Blog Archive

Monday, October 18, 2021

1960 .....70 கதாநாயகர்களும் அவர்கள் பாடல்களும்






வல்லிசிம்ஹன்


 வானொலியோடு இணைந்திருந்த காலங்கள் அவை.
பள்ளிக் கூடப் பாடங்கள் முடித்த கையோடோ,
அதற்கு முன்போ  ரேடியோ சிலோன்  ஆன் செய்துவிட்டுத்தான் மாலை 
டிஃபன் உள்ளே  போகும்.
தமிழ்ப்பாடல்கள் முடிந்ததும் 
AAY BOVAN  என்று தொடங்கும் சிங்களப்
பாடல்கள் ஒலிபரப்பு..

நடுவில் சென்னை பி  ஸ்டேஷனின் ஆங்கிலப்
பாப்புலர்  பாடல்கள், 
பிறகு மதிய வேளையில் இந்திப் பாடல்கள். சனி ஞாயிறுகளில்.



சென்னைக்கு வந்த போது வாழ்க்கையில்


இந்திப் பாடல்கள் அதிகம் இடம் பிடித்தன.
விவித் பாரதியின் தயவால் ,அந்த நாளைய 
முகேஷ், ரஃபி, கிஷோர் ,லதா எல்லோரும் வான் வழி இதயத்தை 
அடைந்தார்கள்.

ஸ்டார் அண்ட் ஸ்டைல், ஃபில்ம்ஃபேர் அட்டைப்
படத்தில்  ஷம்மி,ஷஷி கபூர், ராஜ் கபூர்,மனோஜ் குமார்
அவர்களோடு இணைந்து செல்லும் சாதனா, ஆஷா பரேக்,
இன்னும் லக்ஸ் விளம்பர மாடல்களின் 
பாடல்கள் நிஜம் என்று நம்பித் திரிந்த காலம்:)
ஆனால் பாடல்கள் மறக்க முடியாதவை.
அவற்றில் சில இங்கே.






சில பாடல்கள் எத்தனை முயன்றாலும்
சிக்கவில்லை.
யூடியூபில் பார்க்க முடியும். நன்றி.








12 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. அப்போதெல்லாம் வானொலி பெட்டிதானே நம் உலகம். அதிலும் ஹிந்தி பாடல்கள் என்றாலே ஒரு இனிமை அதில் குடி புகுந்து விடும். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன. கேட்டு ரசித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

பாடல்கள் மிக நன்றாக இருக்கிறது.
விவித் பாரதியில் 70களில் இந்தி பாட்டை அர்த்தம் தெரியாமல் இனிமையாக இருப்பதால் கேட்டு ரசித்தோம், நானும் என் அண்ணாவும்.

அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.
மலரும் நினைவுகள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இனிய காலை வணக்கம். நலமுடன் இருங்கள்.

வானொலி தான் நாம் இயங்கவே காரணமாக இருந்தது.
தோழிகள், படிப்பு, இசை,கோயில்
இவைதான் வாழ்க்கை.
இப்போது யூடியுபும் ப்ளாக் உலகமும், வாட்ஸாப்பும்
நமக்குத் துணை.

அர்த்தம் தெரியாமல் கேட்டு ரசித்த காலம்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரி.

மனப்பாடமாகப் பாடல்கள் தெரியும். அர்த்தம் தெரியாது. திருமணமான பிறகு இந்திஆசான் கிடைத்தார்:)

இவர் எல்லாப் பாடல்களுக்கும் அர்த்தம் தெரிந்து பாடுவார்.
சில பாடல்கள் இனிமையாக இருந்தாலும்
வேண்டாத பொருள் இருந்தாலும் சொல்வார்.

இசை கேட்கும் நாட்கள் இனியவை. எல்லாப்
பாடல்களையும் நீங்கள் கேட்டது மகிழ்ச்சி மா.
வாழ்க நலமுடன்.

ஸ்ரீராம். said...

ஆம்.  ரேடியோ சிலோன் ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்.  விவித்பாரதி வேறு ரகம்.  மனோரஞ்சன், மன் சாஹே கீத், சாயா கீத், ஆப் கே பர்மாயிஷ்...  அப்புறம் பினாகா கீத்மாலா.....  நெஞ்சை நிறைத்த பாடல்கள்.  

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

இந்த நாள் இனிய நாளாகட்டும்.
இங்கிருக்கும் வானொலி இசையையும்
இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இசை என்றும் நம்மைப் பற்றி இருக்கட்டும்.
நன்றி மா.,

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...

Geetha Sambasivam said...

காலை இன்னிசையில் ஆரம்பித்துச் சென்னை வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டிருப்பேன். கேட்டுக்கொண்டே வேலை செய்வேன். சென்னை அம்பத்தூரில் கூட 2003/2004 வரை ரேடியோ கேட்டிருக்கேன். பின்னால் தான் கணினியில் ஆழ்ந்து போக ஆரம்பித்ததும் குறைந்து விட்டது. அப்போதும் மஹாராஜபுரம்/மணி ஐயர்/சுதா ரகுநாதன் ஆகியோரின் கச்சேரிகள் பின்னணியில் ஒலிக்கும். ஒரு சில ஆங்கிலப் பாடல்கள்/ஹிந்திப்பாடல்களுடன். நான் அதிகம் தமிழ்த்திரைப்படப் பாடல்கள் கேட்டதில்லை. ஹிந்திப்பாடல்கள் நிறையக் கேட்டிருக்கேன். இந்தப் பாடல்கள் எல்லாம் அந்த ஆண்டின் நிகழ்வுகளை நினைவூட்டின. பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

ஆமாம் வந்தே மாதரத்துடன் தொடங்கிய நாட்கள்.
சரோஜ் நாராயணஸ்வாமி, பூர்ணம் விஸ்வனாதன், பஞ்சாபகேசன்

என்று தமிழ் செய்திகள். பிறது தமிழ் விபித் பாரதி கூடவே விளம்பரங்கள்
பிறகு சமையல்,
மானிலச் செய்திகள், மதிய நேர இந்தியத் திரைப் பாடல்கள்.
நடுவே மாமியாருக்குக் கச்சேரிகள்.
தெங்கச்சி சுவாமினாதன்

எல்லாமே இனிமையான காலங்கள். பிறகு எஃப் எம் வந்துவிட்டது.
நாமும் இணையத்துக்கு வந்து விட்டோம்.
நம் எல்லோருக்கும் ஒரே ரசனை இருப்பதால் தான்
இணைந்திருக்கிறோம். நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ரேடியோ சிலோன்//
ஆமாம் அம்மா இதுதான் எங்களுக்கும் அதுவும் வீட்டில் பெரியவர்கள் வெளியில் சென்றிருந்தால் மட்டுமே!!!

ஹிந்திப்பாடல்கள் நாளை கேட்கிறேன் அம்மா

கீதா

வெங்கட் நாகராஜ் said...

சிலோன் ரேடியோவில் கேட்ட பாடல்கள் இன்றைக்கும் நினைவில்....