ஆற வைத்த பால், தயிர் - தலா அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை நன்கு குழைய வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் தாளித்து சாதத்துடன் கலந்து... பால், தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்தால்... தாளித்த தயிர் சாதம் ரெடி!
 குறிப்பு : நவராத்திரி நான்காவது நாள் ஜெயதுர்க்கைக்கு தயிர் சாத நிவேதனம் சிறந்தது.

 நவராத்திரி அமிர்தம் ..

தேவையானவை: ஆப்பிள், மாம்பழம், அத்திப்பழம், சப்போட்டா, வாழைப்பழம் - தலா ஒன்று, முந்திரி, திராட்சை, பாதாம், பேரீச்சை - தலா பத்து, நெய், தேன் - தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள், மாம்பழம், சப்போட்டா, அத்திப்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கவும். வாழைப்பழத்தை தோலுரித்து துண்டு களாக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றுடன் துண்டுகளாக்கிய பேரீச்சை,துண்டுகளாக்கிய பழ வகைகள், தேன் சேர்த்துக் கலக்கி நிவேதனம் செய்யவும்.

 ஃப்ரூட்ஸ் கேசரி 

தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - அரை கப், கேசரி கலர் பொடி - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் - அரை கப், முந்திரி, திராட்சை - அலங்கரிக்க தேவையான அளவு.

செய்முறை: ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை வறுத்து எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதி வந்த பின் ரவையை சேர்த்துக் கிளறவும். முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை, நெய், பழ வகைகள் சேர்த்துக் கிளறி இறக்கவும். முந்திரி, திராட்சை அலங்கரித்து பரிமாறவும்.

 இலங்கை அல்வா ..

தேவையானவை: தேங்காய்ப் பால், கடலை மாவு - தலா ஒரு கப், மைதா மாவு - அரை கப், சர்க்கரை, நெய் - தலா 2 கப்.

செய்முறை: தேங்காய்ப் பாலுடன் கடலை மாவு, மைதா மாவு, சர்க்கரை ஆகியவற்றை  சேர்த்துக் கலக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இந்தக் கலவையை சேர்த்து, சிறிது நெய் விட்டு, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கிளறவும். நன்கு வெந்து வரும்போது மீதியுள்ள நெய் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

 சத்து மாவு புட்டு .

தேவையானவை: சத்து மாவு (நவதானியங்களை வறுத்து, அரைத்த மாவு) - ஒரு கப், தேங்காய் துருவல், சர்க்கரை - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் சத்து மாவை போட்டு... உப்பு, எண்ணெய் விட்டு பிசிறி, சிறிதளவு தண்ணீரை மாவின் மீது தெளித்து, பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கைகளால் உதிர் உதிராக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... சத்தான புட்டு  ரெடி!
குறிப்பு: இதை நவராத்திரி ஏழாம் நாள் செய்வது விசேஷம்.

 சிகிலி .

தேவையானவை: கறுப்பு எள், வெல்லம் - தலா 50 கிராம்.

செய்முறை: கறுப்பு எள்ளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பின்பு களைந்து, வடிகட்டி உலர்த்தவும். நன்கு காய்ந்த பின்பு, வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வெடிக்கவிட்டு வறுக்கவும். ஆறிய பின்பு கையால் தேய்த்து தோலை நீக்கி, புடைத்து சுத்தம் செய்யவும். பிறகு மிக்ஸியில் எள்ளை போட்டு அரைக்கவும். பாதி அரைபட்டவுடன் பொடித்த வெல்லத்தை போட்டு மேலும் ஒரு சுற்று சுற்றி நன்கு ஒருசேர அரைக்கவும். பிறகு உருண்டைகளாக பிடித்து சாப்பிட லாம். அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
குறிப்பு: இரும்பு சத்து அதிகம் கொண்டது இந்த சிகிலி!

 வெஜ்  சோயா சுண்டல்..

தேவையானவை: சோயா பீன்ஸ் - ஒரு கப், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸை முதல் நாள் இரவே கழுவி ஊறவிடவும். மறுநாள் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... வேக வைத்த சோயா, தேங்காய் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு கலந்து கிளறி பரிமாறவும்.

 ரங்கோலி சுண்டல் ..

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா - தலா ஒரு சிறிய கப், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
பொடி செய்வதற்கு: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்ய கொடுத்துள்ளவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். கடலை வகைகளை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறு நாள் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... வேக வைத்த கடலை வகைகள், மிக்ஸியில் அரைத்து வைத்த  பொடி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... கலர்ஃபுல்லான ரங்கோலி சுண்டல் ரெடி!

 முத்து சுண்டல் ..

தேவையானவை: ஜவ்வரிசி -  ஒரு கப், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை வறுத்து இரண்டு பங்கு வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். ஒரு மணி நேரம் கழித்து நீரை வடியவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, அதனுடன் ஊற வைத்த ஜவ்வரிசி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... முத்து சுண்டல் தயார். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.

 கேரட் பாசந்தி ..

தேவையானவை: பால் - 4 கப், கேரட் - ஒன்று, பாதாம், முந்திரி - தலா 4, சர்க்கரை - ஒரு கப். 

செய்முறை: கேரட்டை துருவவும். பாதாம், முந்திரியை சிறிதளவு பாலில் ஊற வைத்து கேரட் துருவல் சேர்த்து அரைக்கவும். பாலை அடி கனமான பாத்திரத்தில் விட்டு காய்ச்சவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை சுண்ட விடவும். ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சர்க்கரை, அரைத்த கேரட் விழுது சேர்த்து மீண்டும் நன்கு சுருள கிளறி இறக்கினால்.... கேரட் பாசந்தி தயார்!

 வேர்க்கடலை  ஃப்ரூட் சுண்டல் .

தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், ஆப்பிள், மாங்காய் - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை வேக வைக்கவும். ஆப்பிள், மாங்காயை கழுவி துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேக வைத்த வேர்க்கடலை, மாங்காய் துருவல், ஆப்பிள் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... ஃப்ரூட் சுண்டல் தயார்.

 ஸ்வீட் கார்ன் சுண்டல் ..

தேவையானவை: ஸ்வீட் கார்ன் - ஒன்று, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னை குக்கரில் வேகவிடவும். அதன் முத்துக்களை உதிர்த்து... அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கி, சூடாக பரிமாறவும்.
மிகவும் ஆரோக்கியமான சுண்டல் இது!

 முளைப்பயறு சுண்டல் .

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பயறை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் வடிகட்டி ஒரு துணியில் போட்டு மூட்டை கட்டி வைத்து, முளைகட்ட விடவும். அதற்கு மறுநாள் நன்கு முளைத்துவிடும். முளைத்த பயறை குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறிய பின் வடிய வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து... வேக வைத்த பயறு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 கறுப்பு உளுந்து சுண்டல் 

தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 10 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கறுப்பு உளுந்தை நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, குக்கரில் வைத்து  ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பின்பு வடியவிடவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து... வெந்த உளுந்து, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்ற சுண்டல் இது!

 கோல்டன் ரிங்ஸ் ..

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு , வெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, மிளகுத்தூள், சீரகம், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். பிசைந்த மாவில் இருந்து சிறிய கோலி உருண்டை அளவு எடுத்து ஒரு இன்ச் அளவு பென்சில் போல நீளமாக தேய்த்து, அதன் இரு முனைகளையும் ஒன்று சேர்த்து வளையங்கள் போல் செய்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, செய்த வளையங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

 அப்பம் ..

தேவையானவை: வெல்லம் - ஒன்றரை கப், கோதுமை மாவு - 2 கப், அரிசி மாவு - கால் கப்,  வாழைப்பழம் - ஒன்று (பிசைந்து கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, வாழைப்பழத்தை பிசைந்த விழுது, ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, கரைத்த மாவை சிறிய கரண்டியால் எடுத்து அப்பங்களாக ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

 வேர்க்கடலை  வெல்ல லட்டு ..

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது), பொடித்த வெல்லம்  - தலா ஒரு கப்.

செய்முறை: தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து மேலும் நைஸாக ஒருசேர அரைத்து, லட்டுகளாக விருப்பமான அளவுகளில் பிடிக்கவும்.

 ஹனி பால்ஸ் ..

தேவையானவை: பாதாம், முந்திரி, வேர்க்கடலை - தலா 10, பேரீச்சை - 4, தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாதாம், முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறவிடவும். இவற்றுடன் கொட்டை நீக்கிய பேரீச்சை துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பொடியுடன் தேன் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். நவராத்திரி சமயத்தில் வரும் குட்டீஸ்களுக்கு கொடுக்க ஏற்ற ஸ்வீட் இது!

 மோதகம் ..

தேவையானவை: தேங்காய் துருவல், வெல்லம் - தலா ஒரு கப், கோதுமை மாவு - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். அரைத்த தேங்காய் விழுதுடன் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து வாணலியில் பூரணமாக கிளறவும். இதை சிறிய உருண்டைகளாக செய்யவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து... கரைத்து வைத்த கோதுமை மாவில் பூரண உருண்டைகளைத் தோய்த்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.

 வீட் பிரட்டல் ..

தேவையானவை: கோதுமை மாவு, சர்க்கரை - தலா ஒரு கப்.
செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். எளிதில் செய்யக்கூடிய இது, சுவையாக இருக்கும்.

குறிப்பு: நவராத்திரியின் சமயத்தில், இந்த வீட் பிரட்டல் செய்து வைத்துக் கொண்டால்.... நிவேதனங்கள் தீர்ந்த பின்பு வருபவர்களுக்கு இதை பாக்கெட் செய்து தரலாம்.

 கல்கண்டு பாத் ..

தேவையானவை: பச்சரிசி, பால், டைமண்ட் கல்கண்டு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 5 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இதனுடன் இரண்டு கப் நீர் விட்டு குக்கரில் வைத்து, நான்கு விசில் வந்ததும் இறக்கவும். கல்கண்டை மிக்ஸியில் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில்... வெந்த சாதம், பால், கல்கண்டு பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க வைத்து இறக்கி... வறுத்த முந்திரி, திராட்சையை மேலே அலங்கரித்து பரிமாறவும்.

 ஸ்வீட் மிக்ஸர் ..

தேவையானவை: அவல் - ஒரு கப், வெல்லம் - 2 கப், தேங்காய் துருவல், வேர்க்கடலை - தலா அரை கப், எள், நெய் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். எள், அவல், தேங்காய் துருவல், வேர்க்கடலை ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்து கொதி விட்டு, இறுகி வரும்போது இறக்கி... அவல், வேர்க்கடலை, தேங்காய் துருவல், எள், நெய், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும்.
இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

 அவல் லட்டு ..

தேவையானவை: வெள்ளை அவல், சர்க்கரை - தலா ஒரு கப், முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிட்டிகை, நெய் - தேவையான அளவு.

செய்முறை: அவலை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடிக்கவும். சிறிதளவு சர்க்கரை பொடியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, பொடித்த அவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யை காய்ச்சி இதில் ஊற்றி உருண்டைகளாக பிடித்து, தனியாக எடுத்து வைத்த சர்க்கரை தூளில் புரட்டி எடுத்தால்... அவல் லட்டு தயார்!

 ஹெல்தி ரோல்ஸ் ..

தேவையானவை: பாதாம், முந்திரி, பேரீச்சை - தலா 10, தேங்காய் துருவல், நெய் - தேவையான அளவு.

செய்முறை: நெய்யில் பாதாம், முந்திரியை வறுக்கவும். இதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சை சேர்த்து அரைத்து வைக்கவும். தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் அரைத்து வைத்த பேரீச்சை விழுது, உருக்கிய நெய் சேர்த்துப் பிசைந்து ரோல்களாக செய்யவும்.

 கடலைப்பருப்பு சுண்டல் ..

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... வேக வைத்த பருப்பு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 கோசுமல்லி ..

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட் துருவல், வெள்ளரி துருவல் - தலா கால் கப், தேங்காய் துருவல் - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு,  கடுகு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு. 

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் வடித்து எடுக்கவும். இதனுடன் கேரட் துருவல், வெள்ளரி துருவல், தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

 பானகம் ..

தேவையானவை: தண்ணீர் - ஒரு கப், வெல்லம் - 2 டீஸ்பூன், சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து நிவேதனம் செய்யவும்.
குறிப்பு: எந்த நிவேதனமும் கைவசம் இல்லாத சூழ்நிலையில்,பானகம் கை கொடுக்கும்!