Blog Archive

Friday, October 15, 2021

கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்கை அம்மன் கோவிலின் சிறப்பு #Amman #Valipadu

10 comments:

கோமதி அரசு said...

அம்மா துர்கே! அனைவரையும் நன்றாக வைத்து இரு அம்மா!

காணொளி அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்
துக்கத்தை நிவிருத்தி செய்யும் துர்கா அம்மா.
நம்மைக் காப்பாள்.

ஸ்ரீராம். said...

அடடே...   கும்பகோணம்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் பட்டீஸ்வரம் போக எல்லாம் இந்த ட்ரிப்பில் நேரமிருக்காது!  அம்மா காத்தருளட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
தெய்வ அருள் நினைக்கும் போதே கிடைக்கும். பயணம் இனிய தாக அமைய வேண்டும்.
பத்திரமாகச் சென்று வாருங்கள்.

நெல்லைத்தமிழன் said...

சில சமயங்களில் சன்னிதி, மெயின் கோவிலைவி மிகப் புகழ் பெற்றுவிடும்.

நான் இந்தக் கோவிலையும் (மூலவர்), துர்க்கை அம்மனையும் சேவித்திருக்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நான் பிறந்த ஊரான கும்பகோணம் செல்லும்போதெல்லாம் செல்லுமிடம் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில். பள்ளிக்காலம் முதல் இன்றுவரை எனக்குத் துணை நிற்பவள் அவளே. மனதில் சுமையோ, சுகமோ அவளிடம் சென்று பகிர்ந்துகொள்வேன். அவளை இறைவியாக மட்டுமன்றி ஒரு தாயாகவோ, தோழியாகவோ நினைத்து நேரடியாகப் பேசிவிடுவேன். மேலும் அவளுடைய ஆடைஅலங்காரத்தை ஒவ்வொரு முறையும் பார்த்து ரசித்து மகிழ்வேன். அங்கு செல்லும்போதெல்லாம் திரும்ப மனமின்றித் திரும்புவேன்.

Thulasidharan V Thillaiakathu said...

காணொளி பார்க்கிறேன் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அந்தந்த தெய்வத்தின் சக்தியையும் வீர்யத்தையும்
பொறுத்து நிகழும் அதிசயம் இது.

அந்த இடத்துக்கு உரிய தேவதையாக இருக்கலாம். நம்
நம்மாழ்வார் போல.

வல்லிசிம்ஹன் said...

இறைவியாக மட்டுமன்றி ஒரு தாயாகவோ, தோழியாகவோ நினைத்து நேரடியாகப் பேசிவிடுவேன். மேலும் அவளுடைய ஆடைஅலங்காரத்தை ஒவ்வொரு முறையும் பார்த்து ரசித்து மகிழ்வேன். அங்கு செல்லும்போதெல்லாம் திரும்ப மனமின்றித் திரும்புவேன்.///////

@ Sri Jambulingam,அன்பின் முனைவர் ஐயா,
இதுதானே இறைவியும் வேண்டுகிறாள்!!!
சில இடங்களில் மட்டும் நம் மனது ஏன் இப்படி லயித்து விடுகிறது
என்று தெரியாது.
எனக்கு சமயபுரம் மாரியம்மனிடமும் இதே
ஈர்ப்பு நிகழும்.

இவர்கள் எல்லாம் நம் வாழ்வில் இருபதால் தான் நாம் இன்னும்
உயிர்ப்புடன் இருக்கிறோம்.
மிக நன்றி ஐயா.

வல்லிசிம்ஹன் said...

காணொளி பார்க்கிறேன் அம்மா....""

அன்பின் கீதாமா,

அலைபாயும் மனதுக்கு இது போல நங்கூரங்கள் மிகத் தேவையாக
இருக்கிறது மா. நிதானமாகப் பாருங்கள்.