Blog Archive

Friday, October 15, 2021

எலியும் மின்சாரமும்.:)))))


வல்லிசிம்ஹன்






Monday, September 17, 2007
#இது மீள் பதிவு. ஸ்ரீராம் பார்வைக்கு:)
+++++++++++++++++++++++++++++++++++++

குட்டிப் பூனை, பெரிய எலி

 எங்க வீட்டில எலியார் மழை நாள் ஒன்றில் குடி வந்து இருக்கிறார்.
இது ஒரு மே மாத அக்னி நட்சத்திர மழைக்காலம் வருமே(?:))அப்போது...தான் இவர் உள்ள வந்து இருக்கிறார்.









அவர் வந்தது தெரிந்து அதுவரை வெளியில் மிடுக்கு நடைபோட்ட பூனையார்,



இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார்.மேலே .இருக்கிற படப்பூனை மாதிரி இல்லை. இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.


சரியான சம்பல் பூனை கூட:))



 வெளியூர் சென்று
வந்தது முதல் ஒவ்வொரு மின் சாதனத்தையும்
சரி செய்துவிட்டுத் தான் இயக்க வேண்டி இருக்கிறது.





எனக்கும் மின்சாரத்துக்கும் அத்தனை ஒத்துப் போகாது.

எல்லா வசதிகளும் கொடுக்கும் பஜாஜ்,விஜய்,இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்


ஆதிகாலத்திலிருந்தே வருவது வழக்கம்.அதைப்


பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:)) தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்.:))))



மேலே மொட்டை மாடியில் தேங்கின தண்ணீர் கசிந்து
கீழே உள்ள சாப்பாட்டு அறை விளக்கைச் சுற்றிச் சொட்ட ஆரம்பித்தது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இவ்வளவு

மோசமாக வீட்டை வைத்து இருக்கிறீர்களா என்று கேட்காதீர்கள் .:(


அது அப்படித்தான்.
இப்போ பூனை எலி சமாச்சாரத்துக்கு வரலாம்.
நாங்க வந்து இறங்கி அடுத்த நாள் மழை வந்தது.
நம்ம வனாந்திரம் போயி வருஷக்கணக்கு ஆச்சா.??
அதில வீட்டு விஷயங்கள் மறந்து போச்சு.

அதிலையும்இந்த மழை சுகமான மழை.சத்தமில்லாத அழகான மழை... அதனால் ரசிப்பதில் இருந்து விட்டேன்.

திடீரென்று பூனை சீறும் சத்தம், எலி சார் தாவி சாப்பாட்டு மேஜை மேல
இருந்த
அப்பள டப்பா உருண்டூ கீழே விழுந்து கடகட..

சாம்பனும் செல்லியும்(பூனை, எலி... பேரு) சண்டையில் சுற்றி வர,(அந்தத் தண்ணீரசொட்டி இருந்த இடத்தை மட்டும் விட்டு


விட்டார்கள்.)


இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில் கிறீச்னு சத்தம் போட்டு ஓடீ விட்டான்.


என்னடா இது திகில் சண்டையா இருக்கேனு, விளக்கை அணைக்க வந்த போது
 ஸ்விட்ச் போர்ட் கர்ர் என்று கர்ணகடூரமாக கத்தியது.


ஆளைவிடு!! இது ஏதோ மின் இணைப்பு வேலை. தப்பு கனெக்ஷன், ஷார்ட் சர்க்யூட் எல்லாம் புரிந்து,

வெளியில் ,மழையில் வழுக்காமல், போயி மெயின் போர்ட் (தடித்த) 
ஸ்விட்சை அணைத்தோம்.


பிறகு எப்போதும் செய்வது போல குழல்விளக்கைக் கழட்டி வைத்துவிட்டு,
ட்ரிப் ஸ்விட்ச் ஆன் செய்து,

எலெக்டீஷியனைக் கூப்பிட்டு சரி செய்தாச்சு.

அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்ப்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது மாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:)))

24 comments:

ஸ்ரீராம். said...

//இது மீள் பதிவு. ஸ்ரீராம் பார்வைக்கு:/


ஹிஹிஹிஹி....!

ஸ்ரீராம். said...

ஹா ஹா ஹா அந்த எலி செய்த களேபரத்தில் இந்த மௌஸையும் விட்டுக் கொடுக்கப் பழகி விட் டீர்கள்.  எலியார் எப்போதுதான் வெளியேற்றப்பட்டார்?

நெல்லைத்தமிழன் said...

ஹா ஹா... எலியையும் பூனையையும் விரட்ட சிங்கம் கர்ஜிக்கவேண்டியிருந்திருக்கிறது

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
நான் எழுதினவுடனே ஏம்மா இது புதுசா, மீள் பதிவான்னு
கேட்பதால் உங்க பெயரைப் போட்டேன்.;0))

வல்லிசிம்ஹன் said...

இனிய விஜய தசமி வாழ்த்துகள். எல்லா நலமும் அன்னை அருள வேண்டும்.

பிடிச்சுட்டோம் பா அந்த எலியை.
இன்னும் பல்லிகள் பிடிக்கப்
பட்டு வெளியேற்றப் பட்டன:)
பெஸ்டிசைட் போட்டோம்.
ரூஃப் வாட்டர் ப்ரூஃப் செய்தோம்.
இப்போ மீண்டும் சரி செய்தோம்.
அசையாமல் தின்னும் வீடு:)அசைந்து தின்னும் யானை!!

கோமதி அரசு said...

ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதால் மீள் பதிவா?
நன்றாக இருக்கிறது. படித்த நினைவு இருக்கிறது.

மாமியார் வீட்டில் மரங்களின் இலைகள் நிறைய மழைத்தண்ணீர் போகும் பாதையை அடைத்துக் கொண்டால் நீர் கசிந்து கீழே வரும். மேல் விதானம் மழை ஊறியது தெரியும். உடனே மொட்டை மாடி போய் குப்பைகளை சுத்தம் செய்ய சொல்வார்கள்.

//இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில் கிறீச்னு சத்தம் போட்டு ஓடீ விட்டான்.//

அந்த சத்தம் இன்றும் காதில் ஒலிக்கிறது அல்லவா!

நினைவுகள் அருமை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஹா.ஹா.ஹா. நல்ல நகைச்சுவையாக எலியார் பூனை பதிவை படித்து மனம் விட்டு சிரித்தேன். படங்களும் நன்றாக இருந்தன. விளம்பரத்தை பார்க்க பேப்பரை தொட்டாலே ஷாக் அடிக்கும் என நீங்கள் எழுதியதை ரசித்துப் படித்தேன். பூனைக்கும் ஷாக் அடித்து விட்டதா? அதனால்தான் அந்த சப்தமா? எப்படியோ இன்று வரை எலியாருடன் நீங்கள் நட்புறவாக இருப்பதினால்தான் எங்களுக்கும் சுவாரஸ்யமான பதிவுகள் கிடைக்கிறது. ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

முன்னே படிச்சேனானு நினைவில் இல்லை. ஆனாலும் நகைச்சுவையான பதிவு. மீண்டும் படிக்கக் கொடுத்ததுக்கு நன்றி. அம்பத்தூர் வீட்டில் இப்படித்தான் நாங்கள் எலிகளையும், மூஞ்சுறுகளையும் கஷ்டப்பட்டு விரட்டுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
இனிய விஜய தசமி தின வாழ்த்துகள்.

எல்லா வெற்றியும் கிடைக்கட்டும்.
ஆமாம் அவர் சத்தம் போட்டதும் ஓடிவிட்டது.

அந்தப் பூனை எலி சத்தம் போட்டதே
இந்த மின் கசிவினால் தான். இல்லாவிட்டால் தெரிந்திருக்காது.

நன்றி மா.

KILLERGEE Devakottai said...

மௌஸைக்கூட திட்டுவதில்லை ஹா.. ஹா..

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by a blog administrator.
Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ரசித்து ரசித்து வாசித்தேன். எலியின் பெயர் செல்லி!!! ஹாஹாஅஹாஹா செல்லம் தான்

பாவம் அதுவும் ஒரு ஜீவன் தானே. நான் மௌஸ் ஹன்ட்/எலி வேட்டை என்று ஒரு பதிவு எழுதி பாதியில் இருக்க. சமீபத்தில் இருக்கும் வீட்டில் எலி புகுந்ததை பதிவாகப் போட்டிருந்தேன்...

எலியைக் காப்பாற்றும் என் வட்டத்தில் உங்களையும் சேர்த்தாச்சு அம்மா!!!!!!

ரொம்ப ரொம்ப அழகா எழுதுகிறீர்கள் அம்மா.
கருத்து போக வேண்டும் ப்ளாகர் பகவானே!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

டாம் அண்ட் ஜெர்ரி!!!!

கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க அது இன்னும் ரசித்தேன் இப்போது மௌஸ் கணினி முழுவதும் சுற்றி வருவதைப் பற்றி...ஹாஹ

ஆமாம் சுதந்திரம்!!! ஆனா நமக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணுகிறது இல்லையா?

ஒரு வேளை அறிவாளிகள் அதை இன்னும் சுவாரசியப்படுத்து மௌஸ் டிவைஸ் ப்ரொக்ராம் பண்ணும் போது இனி நாம் மௌஸை நகர்த்தும் போது சுண்டெலி அண்ட் பூனை ஒன்றுக் கொன்று விரட்டுவது போலக் கூட கர்சர் வடிவமைப்பு செய்யலாம்..ஸ்க்ரீனில் அது பாட்டுக்கு துரத்திக் கொண்டிருக்க்ம்..ஏற்கனவே எலி வடிவில் கர்சர் இருக்கு என்று நினைக்கிறேன்...

மிக மிக ரசித்தேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பூஜை வாழ்த்துகள் வல்லிம்மா

உங்கள் வீட்டில் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி படமும், மௌஸ் ஹன்ட் படமும் ஓடியிருக்கிறது (பொதுவாக தோட்டம் உள்ள வீடுகளில் நடப்பதுதான் என்று நினைக்கிறேன். அதுவும் க்ரவுன்ட் ஃப்ளோர் என்றால்) அதை நீங்கள் வர்ணித்த விதம் அருமை.

துளசிதரன்

Geetha Sambasivam said...

உங்களுக்கும் சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை வாழ்த்துகள் ரேவதி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன் மா.

நஹி நஹி. ஸ்ரீராம் கேட்கவில்லை:)
தன்னிலை விளக்கம். அவர்தான் மீள் பதிவா ந்னு கேட்கிறார்!!!!!
அய்யா நான் இப்பதான் எழுதினேன் சொல்லிப்
பார்த்தேன்.:)
சரிதான் இதோ ஒரு மீள் பதிவுன்னு
போட்டு விட்டேன் பா.:)

ஆமாம் சிங்கம் குரல் கொடுக்க இருந்தால்
எனக்கென்ன கவலை:(
வீட்டைப் பார்க்க ஓடி விடுவேனே.

எங்கிருந்தோ பார்த்துக் கொள்கிறார் என்றே நம்புகிறேன்.

எலி,பூனை, பறவைகள், மரங்கள் எல்லாம் சுகமாக இருக்க
நாமும் நன்மை பெறுவோம்.

நலம் பெறுங்கள் கோமதி மா.

வல்லிசிம்ஹன் said...

அந்த பதிவில் எலி நிறைய விளையாடி விட்டது மா அன்பின் கமலா.

குழந்தைகளுக்கும் மகன் மகளுக்கும் மனம் நிறை நல் வாழ்த்துகள்.

வீட்டைப் பார்த்துக் கொள்வது பெரிய விஷயம் அம்மா. தெரிந்தது தானே! அதை
சிரித்த படி ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.:)

உங்களுக்கும். இந்தப் பதிவு பிடித்ததே. எனக்கு மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
வலியில்லா வாழ்வு வேண்டும்.

நீங்கள் பார்த்துப் படித்துக் கருத்தும் இட்டிருப்பீர்கள்.
மீண்டும் படித்து ரசித்ததற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
படித்து ரசித்ததற்கு மிகவும் நன்றி மா. ஆமாம்
என்னை சரியாக ஆட்டிவிட்டது எலி;))

வல்லிசிம்ஹன் said...

@ கீதா ரங்கன்,

""அம்மா ரசித்து ரசித்து வாசித்தேன். எலியின் பெயர் செல்லி!!! ஹாஹாஅஹாஹா செல்லம் தான்""

மிக நன்றி மா.
அந்தச் செல்லி சத்தம் போடாமல் இருந்தால்., மின் கசிவு பற்றி
எங்களுக்குத் தெரிந்தே இருக்காது.


"எலியைக் காப்பாற்றும் என் வட்டத்தில் உங்களையும் சேர்த்தாச்சு அம்மா!!!!!!"
நன்றி நன்றி :)
ப்ளாகர் பகவான் கண் திறந்துவிட்டார். நன்றி கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,


''ஒரு வேளை அறிவாளிகள் அதை இன்னும் சுவாரசியப்படுத்து மௌஸ் டிவைஸ் ப்ரொக்ராம் பண்ணும் போது இனி நாம் மௌஸை நகர்த்தும் போது சுண்டெலி அண்ட் பூனை ஒன்றுக் கொன்று விரட்டுவது போலக் கூட கர்சர் வடிவமைப்பு செய்யலாம்."

முன்னே எல்லாம் இந்த அனிமேஷன் நிறைய
பதிவுகளில் உபயோகிப்பேன்.
கணினி ரிப்பேர் ஆனால் மௌஸ் தகராறு செய்யும்.
அந்த ஆரோ கண்டபடி மேய்ந்து வரும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,

"(பொதுவாக தோட்டம் உள்ள வீடுகளில் நடப்பதுதான் என்று நினைக்கிறேன். அதுவும் க்ரவுன்ட் ஃப்ளோர் என்றால்) அதை நீங்கள் வர்ணித்த விதம் அருமை."

அதே தான் காரணம். எதிராப்பில இருக்கிற பங்களாவை இடித்தார்கள்.
அங்கே இருந்த எல்லாம் இங்கேயும் வந்து விட்டன.இங்கே இருந்த் பக்கத்து வீட்டுக்கும்
போகும். அதுவும் பாதாளம் மாதிரிக் குழி பறித்து செல்லும். :)))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா சாம்பசிவம் விழாக்கால நல் வாழ்த்துகள்
மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன்,
எல்லாம் நல்ல படியாக நடக்கட்டும் மா.
வாழ்த்துகள்.