Blog Archive

Monday, November 01, 2021

முதுமையே வா வா ...புத்தகம்.


வல்லிசிம்ஹன்படத்தில் இருக்கும் தம்பதிகள் எனக்குத் தெரிந்தவர்களே .

பெயர்கள் அவசியம் இல்லை. 
 இந்தப் புத்தகத்தை வாங்கின உடனேயே உறவினரிடம் 
கேட்ட போது,
அறுபதிகளிலேயே விளம்பரப் படங்களில்
அவர்கள் நடித்திருப்பதாகவும் 
நல்ல அன்யோன்ய தம்பதிகளாக நிஜ 
வாழ்க்கையிலும் இருப்பதனால் அவர்களுக்கு
நல்ல பெயர் என்றும் தெரிய வந்தது,


ஹார்லிக்ஸ், தேனீர், முதியோர் இல்லம்
என்று நிறைய விளம்பரங்களில்
வந்தார்கள். இந்த நூலை எழுதிய  டாக்டர் திரு வி எஸ் .என் 
அவர்களும் எங்களுக்குத் தெரிந்தவர்.

அடையாறு வி ஹெச் எஸ் மருத்துவமனையில் 
ஜிரியாடிரிக்ஸ் என்னும் முதியவர்களுக்கான
பகுதியில் அவரைச் சந்தித்த நினைவு.


புத்தகம் முழுவதும் முதியோர்களுக்கு
அறிவுரை. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மனப் பாதிப்புகள்,

நோய்களின் அறிகுறி, உடனடியாக 
அதைக் கண்டறிதல்,  மருத்துவ மனை அணுகுதல்,
நோய்களுக்கு ஆகும் செலவு, அரசு மருத்துவ மனையின்
அனுகூலங்கள்,

வீட்டில் நோயுற்றவர்களைக் கவனிக்கும் முறை,
அதற்குத் தனி உதவியாளர்களை அமைக்க 
விசாரிக்க வேண்டிய அலுவலகங்கள், ஏஜன்சிகள்

ஒன்று விடாமல் அத்தனை விவரங்களையும் கேள்வி பதில் முறையில்
விவரித்திருக்கிறார் டாக்டர் நடராஜன்.

வி ஹெச் எஸ் மருத்துவமனை தோன்றக் காரணமாக இருந்த
உன்னத மனிதர்  டாக்டர் சஞ்சீவியும் நினைவுக்கு வந்தார்.

இத்தனை சமூக நலங்களும் எளியவர்க்கும் சென்றடைய
உழைத்தவர் அவர்.

விகடன் பிரசுரமான இதைச் சிறிது சிறிதாகத் தான் 
படித்தேன்.

புத்தகத்தின் விலை 190 ரூபாய்.
கொடுக்கும் பலன் அளவிட முடியாதது.
வீட்டில் முதியவர்கள் இருந்தால், தாங்களே
முதியவர்களாக  இருந்தால்,
அண்டை அசலில் இருப்பவர்களுக்கு
உதவ விரும்பினால் படித்து அறிந்து கொள்ளலாம்,.

யாருக்காவது பலன் கொடுத்தால் மகிழ்ச்சி.





18 comments:

ஸ்ரீராம். said...

​மருத்துவர் நடராசன் பெயர் பரிச்சயமானது போலதான் தோன்றுகிறது. மிகவும் உபயோகமான புத்தகம் என்றும் தெரிகிறது.

Geetha Sambasivam said...

அருமையானதொரு புத்தக அறிமுகம். மருத்துவர் நடராஜனின் இந்தக் கேள்வி/பதில் தொகுப்பைப் படிச்சிருக்கேன் என்றாலும் புத்தக வடிவில் படிக்கவில்லை. வாலன்ட்ரி ஹெல்த் சென்டரின் சேவைகள் அளப்பரியது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்லதொரு நூல் அறிமுகம். நீங்கள் தந்த தகவல்களும் பயனுள்ளதாக இருக்கும். அட்டைப் படத்தில் உள்ள தம்பதிகளை அறிந்ததில்லை. ஒருவேளை அந்த விளம்பரங்களைப் பார்த்தால் நினைவுக்கு வரலாம். இந்த நூலின் தலைப்பும் நன்றாக உள்ளது.முதுமையை வரவேற்கும் மனப்பான்மை இருந்து விட்டால், முதுமையை கண்டு அச்சமுற தேவையில்லை.

"உனக்கென்ன கவலை நீயொரு ராஜா" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

பயனுள்ள நூல் அறிமுக பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா வி ஹெச் எஸ் அருமையான மருத்துவமனை. அதுவும் கொஞ்சம் மத்தியதரக் குடும்பங்கள் அதற்கும் சற்று கீழான குடும்பங்கள் போன்றோருக்கு வரப்பிரசாதம். நல்ல மருத்துவர்கள். நல்ல பரிசோதனை கூடங்கள்.

வீட்டில் முதியவர்கள் இருந்தால், தாங்களே
முதியவர்களாக இருந்தால்,
அண்டை அசலில் இருப்பவர்களுக்கு
உதவ விரும்பினால் படித்து அறிந்து கொள்ளலாம்,.//

நிச்சயமாக....நல்ல நூல். அறிமுகத்திற்கு மிக்க நன்றி அம்மா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் பயனுள்ள நூல்.

படத்தில் உள்ளவர்களை விளம்பரங்களில் பார்த்த நினைவு இருக்கிறது

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

படத்தில் இருக்கும் தம்பதிகள் எனக்குத் தெரிந்தவர்களே .//

ஓ!!

அம்மா படம் பார்த்ததுமே எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு வாசித்து வரும் போது நீங்கள் சொல்லியிருப்பதை வாசித்ததும் புரிந்துவிட்டது விளம்பரம்!!

அப்போ நிஜ வாழ்விலும் தம்பதியர்தானா!! நான் அவர்கள் நிஜ வாழ்விலும் தம்பதியர் என்று நினைக்கவில்லை.

//நோய்களின் அறிகுறி, உடனடியாக
அதைக் கண்டறிதல், மருத்துவ மனை அணுகுதல்,
நோய்களுக்கு ஆகும் செலவு, அரசு மருத்துவ மனையின்
அனுகூலங்கள்,

வீட்டில் நோயுற்றவர்களைக் கவனிக்கும் முறை,
அதற்குத் தனி உதவியாளர்களை அமைக்க
விசாரிக்க வேண்டிய அலுவலகங்கள், ஏஜன்சிகள்//

நல்ல விஷயங்கள் இது மிக மிக அவசியம்.

கீதா


கீதா

மாதேவி said...

நல்லதோர் அறிமுகம்.

கோமதி அரசு said...

மருத்துவர் நடராஜன் அவர்கள், பேட்டிகள், கட்டுரைகள் இவற்றை படித்து இருக்கிறேன்.
என் பழைய முதுமை கட்டுரைகளில் அவர் சொன்னதை பகிர்ந்து இருக்கிறேன்.
மிகவும் அருமையாக பேசுவார், சொல்வார். ராஜ் தொலைக்காட்சியில் மேல் மருவத்தூர் நிகழ்ச்சியில் முதியவர்களுக்கு கண் அறுவை சிகிட்சை முகாம் நடக்கும் அந்த விழாவில் முதுமையை பற்றி பேசுவார் கேட்டு இருக்கிறேன்.

//முதியவர்களுக்கான
பகுதியில் அவரைச் சந்தித்த நினைவு.//

அவர் தனியாக உயர் படிப்பு முதுமையியல் படித்து இருக்கிறார். அவர்களுக்குதான் வைத்தியம் பார்க்கிறார்.

//புத்தகம் முழுவதும் முதியோர்களுக்கு
அறிவுரை. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மனப் பாதிப்புகள்,

நோய்களின் அறிகுறி, உடனடியாக
அதைக் கண்டறிதல், மருத்துவ மனை அணுகுதல்,
நோய்களுக்கு ஆகும் செலவு, அரசு மருத்துவ மனையின்
அனுகூலங்கள்,//


அருமை.

முதியவர்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டும், முதுமையை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அருமையாக பேசுவார்.

நல்ல பகிர்வு அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
ஏழு எட்டு வருடங்களுக்கு முன் வாங்கிப் படித்த
புத்தகம்.
அதை விமரிசனம் செய்யத் தோன்றவில்லை.
முதியோர் நலம் பற்றி உறவினர்களிடையே
பேச்சு வந்த போது,
யாருக்குமே முதியோர் இல்லம் செல்வதைப்
பற்றி யோசனை இல்லை.
எதற்காக இருக்கும் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலையையே
எடுத்தார்கள்.

மன பலம் ,பண பலம், ஆள் பலம்
எல்லாமே இருப்பவர்கள் அவர்கள்.
இப்போது இந்தப் புத்தகத்தைப் படித்ததும் அவர்களது நிலை
பிடிபட்டது.கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
தற்காலத்திய, எந்தக் காலத்துக்கும் உகந்த நூல்.

எத்தனை உண்மைகளை விளக்குகிறார்!!!
முக்கியமாக ஆண்களுக்கான தொந்தரவுகளையும்
சொல்லும்போது மனம் வருந்துகிறது.

எப்பொழுதுமே உடல் நலத்தில் கவனம் செலுத்தாத கணவர்கள்,
அதை அறியாத மனைவிகள்,
இருவருக்கும் இடையே இருக்க வேண்டிய கலந்துரையாடல்
என்று மிக முக்கியமான தகவல்களை
அறியக் கொடுக்கிறார்.
இப்போது கூட நெருங்கிய தோழி ஒருவர்,

வயதான கணவரைக் கவனித்துக் கொள்ள வேண்டிய தேவையில்
இருக்கிறார். சென்னையில் இருப்பதால்
உறவுகளின் உதவி இருக்கிறது. அவர்களுக்குக்
குழந்தைகளும் இல்லை.
இறைவனின் கருணையே நம்மைக் காக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.
நல்ல புத்தகம் அம்மா. மீள் வாசிப்பில்
நிறைய விஷயங்களை அறிகிறேன்.
அந்தத் தம்பதியினரில் மனைவி இருக்கிறார்,.

மிக சந்தோஷமான தம்பதிகள்.
எல்லா உறவினர்களும் சேர்ந்து ஒரு காலனியாகக்
கட்டி வசித்து வந்தார்கள்.

அனைவருக்கும் பொருத்தமாக இப்படி அமைவது
சிரமம் தான். எதிர்காலம் அனைவருக்கும்
சுகமாக அமைய என்னவெல்லாம் திட்டம் இட வேண்டி இருக்கிறது!!!
திட்டமிட்டாலும் இறைவன் கருணையும்
துணை இருந்தால் மட்டுமே நல்ல வாழ்க்கை
அமையும்.
படித்துக் கருத்து கூறினது மகிழ்ச்சி மா.உனக்கென்ன குறைச்சல் பாடல் எனக்கும் மிகப் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

@ கீதா ரங்கன்,
நலமுடன் இருங்கள்.

"அம்மா வி ஹெச் எஸ் அருமையான மருத்துவமனை. அதுவும் கொஞ்சம் மத்தியதரக் குடும்பங்கள் அதற்கும் சற்று கீழான குடும்பங்கள் போன்றோருக்கு வரப்பிரசாதம். நல்ல மருத்துவர்கள். நல்ல பரிசோதனை கூடங்கள்."
ஆமாம் மா. எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. மாமியாரின் தங்கைக்கு
பக்க வாதம் வந்த போது,
என்னை அவர் அருகில் இருக்கச் சொல்லி இருந்தார்கள்.

மத்திய அரசில் வேலை செய்பவர்களுக்கும்,
வசதி குறைந்தவர்களுக்கும் இது ஒரு சொர்க்கம் தான்.

நல்ல கவனிப்பு. சிறந்த மருத்துவர்கள்.1981ஆம் வருடம் கண் முன் வந்து போகிறது.

வல்லிசிம்ஹன் said...

@ துளசிதரன்,

ஆமாம் மா. தமிழ் நாட்டு விளம்பரங்களில் வந்தார்கள்.
10,14 வருடங்கள் முன்பிருக்கலாம்.

மாமி லக்ஷணமாக இருப்பார்.
நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

@ கீதா ரங்கன்,
ஆமாம் மா. உற்சாகமான தம்பதியர்,
நீங்களும் பார்த்திருக்கிறீர்களா.
நெடு நாட்களுக்கு முந்திய விளம்பரங்களே என்று எனக்கு

சந்தேகமாக இருந்தது.
வயதானாலும் நல்ல படியாக அடிஷனலாகச் சம்பாதித்தார்கள்!!!
அது அவர்களுக்குத் தேவை இல்லை.
இருந்தாலும் ஒரு பொழுது போக்கு.
வி எஸ் நடராஜன் அவர்களிடம் சிங்கத்தின் அக்கா
கன்சல்ட் செய்திருக்கிறார்கள்.
நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி. மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
"முதியவர்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டும், முதுமையை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அருமையாக பேசுவார்."

ஆமாம் மா. அவர் புத்தகம் தான் தெரியும்.
அவரை வாலண்ட்டரி ஹெல்த் சர்வீசில்
இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். அப்போது வயதில் குறைந்தவர்
ஆகத்தான் இருந்தார்.

இந்தப் புத்தகத்தில் எல்லாமே நல்ல அறிவுரைகளாகச் சொல்லி
இருக்கிறார்.
எத்தனையோ அறியாமல் இருந்திருக்கிறேன்
என்று புரிகிறது.நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறீர்களா.
நான் பார்த்ததே இல்லை.
இந்தப் புத்தகத்தை இப்பொழுது மீள் வாசிப்பு செய்ய
வாய்ப்பு கிடைத்தது.
மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு நூல் அறிமுகம் அம்மா. இணைய வழி வாங்க முடியுமா என்று பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.

நிதானமாகப் படிக்கும் போது
நல்ல விஷயங்களை அறிய முடிகிறது.
ஆண்,பெண் இருவரும் முதுமையின் வாயிலை நெருங்கும் போது
அறிய வேண்டிய செய்திகள்.
கவன்ம் இருந்தால் நல்ல வாழ்வைப்
பெறலாம் என்ற நம்பிக்கையை
ஊட்டும் புத்தகம். நன்றி மா.