Blog Archive

Saturday, June 02, 2012

உறவுகள் தொடரும் வழி

அக்கா தங்கை    ஆநந்தம் எப்பொழுதும் தொடரும்.வெகுநாட்களுக்குப் பிறகு என்    பெரியப்பா மகளைச் சந்தித்தேன்.அவள்  எனக்கு அக்காதானே.
ஒரே ஆநந்தம்,ஆரவாரம்  வம்பு, விசாரிப்பு எல்லாம் தொடர்ந்தது.

வீட்டுப் பெரியவர் ஒருவரின் சதாபிஷேகத்துக்காக்  கூடியிருந்தோம்.

அவர் ஒர்  சிறந்த ஆன்மீகச்  சிந்தனையாளர். தனக்கு இந்த
வைபவமெல்லாம்  செய்வதில் அவ்வளவு     இஷ்டமில்லை.
இருந்தும் அவர்களது குழந்தைகளின் விருப்பத்தை மீற முடியாமல்
ஒரே  ஒரு  நண்பர்கள்  குழாம்   சந்திப்புக்கு மட்டும் சரியென்று சொன்னார். நாங்கள் அனைவரும்  புடவை வேட்டி மாலைகள் சகிதம் அவர்தௌ பெரிய வீட்டில்   கூடினோம்.

அமிர்தமான சாப்பாடு.
அமிர்தத்திலும் சர்க்கரை இருந்ததால் கொஞ்சமே எடுத்து:)

சாப்பாடை முடித்துக் கொண்டேன்.
அப்புறம்   ஆரம்பித்தது அரட்டை.

ஒவ்வொருவராக   தம்பதிகளுடனும் மற்றவர்களுடனும் படங்கள்  எடுத்துக் கொண்டோம்.வரலாறு படைப்பதில் வல்லவர்கள்:)
  யார் யார் என்ன புடவை,என்ன  பரிசு  என்ற   ஆராய்ச்சி தொடர்ந்தது.

எல்லாவற்றிலும் நடு நாயகமாகப் பெரியவர் உட்கார்ந்து கொண்டார்.
புடவைகள் ஒரு புறம்   வேஷ்டிகள் ஒரு புறம்/.


தொண்டையைக் கனைத்துக் கொண்டு என்ன நான் இனிமேல் பேசலாமா

என்றார்.
ம்ம்ம்.  பேசுங்கோ என்று ஒரே கூச்சல்.
ராதா நீயும் வா  என்று ஊஞ்சலில் மனைவியையும்
உட்காரவைத்தார்
கண்கொள்ளாக்காட்சிக்கு   நாங்கள் ராதாகல்யாண வைபோகமே. மாதுமாமா
கல்யாண வைபோகமே பாடினோம்.

பத்துமுழம்ஜரிகை  வேஷ்டி வாங்கினது யார் என்று முதல் கேள்வி.
அவரது தம்பி வந்தார். ஏண்டா என் உடம்பைப் பார்த்தியா. நான் தாங்குவேனா
இந்த வேஷ்டியை?  அதைக் கையிலெடுத்தார்,
இன்னோரு தம்பியை அழைத்து ''டேய் உன் சதாபிஷேகத்துக்கு இதை வைத்துக் கொள் என்று கொடுத்துவிட்டார்.
அந்தத் தம்பி ஆறடி உயரமும் ,கொஞ்சம் பருத்த  உடலும் கொண்ட அந்தத் தம்பி வெட்கத்தோடு வாங்கிக் கொண்டார்.

தனக்கு வந்திருந்த எட்டு முழ  பட்டு வேஷ்டியை
இரண்டாவது தம்பிக்குக் கொடுத்தார்.
 சேலம் பருத்தி வேஷ்டியைத் தான் எடுத்துக் கொண்டார்.

பரிசுப் பொருட்களைப் பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார்,.
நான்  அந்த ராதாமாமிக்கு நல்ல பச்சையில் சிகப்பு ஜரிகைபோட்ட
பட்டு பருத்திப் புடவையை வைத்திருந்தேன்.

அதன் கதி என்ன ஆகப் போகிறதோ என்று பார்த்த போது மாமி அதை எடுத்துத் தன் பின்னால் வைத்துக் கொண்டுவிட்டார்.

''தலை நரைச்சது ஆசை நரைக்கலியே என் ராது' என்று மாமா  பாட்டு வேறு பாடினார்.
ஆமாம் நீங்கள் பாதி சந்யாசி. எனக்கு இன்னும் நிறைய கல்யாணம் எல்லாம் போய்வரணும். இதை நான் கொடுக்க மாட்டேன் என்று சிரித்தார் மாமி.

என் கைக்கு நல்ல ரோஜா நிற    காட்டன் புடவை வந்தது. அது  கனம் ஜாஸ்தி என்பதால்   எனது கனமான் உடலுக்குப் பொருத்தம் என்று மாமி கொடுத்துவிட்டார்.
இப்படியே தொடர்ந்தது.

அருமையான காப்பி,டிபனுடன் அந்தப் புதுமைத் தம்பதியரிடமிருந்து விடை பெற்று நானும் அக்காவும் வீடு வந்தோம் அந்தவம்பை இன்னுமொரு நாள் பார்க்கலாம்:)


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


31 comments:

ஸ்ரீராம். said...

நல்ல அனுபவம். சமீபத்தில் இதே போன்றதொரு அனுபவம் எங்கள் வீட்டிலும். எனவே ஈடுபாட்டுடன் படிக்க முடிந்தது.
சதாபிஷேகத் தம்பதியருக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சொந்தங்களோடு சேர்ந்து இருந்தாலே என்னவோர் சந்தோஷம், மகிழ்ச்சி. அதுவும் நீண்ட நாள் கழித்து அத்தனை பேரைப் பார்த்து பேசுவதில் இன்பம் இருக்கத்தான் செய்கிறது.

மூன்று வார தமிழகப் பயணத்தின் போது நானும் இந்த மகிழ்ச்சியை அனுபவித்தேன்.....

Unknown said...

‘சதாபிஷேக தம்பதிகள்ட்ட ஆசி வாங்க குடுத்து வச்சிருக்கணும்டி’ன்னு எங்கம்மா சொல்லி ஆசி வாங்கிக்கச் சொல்வாங்க. நீங்க ஆசி வாங்கினதும் இல்லாம, சந்தோஷத்தோட விழாவுல கலகலப்பா இருந்துட்டு அரட்டையடிச்சுட்டு பரிசோட வந்திருக்கீங்க. படிக்கறப்பவே சந்தோஷமா இருக்கும்மா. இதன் தொடர்ச்சிக்கு வெயிட்டிங்!

சாந்தி மாரியப்பன் said...

இது போல் அன்பான உறவுகள் சூழ இருந்தா மகிழ்ச்சிக்குக் குறைவேது..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வல்லியம்மா,
நீங்கள் ஏன் எப்போதும் ஆனந்தம் என்ற சொல்லை ஆநந்தம் என்று தவறாகவே எழுதுகிறீர்கள்??
:)

ஹுஸைனம்மா said...

தமக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை எல்லாருக்கும் பகிர்ந்தளித்த மனது, பெரியது.

Unknown said...

சுவாரச்யமான பதிவு அம்மா அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.இது போல மனமொத்த தம்பதியினர்
சதாபிஷேகம் செய்து கொள்வது இனிமை. வளமோடு இருக்கவேண்டும்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

வெங்கட் நீங்களும் உறவுகளோடு ஆனந்தம் அனுபவித்தது
சந்தோஷம்.
புதுவிதமான சதாபிஷேகம். ஹோமம் கிடையாது.
சுகமான சாப்பாடு. சுத்தமான அன்பு.
அரிதாகக் கிடைத்த அனுபவம் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நிரூ, எங்க சதாபிஷேகம் நடந்தாலும் வெறும்ன நமஸ்காரம் செய்வதற்காவது போய்விடுவேன்.
உங்க அம்மா சொல்வது நிஜம்தான் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,சுற்றம் அதுவும் அன்பான சுற்றம்
எப்பவும் வேண்டும். இல்லையானால் மனம் வெறுமையாகிப் போகிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அறிவன். இனிமேல் மாற்றி எழுதுகிறேன்.
சரியா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஹுசைனம்மா.
அவர் கொடியில் ஒன்று. இடுப்பில் ஒன்று
என்ற விதிமுறைப்படி வாழ்பவர்.
அளவுக்கு மேல் எதுவும் கூடாது என்கிற கொள்கை.
அவர் இது போல பகிர்ந்து கொண்டது அனைவருக்கும்
மகிழ்ச்சியே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இந்திரா சந்தானம்.
முதல் வருகைக்கு நன்றி.
பாராட்டுக்கும் நன்றி.கண்டிப்பாகத் தொடர்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

தம்பதியருக்கு என் வணக்கங்களும். அழகான பகிர்வு.

அப்படின்னு நான் இட்ட பின்னூட்டத்தைக் காணததால் மீண்டும் பதிகிறேன்:)!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு ! நன்றி !

Geetha Sambasivam said...

எனக்கும் இப்படிப் பங்கிட்டுக் கொடுப்பதுனா ரொம்பவே பிடிக்கும். நல்ல மனிதர்கள்! அத்தனை புடைவையை வைத்துக்கொண்டு என்ன செய்யறது? பெரியவர் செய்தது சரி.

சதாபிஷேஹத் தம்பதிகளுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

என் பெரியப்பா பெண்ணோடயும் நானும் இப்படித் தான் மணிக்கணக்காய்ப் பேசுவேன். :))) கூடப் பிறந்த சகோதரி இல்லையேனு குறை தெரியாது. :))))

கோமதி அரசு said...

சதாபிஷேஹத் தம்பதிகளுக்கு எங்கள் வணக்கங்கள். வாழ்த்துக்கள். நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததால் சுற்றத்திற்கு பகிர்ந்து அளித்து மகிழ முடிகிறது.

உங்கள் பகிர்வுக்கு மகிழ்ச்சி.

இராஜராஜேஸ்வரி said...

வரலாறு படைப்பதில் வல்லவர்கள்:)

வாழ்த்துகள் !

சதாபிஷேகத் தம்பதியருக்கு நமஸ்காரங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் வந்தன.
பி.க பண்ணக் கூடாதுன்னு ஒன்றை மட்டும் பிரசுரிக்கறேன்.:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்,. விடாமல் வந்து அங்கீகாரம் அளிக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா அவர் சொல்வது போல தேவைக்கு மேல வச்சுண்டு என்ன செய்யறது. கொடுப்பதே பெரிய சந்தோஷம் இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி, வளமே வாழ வேண்டும் அந்தத் தம்பதியர்.
வருகைக்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி. நீங்கள் வருவதே பெரிய வாழ்த்துதான்.

ஸாதிகா said...

அனுபவப்பகிர்வு வெகு சுவாரஸ்யம்

மாதேவி said...

உறவுகள் என்றும் தொடரட்டும். மகிழ்ச்சியான பகிர்வு.

துளசி கோபால் said...

சதாபிஷேக ஜோடிக்கு என் நமஸ்காரங்கள்.

குடும்ப விசேஷமுன்னா ஒரு தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யுது.

ரொம்ப லேட்டா வந்துருக்கேனோ?

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி அம்மா ...

Asiya Omar said...

நல்ல பகிர்வு.பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.

Ranjani Narayanan said...

இந்தப் பதிவை இப்போதுதான் வலைசரம் மூலம் வந்து படித்தேன்.
இத்தனை அருமையான உறவுகள் நிச்சயம் தொடரும்.
இன்று உங்களுடன் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பதில் மிகுந்த சந்தோஷம்.
போன ஆண்டு பதிவர் விழாவில் சந்தித்தது போலவே இந்த ஆண்டும் சந்தித்து நட்பை வலுவாக்கிக் கொள்ள ஆசைபடுகிறேன்.

பாராட்டுக்கள் வல்லி!