Blog Archive

Tuesday, June 16, 2020

Kuladeivam - Kottu Potta Chinna Machchane Song

வல்லிசிம்ஹன்மீண்டும் பழைய பாடல்.கோட்டு போட்ட சின்ன மச்சானே கோபமா
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா.
வீட்டுக்குள்ளே காட்டாதீங்க வீரமே.
உங்க வீரமே;;;;
கர்ணம் போட்டாலும் செல்லாது அதிகாரமே.....குட்டி
கரணம் போட்டாலும் செல்லாது அதிகாரமே.. கோட்டு

பந்தியில் முந்தும் வீரரே வெற்றி வீரறே..நீங்க
படையிலே பிந்தும் சூரரே
பச்சோந்தி போல் வாழும் பண்பாளரெ
ஏமாந்த ஆளிடம் வாலாட்டும் வீரரே...
ஏனிந்த மௌனமோ சொல்வீரெ
சாயாது ஜம்பம் சாயாது ...
++++++++++++++++++++++++++++++++++

நல்ல இசையுடன் குலதெய்வம் 60 ஆண்டுகளுக்கு முன் வந்த
படப்பாடல்.
சோம்பேறியாக இருக்கும் ராஜகோபாலை
கேலி செய்து திருத்தும் பாத்திரமாக
வரும் மைனாவதி.

நிறைய அழுகைக் காட்சிகள் இருந்தாலும்,
நல்ல முடிவுடன் இந்தப் படத்தைப் பார்த்த நினைவு.
சஹஸ்ர நாமம், பண்டரிபாய், SSR, MN Rajam,
விஜயகுமாரி என்று பிரபல நடிகர்கள்
நல்ல தமிழ் பேசி நடித்த கருத்துள்ள படம்.
ஏகப்பட்ட பாடல்கள்.

7 comments:

கோமதி அரசு said...

இந்த படம் தொலைக்காட்சியில் பார்த்தேன்,
பாடல் நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
தொலைக் காட்சியில் வைத்தார்களா.
பல காட்சிகளை நீக்கி இருப்பார்கள்.
சி.எஸ் ஜெயராமனின் பாடல் ஒன்று மிக நன்றாக
இருக்கும்.
நன்றிமா.

வெங்கட் நாகராஜ் said...

பாடல் இனிமையாக இருக்கிறது. கேட்டு ரசித்தேன் மா....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

பாடல் முதன்முறையாக கேட்டேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , கேட்டு கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,

நல்ல படம். முடிந்தால் பாருங்கள்.
நன்றி மா.

ஜீவி said...

அவருக்கு குலதெய்வம் ராஜகோபால் என்றே பெயராயிற்று. அந்தக் காலத்தில் எல்லா நகைச்சுவை நடிகர்களுக்கும் குருவாகிப் போனவர் என்.எஸ்.கிருஷ்ணன் தான்.

நீங்கள் எழுதிச் சொல்லச் சொல்ல ஒவ்வொரு பழைய பாட்டும் நினைவுக்கு வருகிறது.
நல்ல அனுபவம்.