Blog Archive

Thursday, August 20, 2020

1950 களில் 1960 களில் பாடல்கள்.

வல்லிசிம்ஹன்


இந்தப் பாடல்கள் எல்லாம்
என் பத்து அல்லது பனிரண்டு
வயதில் கேட்டவை.
தாயில்லாப் பிள்ளை நல்ல படம். 
தோழி பார்த்து விட்டு வந்து சொன்ன கதைதான்
கேட்டேன்.
கொஞ்சம் புரட்சிகரமான கதைதான்.
பேசும்படப் புத்தகத்தில்
பின்னட்டையில் பார்த்த நினைவு. நெஞ்சில்
ஓர் ஆலயத்தில் சோக கல்யாணகுமாரைப் பார்த்த பிறகு

இந்த மகிழ்ச்சியான பாடலைப் பார்க்க இப்போது
சிறப்பாக இருக்கிறது. வாம்மா வாம்மா சின்னம்மா'' பாடல்
அடிக்கடி முணுமுணுத்தது.
அப்பா எதிரில் பாட முடியாது.
''படிக்க வேண்டும் புதிய பாடம்'' பாடலும் ஜமுனா ராணியின் குரலில்
சுகமாக இருக்கும் கேட்க.
உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
எல்.விஜயலக்ஷ்மியின் இளமையான முகம்
பசுமையாக நல்ல நினைவுகளைக் கொடுக்கிறது.

எல்லாப் பாடல்களும் சிலோன் வானொலியில் கேட்டவை.
மனப்பாடமாகத் தெரியும்.

யே குட்டி நாவம்மா பாட்டு,
பள்ளிகளில் ,விழாக்களில் அப்போது  கிராம நடனம் ஆடுவோர்களுக்கு
மிகவும் உதவியாக இருந்தது:)

12 comments:

துரை செல்வராஜூ said...

நல்ல இனிய பாடல்கள் இன்றைய பதிவில்.. எல்லாவற்றிலும் அந்த முதல் பாடல் வாம்மா.. வாம்மா அருமை.. அருமை..

திண்டுக்கல் தனபாலன் said...

வேடப்பட்டி டூரிங் கொட்டகையில் பார்த்த படங்களில் பாடல்கள் இவை... என்றும் இனியவை...

Thulasidharan V Thillaiakathu said...

கொஞ்சம் புரட்சிகரமான கதைதான்.//

ஓ அப்ப பார்க்க வேண்டுமே நெட்டில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். நெட்டும் ஒத்துழைக்க வேண்டும்.

நல்ல பாடல்கள். கேட்ட நினைவு இருக்கு. எல்லாம் இலங்கை வானொலி மூலம் தான்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாப் பாடல்களும் சிலோன் வானொலியில் கேட்டவை.
மனப்பாடமாகத் தெரியும்.//

ஓ நீங்களும் இதன் வழிதானா!!

சிலோன் வானொலி// ஆமாம் அப்போல்லாம் சிலோன் வானொலின்னுதான் சொல்லுவது.

அம்புலிமாமா பாட்டு இப்பத்தான் கேட்கிறேன்.

கீதா

கோமதி அரசு said...

பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.
மூன்றாவது பாடல் இந்தி படத்தை தமிழில் எடுத்த படம் போல் இருக்கு. இந்தி நடிகர்கள். தெரியவில்லை அவர்க
ள் பேர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை. நம்பவே மாட்டீர்கள். இந்தப் பாடலைப் பதிவு செய்யும் போது , உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்தேன்.
அருமையான இசை. தாளக்கட்டு,
நடிப்பு எல்லாம் சேர்ந்த பாடல். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்.
வேடப்பட்டி , மதுரை போகும் வழியில் இருக்கோ?
இனிமையான நாட்கள் அவை. காத்தோட்டமா
இருக்கும். திண்டுக்கல் காற்றுக்கு ஒரு இதம்.
இது போல கொட்டகையில் உட்கார்ந்து பார்க்கும் அனுபவமே தனி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
எப்பவோ கேட்ட பாடல்களை இப்போது கேட்கிறேன் ,தேடித் தேடி:)
You are listening to Radio Ceylon!!
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது
இலங்கை வானொலியின் வர்த்தக ஒலி பரப்பு கூட்டுத்தாபனம்!!!
பின்னாளில் வந்தது.
அதற்குப் பிறகு ஸ்ரீலங்கா ஆய்போவன் வந்தது.
அது காதில் சிரிலங்கா வாக ஒலிக்கும்:)
பொன்னான நாட்கள்.

வல்லிசிம்ஹன் said...

அம்புலிமாமா பாடலின் மூலம் இந்திப் படம் என்று
நினைக்கிறேன். நடிகை இந்த நடிகை!!
நம் ஜிக்கியின் குரல் தான் எத்தனை அருமை.
நன்றி டா கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
நானும் பாடல் பார்த்த பிறகு நினைத்தேன் தமிழில் டப்பிங்க் செய்யப் பட்ட படமாயிருக்கும்.
அந்த நடிகையின் இந்திப் பாடல்கள் பார்த்திருக்கிறேன்,
ஷ்யாமா என்று நினைவு. படம் குடும்பம் என்று
பெயர் போட்டிருக்கிறது.
தவறாமல் வந்து கேட்டு பின்னூட்டமும் இடுகிறீர்கள் நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்....

பாடல்களை மாலையில் தான் கேட்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நிதானமாகக் கேளுங்கள்.