Blog Archive

Saturday, October 16, 2021

விவசாயி அனுசூயா.......Dinamalar











 
 
 







தினமலரில் படித்த பிடித்த செய்தி.



மலைப்பகுதியாக இருந்தாலும் ஒரே பயிர் சாகுபடி செய்யாமல் பட்டர்பீன்ஸ், கொடி அவரை, சவ்சவ் என சுழற்சி முறையில் மாற்றி மாற்றி பயிர் சாகுபடி செய்கிறோம் என்கிறார் மதுரை தென்மலை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி அனுசுயா.

பந்தல் காய்கறிகள் குறித்து அவர் கூறியது: பட்டர்பீன்ஸ் 90 நாள் பயிர், கொடி அவரை, சவ்சவ் நான்காம் மாதத்திலிருந்து ஓராண்டு வரை பலன் தரும். ஒரு ஏக்கரை இரு பகுதியாக பிரித்து பட்டர்பீன்ஸ் சாகுபடி செய்துள்ளோம். பந்தல் ஒருமுறை முதலீடு செய்வது தான்.

கொடைக்கானல் மார்க்கெட்டிலிருந்து ஒன்றரை கிலோ ரூ.1500க்கு பீன்ஸ் விதைகள் வாங்குகிறோம். விதைப்பதற்கு முன்பாக மண்ணை கொத்தி கிளறி தண்ணீர் ஊற்றுவோம். மறுநாள் சிறு சிறு சதுரமாக வெட்டி அதில் பீன்ஸ் விதையை ஊன்றுவோம். 4வது நாள் தண்ணீர் விட்டால் 8 ம் நாள் முளைவிடும். நான்கு இலை பயிராக வந்தவுடன் களை எடுத்துவிட்டு யூரியா துாவி தண்ணீர் விடுவோம்.

15வது நாள் கொடி படர ஆரம்பிக்கும். துாரில் உள்ள இரண்டு இலையில் நுாலை கட்டி பந்தலில் சேர்த்து கட்டி விடுவோம். 30ம் நாளில் பிஞ்சுவிடும். 60 ம் நாளில் காய் காய்க்க ஆரம்பிக்கும். 60 - 90 வரை நாள் வரை அறுவடை செய்யலாம். தினமும் 150 கிலோ வரை கிடைக்கும். 10 கிலோ ரூ.1000க்கு விற்போம்.

90 நாளில் கொடி காய்ந்து விடும். அதை வேருடன் பிடுங்கி விட்டு ஒரு பகுதியில் சவ்சவ், ஒரு பகுதியில் அவரை சாகுபடி செய்வோம். சவ்சவ் 3ம் மாதத்தில் பந்தலில் படர்ந்து விடும். 4வது மாதம் ஓராண்டு வரை காய்க்கும். ஏக்கருக்கு குறைந்தது 3 டன் காய்கள் கிடைக்கும். மழை பெய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

அவரையும் விதை போட்ட 8 ம் நாள் முளைவிடும். 4வது மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு தினமும் 2 மூடை காய் கிடைக்கும். விலையைப் பொறுத்து ரூ.30 - 40 வரை கிலோவுக்கு கிடைக்கும்.

பந்தல் காய்கறியில் களை எடுப்பது மிகப்பெரிய கலை. பழுத்த இலைகளை அகற்றி கொண்டே இருக்க வேண்டும். சிறுமலை காய்கறி உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் நாங்கள் உறுப்பினர்களாக உள்ளோம்.அங்குள்ள பிக்கப் வேன் மூலம் காய்கறிகளை எடுத்துச் சென்று திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் விற்கிறோம். சில நேரங்களில் சவ்சவ் காய்க்கு விலை கிடைக்காமல் போகும். மற்ற நேரங்களில் பழுதில்லாமல் ஓரளவு லாபம் கிடைக்கிறது என்றார்.
- எம்.எம். ஜெயலெட்சுமி

3 comments:

கோமதி அரசு said...

விவசாயி அனுசுயா தன் விவசாய அனுபவங்களை அருமையாக சொல்லி இருக்கிறார்.
சுழற்சி முறையில் பயிர் செய்தால்தான் மண் வளம் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன். நன்மை செய்யும் பெண்ணைப் போற்றூவோம்.
நன்றி மா.

மாதேவி said...

பயிர்கள் குழந்தைகள் போல் கவனமாக பராமரிக்க வேண்டியவை.அவர்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.