Blog Archive

Tuesday, October 19, 2021

கண்ணதாசன் மகள் பேட்டி | Kannadasan daughter interview

12 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ரேவதி சண்முகம் அவர்களின் யுட்யூப் கவிஞர் வீட்டுச் சமையல் ரொம்ப அழகா ப்ரெசென்ட் பண்ணுவாங்க. ரசித்துப் பார்ப்பேன் வெரி ஹோம்லி.

இதுவும் கேட்டு விட்டு வருகிறேன் அம்மா

கீதா

கோமதி அரசு said...

பேட்டி அருமை.மிக அருமையாக சொன்னார், பாடினார்.

ஆதி பாரசக்தி பாடல், கர்ணன் பாடல் பாடியது மிகவும் அருமை.

இவரின் தொடர் நிகழ்ச்சி பார்த்து இருக்கிறேன்.
ஜெயா தொலைக்காட்சியில் என்று நினைக்கிறேன். தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

சமையல் நிகழ்ச்சிகளும் மிக அருமையாக சொல்வார்.

மாதேவி said...

அவரிடம் ஒளிவு மறைவு இல்லை என நெகிழ்ச்சியாக சொல்லிக்கொண்டு போகிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இனிய காலை வணக்கம்.

அவங்க குடும்பத்தைப் பார்க்கும் போது ஏதோ
நம் குடும்பத்தைப் பார்ப்பது போல இருந்தது.
அவர்கள் கணவன் பொருந்தி உட்காராமல் எழுந்து செல்வதும்

இயல்பாக இருந்தது.

சமையல் சொல்வது எப்பொழுதுமே இனிமை.

அப்பா புகழுடையவராக இருப்பதும்
சில சமயம் பிள்ளைகளுக்கு சிரமம் தான்.

நல்ல பெண்மணி. சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்களில்
இவரும் ஒருவர். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

ஒரு மகளாக இயல்பாகத் தந்தையை
விட்டுக் கொடுக்காமல் பேசியதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.

வெகு நேர்மை .நல்ல பொறுமையான பெண்மணியாகத் தெரிகிறார்.

அவர் அன்னை அப்படி வளர்த்து இருக்க வேண்டும்.
சிறுகூடல் பட்டி மிகப் பிடித்த இடம்.
காரைக்குடியில் அப்பா இருந்த போது
சுற்றி வர இருந்த இடங்களைப் போய்ப்
பார்த்து வருவோம். அது 50 வருடங்களுக்கு
முன்னால்.
ஜயா டிவியில் வந்ததா? நான் பார்த்ததில்லை.
நம்மூரில் இருக்கும் நல்ல விஷயங்களை இப்படித்தான்
விட்டு விடுகிறேன். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
உண்மைதான் மா.
எனக்கும் அவருடைய நேர்மையான
புரிதல் பிடித்தது.
வெளிப்படையோ இல்லையோ,
புகழுடைய தந்தையுடன் அனுசரித்துப்
போவதும் சிரமம்.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

சமீபத்தில் கடந்த கண்ணதாசன் நினைவு நாளுக்கு நல்ல அஞ்சலி.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ரொம்ப இயல்பாக இருப்பது ரொம்பப் பிடித்தது. அவர் கணவரோடு இவர் பேசியது எல்லாம் ரொம்ப இயல்பு!!! அவர் கூச்சப்ப்ட்டு எழுந்து சென்றதும் எல்லாமே ரொம்ப ரொம்ப ஏதொ நம்ம வீட்டுக்குள் நடப்பது போல...என்ன ஒரு சிம்பிள். இத்தனை பெரிய கவிஞர் ...என்றாலும் அந்த சினி வெளிச்சம் இல்லாத நம் வீட்டுப் பெண்மணி போல வெகு சாதாரணமான மிக நேர்மையான பதில் சொல்லி அருமையான பேட்டி.

//அத்தான் இருங்க ஒரு நிமிஷம் இருங்க...அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க...இல்லத்தான்.....வள்ளி அத்தை பேசினாங்க...//என்ன இயல்பு...ரொம்ப ரசித்தேன். வீடும் ரொம்ப ரொம்ப சிம்பிள்!!! ஆடம்பரம் இல்லாமல்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பேட்டி. மிகப்பெரும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பற்றி அவரது மகள் மனம் திறந்து அதே சமயம் பேட்டி எடுப்பவர் கேட்கும் சில கேள்விகளுக்குக் கவிஞரை விட்டுக் கொடுக்காமல் பேசியது மிக மிகச் சிறப்பு.

ரசித்தேன்.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

அதுதான் எனக்கும் பிடித்தது. ரொம்ப இயற்கையாக இருந்தது.

இவ்வளவு ஓப்பனாகப் பேசுவது
நன்றாக இருந்தது.
பெரிய பங்களா மாதிரி இல்லாமல் சாதாரண வீடாக இருக்கிறது.
அழகான பேரன் பேத்திகள்.
ஆர்வத்துடன் எட்டிப் பார்க்கும் விதம் .
அலட்டாமல் சாதாரண இல்லத்தரசியாகப்
பேசுவது எல்லாமே நலம்.
நீங்களும் ரசித்ததே நலம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மனம் திறந்து அதே சமயம் பேட்டி எடுப்பவர் கேட்கும் சில கேள்விகளுக்குக் கவிஞரை விட்டுக் கொடுக்காமல் பேசியது மிக மிகச் சிறப்பு."


@ துளசிதரன்,
அன்பின் துளசி எனக்கும் அவர் இயல்பாகவே தந்தையை விட்டுக்
கொடுக்காமல் பேசியது மிகவும் பிடித்தது,

காணொளியை முழுவதும் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சிமா.
நன்றி.





வல்லிசிம்ஹன் said...

சமீபத்தில் கடந்த கண்ணதாசன் நினைவு நாளுக்கு நல்ல அஞ்சலி."

அதே தான் ஸ்ரீராம். அதற்காகத் தான் பதிந்தேன் மா. நன்றி.