வல்லிசிம்ஹன்
வீடு இருக்கும் அமைதியான சாலையில் தட் தட் என்று
கேட்கும் வேக ஓசை, லிஸாவை அதிர வைத்தது.
மிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளின் ஓசை அது.
Harley Davidson!!
அவள் வீட்டை நோக்கிதான் வருகிறது.
"என்ன நடக்கிறது. நான் டைம் மெஷினில்
1977க்குப் போய் விட்டேனா..?"
வெகு நாட்களுக்குப் பிறகு உடலில் புது சிலிர்ப்பு
பரவுவதை உணர்ந்த லிஸா கலவரத்துடன்
மகள் இருந்த அறைக் கதவை நோக்கினாள்.
'' மார்ட்டின் என்ன செய்கிறாய் நீ?"
என்ற முணுமுணுப்போடு வீட்டு முன்புற
ஜன்னல் திரையை ஒதுக்கி வெளியே பார்த்தாள்.
அவனே தான்.
பதினெட்டு வருடங்களுக்கு முன் அவள்
இதயத்தைத் திணற வைத்த அதேபிம்பம் .
சற்றே
வயதான மார்ட்டின்!!
அதே கறுப்பு உடை, கைகளில் இரண்டு ஹெல்மெட்.
கண்ணை மறைத்த கறுப்புக் கண்ணாடி.
அதற்கு வெளியே தெரிந்த செழுமையான சிவப்புமுகம்.
"ஏன்? "
இதைக் கேட்கத்தான் அவன் வருகிறான்.
இந்தப் பத்து நாட்களில் அறிந்தோ அறியாமலோ அவள்
பார்வையில் அவன் பட்டுக் கொண்டே
இருந்தான்.
இரண்டு நாட்கள் நியுயார்க் சென்று வந்தான்.
பெரிய மருந்துக் கடை நடத்துகிறானே.
கேத்தியின் பிறப்பிலிருந்து எல்லாவற்றையும்
தான் ஏன் அவனிடம் சொல்லாமல் இருந்தோம்
எவரார்டைத் திருமணம் செய்யக் காரணம்.....இப்படி
எல்லா நடப்புகளைச் சொல்ல தன் வீடு ஏற்ற இடமாகத் தெரிய வில்லை
அவளுக்கு.
படபடக்கும் மனதை அடக்கியவாறு வாசல் கதவைத் திறந்து வெளியில்
நிற்கும் தன் அருமை மார்ட்டினை கண்ணகலப்
பார்த்தாள்.
முதன் முதலாக தன்னை வெளியே அழைத்துப்
போக அவன் வந்ததும், அப்போது பெற்றோர் அவனை வரவேற்றதும்,
ஜீன்ஸ் டி ஷர்ட் என்றில்லாமல்
ஃபார்மல் Gown அணிந்து இதே மோட்டார் சைக்கிளில்
கிளம்பிச் சென்றதும்
அவள் நினைவில் அலையடிக்க,
அதன் பிரதி சிந்தனைகள் அவனிடமும் ஓடுவதை
உணர்ந்தாள்.
''உள்ளே வா மார்ட்டி' என்று அழைத்துச் சென்றாள்.
முதன் முறையாக அவள்( எவரார்ட்) வீட்டுக்குள்
வரும் உணர்வு அவனை அலைக் கழித்தது,.
கேத்தியைத் தேடியது அவன் கண்கள்.
அவனை எச்சரிக்கையுடன் கண் காட்டிய லிஸா,
'படித்துக் கொண்டிருக்கிறாள்" என்று ஜாடையாகச் சொன்னாள்.
சிரிப்பு வந்தது மார்ட்டின் முகத்தில்.
''என் வீட்டு விருந்துக்கு உங்கள் இருவரையும்
அழைக்க வந்தேன்" என்றான்.
எதையோ நினைத்துப் பயந்திருந்த லிஸா முகத்தில் கலவரம் குறைவதைப்
பார்த்தவனின் கண்களில் குறும்பு மின்னியது.
''நீ என்னவென்று நினைத்தாய்?"
ஹாலில் குரல்கள் கேட்டு வெளியே வந்த கேத்தி,
மார்ட்டின் நிற்பதைக் கண்டு தயங்கினாள்.
அவளை ஆதரவுடன் பார்த்தவன் Hi Cathy,
"I have come to invite you and your Mom for a house party"
என்றான்.
''எனக்கு டெஸ்ட்ஸ் இருக்கு. வரமுடியாது.
ப்ளீஸ் மன்னியுங்கள்''என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
வாசலில் பூம் என்ற சத்தத்துடன் வண்டி வந்து நின்றது.
அதைத் தொடர்ந்து
வாசல் கதவு திறக்க உரிமையுடன் நுழைந்தான்
ஒரு வசீகரமான இளைஞன்.
''கேத்தி. ரெடியா இருக்கியா. எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
வா' என்றான்.
கேத்தி முகத்தில் அத்தனை சந்தோஷத்தை மார்ட்டின் எதிர்பார்க்கவில்லை.
ஒரு துள்ளலுடன் உள்ளே சென்றவள் நிமிடத்தில்
புதிய உடையுடன் வெளியே வந்து ,
அவனுடன் கை கோர்த்துக் கொண்டு
"பை எவெரி ஒன்" என்றபடி வெளீயேறினாள்.
மார்ட்டின் முகத்தில் தெரிந்த திகைப்பைக்
கண்ட லிஸாவுக்கு சிரிப்பாக வந்தது.
"Wake up Martti. This is 1996"
என்றபடி அவனை உட்காரச் சொன்னாள்.
தன் முன் கம்பீரமாக முறையாக உடை உடுத்திய
பார்க்கும் மார்ட்டின்
முதன் முறையாகப் பயந்தான்.
"இது சுலபமாக நடக்கப் போவதில்லை ?
இல்லையா லிஸா?''
என்றான்.
" எதைச் சொல்கிறாய்?"
நாம் மீண்டும் சந்திப்பது, பழைய வாழ்வைத் தொடர்வது."....
என்றவனை வேதனையுடன் பார்த்தாள்.
"நாம் அப்போதிருந்தவர்கள் இல்லையே மார்ட்டி!!
உருவத்தில் மட்டும் இல்லை.. அனுபவங்களிலும் மாறி இருக்கிறோம்:("
அவள் எதை சொல்கிறாள் என்பது புரிய,"ஒ! என் விவாகரத்துகளைச்
சொல்கிறாயா ? " என்றவனின் முகம் மேலும் சிவந்தது.
"என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?. நீ இருக்கும் இடம் தெரியவில்லை!
பிறகு
கணவனுடன் சந்தோஷமாக இருக்கிறாய் என்று என்
பெற்றோர்கள் வழியாகத் தெரிய வந்தது. நான் மட்டும் அங்கேயே
நிலைத்து விடமுடியுமா?"
என்று சினத்துடன் கேட்பவனைப் பார்த்து லிஸாவின்
கண்கள் நிறைந்தன....
''மார்ட்டி!! நாம் ஏற்கனவே வருடங்களை இழந்துவிட்டோம்.
இனி நமக்குள் விவாதம் வேண்டாம். இப்போது என் தந்தை
வரும் நேரம். நான் உனக்குத் தொலைபேசுகிறேன்."
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார்
லிஸாவின் தந்தை ஹாரி என்ற ஹாரிங்க்டன்.
...........
சட்டென்று எழுந்து நின்றான் மார்ட்டின். பழைய நினைவுகள்
அலைமோத முகத்தில் உணர்ச்சி காட்டாமல்
வலது கையை நீட்டியபடி 'ஹலோ ஹாரி "
என்றான். 'வில்லியம்ஸ்!'
என்று ஒருதலை அசைப்போடு மகளைப்
பார்த்தார்.
கண்ணில் கேள்விக்குறி.
''வாசலில் மோட்டார் பைக்கைப் பார்த்து எனக்கு சந்தேகமாக
இருந்தது வந்தேன்"
என்றார்,.
''சந்தேகம் என்ன அப்பா. மார்ட்டின் என் தோழன் தானே?''
கோபத்தில் சிவந்த முகத்தைத் தந்தையை நோக்கித் திருப்பினாள்.
தொடரும்.
14 comments:
ஆஹா! என்ன காரணம்? தந்தை ஹாரிக்கு மார்ட்டினைப் பிடிக்காமல் போனது? ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்திருக்கேன்.
சுவாரஸ்யமாகப் போகிறது. எந்த ஊராயிருந்தால் என்ன, அப்பாக்கள் ரகம்! பதிவில் குறிப்பிட்ட இடம் இரண்டு முறை இடம்பெற்றிருக்கிறது.
தொடரும் சஸ்பென்ஸ்.... மகளின் வாழ்க்கையிலும் மாற்றம் - மேலே என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
அன்பின் கீதாமா,
நன்றி.
தந்தை ஹாரிக்கு , மார்ட்டினின் தந்தை தோழர்தான். இருந்தாலும்
தன்னைப் போல பரம்பரைப் பணக்காரர்கள்
இல்லை என்ற அதிருப்தி எப்பொழுதுமே உண்டு.
இவர்கள் பிரிவதற்கு அதுவே காரணம் அம்மா.
பதிவில் குறிப்பிட்ட இடம் இரண்டு முறை இடம்பெற்றிருக்கிறது.""
நன்றி மா ஸ்ரீராம் சரி செய்து விட்டேன்.
நேற்று வயிறு சரியில்லை. கவனம் இல்லாமல் பதிவிட்டு விட்டேன் மா.
ஆமாம் அப்பாக்கள் எங்கும் மாறுவதில்லை:)
வணக்கம் வல்லி அக்கா , இப்போது உடல் நலமா?
கதை நன்றாக இருக்கிறது.
பழைய நினைவுகளும், இப்போதைய உரையாடல்களும் என்று நன்றாக சொல்லி வருகிறீர்கள்.
கேத்தி தன் அப்பாவை தெரிந்து கொள்ள வேண்டும்.
லிஸாவின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வர வேண்டும்.
எல்லா ஊரும் ஒரே மாதிரிதான் போலிருக்கிறது.
இருந்தாலும் வீட்டிற்குள் வந்து நண்பியைப் பார்ப்பது என்பதெல்லாம் அந்த ஊரில் சகஜம். இங்க, அடியாட்கள் இருப்பார்கள். அவ்ளோதான் வித்தியாசம் போலிருக்கிறது
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. உண்மை கதை நன்றாகச் செல்கிறது.லிஸாவின் தந்தைக்கு இன்னுமா அவள் விரும்பிய பையனை பிடிக்காமல் இருக்கிறது? நீங்கள் கூறும் கருத்தைப் பார்க்கும் போது, பழைய கால பாபி ஹிந்தி படம் நினைவுக்கு வருகிறது.இந்த உயர்ந்தவன், தாழ்ந்தவன் எண்ணங்கள்தான் தன் குழந்தைகளின் ஆசைகளை, விருப்பங்களை சீரழித்து அவர்களை வாழ்நாள் முழுவதும் சோகமடையச் செய்கிறது என்பதை எத்தனை படங்களில் பார்த்துள்ளோம்.
அன்று நீங்கள் தந்த சுட்டியில் முதல் பகுதியையும் படித்து விட்டேன். அடுத்தப்பகுதியில் இருவரின் உள்ளமும் அனைவருக்கும் வெளிப்படும் என நினைக்கிறேன். நல்ல முடிவாகத்தான் அமையும். காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வெங்கட்,
நன்றி மா.
மகள்கள் பார்க்கும் போதே வளர்ந்து விடுவார்கள்.
அதுவும் இந்த ஊரில் கேட்கவே வேண்டாம்.
14 வயதில் ஆரம்பிக்கும் டேட்டிங்க் வயதான பிறகும்
தொடரும். சில , திருமணத்தில் முடியும். சிலர் பிரிந்து
கொள்கிறார்கள்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்..
உடல் நலம் தேவலை மா.
வயிற்று உபாதை. ஏதோ ரவை ஒத்துக் கொள்ளவில்லை.நல்லதே நடக்கும். ஒருவர் மனமும் நோகாமல் முடிவெடுக்க
இருவரும் காத்திருந்து மணம் முடிக்கிறார்கள்.
நன்றி மா.
@ நெல்லைத்தமிழன்,
''இங்க, அடியாட்கள் இருப்பார்கள். அவ்ளோதான் வித்தியாசம் போலிருக்கிறது"
சினிமாவில் அப்படித்தானே:) நிஜ வாழ்விலும்
காதல் அவ்வளவாக அனுமதிக்கப்
படுவதில்லை என்று தான் நினைக்கிறேன்.
நன்றி மா.
அன்பின் கமலாமா,
வணக்கம் நன்றி.
'பதிவு அருமை. உண்மை கதை நன்றாகச் செல்கிறது.லிஸாவின் தந்தைக்கு இன்னுமா அவள் விரும்பிய பையனை பிடிக்காமல் இருக்கிறது?"
சில தந்தைகளுக்கு மகள் மணமுடிப்பதே பிடிக்காமல் போகிறது.:)
அதுவும் செல்ல மகள் என்றால்
கேட்கவே வேண்டாம்.
முதல் பகுதியையும் படித்ததற்கு மிக நன்றி மா.
கேத்தியின் மனதைச் சொல்லிவிட்டுக் கதையை
முடிக்க வேண்டியதுதான். கொஞ்ச நீளமான பகுதியாக
இருக்கும்.பொறுமையாகத் தொடர்வதற்கு நன்றி மா.
வல்லிம்மா, உங்கள் தளத்தைத் தவற விட்டிருக்கிறேனே.!
நலம் தானேம்மா?
பணி காரணமாகத் தொடர்ந்து சமூக தளங்கள் வருவதில்லை...வந்தாலும் ஓட்டம் தான். ஸ்ரீராம் தளத்தில் உங்கள் கருத்தையும், அதைத் தொடர்ந்து இங்கு வந்து உங்கள் பதிவையும் பார்த்து மகிழ்ந்தேன்
அன்பின் தேன்,
எவ்வளவு நாட்களாச்சு பார்த்து!! உங்களைப் பார்க்கும் போது அதிரா, ஏஞ்சல் இருவரின் நினைவும் கூடவே வருகிறது. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.
இந்த லாக்டௌன் அண்ட் கொரோனாவின் பாதிப்பு
எல்லோரையும் ஒரு உருட்டு உருட்டி விட்டது.
வாழ்க வளமுடன்.
Post a Comment