Blog Archive

Friday, October 15, 2021

துர்க்கா அன்னை.



காமதேனுவின் மகள் பட்டியால் பால் சொரிந்து வழிபடப்பட்டவர்.
அடுத்தது நம் தாயார் ஞானாம்பிகா.
இந்தப் பட்டீஸ்வரம் தான் பழையாறையாம்.
அர்ச்சகர் இந்தவரலாறுகளைச் சொன்னதும்   பொன்னியின்  செல்வன் பக்கங்களுக் குப் போன உணர்வு ஏற்பட்டது. சோழ மன்னர்கள் வழிபட்ட, தலைநகரமாக  இருந்த இடம்.

திருஞானசம்பந்தர்   வழிபட வருவதை அறிந்த இறைவனும் இறைவியும் வெய்யில் தெரியாமல் இருக்க அவருக்கு நிழலாக முத்துப் பந்தல் இட்ட இடம்.

சோழர்கள் போருக்குப் புறப்படுவதற்குன் வழிபட்ட ஸ்ரீதுர்காம்மா.
பட்டி விக்ரமாதித்யன் வந்து வழிபட்ட இடம்.
1600 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என்று விளக்கினார் குருக்கள்.

எனக்கு இந்த உலகில் ,இப்போதைய நேரத்தில் இருக்கும் எண்ணமே இல்லை. காலத்தத் தாண்டி வேறு எங்கே யோ இருக்கும் உணர்வுதான் மிஞ்சியது.

. அற்புதமான சூழல்.
எத்தனை சித்திரங்கள். எத்தனை சிற்பங்கள். பார்க்கத்தான் நேரம்  இல்லை. முடிந்தவரை நினைவுகளைத் தேக்கிக் கொண்டேன்.

அனைவரும் சென்று தரிசிக்க, உணர வேண்டிய தலம்.
இந்தப் புண்ணிய தரிசன த்துக்கு வழி வகுத்த இறைவனுக்கு நன்றி.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
at July 30, 2012 12 comments:   



ஸ்ரீபட்டீஸ்வரம் துர்க்கையம்மா
காலையில் எழுந்து அளவான   உணவை உள்ளே இறக்கிவிட்டு
உப்பிலி அப்பன் கோவிலை நோக்கிப் புறப்பட்டோம். எப்பொழுதும் திகட்டாத தரிசனம்.

தள்ளல் இடித்தல் இல்லை.
நிம்மதியாகப் பிரார்த்தனை செலுத்திவிட்டு  வெளியே வந்தால் ஆடியபடியே கஜராஜன் காட்சி அளிக்கிறார்.
அவருக்கு வேண்டும் அளவு சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் காசு கொடுத்தால் தான் தலையில் கைவைக்கிறார்!!எஜமான விசுவாசம் அப்படி.:)
ஆவர் ஆட்டத்தை ரசித்துவிட்டு மீண்டும் தங்கும் விடுதியை அடைந்து மதிய உணவை முடித்துக் கொண்டு 
பட்டீஸ்வரம் நோக்கிப் பயணம்.
இந்த அம்மாவைத் தேடி அலைந்த நாட்கள் முடிவுக்கு வந்தன.

பத்துவருடங்களுக்கு முன்னால்
காதிக்ராஃப்ட்  கடையில்   கண் முன் நின்றாள்.
கேட்டால் பட்டீஸ்வரம் அம்மா என்றார்கள். 
அழகி. சாந்தவதி..கம்பீரமானவள். எட்டுகைகள். அத்தனையிலும் ஆயுதங்கள். விஷ்ணுவின் சக்கிராயுதத்தையும் வைத்திருந்தாள்.

எல்லாவற்றிற்கு மேல் முகம் நிறைய முறுவல்.
இவளுக்கு எதற்கு ஆயுதம்.?
பார்த்தாலே பகைவர்கள் கால்களில் விழுந்துவிட மாட்டார்களா   தாயே!
உன்னைக் கண்டேன்.என்று மனம் நிறைய அவளைச் சேவித்துத் திரும்பினோம்.


2002 Golu.

8 comments:

கோமதி அரசு said...

மீள் பதிவு அருமை.
பட்டீஸ்வரம் துர்கை அனைவரையும் காக்க வேண்டும்.
வரலாறும், படங்களும் அருமை.
பழைய கொலு படம் நன்றாக இருக்கிறது.

காதிக்ராஃப்ட்டில் வாங்கிய நினைவுகள் சுவையான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
பொழுதெல்லாம் நல்ல பொழுதாகட்டும்.
அம்மா அப்பாவாக இருந்து இறைவனும் இறைவியும் நம் பக்கம்
இருக்க வேண்டும்.
இரண்டு சந்தர்ப்பங்களில் உங்களைச் சந்திக்காமல்
வந்து விட்டேன்.

குடும்பத்தோடு செல்லும் போது அவரவர் சௌகரியம் வேறு வேறு
இல்லையாம்மா?

Thulasidharan V Thillaiakathu said...

அவருக்கு வேண்டும் அளவு சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் காசு கொடுத்தால் தான் தலையில் கைவைக்கிறார்!!எஜமான விசுவாசம் அப்படி.:)//

ஹாஹாஹா ரசித்தேன். உங்கள் எழுத்தையும்.

அதே போல காதி கிராஃப்டில் பார்த்துவிட்டு நீங்கள் சொல்லிய வரிகளும் அருமை அதானே எதற்கு ஆயுதம்?!! உங்கள் மன எண்ணம் அசாத்தியம் அம்மா.

சென்றதில்லை. செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன் வல்லிம்மா. பட்டீச்வரன் கோயில் பட்டீஸ்வரம் துர்கை அம்மா கோயில் அருமையான கோயில். உங்கள் அனுபவத்தைச் சொன்ன விதம் அருமை.

பல வருடங்களுக்கு முன் 90களில் நான் மட்டும் தனியாக ஏதோ ஒரு உந்துதலில் என் மனமுகந்த சிவனைக் காண கும்பகோணம், சிதம்பரம் என்று அப்பகுதிகளில் உள்ள அத்தனை ஈசன் கோயில்களுக்கும் நடந்தே சென்ற அனுபவம் நினைவுக்கு வருகிறது. இதைக் குறித்து ஏதோ ஒரு பதிவில் சொன்னதும் நினைவு. ஆனால் விவரமாக எழுதினேனா என்று தெரியவில்லை. பார்க்க வேண்டும்.

பதிவைப் பார்த்ததும் பழைய நினைவுகள் நிழலாடின.

துளசிதரன்

மாதேவி said...

பட்டீஸ்வரம் அம்மன் உங்கள் பகிர்வின் மூலம் நாங்களும் தரிசித்தோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,

நடந்தே சென்றீர்களா. பதிவுலகத்தில் கவி நயா என்று எனக்குத் தெரிந்த மீனாவும்
ஒரு சமயம் நடந்தே கோயில் தரிசனம் செய்தார்.
மிக அருமையான பாராட்டுப் பெற வேண்டிய
செயல்.
நம் முன்னோர்கள் நடந்தே இறைவனைத் தரிசித்தார்கள்
அல்லவா.
உங்கள் கோயில் தரிசனம் இணைப்பு இருந்தால்
கொடுங்கள்.
இது போல நிகழ்வுகளை அறிய மனம் மிக
ஆவல் கொள்கிறது.

இறைவன் இறைவியின் அருள் நம்மை எப்போது ஆட்கொள்ளும் என்று
சொல்ல முடியாது.
எப்பொழுதும் நம்முடன் இருக்கவே பிரார்த்திப்போம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
அம்மன் அருள் மீண்டும் நமக்கு தரிசனம் கொடுக்க வேண்டும்.
மிக நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அவருக்கு வேண்டும் அளவு சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் காசு கொடுத்தால் தான் தலையில் கைவைக்கிறார்!!எஜமான விசுவாசம் அப்படி.:)//.......///////
@ Geetha rangan,



மிகத் தாமதமாகப் பதில் சொல்கிறேன். மன்னிக்கணும் கண்ணா.

இதெல்லாம் அப்போது இருந்த உத்சாகத்தில் எழுதியது.
நல்ல வேளை பகவான் நமக்கு
முன் நோக்கிப் பார்ப்பதைக் கொடுக்கவில்லை.

பெற்ற செல்வங்களும் கணவரும் அன்பைச் சொரியும் போது
எல்லா எழுத்தும் சுலபமாகிறது கீதாமா.

நீங்கள் பாராட்டுவதே மனதை நிறைக்கிறது,.
நல் வாழ்த்துகள் மா.