Blog Archive

Friday, October 22, 2021

வண்டலூர் மிருகப் பராமரிப்பு சாலை

வல்லிசிம்ஹன்


பணிபுரியும் தேவகி அம்மா.மிகப் பாந்தமாக எடுத்துச் சொல்கிறார்.

விவேகம் தெரிகிறது அவரது வார்த்தைகளில்.
கடவுள் அருளால் நலமாக இருக்க வேண்டும்.




8 comments:

கோமதி அரசு said...

நன்றாக சொல்கிறார் , சிங்கபெண்.
உணவு, மருந்து கொடுப்பது, சிங்ககுட்டி பால அருந்தும் முறை எல்லாம் தாய் போல சொல்கிறார்.
லாமா பாசம் வைத்து இருப்பதை சொன்னதும், பழகும் விதத்தில் பழகி பார்த்தால் மிருகம் கூட நண்பனே! பாடல் நினைவுக்கு வருகிறது.

அவர்க்ளின் தன்னம்பிக்கையான பேச்சு அருமை.

கோமதி அரசு said...

பொதிகை தொலைக்காட்சி மிருக பாதுகாவலர் மிக அருமையாக பேசுகிறார்.

தன் கணவர் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது
வயிற்று பிழைப்புக்கு வேலை செய்வதை மிக நன்றாக சொன்னார்.

பேட்டி எடுப்பவரும் நன்றாக கேட்கிறார்.

அந்த அம்மா சிங்கத்தின் குண நலன்களையும் அவர் அனுபவங்களையும் சொல்வது மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
ஆமாம் இந்த நேர்காணல்கள் சுவையாக இருந்தது.

இவர்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நல்ல விளக்கமாகச் சொல்கிறார்.

சிங்கப் பெண்!! .அட பெயரே நன்றாக இருக்கிறது.

சிங்கத்தோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறாரே.


வல்லிசிம்ஹன் said...

பொதிகை தொலை காட்சியில் திரு வி கே டி பாலன்
அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரைப் பற்றியே அப்போதெல்லாம் நேர் காணல் செய்து போடுவார்கள்.

மிக இதமாகப் பேசுவார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு அந்தப் பெண்ணும் நன்றாகப்
பதில் சொல்கிறார்.

அவர்கள் வாழ்க்கையில் இந்த மிருகங்கள்
நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

பாசத்தோடு பழகினால் சிங்கமும் நண்பன் தான்.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

என் கமெண்ட்டைக் காணோமே...?!!

Geetha Sambasivam said...

சிங்கத்தைப் பராமரிக்கும் பெண்ணும் அவர் அனுபவங்களும் ஆச்சரியத்தை ஊட்டின. நல்ல அனுபவங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம். பதிவில் இன்னோரு இணையக் காட்சியை சேர்ககும்்போது பழைய பின்னூட்டங்கள்
காணாமல் போச்சு. ஸாரி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா. பெண்களால் இத்தனை வித்தியாசமான வேலைகளைச் செய்ய முடியும் என்பதே எனக்கு வியப்பாக இருந்தது மா. மகிழ்சசியாகவும் இருக்கிறது.