Blog Archive

Wednesday, August 19, 2020

நாடியை நாடி ஏடு தேடி

வல்லிசிம்ஹன் 

அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.



நாடி ஜோடிடம் எங்கள் வாழ்வில் வந்தது
மிக நூதனமான முறையில் தான்.
 1990 ஆண்டு சில பல தொழில் முறை மாற்றங்களைச் சந்திக்க
வந்தது. 
 
பசங்களின் படிப்பு சம்பந்தமாக சில முடிவுகளை
அதாவது அவர்கள் எடுத்த முடிவுகளுக்கு
உதவி செய்ய வேண்டும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்கள் தான்.
என்னைப் பொறுத்தவரை என் தந்தை
வழிகாட்டிய வழியில் ஒரு ஜோதிடர் 
சில பூஜா வழிகளைச் சொல்லிக் கொடுத்து
அதைப் பின்பற்றியதில்,இராமாயணம் தொடர்ந்து படிப்பது,
விளக்கு பூஜை செய்வது ,கந்த சஷ்டி கவசம் சொல்வதுஅதாவது மனதை நேர்மறை வழியில் திருப்ப உதவி செய்தது.
எனக்கு வெற்றியே.

சிங்கத்துக்கு ஒரு நல்ல தோழர் இருந்தார்.
அவருக்கு  ஜோதிட சாஸ்திரம் தெரியும்.  கிண்டி தொழில் பேட்டையில் இருந்த 
பட்டறையை  இடம் சரியில்லை 
மாற்றிவிடு என்றார். 
காஞ்சீபுரம் போய்   நாடி ஜோதிடம் பார்க்கிறியா என்றார். எங்களுக்கு ஒன்றும் 
புரியவில்லை.
நாடியை வைத்தியர் அல்லவா பார்ப்பார்?

ஏண்டா  அவரை  இழுக்கறே என்றதும்   அவர் சிரித்து விட்டார்.

இல்ல நாடி என்பது  சில பேருக்குத்தான் கிடைக்கும். பழைய காலங்களில் 
எழுதிவைத்தது என்றார்.அவரிடம் விவரம் விசாரித்துக் கொண்டு அவர் சொன்ன
காஞ்சிபுரம் அகஸ்திய நாடி என்ற இடத்தைத் தேடிச்
சென்றோம். 
ஸ்ரீ வரதராஜர் கோவில் வாசலில் 
வந்தனம் சொல்லி அந்த மதிலோடு போனால்
ஒரு புற நகர் குடியிருப்பு.
விசாரித்துக் கொண்டு சென்றோம். 
ஒரு சிறிய வீடு.
வாசலில் போர்டு. உரிமையாளர் பெயர். அதை ஒட்டி 
ஒரு பந்தல். உள்ளே இருட்டாக இருந்தது.
நாங்கள் தயங்கி நிற்பதைப் பார்த்து
உள்ளிருந்த இளைஞர் வெளியே வந்து விசாரித்தார்.

நாடி பார்க்க வந்திருப்பதாகச் சொன்னோம்.
அங்கே இருந்த பெஞ்சில் அமரச் சொன்னார்.
முன்பு இது போல ஜோதிடம் பார்த்ததுண்டா
என்று கேட்டார்,

எப்படிப் பார்ப்பீர்கள் என்று கேட்டதற்கு
உங்கள் கை ரேகை எடுத்துக் கொள்வோம்.
பிறகு உங்களுக்குச் சொல்வதற்கான வேளை இருந்தால்
ஓலை கிடைக்கும் .
படித்து சொல்வோம். உங்கள் பெயரை இந்த சீட்டில் அடையாளமாக
எழுதிக் கொடுங்கள் என்றார். 
எங்கள் கட்டைவிரல் ரேகைகளை எடுத்துக் கொண்டார்.
என் பெயரைக் கேட்கவில்லை.
 நீங்கள் கோவில்கள் சென்று வழிபட்டு,
உணவை முடித்துக் கொண்டு வாருங்கள்.
இரண்டு மணி நேரம் எங்களுக்கு, ஓலை தேட
நேரம் தேவை என்றார். நாங்களும் அந்த இடத்தை விட்டு
எங்கள் ஃபியட் வண்டியில் ஏறி
வரதராஜர் கோவிலுக்கு வந்து வழிபட்டுவிட்டு
சரவணபவன் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டோம்.

14 comments:

கோமதி அரசு said...

இந்த பதிவை மின் நிலாவில் படித்தேன்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இந்த நாடி ஜோதிடம் பார்க்க நிறைய பேர் எல்லா ஊர்களில் இருந்தும் வருவார்கள்.எங்கள் உறவினர்கள் நிறைய பேர் பார்த்து இருக்கிறார்கள்.
நாங்கள் பார்த்தது இல்லை.

பரிகாரமாய் சில கோவில்களுக்கு போகச் சொல்வார்கள், தான தர்மங்கள் செய்யச் சொல்வார்கள். துல்லியமாக சொல்பவர்கள் உண்டு என்றும் அப்படியே வாழ்வில் நடந்து இருக்கிறது என்றும் சொல்வார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.
அங்கேயும் படித்தீர்களா. யார் படித்தார்கள் என்று தெரியவில்லை.
எதற்கும் என் பதிவில் இருக்கட்டும் என்று பதிவை வெளியிட்டேன். ஆமாம் ஸ்வாமிமலை நாடியும் பிரபலமாம். எங்களுக்கு இவர்கள் சொன்னது பலித்தது மா. ஆமாம் பரிகாரங்கள் எளிதாகச் சொன்னார்கள். செய்தோம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஜோசியத்தைப் போல இதுவும் ஒரு வகையான நம்பிக்கை என்றே தோன்றுகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

நானும் மின் நிலாவில் வாசித்தேன் வல்லிமா. கருத்துதான் அங்கு போடவில்லை.

தொடருமோ?

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

வைத்தீஸ்வரன் கோவில் தான் இதற்கு மிகவும் பிரபலம்...

சமணம் பௌத்தம் வரிசையில், ஆசிவகம் வகையில் தொடரும் ஒரு பழக்கம்... ஆசிவகத்தின் கோட்பாடுகளையே மறுத்தவர் ஐயன் திருவள்ளுவர்... அதனால் எழுதியது ஊழ் அதிகாரமாக இருக்கலாம்... இந்த தீநுண்மி காலத்தில், இந்த ஊழ் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு எழுதிய பல பதிவுகள் நீங்கள் வாசித்து இருப்பீர்கள் அம்மா... நன்றி...

Thulasidharan V Thillaiakathu said...

நாடி ஜோசியம் பார்த்தீர்களா? சுவாரசியம். சரவணபவனில் சாப்பிட்டுவிட்டுச் சென்றீர்களா ஓலைச்சுவடி எடுக்க முடிந்ததா?

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

என் தங்கை தன் பெண்ணிற்குப் பார்த்தாள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. நம்பிக்கைதான் இல்லையா? ஒருவேளை சரியாகச் சொல்பவராக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
இது ஒரு விதமான ஆச்சர்யமாக இருந்தது.
நாம் யாரென்று தெரியாமலயே அவர்கள் சொல்லும் விதம்

அதிர்ச்சியாகவும் இருந்தது.
கீழே நம் தனபாலன் சொல்லி இருப்பது போல
இது வள்ளுவர் ஐயாவால் ஏற்கப் படவில்லை என்று தெரிகிறது.
ஊழ்வினை தான் நம் சிரமங்களுக்குக் காரணம்
என்று சொல்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
மின் நிலாவுக்குத் தான் எழுதுகிறேன்.
இன்று இன்னோரு பாகம் அனுப்பி விடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
நீங்கள் சொல்வது உண்மையே.

இவர்கள் அகத்தியரைத் தெய்வமாகப் பூசித்தனர்.
இந்த ஏடுகளை அவர்கள் படிக்கும் போது காதில் சிக்கிய
வார்த்தை ஊழ்வினை.
அது நாங்கள் எல்லோரும் நம்புவதுதான்.
ஒரு செயல் எப்பொழுது புரிந்திருந்தாலௌம்,
அதற்கான பலனை இப்போது அனுபவித்தாக வேண்டும்.
very fascinating statements from them.
காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில்
இருந்ததால் அங்கே சென்றோம்.
கணவருக்கு இதெல்லாம் பிடிக்காது.
ஆனால் அவரே வியக்கும்படி சொன்னார்கள்.
மீண்டும் பார்க்கலாம். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,

எல்லாம் ஒரு நம்பிக்கைதான். நண்பருக்கு நடந்தது.
எங்களுக்கு எதிர்காலம் பற்றி சொன்னது
பலித்தது.
மீண்டும் எழுதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உங்கள் தங்கையும் பார்த்தார்களா.
ஆமாம் சிலருக்குச் சரியாக அமையும்.
சிலருக்கு அமைவதில்லை.
அப்போது நம் தேவையைப் பொறுத்து
சில செயல்களைச் செய்கிறோம்.
இப்போது நினைத்தாலும் நாடியின் மீது நம்பிக்கை
எனக்குப் போகவில்லை.

ஸ்ரீராம். said...

நாடி ஜோதிடம் பார்க்கும் ஆசை எனக்கும் உண்டு.  ஆனால் உண்மையாய் நாடி ஜோதிடம் பார்க்கிறவர்களைக் கண்டுபிடிப்பதே அபூர்வம் என்றும் சொல்வார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நாடி ஜோதிடம் - நான் இதுவரை பார்த்ததில்லை! தில்லியில் கூட இப்போது நாடி ஜோதிடம் பார்க்கப்படும் என பதாகையுடன் சில இடங்கள் வந்து விட்டன! வடக்கத்தியர்கள் கூட அங்கே சென்று பார்க்கிறார்கள்.

உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.