Blog Archive

Wednesday, June 17, 2020

உருளைக்கிழங்கு சாலட்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


 தேவையான பொருட்கள்.
நன்றாக வேகவைத்த பெரிய உருளைக்கிழங்கு 4
வெண்ணெய்  நாலு ஸ்பூன்
ஸ்ப்ரிங்க் வெங்காயம்  ஒரு கொத்து,சிறியதாக நறுக்கியது
வேகவைத்த  பச்சைப்பட்டாணி, ஒரு கப்
வேகவைத்த காரட் பொடிசாக நறுக்கியது ஒரு கப்
குடமிளகாய் அரிந்து வைத்த சிறிய துண்டுகள்,
பிஞ்சு வெள்ளரி அதே போல நறுக்கின துண்டுகள்

கொத்தமல்லி,
பச்சை மிளகாய், தேங்காய் அரைத்த கலவை,
புளிக்காத தயிர்.

இங்கே செய்யும் முறை,
உ.கியை வெண்ணெயுடன் நன்றாக மசித்துக் கொண்டு
உப்பு போட்டு,
மற்ற வேகவைத்தபட்டாணி,காரட்,
பச்சையாக குடமிளகாய்,வெள்ளரி
கட்டித்தயிர், வெண்ணெய் 
சேர்த்து விட்டால் இதையே ஒரு வேளை சாப்பாடாக
வைத்துக் கொள்ளலாம்.
வாயுத் தொந்தரவு இருந்தால்
இஞ்சி அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
நேற்று காலிஃப்ளவர்  புலாவுக்குத் தொட்டுக் கொள்ள
இது ஜோடி சேர்ந்தது.
. வெங்காயத்தாள் 

14 comments:

வெங்கட் நாகராஜ் said...

உருளை சாலட்.

புதியதாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாக செய்துள்ளீர்கள் அம்மா...

KILLERGEE Devakottai said...

சலாட் நன்று.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
செய்வது சுலபம் ராஜா. வெங்காயத்தாள் குளிர்ச்சி தரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உ.கிழங்கு எல்லோருக்கும் பிடித்த பண்டம்.
பாட்டி உப்பு,காரம் போட்டு செய்வார் என்று, பேரன் இருவரும்
மறுக்காமல் சாப்பிடுவர்கள்.
பெண் தான் சொல்லிக்காட்டுவாள். அவர்கள்
நாக்கு ருசி கேட்கிறது என்று.:)
அவளுக்கும் பெருமையே.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இந்த உஷ்ண நாட்களுக்கு,
தயிர்,வெண்ணெய் எல்லாம் சேர்ந்தால் உடலுக்கு நல்லதுதானே.
நீங்களும் செய்து பாருங்கள். நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா யும்மி யும்மி!!! யெஸ் இது அப்ப்டியே சாப்பிடலாம். மிக மிகப் பிடிக்கும் செய்வதும் எளிது.

மாமியார் இதில் தேங்காயுடன் நீங்கள் அரைக்கும் கலவை போலத்தான் கூடவே உளுத்தம் பருப்பு வறுத்து அரைப்பார். அல்லது எப்போதும் வறுத்து பொடித்த உ ப பொடி வைத்திருப்பார். இப்படித் தயிர் கலக்கும் பச்சடி/சாலடுடன் கலப்பார். இஞ்சியும். வெங்காயத்தாள்/ஸ்ப்ரிங்க் ஆனியன் சேர்க்காமல்.

சூப்பரா இருக்கும்மா குறிப்புகள். செய்துவிடுகிறேன்.

வடக்கே உள்ள உறவினர்கள் வீட்டில் கற்றது கல்யாணம் ஆன புதிதில், இதில் சாட் மசாலா, சில்லி பௌடர் தூவி கொஞ்சம் பூந்தியும் மேலே தூவி காரட் தூவி , கொத்தமல்லி தூவி அலங்கரித்து வைத்திருந்தார்கள்.

அப்புறம் இதில் ப்ளாக்சால்ட்டும் போடுகிறார்கள்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா வேகவைத்து மசித்த உருளை இதே போல தயிர் பச்சடி போல செய்துவிட்டு மேலே மாதுளை விதைகள் கொஞ்சம் தூவியும் அது ஒரு வித்தியாசமான டேஸ்ட்.

நம் வீட்டில் மாலை காய் சாலடுடன் சாப்பாட்டை முடிக்கும் வழக்கமும். அதில் வெள்ளரி, கோஸ், காரட், வெங்காயம், வேக வைத்த உருளையை உதிர்த்து, அப்புறம் ஏதேனும் வெந்த கடலை அல்லது எல்லாமே கலந்து (நிலக்கடலை, வெள்ளைக் கொண்டைக்கட்லை, பச்சைப் பயறு) மேலே கொத்தமல்லி தூவி, ப்ளாக் சால்ட் அல்லது நார்மல் உப்பு கலந்து, எலுமிச்சை பிழிந்து பொரி இருந்தால் பொரி கலந்து இப்படியும்...இதிலும் மாதுளை விதைகள் கலப்பதுண்டு.

மற்றொரு வகை கேரட், ஆப்பிள், மாதுளை, திராட்சை, உலர் திராட்சை, நட்ஸ் இருந்தால் நட்ஸ்.

நன்றாக இருக்கும் அம்மா.

இப்ப நீங்க போட்டதுதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கு கை துறு துறுன்னு வருகிறது ஆனால் இப்ப செய்ய முடியாதே. நாளை கண்டிப்பாக உங்கள் குறிப்புதான்!!! ஹா ஹா ஹா

கீதா

priyasaki said...

பார்க்கவே சாலட் நல்வலாயிருக்கு வல்லிம்மா. நான் பிரியாணி செய்தால் உருளை கிழங்குசாலட் அல்லது தக்காளி சாலட் செய்வேன்..

கோமதி அரசு said...

உருளை சாலட் நன்றாக இருக்கிறது பார்க்க.
மருமகள், மகள் செய்வார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன், எவ்வளவு அழகா
விவரமா இன்னோரு முறையும் சொல்லி இருக்கிறீர்கள்.

இன்னோரு பகளா பாத் மாதிரி அருமையா இருக்குமா.

பில்டிங்க் அப் அ ரெசிபின்னு சொல்வாங்க. நம் கற்பனையைத் தட்டிவிட்டால்
உ.கியை பேஸ் ஆ வைத்துக்கொண்டு
நிறைய தயாரிக்கலாம். நிறைய விவரங்கள் கொடுத்திருக்கிறீர்கள். மகளிடம் சொல்கிறேன்,.
அவளுக்கு இதெல்லாம் ரொம்ப ஆசை.
பாவம் வேலையும் ஜாஸ்தி.
அதனால் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
நம்முடைய முதியவர்கள் தான் எத்தனை ஆசையாகச் சமைத்திருக்கிறார்கள்.
நன்றி ராஜா. வளமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு,
நலமா மா. வெய்யில் எல்லாம் எப்படி இருக்கு. மகன் நலமா.
கொரோனா பயம் இல்லாமல் இருக்கா.
நீங்களும் செய்து பாருங்க.
அந்த ஊர் உ.கி சுவையா இருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
நலமாப்பா. நம் அடுத்த தலைமுறைக்குப் புதிய சமையல் முறைகள் நிறையவே தெரிந்திருக்கு.
குழந்தைகளுக்காக தினம் ஒரு மாற்றம்.
நன்றி மா.

மாதேவி said...

உருளை சலட் நன்றாக இருக்கிறது பிடித்தமானதும்.
நான் தேங்காய் சேர்காமல்தான் செய்வேன்.
அடுத்தமுறை தேங்காய் சேர்த்து செய்கிறேன்.