Blog Archive

Tuesday, June 30, 2020

Chaudvin ka chand.

வல்லிசிம்ஹன்

1964இல் கேட்ட பாடல்.
 முஹம்மது ரஃபியின் குரலில் மயங்கி
எத்தனை தடவை இதைத் தோழிகளுக்காகப் பாடி இருப்பேனோ தெரியாது.
இத்தனை காவியமான ஒரு படத்தை இன்னும் பார்க்கவில்லை.
குரு தத்,வஹீதா ரெஹ்மானின் மாஜிக்
படம் முழுவதும் விரவி நிற்கும்.

நிலா மயக்கம் எப்போதும் உண்டு தான்.
வசந்தகாலத்துக்கு உகந்த பாடல். மேகங்கள் இல்லாத வானில்
கண்ணுக்குக் குளிர்ச்சியான நிலவில்
உறங்கும் பெண்ணிடம் தன் உள்ளத்தைச் சொல்லி
உருகும் காதலனே ஒரு கவிதை.

ஓவியமாக்கியவர் ஷகீல் பdhaaயினி.
உயிர் கொடுத்தவர் ரவி.

Monday, June 29, 2020

Ayiram kaNN - Paavai Vilakku Sivaji Ganesan, Sowcar Janaki

வல்லிசிம்ஹன்பாவை விளக்கு நாவல் 60 களில் படித்தது. கல்கியில் அகிலன் அவர்கள் தொடராக எழுதிய
போது என்று நினைக்கிறேன்.
சில நினைவுகள் தான் மிஞ்சி இருக்கின்றன.
உமா பாத்திரம் தான் மனதில் நிலைத்தது.

கதா நாயகன் மனதில் எத்தனை
பேருக்குத் தான் இடம் கொடுப்பானோ.

குற்றாலத்தில் பாடுவதாக அமைந்திருக்கும்
இந்தப் பாடல் திரு.சி.எஸ்.ஜயராமன் குரலில்

அருமையாக இருக்கும்.
 இதைத் தொடர்ந்து,
உமா பாடுவதாக அமையும் ''நீ சிரித்தால் நான் சிரிப்பேன்''
பாடலும்  மிக அழகு..
சந்திரனும் உமாவும் தாஜ் மகாலில்  ஒன்றி உணர்ந்து எண்ணங்களில்
பாடுவதாக  அமைந்திருக்கும் ''காவியமா, நெஞ்சின் ஓவியமா''

மனத்தில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும்.
இந்தப் படம் பார்த்ததும் திண்டுக்கல்லில் தான்.

Sunday, June 28, 2020

மூங்கிலால் ஆன வீடு எண் 54

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  நலமாக இருக்கப் பிரார்த்தனைகள்.
இன்று  பதிவிடும் பாடல்  

மூங்கிலிலான வீடு எண்  54
இந்தப் பாடலை முதலில்  பசுமலையில் இருக்கும் போது 
கேட்ட  ஞாபகம்.

உடனே பிடித்துவிட்டது.
பிறகு  எங்கள் திருமணம் முடிந்து  இரண்டு வருடங்கள் 
கழித்தே  பிலிப்ஸ்  ரேடியோவும்,
ரெகார்ட் சேஞ்சரமும் Record Changer.
வாங்கினோம்.

சேலத்தில் ஹெச் .எம்.வி  ஸ்டோர்ஸ். என்னும் கடையில் 6
ரெக்கார்டுகள்  வாங்கினோம்.
அதில் முதலில் கண்ணில் பட்டது 
  நம்பர் 54 House with the Bamboo door!!!!

என்  அதிர்ஷ்டத்தை என்னால்  நம்ப முடியவில்லை.
சிங்கத்துக்கு  இந்தப் பாட்டு முன்பே 
தெரியுமாம்.

என்ன பொருத்தம்  இந்தப் பொருத்தம் 
என்று பாடியபடி வீடு வந்து சேர்ந்தோம்.

மகள்  பிறந்து  30 நாட்களான நேரம்.
அம்மாவின்  சுணக்கத்தையும் மீறி நான் வெளியே 
போய் வந்தேன்.

1968 மே   வாங்கிய  நேரம் இசை வெள்ளம் 
வீட்டில் நிரம்பியது.  தமிழ் ,இந்தி,ஆங்கிலம் என்று எங்கள் 
சம்பளத்தைச் செலவிட்டோம்:)

அதற்காக ஒரு  அழகான  ரேடியோக்ராம் பேட்டியும் தன கையாலேயே செய்தார்.
வீடு முழுவதும் உளி சத்தம், குழந்தைகள் அழும்,சிரிக்கும் சத்தம் 
முழங்க வாழ்வு ஆரம்பித்தது.

இந்தப் பாடல் எழுத்தாளர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்  நாவலிலும் வரும்.!!!!!

HOUSE OF BAMBOO (William Crompton, Norman Murrells) Andy Williams Also recorded by: Earl Grant Number fifty-four, The house with the bamboo door, Bamboo roof and bamboo walls, They've even got a bamboo floor! You must get to know - Soho Joe, He runs an Espresso, Called the House of Bamboo. It's-a made of sticks. Sticks and bricks, But you can get your kicks In the house of bamboo. In this casino, you can drink a chino, And it's gotcha swingin' to the cha cha Dance the bolero in a sombrero. An’ Shake - like a snake! You wanna drop in when the cats are hoppin'. Let your two feet move-a to the big beat; Pick yourself a kit - ten and listen to a platter That rocks - the juke-box! I'm-a telling you, when you're blue, Well there's a lot to do In the House Of Bamboo. You’ve got to know - Soho Joe, He runs an Espresso, Called the House of Bamboo. In this casino, you can drink a chi no, Let your two feet move-a to the big beat; Pick yourself a kitten and listen to a platter That rocks I'm-a telling you, when you're blue, Well there's a lot to do In the House Of Bamboo. Number fifty-four, The house with the bamboo door, Bamboo roof and bamboo walls, They've even got a bamboo floor! In the House Of Bamboo. (Contributed by Bill Huntley - June 2009)

    







Saturday, June 27, 2020

பாரோர் அறியார் உன் மாயா.

வல்லிசிம்ஹன்
மாயா பஜார் படம் சிரஞ்சீவியான திரைப்படம்.

பலே பலே தேவா
பாரோர் அறியார் உன் மாயா.

ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் இங்கே உனக்கு வினோதம் 
அடியார் யாரோ அறியார் யாரோ
அதையே விதியும் அறியாதைய்யா.......

உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே..தினம்
உனது மாயை விளையாடுதைய்யா
உண்மையில் உந்தன் மாயாலீலையே....
உணர்ந்தவன் தானே தன்யன் ஐயா...

பலே பலே பலே தேவா...

மாயா பஜார் படத்தில் வரும் இந்தத் திருப்பு முனைப் பாடல்.
கண்ணனின் சாரதி தாருகன் பாடுவதாக அமைந்த பாடல்.
அந்த நடிகர் யாரோ தெரியாது. ஆனால்
என்ன ஒரு கம்பீரம்!!

அபிமன்யுவும்,அவன் தாய் சுபத்ரையும் 
புறக்கணிக்கப் பட்டு வனம் செல்லும் காட்சி.
அவர்கள் மனதில் சோகமும் ,அவமானமும்
கொதிக்கிறது.
இதற்கென்றே அமைந்த இந்தப் பாடல்தான் 
எத்தனை அருமை.
என்றும் மறக்க முடியாது. சீர்காழியின்  குரலில் தமிழ் கம்பீரம் 

Friday, June 26, 2020

நாட்டு நடப்பு 2




வல்லிசிம்ஹன்
அனைவருக்கும் இறையருள் நிறைந்திருக்க   வாழ்த்துகள் .

புத்தகங்கள் கொடுக்கும் இன்பம் வேறெங்கும் கிடைக்காது.
நம்மைத் தவிர  வீட்டில் மற்றவர்கள்,
அலுவலக, கல்லூரி,மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் போது 

நான் சேகரித்து வைத்திருக்கும்  புத்தகங்கள் உறுதுணை.
தொலைகாட்சி இருந்தாலும் நிறைய நேரம் அதில் செலவழிப்பதில் மனம் ஈடுபட மறுக்கிறது.

தாத்தாவுக்கு சாயு மான நாற்காலி ஏன் பிடித்தது என்பதை  என் முதுகு  சுட்டிக்காட்டுகிறது.

கழுத்துக்கும்    முதுகுக்கும்  என்ன ஒரு ஆதாரம் இந்த ஈஸிச்சேர் !!!:)

பாட்டி யு லுக் சோ காம்பர்ட்டபிள் ! என்கிறான் பேரன்.
அவனையும்  அருகில் அழைத்துக் கதை சொல்லியாகி விட்டது.

பதின்ம வயது இளங்காளைக்கு  பஞ்ச தந்திரக்கத்தை எப்படி 
ஈர்க்கும்? அவனுக்கு ராக்கெட் அதை சொல்ல 
பாட்டியிடம் சரக்கு இல்லை.😅😅😅😅😅😅😅😅

பதிலுக்கு அவனுக்கு ஈடுபாடுள்ள ரோபாட்டிக்ஸ் பற்றி அவன் விளக்கம் சொன்னால் அதையும் சேமித்துக் கொள்கிறேன் :)

வெளியே  செடிகள் செழிக்க ஆரம்பித்திருக்கின்றன . பச்சைமிளகாய் நிறைய காய்க்கிறது.
கொத்தமல்லியும், கறிவேப்பிலையும்,
 குடை மிளகாயும் , மற்ற பூ வகைகளும்  வஞ்சனை இல்லாமல் வாரிக் கொடுக்கின்றன.

தந்தையைப் போலவே மக்களுக்கும் ஆர்வம் 
இருப்பதில் அதிசயம் இல்லை.
சின்ன மகன் வீட்டிலும் மாஞ்செடி துளிர் விட்டிருக்கிறதாம்.
ஆடிமாதம் தோரணம் கட்ட இலைகள் கிடைக்கும் என்கிறான்.!!!!!

இவர்களுக்கெல்லாம் கோடை என்பது சில மாதங்களே.
அதற்குள் அனுபவிக்கக் கிடைக்கும் இயற்கை வளங்களை  அள்ளிக்கொள்ள  வேண்டியதுதான்.

ஜகார்த்தாவில் முல்லையும் மல்லிகையும் துளசியும் பூத்துக் குலுங்குகின்றன.
இறைவனுக்கு அனைத்தும் அர்ப்பணம்.

பூ தலையில் வைத்தால் சில பெண்களுக்குத் 
தலைவலி வருவதையும் பார்த்திருக்கிறேன்.

மிக வருத்தமாக இருக்கும்.
பூச்சூடாமல் எப்படி இருக்க முடியும்.!!!!

இந்தியாவில் மின்னல்கள் தாக்கிப் பலருக்கு பாதிப்பு என்று இங்கே இருக்கும்   சானல் சொல்கிறது.

எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும்.

அன்பும் நலமும் ஓங்கி இருக்கப் பிரார்த்தனைகள் .







Thursday, June 25, 2020

வெள்ளிப் பறவை..

வல்லிசிம்ஹன்

என் எண்ணத்தை எழுதி விட்டு, இணையத்தில்  தேடினேன். இந்தப் பாடல் கிடைத்தது. மார்க் லிண்ட்ஸே பாடி இருக்கிறார்.

நல்லதே நடக்க வேண்டும் .

வானத்தில் சட்டென்று வந்த வெள்ளிப் பறவை
ஆகாய விமானம் இல்லை. அருகே வந்து மரங்களூடே
 மறைந்தது.
என்ன சொல்ல வந்தது. யாராக வந்தது.
வெகு நேரமாக மனதில் நிலைத்த அந்தப் பறவை

நாளையும் வருமோ

இந்தப் பாடலின் வரிகளும் கிடைத்துவிட்டன.
பதிந்து விட்டேன்.





சித்தாந்தம்

வல்லிசிம்ஹன்

Tuesday, June 23, 2020

நாட்டு நடப்பு

வல்லிசிம்ஹன்
கையில் கம்புடன் நாட்டு மருந்து வாங்கும் மைலாப்பூர் வாசிகள்;
கம்பின் நுனியில் பை. பையில் மருந்துகளைப் போடும் கடைக்காரர்.
எங்கள் வீட்டு உதவியாளர் ராணியின் செய்தி.படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நடக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

Sunday, June 21, 2020

எண்ணங்கள் எழுத்துக்கள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்
எண்ணங்கள் எழுத்துக்கள்

பலவேறு உத்திகளை  கடைபிடித்து  பாசிட்டிவ் 
எண்ணங்களை வளர்க்க  இந்த நேரத்தைத் 

தாண்டி வரவேண்டி  இருக்கிறது.
சென்னையிலிருந்து   ஏதாவது   நல்லவை அல்லாத செய்தி வரக்கூடாது 
என்றே பிரார்த்தனை.
மாற்றிச் சொல்ல  வேண்டுமானால் நல்ல செய்திகளுக்காக காத்திருக்கும் நேரம்.

கடைப்பிடிக்கும் வழிகள், நல்ல சமையல், 
கேட்க  நல்ல இசை, படிக்க நல்ல புத்தகங்கள்,
பிரார்த்தனை   தொடர்ச்சியாக ஒலிக்கும் ஒலி .

எழுத, படிக்க என்று உட்கார்ந்து விட்டால் 
காலில் வீக்கம் வந்து விடுகிறது.
என்னால் மற்றவர்களுக்கு கவலை.

இதைத் தவிர   வேறென்ன செய்ய முடியும் 
என்று  யோசித்த போது ,
தோன்றிய  எண்ணம்,
இசைக்காக ஒரு பதிவு வைத்துக் கொள்ளலாம்.

பாடலைப் பதிந்து கொண்டு என்  நாச்சியார் பதிவில் 
அதைப் பற்றி எழுதாவிட்டால் 
எதோ தவறாகச் செய்த  மனப்பான்மை 
பாதிப்பு வருவதால், 
என் பழைய வலைப்பூ குறுங்குடி வல்லியைத் 
தூசி தட்டி,  திரை இசை எல்லா வகைகளும் ,
என் வாழ்வில் வெவ்வேறு அங்கம் வகித்த நேரங்களில் என்னுடன் துணை வந்த பாடல்களை 
பதிய ஆரம்பித்தேன்.

இது தனிப்பட்ட செல்வம்.  காதுகள் செயல் படும் வரை கேட்கலாம்.

இனிதான் செம்மையாக அமைக்க வேண்டும்.

''எனக்குப் பிடித்த  பாடல்  அது உனக்கும் பிடிக்குமே''
என்று  சொல்ல வரவில்லை.:)

முடிந்த போது  யாரும் கேட்கலாம்.
இது இப்போதைய தேவை எனக்கு.

சோர்ந்து போக விரும்பவில்லை.
அவசியமில்லாத  பயமுறுத்தும்  காணொளி 
காண விருப்பம் இல்லை.
எல்லோரும் தொலைக் காட்சிகள், செய்தி தாள்களைப்  படிக்கிறோம் .
நாம் சொல்லித்தான் யாருக்கும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதனால் செய்தி வீடியோக்களை பதிய ப் 

போவதில்லை. இந்த புத்தி வர இத்தனை நாட்கள் ஆயிற்று.
இதோ  மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வந்து விடுவோம். இறை வழி காட்ட  நாமும் மீளுவோம்.

அவனே காப்பான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இதோ என் புதிய பழைய தளம் இசைக்காக.

.kurungudi-valli.blogspot.com








Saturday, June 20, 2020

இசையும் என் பதிவுகளும்

வல்லிசிம்ஹன்
எனக்கு  மிகவும் பிடித்த  திரைப் பாடல்களை இங்கே 
கொஞ்ச காலம்  இங்கே பதிகிறேன்.
இசையும் பழைய நினைவுகளும்  என்னை 
ஈர்ப்பதை  மட்டுமே  இவைகளுக்கு காரணம்.

கருப்பு வெள்ளையாக இருப்பதாலும் இவை என்னைக் கவர்கின்றன.


Friday, June 19, 2020

முருகா..

வல்லிசிம்ஹன்வள்ளிக்கணவன். பெயரைச் சொல்வோம். 

Thursday, June 18, 2020

Wednesday, June 17, 2020

Echu Pizhaikkum|Madurai Veeran|M. G. R Bhanumathi|T. M. S Jikki|G. Raman...

வல்லிசிம்ஹன் நம் வெங்கட் நாகராஜ் பதிவைப்
படித்ததும் மனதில் வந்த பாடல்.

உருளைக்கிழங்கு சாலட்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


 தேவையான பொருட்கள்.
நன்றாக வேகவைத்த பெரிய உருளைக்கிழங்கு 4
வெண்ணெய்  நாலு ஸ்பூன்
ஸ்ப்ரிங்க் வெங்காயம்  ஒரு கொத்து,சிறியதாக நறுக்கியது
வேகவைத்த  பச்சைப்பட்டாணி, ஒரு கப்
வேகவைத்த காரட் பொடிசாக நறுக்கியது ஒரு கப்
குடமிளகாய் அரிந்து வைத்த சிறிய துண்டுகள்,
பிஞ்சு வெள்ளரி அதே போல நறுக்கின துண்டுகள்

கொத்தமல்லி,
பச்சை மிளகாய், தேங்காய் அரைத்த கலவை,
புளிக்காத தயிர்.

இங்கே செய்யும் முறை,
உ.கியை வெண்ணெயுடன் நன்றாக மசித்துக் கொண்டு
உப்பு போட்டு,
மற்ற வேகவைத்தபட்டாணி,காரட்,
பச்சையாக குடமிளகாய்,வெள்ளரி
கட்டித்தயிர், வெண்ணெய் 
சேர்த்து விட்டால் இதையே ஒரு வேளை சாப்பாடாக
வைத்துக் கொள்ளலாம்.
வாயுத் தொந்தரவு இருந்தால்
இஞ்சி அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
நேற்று காலிஃப்ளவர்  புலாவுக்குத் தொட்டுக் கொள்ள
இது ஜோடி சேர்ந்தது.
. வெங்காயத்தாள் 

Tuesday, June 16, 2020

Kuladeivam - Kottu Potta Chinna Machchane Song

வல்லிசிம்ஹன்மீண்டும் பழைய பாடல்.கோட்டு போட்ட சின்ன மச்சானே கோபமா
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா.
வீட்டுக்குள்ளே காட்டாதீங்க வீரமே.
உங்க வீரமே;;;;
கர்ணம் போட்டாலும் செல்லாது அதிகாரமே.....குட்டி
கரணம் போட்டாலும் செல்லாது அதிகாரமே.. கோட்டு

பந்தியில் முந்தும் வீரரே வெற்றி வீரறே..நீங்க
படையிலே பிந்தும் சூரரே
பச்சோந்தி போல் வாழும் பண்பாளரெ
ஏமாந்த ஆளிடம் வாலாட்டும் வீரரே...
ஏனிந்த மௌனமோ சொல்வீரெ
சாயாது ஜம்பம் சாயாது ...
++++++++++++++++++++++++++++++++++

நல்ல இசையுடன் குலதெய்வம் 60 ஆண்டுகளுக்கு முன் வந்த
படப்பாடல்.
சோம்பேறியாக இருக்கும் ராஜகோபாலை
கேலி செய்து திருத்தும் பாத்திரமாக
வரும் மைனாவதி.

நிறைய அழுகைக் காட்சிகள் இருந்தாலும்,
நல்ல முடிவுடன் இந்தப் படத்தைப் பார்த்த நினைவு.
சஹஸ்ர நாமம், பண்டரிபாய், SSR, MN Rajam,
விஜயகுமாரி என்று பிரபல நடிகர்கள்
நல்ல தமிழ் பேசி நடித்த கருத்துள்ள படம்.
ஏகப்பட்ட பாடல்கள்.

Sushant Twitter-ல இந்த Hidden Message-அ விட்டுட்டு போயிருக்காரு! Life Co...

வல்லிசிம்ஹன்

Positive message.

Saturday, June 13, 2020

சும்மா சாப்பிட வாங்க!

வல்லிசிம்ஹன் https://youtu.be/SHwXeDWLXoU. இதுவும் பழைய பாடல். ஜிக்கி, சாவித்திரி. மாஜிக்

ரொம்பப் பழைய கதை 2006. ஜூன்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக  இருக்க வேண்டும்.



ரொம்பப் பழைய கதை 2006. ஜூன்.

எப்பொழுதும் யாருக்குமே

பிடிக்காத விஷயங்கள் எத்தனையோ இருக்கும்.

அதில் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலிருந்து,

பல் வைத்தியர் காது,மூக்கு,தொண்டை என்று லிஸ்ட் நீளும்.

நானும் அந்த வகையைச் சேர்ந்தவள்தான்.

எத்தனை நாட்கள் வேதனை தாங்க முடியுமோ அத்தனை நாள் பொறுத்துக் கொண்டு இனி நம்மால் முடியாது என்று வைத்தியரை அணுகுவது என் வழக்கம்.

எத்தனை நாளாக இந்தத் தொல்லை என்று அவர் கேட்டால் பொய் சொல்லவும் தெரியும்.இதோ நேத்திலேருந்துதான் இப்படி இருக்கு என்றதும்

அவர் ஒரு மாதிரி தான் பார்ப்பார்.

என்ன மருந்து எடுத்தீர்கள் என்று கேட்டால்  இருப்பதிலியே சாதாரண மாத்திரைகள் பெயர் சொல்லிப்

போக்கு காட்டுவதும் உண்டு.

அதே மாதிரி மெடிக்ளைம் இன்ஷுரன்ஸ் எடுக்கப் போனபோதுதான்
எத்தனை இனிப்பான

நபர் நான் என்று தெரிந்தது.

மற்றவர்கள் நினைப்பு(ம்க்கும்)...யாருன்னு சொல்ல மாட்டேன்!!! இத்தனை நாட்கள் எப்படி வராமல் இருந்தது? இவள்தான் நாற்காலியில் இருந்து எழுவது

மூன்று வேளை தான்.  அவைகள் பின் வருமாறு:)

சாப்பிட,சாமிகும்பிட,தூங்க...........

  இந்த சர்க்கரை எனக்கு மட்டும் எப்படி வந்தது.
 பாட்டிக்கு இருந்தது. சாக்ரின் மாத்திரை எடுத்துப்பார்.
 அவரும் 75 வயது வரை இருந்து சட்டென்று இறைவனடி
 சேர்ந்தார்.  எனக்கும்  ரொம்ப நாளா இருந்து இருக்கும் போல் வைத்தியர் சொன்னார்.

இப்பதான் தெரிய வந்தது.



இப்போ நமக்கு வரும் ஞானம் எதிர்காலத்தைப் பற்றி.

முதல் கண்டிஷன் ரெகுலர் டைபெடிக் க்ளினிக் விசிட் .

அப்படி நேற்றும் எனக்குக் கட்டாய (:-)) பரிசோதனை

ஒன்று இருந்தது.

அப்படி வழக்கமாகப் போவது போல க்ளினிக்கிற்கு

சென்றேன்.

போனதும் கண்ணில் படுவது இரண்டு வகை மனிதர்கள்,

ரொம்ப குண்டாக இருப்பவர்கள்.ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள்.

எனக்கு ஏனென்று புரியவில்லை.

அப்புறம் இந்த டய பெடிக்கிலும் ரெண்டு ஜாதியாம்.

ஊசி போட்டுக்கிற ரகம் ஒல்லியா இருக்குமாம். மாத்திரை

 மட்டும் எடுத்துக் கொள்ளும் ரகம் (கொஞ்சம்)

ஓவெர் வெயிட்டாக இருக்குமாம்:)))))))))))(  இங்கே  திருவிளையாடல் நாகேஷ் நினைவுக்கு வருவார், நக்கீரரைப் பார்த்து "இதில்  நீங்க எந்த வகைன்னு உமக்கே தெரியும்" என்று!!!!
இப்போது என் கதைக்கு வருவோம் .

நேற்று*(அதாவது  2006 ஜூன் 20) நான் போய் உட்கார்ந்ததும் என் கண்களில் பட்டவர்கள் என்னை ஆச்சரியப் பட வைத்தனர்.

ஒரே கலப்படமாக ஜோடிகள்.அம்மா பெண், கணவன்பெண்டாட்டியும், மாமியார் மருமகள்.

 முன்பு பிரபலமாக இருந்த டாக்டர்,

ஒரு கர்னாடக இசைப் பாடகி (ராதா ,ஜெயலக்ஷ்மி)

என்று பலர்.

அதில் ஒரு அம்மா தனியாகத் தெரிந்தார்,.

நாற்காலி பூராவும் அவர் நிறைந்து இருந்ததால்

அவருக்கு நம்ம 'சுகரினம்' என்று நினைத்தேன்.

அவர் கணவர் அவரைவிட சோகமாக தன்னுடைய முறைக்காகக் காத்து இருந்தார்,.

அவர் அந்த அம்மாவை என்ன , எல்லாம் ரெடியா வச்சு இருக்கியா, மருந்து டப்பா சரியா இருக்கா எல்லாத்தையும் கவனம் பண்ணிக்கோனு சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவங்களும் தலையை ஆட்டி சரி சரின்னு பதில் சொன்னாங்க.

அவர்கள் முறை வந்தது ,இருவரும் மருத்துவர் அறையில் போனார்கள்.

பத்து நிமிடத்தில் வெளியில் வந்ததும் கணவர் உட்கார்ந்து கொண்டார்,.



அந்த அம்மா அங்கிருந்த உதவியாளரிடம், பக்கம் போய் நின்று விவரம் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தார்.

அவர்களுக்குள் எதிர்பாராமல் வார்த்தைகள் சூடாக வந்தன.

அந்த அம்மா திடீரென ஆங்கிலத்தில் பேசஆரம்பித்தார்.

நாங்க வெளியூரிலிருந்து வருகிறோம்.

ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முதலில் நீங்கள் சொல்ல வேண்டும்.//

"you shd have thought of informimg us before hand.

It is not easy to commute from chengalpat

and be told we have to stay here for three more days!!"

அப்படியே எல்லாரும் திகைப்புடன் பார்க்கும்

போது, எனக்குப் புரிந்தது யார் நோயாளி, யார் கூட வந்தவர் என்று,.(கம்பீர கணவர்)

இந்த அம்மா நடக்கும் வேகத்துக்கும் அவர் உடலுக்கும்

சம்பந்தமில்லை.

அவர் தோற்றத்திற்கும் அவர் அறிவுக்கும்

சம்பந்தமில்லை.

அதே போல, வெள்ளையும் சள்ளையுமாய் இருந்த அவர் கணவருக்கும் அவர் உடல் நலக்குறைவுக்கும் சம்பந்தமில்லை.

அந்த அம்மாவுக்கும் ,,,,அதிகாரம் செய்யும் அவர் கணவருக்கும் மட்டும் ஏதோ பொருத்தம் இருந்தது.

வெறும் சந்தர்ப்பங்களையும், உடை,தோற்றங்களையும் வைத்துமனிதர்களை அறிய முடியாது,

என்ற உண்மை மீண்டும் என் அறிவில் உரைத்தது.

என்ன பொருத்தம் உலகில் இந்தப் பொருத்தம்?







nalla idathu sambantham ponnu mapillai || PONNU MAPILLAI TAMIL FILM SONG

வல்லிசிம்ஹன்பொண்ணு மாப்பிள்ளே ஒண்ணாப் போகுது
ஜிகு ஜிகு வண்டியிலே.
நல்ல இடத்து சம்மந்தம் படத்தில் வந்த பாடல் எல்.ஆர் ஈஸ்வரியும் ,ஜமுனா ராணியும்
ஒன்றாகப் பாடியது என்று நினைக்கிறேன்.
கருப்பு வெள்ளை அற்புதங்களில்
ஒன்று.

Friday, June 12, 2020

எண்ணெய்க் குளியலின் ஆனந்த நாட்கள்

வல்லிசிம்ஹன்.
எல்லோரும் நலமாக வாழ வேண்டும் 

எண்ணெய்க் குளியலின்  ஆனந்த நாட்கள் 

குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல் வேண்டாம் || no oil massage for Children
அம்மா  உன் கைதான் எத்தனை  இதம்.எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு | பண்ணையார் தோட்டம்

                    குளியல் . எங்கள் மக்களுக்குத் திருமணம் நடந்து,
பேரன்,பேத்திகளுக்குக்  குளியல் முறை வந்தபோது நோகாமல்
குளிப்பாட்டக் கற்றுக் கொண்டேன்.
இங்கெல்லாம் பிரசவம் ஆன மூன்றாம் நாள் காலை வீடு வந்துவிடலாம்.

அன்றிலிருந்து ஸ்பஞ் பாத் கொடுத்துவிட்டு,
பதினோராம் நாள் புண்ணியாக வசனம் அன்று அம்மாவுக்கும் ,பிள்ளைக்கும்
எண்ணேய்க் குளியல்.
முதல் பேரனுக்காவது எல்லாம் செய்ய முடிந்தது.
அப்போது எண்ணெயில் அவன் ஊறிக் கொண்டிருக்க

அந்தக் குளிர் நாட்களில் வெய்யிலில் அவனைப்
காட்டிவிட்டு,
சமையலறையிலியே சிங்க்கில் தொட்டியை வைத்து இதமான
சூட்டில் குழந்தைகளுக்கான ஷாம்பூ தேய்த்து

குளிப்பாட்டும் போது நானும் அவனும் மகிழ்ந்தோம்.
அழாத, குழந்தைக்கு ஸ்னானம் செய்விப்பது எத்தனை
சந்தோஷம். 


உலகம் மாறிவிட்டது என்னவோ
உண்மைதான். அன்னை பாசமும்,
பாட்டி பேரன் பேத்திகள் உறவும் 
மாறுவதில்லை.

இன்னும் எத்தனையோ எழுத இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் ஒரு உத்சாகம் வேண்டும்.
முடிந்த போது தொடரலாம். படித்துப் பின்னூட்டம் இட்ட 
அனைவருக்கும் நன்றி.

Thursday, June 11, 2020

Irul Konda Vaanil Full Song (Audio) || Baahubali || Prabhas, Rana, Anush...

வல்லிசிம்ஹன்
இசை எப்பொழுதும்
அமைதியும் அதே சமயம் எழுச்சியும் கொடுக்கும் என்றால்
அது இந்தப் பாடல் தான். கடையும் பாற்கடலில் நஞ்சு வந்தால் அதன்
வலிமையைத் தகர்க்க அமுதமும் வரும் என்பதே நியதி.

அதிக கட்டணத்தின் பின்னணி - Dr அருணாச்சலம் Latest Exclusive Interview | C...

வல்லிசிம்ஹன்எப்படியாவது வெல்வோம்.இறைவன் துணை.

Tuesday, June 09, 2020

PART-1 | எங்கே கிருஷ்ணன்? அகழ்வாராய்ச்சி கூறும் உண்மை என்ன..? | TKV Raj...

வல்லிசிம்ஹன்

Part 2 | கர்ணன் நல்லவரா? கெட்டவரா ? | மகாபாரத போர் குறிப்புகள் | TKV Ra...

வல்லிசிம்ஹன்மீண்டும் மஹாபாரதம் படித்தால் பல பிரச்சினைகளுக்குத்
தீர்வு கிடைக்கலாம்.

புது ப்ளாகரில் படங்களை இணைக்க சுலபமாக இருக்கிறது.

எண்ணெய்க் குளியலும் ....வாழ்வும்

வல்லிசிம்ஹன்

வளம்  பெற வாழ்வோம் 

எண்ணெய்க்  குளியலும்அதனுடன் தொடரும் வாழ்வும் 

குழந்தைகள் எப்போதும் அவ்வளவாக விரும்பாதது
எண்ணெய்க்குளியல்:)

இப்பொழுது எத்தனை வசதிகள் வந்துவிட்டன.
அப்பொழுது பாட்டியின் கால்களில் 
படுக்க வைக்கப்பட்ட 11 நாள் குழந்தை படும் பாடு சொல்லி முடியாது.
எண்ணெய் தடவப் பட்ட பட்டுமேனியில் 
கொதிக்க கொதிக்க சுடுனீர் விடப்படும்.
அதன் காச் மூச் கத்தலில் அன்னை காதை மூடிக்கொள்வாள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடரும் 
இந்த வன்முறை!!!!!!!!! பிறந்தகத்தைவிட்டு 
அம்மாக்காரி புக்ககத்துக்குப் போகும் வரை தொடரும்.

அன்னை நனைந்து ,பிள்ளை அதற்கு மேல் கதறி
அந்தக் காலனியில் எல்லோருக்கும் காலை பத்து மணி என்றாலே
ஒரு உதறல் பிறக்கும்.
பத்துமாதக் குழந்தையைக் கையாள அன்னையும் பழகி ,
அந்தப் பிள்ளையும் வளர்ந்திருக்கும்.
நடக்க ஆரம்பித்தவுடன் எண்ணெயைய்க் கண்டால்
ஓட ஆரம்பிக்கும்:)
பத்துவயது வரும்போது தனக்கும் எண்ணெய்க் குளியலுக்கும் ஸ்னானப் ப்ராப்தி
கிடையாது என்று முடிவெடுத்துவிடும்.
மேலே நடந்தது எங்கள் வீட்டுக் கதை.
பெரியவனுக்கு அப்புறம் வந்த மகளும்;
சின்னவனும் அத்தனை அழவில்லை.

எனக்கும் 20,22 வயதானதால் முதிர்ச்சி வந்துவிட்டது
என்று நினைக்கிறேன்.
தினசரி யுத்தம் முடிந்து  குளியலைக் குழந்தைகள்
ரசிக்க ஆரம்பித்தார்கள்.
ப்ளாஸ்டிக் வந்த புதிது. கோவையில்
இரண்டு பெரிய குளியல் தொட்டிகள் கிடைத்தன.
இரண்டிலும் நீர் நிரப்பி,
அவர்களை விளையாட விட்டதில் எனக்கும் நிம்மதி அவர்களுக்கும்
ஆனந்தம்.
தோட்டத்தில் அவர்களை எனக்கு உதவியாக 
இருந்த ராஜம்மா கவனித்துக் கொள்ள
நான் சமையலை முடித்துக் கொள்வேன்.
மூவருக்கும்  பெரிய கிண்ணதில் பருப்பு சாதம், 
பிறகு தயிர் சாதம், தனித்தனியே கிண்ணத்தில் காய்கறிகள்
கொடுத்துவிட்டால், 
அவர்களின் அப்பா வரும் நேரம் மதியத் தூக்கத்துக்கு
தயார் ஆகிவிடுவார்கள்.
சிங்கத்துக்கு வெளியே சாப்பிடப் பிடிக்காது.
ஒரு மணிக்கு  மதிய  சாப்பாடு சாப்பிட வந்துவிடுவார்.

ஓஹோ இது எண்ணெய் சம்பந்தப் பட்ட கதை. மீண்டும் நாளை தொடருகிறேன்.
அனைவருக்கும் இந்த நாள் நல்லதாகட்டும்.



Monday, June 08, 2020

Tere Bina Zindagi Se Koi Shikwa To Nahin | Lata Mangeshkar, Kishore Kuma...

வல்லிசிம்ஹன் Special listening pleasure of Kishor Kumar's  voice.

Tere bina zindagi se koi Instrumental song

வல்லிசிம்ஹன்

வாழ்க்கையின் ஆதாரமே ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
காதலும் தான். எங்கள் வாழ்க்கையில்
இசையே ஒரு Communication ஆக இருந்தது.
இந்தப் பாடலுக்கு அதில் முக்கிய இடம் எப்போதும் உண்டு.

Sunday, June 07, 2020

Moochile Theeyumaay Full Song (Audio) || Baahubali || Prabhas, Rana, Anu...

வல்லிசிம்ஹன்இன்னும் பாஹுபலியிலிருந்து மீள முடியவில்லை.
காரணம் மதன் கார்க்கியின் வசனங்களும், கீரவாணியின் இசையும் தான்.
எழுச்சி தருகிறது சோர்ந்து போகும் நேரங்களில்.

Saturday, June 06, 2020

Mamiyar Mechiya Marumagal 1959 -- Mazhaiyum Peiyuthu Manjal Veyilum Ka...

வல்லிசிம்ஹன்
கூடவே வானவில்லும் வந்ததுதான் அதிசயம்.

Thursday, June 04, 2020

நன்மை ஓங்கட்டும்.

வல்லிசிம்ஹன்
நன்மை ஓங்கட்டும்.

நடக்கக் கூடாதது நடக்கும் போது,
மக்கள் பொங்கி  எழுவது அவ்வளவு சுலபமாக
அடங்குவதில்லை.
கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது.

குரூரமாக ஒரு உயிர் போக்கடிக்கப் படுகிறது.
அந்த வீடியோவைத் தவறிப் போய்ப்
பார்த்துவிட்டேன்.
அந்தக் குரல் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அடக்கியாண்டவர்களை நாமும் நம் வரலாற்றில்
பார்த்திருக்கிறோம்.
இன்னுமா அந்த மிருகத்தனம் போகவில்லை என்று நினைக்கவே

அருவருப்பாக இருக்கிறது.
இந்தத் தேசத்தின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் கண்டனக்
குரல்கள் எழுந்த வண்ணம், ஊர்வலங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன.
மக்களின் ஆதங்கம் பொங்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்த வண்ணம்,அந்த வண்ணம் என்றெல்லாம் இல்லை.
எல்லா தேசத்தவரும்  ,வர்ணத்தவரும்
பங்கெடுக்கிறார்கள்.
நல்ல நிலைமை, நல்ல தீர்ப்பு வரட்டும்.

Wednesday, June 03, 2020

Manam | Emotional shortfilm by Mani Ratnam's AD Ram Mahindra

வல்லிசிம்ஹன்.மனதுக்கு இனிதான அனுபவம். இப்படியும் நடக்கலாம் என்ற நம்பிக்கை.
உலகத்தில் நேர்மை அழியவில்லை என்ற ஆனந்தம்.
எதிர்காலத்தில் நன்மை நடக்கும் என்ற தீர்மானம்.
படம் எடுத்தவர், நடித்தவர்கள், விறுவிறுப்பான காட்சி அமைப்பு, இந்தக் கதையின் நாயகனும்,
அவரை மனம் திரும்பச் செய்த அம்மாவும் ,அவர்கள் நடிப்பும்
மிக மிக இனிமை.
வாழ்த்துகள்

Tuesday, June 02, 2020

Magane Kel 1965 Kalaimangai Uruvam Kandu - Seergazhi Govindarajan, M L V...

வல்லிசிம்ஹன்இனிமையான இசையும் அற்புத குரல்களும் இணையும் போது
கிடைக்கும் இன்பமே தனி.


Monday, June 01, 2020

நல்ல மனம் வாழ்க

வல்லிசிம்ஹன்
எல்லோரும்   நலமாக இருப்போம்.

நல்ல மனம் வாழ்க 


R. Raghupathy, retired manager of Hindustan Levers – Ponds Ltd and longtime resident of Luz Church Road passed away in a city hospital on Friday night.
He had contracted the corona virus.
His wife is Prof Sudharani Raghupathy, leading Bharatanatyam dancer in her time and well-known guru.
Born April 1, 1942, he hailed from the old Tanjore region.
Besides his wife, he is survived by sons KSR Sidhartha and KSR Anirudha.
Home address – Sir KS House, 123, Luz Church Road, Mylapore.

எங்கள் சிங்கத்தின்  உற்ற தோழர்.
ஏணியில் ஏறி இவர் செடிகளை சீர் படுத்துவதை பார்த்துக் கண்டிப்பார்.

என்னிடம் வந்து ரேவதி,
அவனை  நல்ல வார்த்தை சொல்லி உள்ளே அழைத்துக் கொள்ளேன்.

எப்பவுமே கேட்கமாட்டான். இப்போ வயது  வேறு 
சேர்ந்து கொண்டது.

இது தினம் நடக்கும் வாக்குவாதம். எங்கள் வீட்டு வழியே தான் அவரது 
நடக்கும்  பாதை.

இவரது உடல் கண்டு ''சிம்முடு '' என்று அலறியது இன்னும் என் காதில் 
ஒலிக்கிறது.

அவர்கள்  ஒன்று விட்ட சகோதரர்கள் போலவே 

சிறு வயதிலிருந்து கூடி விளையாடிய தோழமை க டைசிவரை 
இருந்தது.

கடந்த  6 வருடங்களாக  நாங்கள் ஐப்பசி மாதம்  என் கணவருக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்ய வரும்போது வீட்டுக்கு வரும் 

வீட்டுக்கு வரும் முதல் மனிதர் அவர்தான்.

உள்ளே வந்ததும் இவர் படத்தைப் பார்த்து 
எப்படிடா இருக்கே?  என்பார்.
எங்கள் குழந்தைகளை வெகுவாக மெச்சிக் கொள்வார்.

அம்மாவைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் 
என்று சொல்லி மற்ற உறவினருடன் இருந்து 

திதி அன்று கலந்து கொண்டு உணவைப் பாராட்டி சாப்பிட்டுவிட்டுச் செல்வார்.

இந்தக் கொடிய தொற்று அவரை எப்படிப் பற்றியதோ தெரியவில்லை.
வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்றுதான் செய்தி.

யாரும் பக்கத்தில் இல்லாமல்,  மருத்துவமனையில் 
இறைவனடி  அடைந்திருக்கிறார்.

நிதானமாகத் தான் இந்த செய்தியை ஜீரணிக்க முடியும்.

எங்கள் அன்பு ரகு , என்றும் அமைதி பெறுக.