Blog Archive

Saturday, October 30, 2021

தீபாவளி லேகியம்!


வல்லிசிம்ஹன்

சும்மா தீபாவளி வாசனைக்காகப் பதிகிறேன். எல்லோரும் செய்யும் மருந்துதானே.:)

ஒரு கிலோ அளவுக்கு  ஒரு டப்பா நிறைய சுருள சுருள  லேகியம் செய்து கொண்டு  போனபோது,
சிங்கத்தின் பாட்டி கிண்ணத்தில் வைத்துக் கொண்டு ரசித்தார். இரண்டு  நாட்கள் கழித்து திருச்சிக்குத் திரும்பினோம். 

புது ஃபியட் காரின் அழகை ரசித்தவர்,

கையில் போனஸ் பணம்  ஏதாவது மீதி  இருக்கா என்று சிரித்துக் கொண்டே 
கேட்டார்.:)



வீடு நிறைய உறவினர் கூட்டாம். அவரவர் வீட்டில் 
தீபாவளி கொண்டாடி
பலகாரங்களையும் எடுத்துக் கொண்டு வருவார்கள்.

இளம் வயதில் திருமங்கலத்தில் 
புத்தாடையுடன்  எல்லோர் வீட்டுக்கும் பட்சணங்கள் எடுத்துப்
போன நினைவுகள் வரும்.
இந்த ஊரிலும்  இந்தத் தலைமுறையினர் 
எல்லாவற்றையும் கடை பிடிக்கின்றனர்.

அனைவரும் நலமுடன் மகிழ்ந்திருக்க வேண்டும்.

22 comments:

கோமதி அரசு said...

மிக அருமையான தீபாவளி வாசனை.
நினைவுகள் அருமை. உறவுகளுடன் தீபாவளி கொண்டாடியது இனிமையான நினைவுகள்.


என் மாமியார் சொல்வது போல சொல்கிறார்.
அவர்கள் தான் சொல்வார்கள் குழந்தைகளை நினைத்து கொண்டு ஆசையாக பொறுமையாக செய்யனும் அப்போ நல்லா வரும் என்று.

லேகியம் அருமை.

ஸ்ரீராம். said...

லேகிய நினைவுகள், தீபாவளி நினைவுகள்.

Geetha Sambasivam said...

லேகியம் காணொளியைப் பின்னர் பார்க்கிறேன். பதிவு நன்றாக இருப்பதோடு பழைய தீபாவளி நினைவுகளையும் கிளறி விட்டது.

நெல்லைத்தமிழன் said...

தீபாவளி லேகிய வாசனை தீபாவளி நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது.

சமீப காலங்களில் எல்லோரும் டப்பாச்செட்டி இல்லை மற்ற கடைகளில் தீபாவளி மருந்துப் பொடியை வாங்கி களறி வைத்துவிடுவதால் வாசனையும் நினைவுகளும் இல்லாமல் போய்விடுகிறதோ?

ஶ்ரீஜெயந்தி (ஏகப்பட்ட பட்சணம்.. ஆனால் நடுராத்திரி எழுப்பித்தான் கொடுப்பார்கள்), தீபாவளி பட்சணங்கள், காரடையான் நோன்பு கொழுக்கட்டை (அம்மா, பசு மாடுகளுக்குப் போட்டுவிட்டுவா என முதலில் அவைகளுக்குக் கொடுப்பா. நான் பசுமாட்டைத் தேடிப் போகணும்) , ஆவணிஆவிட்ட அப்பம்... என பண்டிகைகள் பட்சண வாசனையைக் கொண்டுவந்தன. தீபாவளி புது டிரெசுக்கு மஞ்சள் தடவி வைப்பது என்றெல்லாம் அமர்க்களப்படும்.

இப்போ எல்லாம் எல்லாக் காலங்களிலும் நினைத்தபோதெல்லாம் கிடைத்துவிடுகிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...
This comment has been removed by a blog administrator.
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கும்பகோணத்தில் இருந்தபோது இந்த லேகியத்தை நாங்கள் உட்கொண்டுள்ளோம். ஓர் அவசியமான லேகியம், அதுவும் இதுபோன்ற விழா நாள்களில்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா அம்மா இப்பவே தீபாவளி வாசனை வந்துவிட்டதே. சாந்தா பாட்டி செமையா செய்யறாங்க. கலக்கறாங்க!!! அழகாகச் சொல்றாங்க. அவங்க ப்ரெசென்டேஷன் எனக்குப் பிடித்தது.


நான் சமீபத்தில்தான் லேகியம் செய்தேன். இதே தான் நானும் திப்பிலி வகைகள் எல்லாம் போட்டுத்தான் செய்வேன். தனியாவும் போடுவதுண்டு. மெயினாக ஓமம். கடைசியாக அஆறிய பிறகு கொஞ்சம் தேன் சேர்ப்பதுண்டு நம் வீட்டில் அப்புறம் கிளறும் போது ஆரஞ்சு ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ் கொஞ்சம் சேர்ப்பதுண்டு.

பண்டிகை கிடையாதே இந்த வருடம். அதனால் கொஞ்ச நாள் முன்னர். செய்தேன்

நீங்களும் உங்க லேகியம் ரெசிப்பி போடலாமே அம்மா...

கீதா



Thulasidharan V Thillaiakathu said...

கருத்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மா

கீதா

மாதேவி said...

இனிய தீபாவளி அனுபவம்.

உங்கு இளையதலைமுறையினர் கடைப்பிடிப்பது அறிந்து மகிழ்ச்சி.

எங்களுக்கும் சிறுவயது நினைவுகள்தான்.இப்பொழுது பெரிய கொண்டாட்டங்கள் இல்லை.ஓரிரு பட்சணங்களுடன் சரி.

Geetha Sambasivam said...

காணொளியைப் பார்த்தேன். குச்சி குச்சியா இருப்பதைத் தான் நாங்க "கண்டந்திப்பிலி" என்போம். ரசம் வைப்போம். அரிசி மாதிரி இருப்பதைத் "திப்பிலி" "அரிசித் திப்பிலி" என்போம். இவர் மாற்றிச் சொல்கிறார்! !!!!!!!!!!!!!!!!!!!!!! என்னவோ! இத்தனை சாமான்களும் நானும் போடுவேன் ஓமம் தவிர்த்து. கூடவே சோம்பு கொஞ்சம், பட்டை கொஞ்சம் ஜாதிபத்திரி, கிடைத்தால் பறங்கிப்பட்டை எல்லாமும் போட்டுக்கலாம்.

நெல்லைத் தமிழன் said...

//தனியாவும் போடுவதுண்டு. // -இவங்க கொத்தமல்லி விரையைச் சொல்றாங்களா இல்லை வேறு அர்த்தத்திலா? separateஆக

Geetha Sambasivam said...

தனியா/கொ.விதை நாங்கல்லாம் போடுவது உண்டு. ஆகவே அதைத் தான் சொல்லி இருக்கிறார்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. தீபாவளி லேகியத்துடன் பண்டிகை ஆரம்பமாகி விட்டது.அம்மா வீட்டிலிருந்த போது இந்த மாதிரி மருந்து சாமான்கள் வாங்கி வீட்டிலேயே லேகியம் தயாரிப்போம்.அந்த காலங்கள் மறக்க முடியாதவை.இப்போது வரை தீபாவளியன்று காலையில் எழுந்ததும், தலைக்கு எண்ணேய் வைத்துக் கொள்ளும் (மங்களாஸ்னானம்) முன் மனைப்பலகையில் அமர்ந்து லேகியம் ஒரு ஸ்பூன் சாப்பிடும் பழக்கத்தை விடாது தொடர்கிறோம். பாரம்பரியமான பண்டிகை நினைவுகளை தங்கள் பதிவு நினைவு படுத்துகிறது.

காணொளியில் வரும் அம்மாவின் பல உணவு செய்முறைகளையும் பார்த்து ரசித்திருக்கிறேன். தெளிவான விளக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

""என் மாமியார் சொல்வது போல சொல்கிறார்.
அவர்கள் தான் சொல்வார்கள் குழந்தைகளை நினைத்து கொண்டு ஆசையாக பொறுமையாக செய்யனும் அப்போ நல்லா வரும்/////////////////

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

இதுதான் உண்மை மா.
ஒப்புடன் முகம் மலர்ந்து மொழி தான்.
என் அம்மாவும் இதை வலியுறுத்துவார்..
நம் நாட்டு மருந்துகள் நன்மையே
செய்யும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
பட்சணங்களுக்கு முன் லேகிய வாசனை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

@ கீதா சாம்பசிவம்,

''லேகியம் காணொளியைப் பின்னர் பார்க்கிறேன். பதிவு நன்றாக இருப்பதோடு பழைய தீபாவளி நினைவுகளையும் கிளறி விட்டது.""

நம் வாழ்வு இது போன்ற வாசனைகளுடன் பிணைந்தது.

''காணொளியைப் பார்த்தேன். குச்சி குச்சியா இருப்பதைத் தான் நாங்க "கண்டந்திப்பிலி" என்போம். ரசம் வைப்போம். அரிசி மாதிரி இருப்பதைத் "திப்பிலி" "அரிசித் திப்பிலி" என்போம். இவர் மாற்றிச் சொல்கிறார்""

எனக்கும் இது தான் தோன்றியது. அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி
இதுதான் தெரியும். இவை இல்லாமல் மருந்து செய்ததும் இல்லை.

இந்த ஊரில் ஒரு திப்பிலியும் இல்லை.
கொத்தமல்லி,சுக்கு சீரகம் இவற்றுடன் செய்ய வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

"நெல்லைத்தமிழன் said...
தீபாவளி லேகிய வாசனை தீபாவளி நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது.

சமீப காலங்களில் எல்லோரும் டப்பாச்செட்டி இல்லை மற்ற கடைகளில் தீபாவளி மருந்துப் பொடியை வாங்கி களறி வைத்துவிடுவதால் வாசனையும் நினைவுகளும் இல்லாமல் போய்விடுகிறதோ?"

அன்பு முரளிமா,
நான் அங்கே இருக்கும் வரை மாடவீதி ஸ்ரீவித்யா ஸ்டோர்சில் எல்லா மருந்துகளும் கிடைக்கும். ஊற வைத்து அரைத்து
வெல்லம் கரைய விட்டு அரைத்ததைச் சேர்த்து,
நல்ல நெய் விட்டு செய்வேன்.
நிறைய நாட்கள் வரும். போக வர சாப்பிடு வார்கள்.

நாம் மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் உற்சாகம்
குழந்தைகளையும் தொற்றும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,

''தீபாவளி பட்சணங்கள், காரடையான் நோன்பு கொழுக்கட்டை (அம்மா, பசு மாடுகளுக்குப் போட்டுவிட்டுவா என முதலில் அவைகளுக்குக் கொடுப்பா. நான் பசுமாட்டைத் தேடிப் போகணும்) , ஆவணிஆவிட்ட அப்பம்... என பண்டிகைகள் பட்சண வாசனையைக் கொண்டுவந்தன. தீபாவளி புது டிரெசுக்கு மஞ்சள் தடவி வைப்பது என்றெல்லாம் அமர்க்களப்படும்.''
எனக்கென்ன ஆச்சரியம் தெரியுமா, என் வீட்டில் நான் செய்ததை உங்கள் வீட்டில்
நீங்கள் செய்திருக்கிறீர்கள்:))

நல்ல தீபாவளி எல்லோருக்கும் நன்மை செய்யட்டும்.

தனியான்னு கொத்தமல்லி விரையைத்தான் சொல்கிறார்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முனைவர் ஐயா,
வணக்கம்.

நல் தீபாவளி வாழ்த்துகள்.

'உட்கொண்டுள்ளோம். ஓர் அவசியமான லேகியம்,
அதுவும் இதுபோன்ற விழா நாள்களில்.''

நீங்களும் லேகியம் உட்கொண்டிருப்பது மகிழ்ச்சி.
நல்லதொரு மருந்து அது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன்,

''நான் சமீபத்தில்தான் லேகியம் செய்தேன். இதே தான் நானும் திப்பிலி வகைகள் எல்லாம் போட்டுத்தான் செய்வேன். தனியாவும் போடுவதுண்டு. மெயினாக ஓமம். கடைசியாக அஆறிய பிறகு கொஞ்சம் தேன் சேர்ப்பதுண்டு நம் வீட்டில் அப்புறம் கிளறும் போது ஆரஞ்சு ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ் கொஞ்சம் சேர்ப்பதுண்டு.

பண்டிகை கிடையாதே இந்த வருடம். அதனால் கொஞ்ச நாள் முன்னர். செய்தேன்''

பண்டிகை இல்லாவிட்டால் போகிறது.
மனம் ஒளி பெறட்டும். நீங்கள் இருக்கும் இடம்
வெளிச்சத்துடன் இருக்கும்.ஆரஞ்சு ஜூஸ் சேர்ப்பீர்களா!!!!!!!!!!
அட. அப்போ காரம், புளிப்பு ,தித்திப்பு எல்லாம் சேர்ந்துவிடும்.

நான் செய்யும் லேகியம் எளிமை.
செய்யும் போது படம் எடுத்து அனுப்புகிறேன் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.
"எங்களுக்கும் சிறுவயது நினைவுகள்தான்.இப்பொழுது பெரிய கொண்டாட்டங்கள் இல்லை.ஓரிரு பட்சணங்களுடன் சரி."

பழைய நாட்கள் மாதிரி இப்போது இல்லை.
எல்லாமே சுருங்கி விட்டது.
அதனால் என்ன
வருடம் முழுவதுமே எல்லாம் கிடைக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

தீபாவளி லேகியம் எனக்கும் பிடிக்கும்.

இனிய நினைவுகள்.