Blog Archive

Saturday, October 30, 2021

நகை சுவை நீதி








வல்லிசிம்ஹன்

வெள்ளிக்கிழமை பதிவாக எங்கள் ப்ளாகில் வந்த பாடல்

பழைய படங்களின் நினைவுகளையும் அதில் வரும் நேர்மையான
நகைச்சுவை காட்சிகளையும்

மனத்தில் கொண்டு வந்தது. 
அனேகமாக  எல்லோரும் பார்த்து ரசித்த
காட்சிகளாக இருக்கும்.
தங்கவேலு காமெடி காட்சிகள்
தப்பில்லாத சொற்களோடு சுவையாக
இருக்கும்.

இந்தப் படத்தில்  வரும் 'உன்னைத் தூக்கி வெய்யில்ல போட"
வரி அப்போது மிகப் பிரபலம்.
ரசிக்க சில காட்சிகள்

17 comments:

ஸ்ரீராம். said...

உன்னைத்தூக்கி வெயில்ல போட போல "அட யார்றா இவன் செய்யற வேலைய சொல்ல விட மாட்டேங்கறானே..என்பதும்!  எல்லாமே ரசித்த காட்சிகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்:)

அது கல்யாணப் பரிசு இல்லையா.:)

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கவேலுவின் அலட்டாத நகைச்சுவை காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட படம் பார்த்ததாக நினைவில்லை. ஆனால், நகைச்சுவை காட்சிகள் வானொலியில், கேட்டு ரசித்து, பின் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன்.வார்த்தைகளை கொண்டு முக அசைவின் மூலமாக மட்டும் நகைச்சுவையை தரும் நல்ல நடிகர். இப்படியான நகைச்சுவை பொழுது போக்குகளும், நம் வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவத்தை தருவதுதானே...! நீங்கள் பகிர்ந்த காணொளிகளை பிறகு நிதானமாக கேட்டு ரசிக்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத்தமிழன் said...

தங்கவேலு காமடி தரமாக இருக்கும். அறச் சொல்லோ ஆபாச வார்த்தைகளோ உபயோகிக்க மாட்டார்

Geetha Sambasivam said...

ஆஹா! அருமையான பகிர்வுக்கு நன்றி. தங்கவேலுவின் நகைச்சுவைக்கு முன்னால் நாகேஷ் ஒருத்தரால் தான் நிற்க முடிந்தது. :)))) அறச் சொற்களைப் பேசவே மாட்டார்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசித்த காட்சிகள்...

கோமதி அரசு said...

தங்கவேலு நகைச்சுவையிலும் நல்ல கருத்துக்களை சொன்னது தெய்வபிறவி .
தெய்வபிறவி படத்தில் கதாகாலட்சேப பாடலும் நன்றாக இருக்கும்.

பூவா தலையா படம் நாகேஷ் , வரலட்சுமி காட்சிகள் நன்றாக இருக்கும்.

பார்த்து ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

@ Kamala Hariharan,

"தங்கவேலுவின் அலட்டாத நகைச்சுவை காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட படம் பார்த்ததாக நினைவில்லை. ஆனால், நகைச்சுவை காட்சிகள் வானொலியில், கேட்டு ரசித்து, பின் தொலைக்காட்சியிலும்"


வானொலியில் கேட்டதைத்தான் இப்போது
இணையத்திலும் தேடினேன் அன்பு கமலாமா.


வானொலி தானே அந்த நாட்களில்
முதலான கம்யூனிகேஷன் ஆக இருந்தது.

மயில்வாஹனன் முதல் கேட்டுக் கொண்டு
வந்திருக்கிறோம்.
ஞாயிற்றுக் கிழமை லண்டன் கந்தையா கேட்ட நினைவு இன்னும்
மனதில்.
நகைச்சுவை நேரம் கல்யாணப் பரிசு, அடுத்த வீட்டுப் பெண்
தங்கவேலு காமெடிகள் வரும்,
அந்த நினைவில் தான் இந்தப் பதிவையும் ஆரம்பித்தேன். ரசித்துக் கேட்பதற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ அன்பு முரளி மா,
அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தேகம் இல்லாமல் பதட்டப் படாமல்

இவர் காட்சிகளை ரசிக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
அதனால் தான் இவரையும் NSK யையும் மிகப் பிடிக்கும்.

சுத்தமான நகைச்சுவை ,சிரிக்க சிந்திக்க.
அற்புதமான நடிகர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
உண்மைதான் .அவர் நடிக்கும் அத்தனை
நகைச்சுவை காட்சிகளும்

சிரிக்க வைக்கும். எங்க வீட்டுப் பிள்ளையில் கூட
அந்த யந்திரங்களுக்கு நடுவில்
நடுங்கிக் கொண்டே நடப்பது
பார்க்கவே சிரிப்பாக இருக்கும்.

நீங்களும் ரசித்ததுதான் எனக்கு மகிழ்ச்சி மா.
நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இந்தப் படங்கள் பார்த்ததில்லை. நகைச்சுவைக் காட்சிகளும் பார்த்ததில்லை. பார்க்கிறேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இப்படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன் நகைக்சுவையையும் ரசித்திருக்கிறேன்.

இப்போதும் ரசித்தேன் மிக்க நன்றி வல்லிம்மா

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

@கீதா ரங்கன் ,
நேரம் கிடைக்கட்டும் பார்த்து மகிழுங்கள.:)

வல்லிசிம்ஹன் said...

@Thillaiyakaththu Thulasidharan,

இந்தப் படங்கள் எல்லாரும் பார்த்து மகிழ்நததாகத் தான் இருக்கும் என்று
நினைத்தேன். மீண்டும் கண்டு ரசித்தது சந்தோஷம் மா.

வெங்கட் நாகராஜ் said...

தங்கவேலுவின் நகைச்சுவை என்றுமே ரசிக்கக் கூடியவை. மாலையில் காணொளிகளைக் காண்பேன்.