Sunday, October 24, 2021

முன் கதை.லிஸா மார்ட்டின்.

வல்லிசிம்ஹன்

இதற்கு முன் படிக்காதவர்களுக்கு
லிஸா மார்ட்டின் கதையின் முன் சுருக்கம். 

ஒரே வருடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வளர்ந்து 
15 வயது முதல் காதலித்து

அதன் விளைவாக ஒரு குழந்தைக்கும் பெற்றோர் 
ஆனவர்கள்.
பிறந்த குழந்தைக்குத் தந்தையாக அறிமுகம்   ஆனது
க்ரிஸ்டோஃபர் எவரார்ட்.  
வடகரோலைனா ராலே பல்கலைக் கழகப் பேராசிரியர்.

மூன்று வயது முதல் மிச்சிகனில் வளரும் கேத்தி 
தந்தையை நோய்க்குப் பறி கொடுத்துத் தாயின் அரவணைப்பில் வளர்கிறாள்.

தாயின் வாழ்வில் திடீரென வந்து சேரும் மார்ட்டின் வில்லியம்ஸ்
அவளுக்கு முள்ளாகத் தெரிகிறான்.
தன் தாய்க்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு இன்னதென்று
தெரியாமல்  கொதித்துப் போகிறாள்.தாத்தா ஹாரி ,பாட்டி லில்லி இருவரும் அவளுக்கு மிக ஆதரவு.
தாய் தன் தொழில் முறையில்,
துணிமணிகள் வாங்க பல நாடுகளுக்குப்
போய் வரும்போதெல்லாம் அவர்கள் கவனிப்பில் 
வளர்ந்தவளுக்கு, அதே போலக் கட்டுப்பாடான

நினைப்புகளே பழக்கம். தான் பெரிய செல்வந்தரின் சொத்துக்கு ஒரே'
வாரிசு என்ற அகந்தையையும் ,தாத்தா அவளுள்
விதைத்திருந்தார்.
இரண்டும் கெட்டான் வயதில், தாய் தனக்கு மட்டுமே
சொந்தம் என்ற உறுதியில், மார்ட்டின்
குறுக்கிடும்போது,
இனம் புரியாத வெறுப்பு அவளைத் திண்டாட வைக்கிறது.

தன்னுடைய ஆண் நண்பன் Nick என்ற நிக்கோலஸ் இடம்
நெருங்கி ஆறுதல் தேடுகிறது. 

லிஸா தன் தாய், தந்தை,மகள் இவர்களை எப்படி சமாளிக்கப்
போகிறாள் என்பதே இனி வரும் கதை.

12 comments:

கோமதி அரசு said...

முன் கதை சுருக்கம் மிக அருமை.


மனித உணர்வுகளை நன்றாக சொல்கிறீர்கள்.

பாடல் பகிர்வும் நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

எழுதுவதே இப்பொழுது பாரமாகி விட்டது.
இரண்டு தோள்களும் நல்ல வலி.
சரி, இந்த கதை விளக்கமாவது கொடுத்துவிடலாம் என்று
பதிவிட்டேன்.
ஆரம்பித்ததை முடிக்க வேண்டுமே!!!!
வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.

அடுத்த வாரத்துக்குள் கதையை முடிக்கப்
பார்க்கிறேன்.
குளிர் காலத்தில் பத்திரமாகத் தான் இருக்க வேண்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

முன்கை சுருக்கம் அருமையாக இருந்தது. நான் நீங்கள் தந்த சுட்டி வாயிலாக படித்து விட்டேன்.இருந்தாலும் உங்கள் பாணியில் முன்கதை சுருக்கம் விபரமாக உள்ளது. உங்கள் உடல் நலம் பார்த்துக் கொண்டு கதையின் அடுத்தப் பகுதியை மெள்ள பதிவிடுங்கள். தன் அம்மாவின் உணர்வுகளை கேத்தி புரிந்து கொள்வாளா? தாத்தா வளர்ப்பில், தாத்தாவை போல் இல்லாமல் அம்மாவுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும்.. பார்க்கலாம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan said...

ஆரம்பத்தில் முன் கதை என வந்திருக்க வேண்டும். தட்டச்சு பிழை வந்து விட்டது. திருத்திப் படிக்கவும். நன்றி சகோதரி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

குளிரின் தீவிரம் அதிகரிக்கிறது.
அது எலும்பைப் பதம் பார்க்கிறது.
கணினியில் எழுதுவதற்கும் கைகளை மேஜையில்
வைத்துக் கொள்ள வேண்டி வருகிறது:)

இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை எழுதினால்
போச்சு,.
முன் கை நீண்டால் முழங்கை நீளும்
என்று சொல்வார்கள் இல்லையா.!!
உங்கள் எண்ணம் வெளிவரும் முன்னரே
கைகள் செயல் பட்டு விட்டன.
அவ்வளவுதான். மகிழ்ச்சியே. அம்மா.
மீண்டும் தொடரலாம்.

Geetha Sambasivam said...

அருமையான கோர்வையான முன்கதைச் சுருக்கம். எனக்கும் எழுத முடியலையே/எத்தனை நாட்களுக்கு மீள் பதிவாகப் போடுவது என்றே தோன்றுகிறது. ஆனால் உட்கார்ந்தால் அரை மணி நேரத்துக்கு மேல் உட்கார முடியறதில்லை. எழுந்து கொஞ்சம் நடக்கணும். அல்லது படுத்துக்கணும். :( விரைவில் சரியாகணும்னு பிரார்த்திக்கிறேன். உங்கள் உடல்நிலையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவும் சிகாகோ குளிர்!

ஸ்ரீராம். said...

முன்கதை மட்டுமா இந்த வாரம்?  நன்றாய் எழுதி இருக்கிறீர்கள்.  பாடல் நன்றாய் இருக்கிறது.  ஆரம்பத்தில் அதன் ரிதம் சிப்பி இருக்குது முத்துமிருக்குது பாடலை நினைவுக்கு கொண்டு வந்ததது!

மாதேவி said...

முன்கதை சுருக்கம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நீங்கள் எழுதாத விஷயமா அம்மா.!!!
கண்கள், கருத்து, உடல் நலம் எல்லாம் ஒத்துழைத்தால் தான்
எழுத முடியும்.

மீள் பதிவு இடுவதால் நம் எழுத்தை நாமே பரிசோதிக்கிறோம்
என்று தான் எனக்குத் தோன்றும்.

யாருக்குப் பதில் சொல்ல வேண்டும். நம்மை விட நம் எழுத்தை
விமரிசிப்பவர் யாரும் இருக்க முடியாது!! :)))

முடிந்த பொழுது எழுதலாம் என்பதே
இப்போதைய முடிவு.
நலமுடன் இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
ஆமாம் இங்கே வந்து படித்துக் கருத்து சொல்பவர்கள்
சொல்பம்.
அவர்களுக்கும் இந்தக் கதை புரிய வேண்டும் என்பதற்காக
ஒரு சுருக்கம் ஒரு தெளிவு கொடுப்பதற்கே இதைப் பதிந்தேன் மா.


பாடலின் ஆரம்பத்தைச் சிக்கெனப் பிடித்துவிட்டீர்கள்:)

இந்தப் பாடலைப் பாடியிருக்கும் நீல் டயமெண்ட்
போன வருடம் கூட பப்ளிக் கான்செர்ட் கொடுத்தார்.
80 வயதாகிறது!!!

இளவயதில் நான், தம்பிகள் இவரை விரும்பிக் கேட்போம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நன்றி மா. தொடர்ந்து படிப்பதற்கு மிகவும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

முன்கதை சுருக்கம் நன்று. தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.