Wednesday, October 27, 2021

எழுத்தும் நாமும்.....

வல்லிசிம்ஹன்
 '' கண்ணிலே கண்டவற்றை
காதினால் கேட்டவற்றை
கற்பவர் கண்ணின் முன்னே
கொண்டு வந்து நிறுத்துகின்ற
கைதேர்ந்த எழுத்துச் சிற்பி.''
திரு தி.ஜானகிராமனுக்கு ஒரு பதிப்புரை.ரங்க நதி ,
இந்திர சௌந்தரராஜனின் சற்றே பெரிய நாவலில்
என்னுரையாக அவர் சொல்வது.

;'' முன்னாள் ஆனந்த விகடன் ஆசிரியரும், எனது ஊனக் கண்களைத்
திறந்து விட்டவருமான திரு.பாலசுப்ரமணியம் எப்பொழுதும் ஒரு கருத்தைச் சொல்வார்.
எழுத்து என்பது நம்மை இழுத்துச் செல்ல வேண்டும். அதில் கருத்து இருந்தால் நாமும் அதனுடன் இழுத்துச் செல்லப்படுவோம். அதில்லாமல் இருந்தால்
நாம் எழுத்தை இழுக்கும்படி மாறி விடும்''.

இதைவிட எழுதாமல் இருப்பது மேல் என்றே
எனக்கும் தோன்றும். இது என் கருத்து. நான் இப்போது ஆரம்பித்திருக்கும் லிஸா மார்ட்டின்  கதை அப்படித்தான் என்னை 
இழுத்து செல்கிறது. இந்த வாரம் முடித்து விடலாம் 
என்று நினைக்கும் போதே 
சம்பவத்தை விளக்க வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. இது
யாரையும் திருப்திப் படுத்த செய்வது அல்ல. எனக்கே
இசைவாக இருந்தால் தான் அந்த எழுத்தைப் 
பதிய முடியும்.

அண்மையில் அறிய வந்தது  நான் மாற்றி இவர்கள் பெயர்களைச் சொன்னாலும்
லிஸா மார்ட்டின் என்ற பெயரில் நிஜமாகவே ஒருவர் இந்த மாகாணத்திலேயே இருக்கிறார்
என்று கூகிள் சொல்கிறது!!!! ஆச்சரியம் தான்:)))9 comments:

Geetha Sambasivam said...

சந்திரபாபுவுக்கு ஈடு, இணை இல்லை. பாவம்! எம்ஜிஆரால் துன்புறுத்தப்பட்டார். அப்படியும் கடைசி வரை தனித்து நின்றார். அவர் ஆடலும் பாடலும் மறக்க முடியாத ஒன்று. இயல்பான நடனம்.

புத்தகங்கள் படிக்கத் தூண்டுகின்றன. எல்லாமும் நல்ல தேர்வு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா நன்றி.
ஆமாம் சந்திரபாபுவின் வாழ்ககை மிக வருத்தத்துக்கு உரியதுதான்.
வாங்கிக் கொண்டு வந்த வரம். மனிதர்களை மனிதர்களே சிரம்ப் படுத்தினால் விடிவேது:(

புத்தகங்களைக கைகளில் பிடிப்பதே சிரமம் ஆகிறது. :))))
படிக்கும் ஆர்வம் விடுவதில்லை. நீங்களும் படிப்பதைப் பற்றித் தான் எழுதி இருக்கிறீர்கள்….

வெங்கட் நாகராஜ் said...

எழுத்து குறித்த தங்கள் எண்ணங்கள் நன்று. தொடர்ந்து எழுதுங்கள் மா. லிசா மார்ட்டின் தொடர் நன்றாகவே இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் பிடித்த பாடல்...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

ஆமாம்.எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிறைய
இருக்கிறது. நேரமும் கைகளில்.
உடலின் தெம்பு தான் தடுக்கிறது.
கட்டாயம் எழுதி முடிப்பேன். கடவுள் அருள்.
நல்ல வார்த்தைகளுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன். 60 ,70களில் வந்த எந்தப் பாடலாயிருந்தாலும்,
பொருளும் இசையும் அசர வைக்கின்றன. நீங்கள் அவைகளை ரசிப்பதில் எனக்கும் மிக மகிழ்ச்சி. நலமுடன் இருங்கள். நன்றி.

நெல்லைத் தமிழன் said...

//சந்திரபாபுவுக்கு ஈடு, இணை இல்லை. பாவம்! எம்ஜிஆரால் துன்புறுத்தப்பட்டார்.// - இது என்ன இப்படி எழுதிட்டீங்க? சந்திரபாபுனால கண்ணதாசன் நொந்து போனதை எழுதியிருக்கிறாரே.. குறைந்த பட்ச மரியாதைகூட வீடு தேடி வந்த கண்ணதாசனுக்குக் கொடுக்கலையாம்.

குடிக்கு அடிமையாகி, தன்னைப் பற்றி அதீதமாக எண்ணி கடைசியில் சாதாரணவராக ஆனவர் சந்திரபாபு நடிகர்

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நமக்கு வரும் செய்திகள் வெவ்வெறு
இடங்களிலிருந்து வருகின்றன.
எல்லோரும் சினிமாக்காரர்கள்.

இவர் என்ன அடாவடி செய்தாரோ, அவர் என்ன
பதிலடி கொடுத்தாரோ.
ஆகக் கூடி நல்ல சினிமாக்கள் பார்ப்பது தடைப்பட்டது.
அன்னையில் சந்திரபாபு நன்றாகவே நடித்திருப்பார்.


he had his quirks:(

சம்பந்தப்பட்டவர்கள் யாருமே இல்லை.

கோமதி அரசு said...

சந்திரபாபு பாடல் பிடித்த பாடல் கேட்டேன்.

எழுத்தைப்பற்றி நன்றாக சொன்னீர்கள்.